எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, July 22, 2012

திரு ஆடிப்பூரத்து ஜெகத்துதித்தாள் வாழியே!

நாளைக்கு ஆடிப் பூரம்.  ஆண்டாள் திருநக்ஷத்திரம்.  பெரியாழ்வார் பெற்றெடுத்த குலக்கொடிக்கு ஸ்ரீரங்கத்தில் பத்து நாட்களாக உற்சவம் நடக்கிறது.  அதென்னமோ தெரியலை, ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்து வளர்ந்த ஆண்டாள் அங்கே அருகே இருக்கும் பெருமாளை எல்லாம் விட்டுட்டு இங்கே அரங்கன் மேல் மாளாக் காதல் கொண்டாள்.  அரங்கன் திருவடியிலேயே ஜோதிவடிவில் மறைந்தாள்.  ஆகவே ஒவ்வொரு வருஷமும் ஆடிப்பூரத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு இங்கே ஸ்ரீரங்கத்தில் இருந்து சீர் வரிசைகள், மாலைகள், பட்டாடைகள் செல்கின்றன.  நேற்று அவற்றை எடுத்துக்கொண்டு அறநிலையத் துறை அதிகாரிகளோடு கோயிலின் பட்டாசாரியார் ஒருத்தரும் போயிருக்கிறார்.  பத்து நாட்களாக இங்கே உற்சவம் நடைபெறுகிறது.

சென்றவாரம் சனிக்கிழமை இது பற்றிய தகவல் ஏதும் இல்லாமலேயே ஆண்டாளை வேண்டிக்கோ நினைச்சது நடக்கும்னு  நண்பர் ஒருவர் சொன்னதன் பேரில் ரங்கநாதர் கோயிலின் ஆண்டாள் சந்நிதிக்குப் போனோம். இங்கே மூன்று ஆண்டாள் சந்நிதிகள் இருக்கின்றன என்பதே அப்போது தான் தெரிந்து கொண்டோம். தெற்கு கோபுரத்துக்குள்ளாக நுழைந்து கோயிலுக்குள் செல்லும் முன்னர் உள்ள தெற்கு உத்திரவீதியின் மேல் கோடியில் ஒரு ஆண்டாள் சந்நிதி தனிக்கோயிலாக உள்ளது.  இதை வெளி ஆண்டாள் எனச் சொல்கின்றனர்.  இந்த கோபுரம் தாண்டி உள்ளே கடைகளையும் தாண்டி முன் மண்டபத்தினுள் சென்றால் அங்கே இடப்பக்கம் ஒரு ஆண்டாள் சந்நிதி சில படிகள் ஏறிச் செல்லும்படியாக இருக்கிறது.  அங்கே திருநாளுக்கான அலங்காரங்கள், முஸ்தீபுகள் தென்பட்டன.  இதை உள் ஆண்டாள் சந்நிதி எனச் சொல்கின்றனர்.  அங்கே சென்று தரிசனம் செய்தோம். நல்ல கூட்டம். இருந்தாலும் தரிசிக்க முடிந்தது.  நாங்கள் செய்ய வேண்டிய பிரார்த்தனைக்காக  பூமித்தாயான ஆண்டாளம்மாவின் கைகளில் 50 ரூ கொடுத்துவிட்டுப் பிரார்த்திக்கச் சொல்லி இருந்தார்.  அவ்வாறே பிரார்த்தித்து தீப ஆராதனைகள் பார்த்துவிட்டுப் பிரசாதம் வாங்கிக் கொண்டு வெளியே வந்துவிட்டோம்.  பின்னர் உறவினர் வீட்டிற்குப் போனபோது தான் உள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ள்ளே பரமபத வாசல் அருகே, ரங்க நாச்சியார் சந்நிதிக்கும் அருகே, கண்ணாடி அறையில் ஒரு ஆண்டாள் இருப்பதாகவும், கூடவே கோதண்டராமரும் இருப்பதாகவும் தெரிய வந்தது. ஆஹா, அதை விட்டுட்டோமே! கண்ணாடி அறையா பார்த்ததே இல்லையே!  அதையும் பார்த்துடணும்னு முடிவு செய்தோம்.  இன்னும் வெளி ஆண்டாள் கோயிலுக்குப் போகலை.  அது இன்னொரு நாள் போகணும்.

படிக்க வசதிக்காகக் கொஞ்சம் பிரித்து இரு பதிவுகளாகப் போடுகிறேன்.  அடுத்த பதிவு நாளை வெளி வரும்.

12 comments:

 1. ஹ்ம்ம் ஹ்ம்ம் தொடருங்கோ

  ReplyDelete
 2. எங்க ஊரு நாகை நீலாயதாக்ஷி அம்மன் கோயிலிலும், ஆடிப்பூரம் மிகவும் விமரிசையாக நடக்கும்.

  ReplyDelete
 3. ஆண்டாள் அருளை வேண்டாதார் யார்? உள்ளே படம் எல்லாம் எடுக்க முடியாது இல்லையா?

  ReplyDelete
 4. வாங்க எல்கே, என்ன ஃப்ரீயா இருக்கீங்க போல! :)))

  ReplyDelete
 5. வாங்க கெளதம் சார், உங்க ஊர்க் கோயில் ஒரு முறை பார்த்தேன். மறுபடி போகணும். :)))

  ReplyDelete
 6. வாங்க ஸ்ரீராம், படம் எடுக்க முடியாது. :(

  ReplyDelete
 7. கீதாம்மா,

  ஆண்டாளை பாண்டியனும் பெரியாழ்வாரும் திருவரங்கன் கட்டளைக்கேற்ப திருவரங்கத்திற்கு அழைத்து வந்த போது முதலில் ஆண்டாள் தங்கிய இடத்தில் வெளி ஆண்டாள் சன்னிதியும் பின்னர் கோவிலுக்குள் தரிசனத்திற்கு முன் தங்கிய இடத்தில் உள் ஆண்டாள் சன்னிதியும் அமைந்திருப்பதாக கோவிலொழுகில் படித்த நினைவு.

  கோதண்டராமர் சன்னிதி அருகில் பரமபதநாதன் சன்னிதியிலேயே ஆண்டாள் சன்னிதி இருக்கிறது. அங்கே திருவாடிப்பூரத்தை முன்னிட்டு ஆண்டாளுக்கு பல விதமான அலங்காரம் செய்யப்படும் என்று அண்மையில் அறிந்தேன். திருவல்லிக்கேணி பெருமாள் திருக்கோலத்தில் ஆண்டாள் இருப்பதை இந்த இடுகையில் பார்க்கலாம்.

  http://srirangapankajam.wordpress.com/2012/07/18/ஸ்ரீபரமபதநாதர்-சன்னிதி/

  ReplyDelete
 8. http://srirangapankajam.wordpress.com/2012/07/18/ஸ்ரீபரமபதநாதர்-சன்னிதி/

  ReplyDelete
 9. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி குமரன். வரவுக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 10. இரண்டாம் பகுதியைப் படித்து விட்டு முதல் பகுதிக்கு வந்திருக்கிறேன். :)))

  இரண்டுமே அருமை. ரசித்தேன்.

  ReplyDelete
 11. உண்மை அன்பரே. நாகை அம்பாள் நீலாயதாக்ஷியின் திருவருள் ததும்பும் அழகுத் திருமுகம் என்றென்றும் நெஞ்சத்தே கோயில் கொண்டு அருள் பாலிக்கும். நீங்கள் குறிப்பிட்ட லக்ஷ்மி ஸ்டோர் வைதியநாதஸ்வாமி அய்யரின் இரண்டாவது மகன் நான். மும்பை, ரோலிங் மில், மறுபடியும் மும்பை, ஓய்வுக்குப் பின் ப்ங்களூர், தற்சமயம் மகனுடன் சிங்கப்பூர். டமாரமாக எண்ணவேண்டாம். நாங்கள் இந்த எல்லா ஊரிலும், வீட்டிலேயே ஆடிப்பபூர விழாவையும், நவராத்திரி சமயத்தில் ஒரு சிறு ஊஞ்சலில் அம்ப்பாள் படம் வைத்து நீலாயதாக்ஷி அம்மனை ஆராதித்து வருகிறோம். ஆண்டு தோறும் அம்மன் பெயரில் ஒரு பாட்டும் இயற்றி அச்சிட்டு வெளியிடுறேன். 2012ன் ஆடிப்பூர பாட்டு இதோ http://www.vallamai.com/literature/poems/23844/ பத்து பாட்டுக்களை இசை வடிவத்தில் சிடியாகப் போட்டிருக்கிறோம். விரும்பும் பக்தர்களுக்கு லிங்க் அனுப்புகிறேன் கேட்டு மகிழ்ந்து அம்மன் அருள் பெருக. கோயிலைப் பற்றியும் வலைத்தளத்தில் எழுதியிருக்கிறேன். நன்றி. நாகை வை. ராமஸ்வாமி raamaswamy@gmail.com

  ReplyDelete
 12. வருகைக்கும், தகவல் பரிமாற்றத்துக்கும் நன்றி திரு வை.ராமசாமி அவர்களே.

  ReplyDelete