எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, July 19, 2012

உபநயனம் என்றால் என்ன? 1

உபநயனம் குறித்தும் அதன் பழக்கங்கள், சம்பிரதாயங்கள் குறித்தும் எழுதச் சொல்லி மின் தமிழில் சுபாஷிணி கேட்டிருந்தார்.  ஆகவே அதைக் குறித்து ஓர் 2 அல்லது 3 பதிவுகள் போட உத்தேசம்.


உபநயனம் என்றால் அருகில் அழைத்துச் செல்லுதல் என்றபொருளில் வரும்.  உப என்றால் அருகே என்றும் நயன என்பது அழைத்துச் செல்வது என்றும் பொருள் கொடுக்கும்.  இந்த உபநயனம் என்பது பூணூல் கல்யாணம் என அழைக்கப் பட்டு மிகச் சிறப்பாகவும் ஆடம்பரமாகவும் நடக்கும் ஒரு விழாவாக மாறி விட்டது.   அந்தணர்கள் மட்டுமின்றி, வணிகர்கள், மன்னர்கள் முதலானவர்களுக்கும் உபநயனம் உண்டு.  ஒரு காலத்தில் எல்லாருமே பூணூல் தரித்திருந்தனர்.  எல்லாவற்றிலும் மாறிய நம் கலாசாரம் இதிலும் மாறிவிட்டது.  வேத மந்திரங்களை ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிப்பார்கள்.  இதில் 96 இழைகள் இருப்பதாய்ச் சொல்லப் படுகிறது.  சுத்தமான பஞ்சைத் தக்ளியில் நூலாக நூற்று, அதிலே 96 இழைகள் சேர்த்து, வேத மந்திரங்களை ஜபித்து, பிராண பிரதிஷ்டை செய்து பூணூல் தயாரிப்பார்கள்.  இது மிகவும் கவனத்துடன் செய்ய வேண்டிய வேலை.  இந்தப் பூணூலுக்கு வடமொழியில் யக்ஞோபவீதம் என்ற பெயர்.  அப்படிப் பட்ட பூணூலைத் தயாரிக்கையில் காயத்ரி மந்திரத்தை ஜபித்துக்கொண்டே தயாரிப்பார்களாம்.  அப்படி ஜபித்து ஜபித்து உரு ஏற்றப்பட்ட பூணூலுக்கு சக்தி அதிகம்.  இதை ஒரு சிறுகதை மூலம் முதலில் பார்ப்போம்.


ஒரு ஏழை பிராமணர் பூணூல் தயாரித்துக் கொடுத்து அதில் வரும் சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை எப்படியோ ஓட்டி வந்தார்.  கொடுத்தவர்கள் அவர் வாழ்க்கையை நடத்தத் தேவையான பொருளைக் கொடுத்திருப்பார்கள் போலும்.  ஏனெனில் அவர் ஏழையாகவே இருந்தார்.  அவரும் திருமணமாகி ஒரு பெண்மகவைப் பெற்றெடுத்தார்.  என்றாலும் பூணூல் தயாரிப்பும் அதைக் கொண்டு வாழ்க்கை நடத்துவதும் நிற்கவில்லை.  அந்த ஊர் அரசன் மிகவும் சத்தியவான்.  சொன்னால் சொன்னபடி அனைவருக்கும் செய்வான்.  அரசன் நல்லவனாக இருந்ததால் ஊர் மக்களும் பிராமணருக்கு ஓரளவு உதவி வந்தனர்.  என்றாலும் அதில் பெண்ணின் கல்யாணத்தை நடத்த முடியுமா?  ஆம்;  பிராமணரின் பெண்ணிற்குத் திருமண வயது வந்துவிட்டது.  அக்கால வழக்கப்படி ஏழு வயதுக்குள்ளாகத் திருமணம் முடிக்க வேண்டும்.  ஒரு மாப்பிள்ளையும் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளச் சம்மதித்தான். ஆனால் அந்தக் கல்யாணத்தைக் குறைந்த  பக்ஷமான செலவுகளோடு நடத்தியாக வேண்டுமே.  என்ன செய்யலாம்?  காயத்ரியை ஒருமனதாக வாய் ஜபிக்க பிராமணர் எந்தக் கவலையும் இல்லாமல் இருக்க அப்படியே மனையாளும் இருப்பாளா?  அவள் பெண்ணின் திருமணத்திற்காகப் பொருள் தேடும்படி பிராமணரைத் தூண்டி விட, அவரும் செய்வதறியாது மன்னனிடம் சென்றார்.மன்னனும் பிராமணரை வரவேற்று உபசரித்தான்.  அவர் முகத்தின் ஒளி அவனைக் கவர்ந்தது.  இது எதனால் என யோசித்துக்கொண்டே அவர் வந்த காரியம் என்னவோ என வினவினான்.  பிராமணரும் தன் மகளுக்குத் திருமணம் நிச்சயித்திருப்பதாகவும், அதற்கான பொருள் தேவை என்பதாலேயே மன்னனிடம் வந்திருப்பதாகவும் கூறினார்.  அவ்வளவு தானே!  நான் தருகிறேன் என்ற மன்னன் எவ்வளவு பொருள் தேவை எனக் கேட்க, கூசிக் குறுகிய பிராமணரோ, தன்னிடமிருந்த பூணூலைக் காட்டி,” இதன் எடைக்குரிய பொற்காசைக் கொடுத்தால் போதும்; ஒருமாதிரி சமாளித்துக்கொள்கிறேன்.” என்று கூறினார்.  மன்னன் நகைத்தான்.  ஒரு தராசை எடுத்துவரச் சொல்லிப் பூணூலை அதில் இட்டு மறுபக்கம் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான்.  பூணூல் இருக்கும் பக்கம் தராசுத்தட்டு தாழ்ந்தே இருந்தது.  மேலும் பொற்காசுகளை வைக்க….ம்ஹும்..அப்படியும் பூணூல் இருக்கும் தட்டு தாழ்ந்தே இருந்தது. தராசும் பத்தவில்லை.  பெரிய தராசைக் கொண்டு வரச் செய்தான் மன்னன்.  மேலும் பொற்கட்டிகள், வெள்ளிக்கட்டிகள், நகைகள், ரத்தினங்கள் என இட இட தராசுத்தட்டு தாழ்ந்தே போக, தன் கஜானாவே காலியாகுமோ என பயந்த மன்னன் மந்திரியைப் பார்த்தான்.


சமயோசிதமான மந்திரியோ, “பிராமணரே, இன்று போய் நாளை வந்து வேண்டிய பொருளைப் பெற்றுக்கொள்ளும்.  நாளை வருகையில் புதிய பூணூலைச் செய்து எடுத்துவரவும்.” எனக் கூறினார்.  கலக்கத்துடன் சென்றார் பிராமணர்.  இத்தனை நாட்களாக மனதில் இருந்த அமைதியும், நிம்மதியும் தொலைந்தே போனது.  மன்னன் பொருள் தருவானா மாட்டானா?  ஆஹா, எத்தனை எத்தனை நவரத்தினங்கள்?  அத்தனையையும் வைத்தும் தராசுத்தட்டு சமமாகவில்லையே?  நாளை அத்தனையையும் நமக்கே கொடுத்துவிடுவானோ?  அல்லது இன்னமும் கூடக் கிடைக்குமா?  குறைத்துவிடுவானோ?  பெண்ணிற்குக் கொடுத்தது போக நமக்கும் கொஞ்சம் மிஞ்சும் அல்லவா?  அதை வைத்து என்ன என்ன செய்யலாம்? பிராமணரின் மனம் அலை பாய்ந்தது.  அன்றிரவெல்லாம் தூக்கமே இல்லை.  காலை எழுந்ததும், அவசரம், அவசரமாக நித்ய கர்மாநுஷ்டானங்களை முடித்தார்.  பூணூலைச் செய்ய ஆரம்பித்தார்.  வாய் என்னவோ வழக்கப்படி காயத்ரியை ஜபித்தாலும் மனம் அதில் பூர்ணமாக ஈடுபடவில்லை.  தடுமாறினார்.  ஒருமாதிரியாகப் பூணூலைச் செய்து முடித்தவர் அதை எடுத்துக்கொண்டு மன்னனைக் காண விரைந்தார்.  அரசவையில் மன்னன், மந்திரிமார்கள் வீற்றிருக்க மீண்டும் தராசு கொண்டு வரப்பட்டது.  அன்று அவர் தயாரித்த பூணூலை தராசுத்தட்டில் இட்டு இன்னொரு தட்டில் சில பொற்காசுகளை வைக்கச் சொன்னான் மன்னன்.  என்ன ஆச்சரியம்? பொற்காசுகள் இருக்கும் தட்டு தாழ்ந்துவிட்டதே?  சில பொற்காசுகளை எடுத்துவிட்டு இரண்டு, மூன்று பொற்காசுகளை வைத்தாலும் தட்டுத் தாழ்ந்து போயிற்று.  பின்னர் அவற்றையும் எடுத்துவிட்டு ஒரே ஒரு பொற்காசை வைக்கத் தட்டுச் சமம் ஆயிற்று.  அதை வாங்கிக் கொண்டார் அந்த பிராமணர்.   


பிராமணர் அங்கிருந்து  சென்றதும் மன்னனுக்கு ஆச்சரியம் அதிகமாக மந்திரியிடம், “முதலில் எவ்வளவு பொருளை வைத்தாலும் தாழாத தட்டு இன்று சில பொற்காசுகளை வைத்ததுமே தாழ்ந்தது ஏன்?” என்று கேட்க, மந்திரியோ, “மன்னா, இந்த பிராமணர் உண்மையில் மிக நல்லவரே.  சாதுவும் கூட.  இத்தனை நாட்கள் பணத்தாசை ஏதும் இல்லாமல் இருந்தார்.  தேவைக்காகத் தான் உங்களை நாடி வந்தார்.  வந்தபோது அவர் கொடுத்த பூணூல் அவர் ஜபித்த காயத்ரியின் மகிமையால் அதிக எடை கொண்டு தனக்கு நிகரில்லாமல் இருந்தது.  அந்தப் பூணூலை வைத்திருந்தால் ஒருவேளை உங்கள் நாட்டையே கூடக் கொடுக்க வேண்டி இருந்திருக்கலாம்;  அவ்வளவு சக்தி வாய்ந்தது காயத்ரி மந்திரம்.  ஆனால் அவரைத் திரும்ப வரச் சொன்ன போது, அவர் பணம் கிடைக்குமா,பொருள் கிடைக்குமா என்ற கவலையில் காயத்ரியை மனம் ஒருமித்துச் சொல்லவில்லை.  ஆகவே மறுநாள் அவர் கொண்டு வந்த பூணூலில் மகிமை ஏதும் இல்லை.  அதனால் தான் பொற்காசுகளை வைத்ததுமே தட்டுத் தாழ்ந்துவிட்டது.”  என்றான் மந்திரி.


இந்த காயத்ரி மந்திரத்தையும், அதன் சக்தியைக் குறித்தும், அதை உபதேசமாய்ப் பெற்று அன்றாடம்  ஜபிக்க வேண்டிச் செய்யப்படும் உபநயனம் குறித்தும் மேலும் விபரமாகப் பார்ப்போமா.

17 comments:

 1. ஆஹா உபன் நயனம் காயத்ரி மந்திரத்தின் மகிமை நல்லா சொல்லி இருக்கீங்க. என் பேரன் டெய்லி சந்தியாவந்தனம் காயத்ரி மந்திரம் ஜபித்து வருகிரான்

  ReplyDelete
 2. Aahaa Kathai nanna irukku, appuram antha Brahmanarukku thevayana porul kidachutha ? Suspense ayiduthe !
  Shobha

  ReplyDelete
 3. வாங்க லக்ஷ்மி, இன்னிக்கும் உங்களுக்கே வடை! :))))) நாளைக்குத் தான் பப்ளிஷ் பண்ண ஷெட்யூல் பண்ணி இருந்தேன். துரோகி கூகிள் இன்னிக்கே வெளியிட்டிருக்கு! :)))))) அடுத்தது இன்னமும் எழுதவே ஆரம்பிக்கலை. விஷயங்களைச் சேகரிச்சு வைச்சிருக்கேன். உங்க பேரனுக்கு ஆசிகளும், வாழ்த்துகளும். இந்த வருஷம் தலை ஆவணி அவிட்டம். :)))))

  ReplyDelete
 4. வாங்க எல்கே, இதான் பின்னூட்டமா? அல்லது தனியா இருக்கானு பார்க்கணும்.:))))))

  ReplyDelete
 5. வாங்க ஷோபா, அந்த பிராமணர் கிடைச்ச பொற்காசை வாங்கிக் கொண்டுபோய்விட்டார்னு எழுதி இருந்தேனே. பூணூலின் மஹிமை பத்தித் தான் குறிப்பிடணும் என்பதால் அவரைப் பத்தி மேலே சொல்லலை. :)))))))

  ReplyDelete
 6. இந்தக் காலத்துல மனம் ஒன்றி எல்லாம் யாரு காத்ரி பண்றா? எல்லாம் கடமை.... ஐயோ ஆயிரத்தெட்டு பண்ணணுமே.... ஆயிரத்தெட்டு பண்ணணுமே..... கடிகாரத்தில் ஒரு கண், கையில் ஒரு கண். ஃபோன் அடிக்குதா, பால்காரன் காசு கேக்கறான.............................. ஆனால் கலியுகத்தில் பகவான் நாமம் சொன்னாலே போதும்னு ரிலாக்ஸ் பண்ணி வச்சுருக்காங்களே.... நித்த்யப்படி சந்த்யாவந்தனம் செய்பவர்களும் கம்மிதான்! பாவம் பிராமணர். ஆசை வந்து மோசம் போனார்!

  ReplyDelete
 7. வாங்கிட்டு போனதும் வீட்ல என்ன நடந்திருக்கும்? :)
  சரி, ஒரு பொற்காசு வெச்சு எப்படி கல்யாணம் நடக்கும்..?

  நயனம் என்றால் கண் என அர்த்தம் வருமே? நயந்தாரா - வின்மீனைப் போன்ற கண்ணுடையவள், ஹிஹி.

  உப நயனம் - உபரியாக ஒரு கண் அல்லது மூன்றாவது கண், ஞானக் கண்கள். இப்படியெல்லாம் பொருள் வராதா..?
  திவாண்ணா வந்து இந்த பதிவுக்கு அர்த்தம் சொன்னால் தான் ஒத்துப்பேன். இல்லைனா போதிய தரவு தரவும்.

  ReplyDelete
 8. அம்பி சொல்ற மாதிரி எனக்கும் நயனம் என்றால் கண் என்றும், வேதம் கத்துக்க ஆரம்பிக்கரதாலே additional கண் என்ற அர்த்தத்தில் தான் உப நயனம் என்று வந்ததாகவும் படித்த ஞாபகம்.

  என்ன தான் காயத்ரி ஜபிக்கர போது மனசை அடக்கப் பாத்தாலும் முடியறதில்லை. பலன் கிடைக்கற வரை க்ஷேமம்.

  ReplyDelete
 9. காயத்ரி மந்திரத்தின் பெருமை சொல்லும் கதை....

  தொடரட்டும் உபநயனம் விளக்கங்கள்....

  ReplyDelete
 10. ஒரு உயிர் துடிப்பில்லாத இன் ஆர்கானிக் கயறுக்கு காயத்ரி ஜபம் அத்தனை சக்தியை தரணும்னா ஒரு உயிர்த்துடிப்புள்ள மனிதனுக்குள்ள அவன் ஜபிக்கும் காயத்ரி எவ்வளவு சக்தியை உண்டுபண்ணும்னு யோசிச்சேன் . நிறையப்பேர் கயத்துக்குள்ள சக்தி வரும்னு ஒத்துக்கறா ஆனா உயிருள்ள மனுஷன் , ஆர்கானிக் வஸ்துகுள்ள வரும்னு ஒத்துக்கொள்ள அவாளால முடியல்ல :((
  வந்தாலும் கழநிபபானையில் விட்ட கையாகிடறதுனால் சொல்லவும் வழி இல்லை :((I think that is why kayaru is better valued than man perhaps!!

  ReplyDelete
 11. வாங்க ஸ்ரீராம், தினசரி வேலைகளினாலும், வேலைக்குச் செல்லும் அவசரத்தில் நேரமில்லாதவர்களுக்கும் நம் சாஸ்திரமும், சம்பிரதாயமும் சலுகைகள் காட்டுகின்றனவே. வீட்டில் இருக்கையில் முடிந்தால் காலை, மாத்யானிஹம் இருவேளையும் முடிச்சுக்கலாம்(நேரத்தைப் பொறுத்து) அப்படி நேரமில்லாதவர்கள், மதியம் அலுவலகத்தில் சாப்பிடும் முன்னர் கை, கால்கள் சுத்தி செய்து கொண்டு வெறும் மந்திர ஜபமாகச் செய்யலாம் என்கிறது. மாலையும் சீக்கிரம் வீட்டுக்குத் திரும்ப முடிந்தால் நல்லது. இல்லை எனில் அலுவலகம் விட்டுக் கிளம்புகையில் மாலை நேர சந்தியாவந்தனம் முடித்துக்கொண்டு கிளம்பலாம்.

  ஆயிரத்தெட்டு காயத்ரியை வீட்டில் சொல்ல முடியாதவர்கள் அலுவலகப் பிரயாணத்தின் போது சொல்லலாம். இடைவேளைகளில் சொல்லலாம். முடிந்தபோது நேரம் இருக்கையில் சொல்லிக்கலாம். எங்க பையரும், மாப்பிள்ளையும் காரில் அலுவலகம் செல்கையிலேயே சொல்லிக் கொண்டு போவோம் என்பார்கள். அவங்க அவங்க நேரம், சூழ்நிலையைப் பொறுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

  ReplyDelete
 12. அம்பி, எனக்கு ஒரு சந்தேகம் இருந்தது. என்னடா, திடீர்னு அம்பியோட பின்னூட்டம், நிஜம்மாவே இது அம்பிதானானு. ஆனால் பாருங்க இப்போ நூத்துக்கு ஆயிரம் சதம் நிஜம்னு தெரிஞ்சு போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்!

  //நயனம் என்றால் கண் என அர்த்தம் வருமே? நயந்தாரா - வின்மீனைப் போன்ற கண்ணுடையவள், ஹிஹி.//

  இதை வைச்சுத் தான் உறுதியே செய்து கொண்டேன். அம்பி இல்லாமல் வேறே யாருக்கு இப்படியெல்லாம் தோணும்? :P :P :P :P

  ReplyDelete
 13. வாங்க ஸ்ரீநி, சரியாப்போச்சு, அம்பி மாதிரி நீங்களுமா? :P:P:P:P நயனம் என்றால் கண் என்ற நேரடிப் பொருளை எடுத்துக்கொண்டாலும் இந்த இடத்தில் பொருந்தியே வருதுதான்.ஆனால் நீங்க தெய்வத்தின் குரலில் பாருங்க. புரியும். :)))))))

  ReplyDelete
 14. வாங்க வெங்கட்,

  இன்னும் 2 அல்லது மூன்று பதிவுகள் வரும்னு நினைக்கிறேன். :))))பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 15. வாங்க ஜெயஶ்ரீ, இந்த காயத்ரி மந்திர பலத்தால் எங்க பையர் கிட்டத்தட்டக் காணாமல் போனவர் கிடைச்சார். இதை ஏற்கெனவே எழுதி இருக்கேன். படிச்சிருப்பீங்க. :))))))

  ReplyDelete
 16. உபநயனம் தொடர்கின்றோம்.

  ReplyDelete