எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, October 18, 2012

பாஷை புரியாததால் வந்த எதிர்பாரா விருந்து!

ராஜஸ்தானிலே நாங்க இருந்தாலும் சுற்றிலும் ஒரே காடு மயம்.  அதுவும் ராணுவக் குடியிருப்புகள் இருக்கும் கன்டோன்மென்ட் வேறே.  ராணுவப் பராமரிப்புகளிலே இருக்கும் செடி, கொடிகள், மரங்கள்னு ஒரே பசுமைமயம் தான்.  எங்களுக்குக் கொடுத்திருந்தது தனி வீடு.  சுற்றிலும் குறைந்த பக்ஷமாக ஒரு ஏக்கர் நிலம்.  அதிலே வேப்பமரங்கள், கருவேலமரங்கள், அரச மரங்கள்னு இருந்தது போக வீட்டுக்கு முன்னாடியும், பின்னாடியும், வீட்டின் ஒரு பக்கத்திலேயும் நாங்க காய்கறித் தோட்டம் வேறே போட்டிருந்தோம்.  ஏற்கெனவே காட்டு வாழ் ஜந்துக்கள் இருந்ததுன்னா, போறாக்குறைக்கு எலிகளும் நிறைய.  ஒவ்வொரு எலியும் குறைந்த பக்ஷமாக ஒரு பெருச்சாளி அளவுக்கு இருக்கும்.  முதல்லே பயந்தே போனேன்.  இது எலிதான்னு அந்த ஊர்க்காரங்க சத்தியமே செய்தாங்க.  அப்புறமா தினம் தினம்  நான் சமைக்கும்போதும் அந்த எலிகள் கிட்டே உட்கார்ந்து கொண்டு உப்புச் சரியாப் போட்டேனா? காரம் சரியா இருக்குமா?  புளி கரைத்தேனானு கவனித்துக்கொண்டே இருக்கும்.  மாமியார் கெட்டாங்க!

ஆகவே ஒரு நாள் எலி வரலைனாக்கூட என்னடா இது, இன்னிக்கு என்ன ஆச்சு? உடம்பு, கிடம்பு சரியில்லையானு யோசிப்பேன்.  பொழுதே போகாது.  எங்க பொண்ணோ விளையாடத் துணை இல்லையேனு தேடுவா.  ஆனால் நாங்க பகலிலே சமையலறையிலேயே இருந்ததாலேயே என்னமோ ஸ்டோர் ரூம் பக்கம் எலிகள் போய்ப் பார்க்கவில்லை.  அது தெரிஞ்சிருந்தா கொலுவை அங்கே வைச்சே இருக்க மாட்டேன்.  வாசல் பக்கமும் திறக்கலாம் அந்த அறைக்கதவை.  சமையலறையில் இருந்தும் திறக்கலாம். எந்தப் பக்கம் இருந்து போச்சுனு தெரியலை.  எல்லாம் தலைகீழ்.  பொம்மைகள் எல்லாம் உருட்டித் தள்ளப்பட்டு படிகளுக்கு அடியில் கொண்டு போய்ப் போட்டிருந்தது.  அத்தனை அழகாய்க் கோலம் போட்டுப் படிகளை வைச்சதை நகர்த்தும்படி ஆச்சு.  இப்போ என்ன பண்ணறது?  எலி விட்டு வைக்காது போலிருக்கேனு யோசிச்சேன்.  அப்புறமா சரி, பகல்வேளையில் மட்டுமே கொலுவை வைச்சுப்போம், ராத்திரி வேளையில் பொம்மைகளை எடுத்து வைத்துவிடுவோம்னு முடிவு பண்ணி அப்படியே செய்தேன்.  தினம் தினம் காலம்பர வைக்கிறதும், ராத்திரி படுக்கிறச்சே எடுத்துப் பத்திரமா வைக்கிறதுமா பொழுதைக் கழிக்கவும் முடிஞ்சது.

அடுத்து நிவேதனம், வெற்றிலை, பாக்கு கொடுப்பது போன்றவை.  ராஜஸ்தான் காரங்களுக்கு நான் வைச்ச கொலுவே புதுசா இருந்ததுனால், கூப்பிட்டது அதை விடவும் புதுசா இருந்தது.  எங்க குடியிருப்பிலேயே இருந்த ஒரு சில தென்னிந்தியக் குடும்பங்களுக்குச் சொல்லி அனுப்பினேன்.  எங்க வீடு தனி வீடுனு சொன்னேன் இல்லையா?  தனி என்றால் தனிஈஈஈஈஈஈஈஈஈஈ.  வீட்டைப் பூட்டிக் கொண்டு தான் பக்கத்து வீட்டுக்குப் போக வேண்டும்.  எங்க வீட்டிலே இருந்து குறைந்தது ஒரு பர்லாங்காவது நடந்து வெளியே வந்து  பின்னர் பக்கத்து வீட்டுக்குப் போக இரண்டு பர்லாங்காவது நடந்து ;அங்கேயும் உள்ளே செல்ல ஒன்று முதல் இரண்டு பர்லாங்காவது நடந்து போய்ப் பார்த்துச் சொல்லணும்.  அப்படிப் பக்கத்து வீட்டிலே இருந்த மலையாளிக் குடும்பத்துப் பெண்மணியிடம் சாயந்திரம் வரச் சொல்லிட்டு வந்தேன்.  நான் தமிழிலேயும் ஆங்கிலத்திலேயும், ஹிந்தியிலேயும் சொல்ல, அந்தப் பெண்மணிக்கு மலையாளம் மட்டுமே தெரியும்.  புரியும்.  என்ன புரிஞ்சிண்டாங்களோ தெரியலை.

அவங்க சாயந்திரம் வரச்சே கணவனையும் அழைச்சுண்டு வந்தாங்க.  இரண்டு பேரும் இங்கே சாப்பாடுனு ஏதோ தப்பாப் புரிஞ்சுட்டு வந்திருக்காங்க.  அவங்க கணவர் கிட்டே பேசினதிலே நம்ம ரங்க்ஸ் புரிஞ்சுட்டு என்னைத் தனியாக் கூப்பிட்டு என்ன சொன்னேனு கேட்க, நான் மஞ்சள் குங்குமத்துக்குத் தானே கூப்பிட்டேன்னு சொல்ல, அவங்க இங்கே சாப்பாடுனு நினைச்சுட்டு வந்திருக்காங்கனு சொல்ல, நான் திரு திரு திரு திரு.  அவங்க கிட்டே விளக்கலாம்னு சொன்னேன்.  அப்புறமா ஒரு மாதிரியாப் புரிய வைச்சோம்.  என்றாலும் அந்தப் பெண்மணிக்கு ஏமாற்றம் போலிருக்கு.  பேப்பரோ, தொன்னையோ கிடைக்காமல் வாழை இலையில் கட்டிக் கொடுத்த சுண்டலைப் பிரித்து அங்கேயே வைத்துக் கொண்டு சாப்பிட ஆரம்பித்துவிட்டார்.  அவர் இருக்கும் இருப்பைப் பார்த்தால் சாப்பாடு போடாமல் கிளம்ப மாட்டார் போலிருந்தது.  முழித்துக்கொண்டிருந்த என்னைக் காப்பாற்ற அப்போது வந்தது ஒரு கர்நாடகப் பெண்மணி.  அவங்களுக்குக் குறைச்சு மலையாளமும் அறியும்.  ஆகவே வந்தவுடனே நிலைமையைப் புரிந்து கொண்டு அந்தப் பெண்மணியோடு மலையாளத்தில் சம்சாரிச்சு விளக்கப் பக்கத்துவீட்டுப் பெண்மணிக்கு ஒரு வழியாப் புரிஞ்சது.  பிழைச்சோம்.

இல்லாட்டி தோசை மாவு தயாரா இருந்தது.  சாம்பார் இருந்தது;  தோசை வார்த்துக் கொடுக்கலாம்னு நினைச்சுட்டு இருந்தேன்.  ஆனால் விருந்தை இல்லையோ அவங்க எதிர்பார்த்துட்டு வந்திருக்காங்க.  பாவம்,  இப்படியாக ராஜஸ்தானின் முதல் கொலுவில் ஒரு பெண்ணை ஏமாற்றிய பாவத்துக்கு உள்ளானேன்.  அது முதல் யாரையானும் கூப்பிடறதா இருந்தா நான் நேரிடையாச் சொல்லாமல் ரங்க்ஸை விட்டு அலுவலகத்திலேயே சொல்லச் சொல்லிடுவேன்.  நம்ம பாடு நிம்மதி.  அப்புறமா ரொம்ப நாட்கள் அதையே சொல்லிச் சொல்லிச் சிரிச்சுட்டு இருந்தோம்.   இப்படியாக ராஜஸ்தானில் சுமார் நாலு வருடங்கள் கொலு வைத்துக் குப்பை கொட்டினேன்.  அப்புறமா அங்கே இருக்கிறவங்களுக்கு இது பழக்கமாவும் ஆச்சு.

13 comments:

  1. ஹா ஹா.... வ.வி க்கு இது மாதிரி அனுபவங்கள் எங்களுக்கும் உண்டு. பாஷை தெரியாததால் அல்ல! பூஜை என்று கூப்பிட்டாலே விருந்து என்று பழகி வைத்திருப்பதால்!

    //அப்புறமா தினம் தினம் எலிகள் சமைக்கும்போதும் .....//

    அதெல்லாம் கூட சமைப்பீர்களா?!!

    :)))

    ReplyDelete
  2. ஹிஹிஹி, ஸ்ரீராம், வ.வி.க்கு இல்லாட்டியும் மற்ற பூஜைகளுக்குக் கூப்பிட்டும் இம்மாதிரி அனுபவங்கள் நிறைய உண்டு. :)))

    எலியைத் திருத்திட்டேன். :)))) கவனிக்கலை. :))))

    ReplyDelete
  3. hilarious!
    முகம் பார்த்து அடையாளம் புரிந்து கொள்ளும் அளவுக்கு எலி இருந்தால் தகராறு தான். ஆமாம்.. இப்படி மாமியாரை எலியோட கம்பேர்றீங்களே? இதெல்லாம் சரினு தோணுதா?

    ReplyDelete
  4. வாங்க அப்பாதுரை, அந்த எலிகளுக்கு மருந்து வைச்சுட்டு, அதுங்க செத்து விழுந்ததைப் பார்த்துட்டு நிம்மதியாப் படுக்கப் போவோம். காலம்பர எடுத்துக்கலாம்னு. காலம்பர பார்த்தால் பாடியே இருக்காது. எங்கே போயிருக்கும்னு மண்டை குடையும். மறுபடி அன்றிரவு எலிகளோடு ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டு தூங்க வேண்டி இருக்கும்.

    இதைத் தவிர இன்னமும் பாம்பு வந்த கதையெல்லாம் இருக்கே. :))))) ஒண்ணு விட்டதில்லை. பாம்பு, உடும்பு, கீரிப்பிள்ளைனு எல்லாமும் வரும்.

    ReplyDelete
  5. வா.தி. சரியாத் திருத்திட்டேன், பாருங்க. :))))))

    ReplyDelete
  6. அமர்க்களமான கொண்டாட்டம் !

    ReplyDelete
  7. ஆஹா எலிக்கூட்டத்துடன் வாழ்ந்து இருக்கீங்கன்னு சொல்லுங்க! :)

    ReplyDelete
  8. நீங்கள் வீரமங்கைன்னு தெரியும். ஆனாலும் எலிகளோடு குடித்தனம் கிச்சன் வரை வந்து செய்திருக்கிறீங்களா.
    வணக்கம் கீதாம்மா.
    எலி ஒண்ணு என்னால தாங்க முடியாது:(
    மத்தபடி வ வின்னால் என்ன.சரியான ஷார்ட்ஹாண்ட் ஆர்டிஸ்ட்:)
    கதைக்கு சிரிக்கிறதா. பின்னூட்டங்களுக்குச் சிரிக்கிறதா:)

    ReplyDelete
  9. வாங்க ராஜராஜேஸ்வரி, அமர்க்களமாய்த் தான் கொண்டாடினோம். :))))

    ReplyDelete
  10. வாங்க வெங்கட், வீட்டுக்குள்ளே எலிகள் மட்டும் இல்லை. அப்போ அப்போ பாம்புகள் கூடத் துணைக்கு வரும். அதிலே ஒரு சமயம் ஒரு கட்டுவிரியன் பாம்பு தண்ணீர்ப்பானைக்கு அடியில் சொகுசாய்ப் படுத்துத் தூங்க, அப்போதான் தம்பியோட யூனிஃபார்மை அயர்ன் செய்த என்னோட பொண்ணு அயர்ன் பாக்ஸ் வயரைத் தான் அப்படிப் பொறுப்பில்லாமல் போட்டுட்டுப் போயிருக்கானு திட்டிட்டே நான் எடுக்கப் போக, என் குரலால்(?)தூக்கம் கலைந்த பாம்பார் தலையைத் தூக்க அப்போ தொல்லைக்காட்சியில் ஓடிட்டு இருந்த தஹிகாத் சீரியலை விடவும் சஸ்பென்ஸான இந்தக் காட்சியில் நாங்கள் எல்லாம் அதிர, அப்போ சுய உணர்வோடு இருந்த நம்ம ரங்க்ஸ் மட்டும்(நல்லவேளையா அப்போ டூரில் போகலை) என்னைப் பிடித்து சமையலறையில் தள்ளிக் கதவை வெளியே சாத்தி, பொண்ணையும் பையரையும் படுக்கை அறைக்குப் போகச் சொல்லிவிட்டு, அந்தப்பாம்பாரைக் கெஞ்சிக் கொஞ்சி வெளியே அனுப்பி வைத்தார். ஒரே ஒரு முறை ராஜஸ்தான் நசிராபாதில் வீட்டூக்குள்ளே புகுந்த நல்ல பாம்புக் குட்டி ஒண்ணை உதவிக்கு வந்த ராணுவ வீரர் அடித்துக்கொல்ல அன்னிக்கு எடுத்த சபதம், பாம்புகளை அடிக்கிறதில்லைனு. அதுக்கப்புறம் போன வருஷம் ஆகஸ்டிலே அம்பத்தூர் சொந்த வீட்டை விட்டுக் கிளம்பும் வரை எல்லாத் தினுசுப் பாம்புகளும் காட்சி கொடுக்கும். உள்ளேயும் வரும். எப்படியோ விரட்டி விடுவோம். கந்த சஷ்டி கவசம் சொல்லிண்டே தான். :))))

    ReplyDelete
  11. வாங்க வல்லி, எலி எல்லாம் ஜுஜுபி. பாம்பே வந்து குடித்தனம் பண்ணி இருக்கு! நீங்க வேறே! :)))

    வ.வி.னா ஸ்ரீராமுக்கும் எனக்கும் மட்டும் தெரிஞ்சதாக்கும். :))))))

    வ.வி.=வரலக்ஷ்மி விரதம்

    பின்னூட்டத்திலே வா.தி.=வாசுதேவன் திருமூர்த்தி. :)))))))

    ReplyDelete
  12. நெய்வேலியில் நாங்கள் இருந்தபோது இப்படித்தான்.... பாம்பு, பல்லி, பூரான், கம்பளிப்பூச்சி என்று எத்தனை எத்தனை உயிரினங்கள் வந்து போகும்!

    பாம்பு வீட்டிற்குள் வந்தது பற்றி ஒரு பதிவு கூட எழுதினேன்!

    http://venkatnagaraj.blogspot.com/2011/03/blog-post_09.html

    ReplyDelete
  13. நல்ல கொண்டாட்டம்தான்.

    எலியார்களும் கொலுவைக்கப் புறப்பட்டுவிட்டார்கள்.:))

    ReplyDelete