எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 02, 2012

நாதஸ்வர ஓசையிலே தேவன் வந்து ஆடுகிறான்!


காலை பத்துமணிக்குப் போற மின்சாரம் திரும்ப வர இரண்டு மணியோ மூன்று மணியோ ஆகிவிடுகிறது.  மின்சாரம் இருக்கும் நேரம் வீட்டில் வேலை செய்யாத நேரமாக இருந்தாலே பதிவுகளைப் போட முடியும்.  படிக்க, பின்னூட்டம் கொடுக்க இயலும்.  நான்கு மணிக்குப் போனால் திரும்ப மாலை ஏழு மணிக்கு வரும்.  அதிர்ஷ்டம் இருந்தால் ஆறு மணிக்குக் கிடைக்கும். மின்சாரம் இல்லாத நேரம் எழுதி வைச்சுக்கலாம்னா இன்வெர்டர் மூலம் சார்ஜ் ஆவது லாப்டாப்புக்குச் சரியாக இல்லை. ஆகவே அதுவும் முடியவில்லை.  ஏனெனில் திடீர்னு மின்சாரம் வந்தால் ஹை வோல்டேஜ் இருந்தால் இன்வெர்டர் மூலம் சார்ஜ் செய்வது அதிக அழுத்தம் தாங்காது என்கிறார்கள்.  ஏற்கெனவே ஒருமுறை லாப்டாப் தகராறு செய்தது. பிசியை மின்சாரம் இல்லாமல் தொடவே முடியறதில்லை. :(( கடந்த மூன்று மாதங்களாகப் பதிவுகளை எழுதியும் வைக்க முடியவில்லை. அவ்வப்போது எழுதி வருகிறேன்.

இப்போ மாயவரம் கல்யாணத்தில் அதி அற்புதமாக வாசித்த நாதஸ்வர வித்வான்களின் படங்கள் இவை.  மாயவரம் அருகிலுள்ள விளநகர் என்னும் ஆறுபாதி ஊர்க்காரங்களான இவங்க பெயர் வி.சி. அசோக் குமார், வி.டி. ரமேஷ் குமார்.  இரண்டு நாளும் அருமையான இன்னிசை மழை பொழிந்தனர். நாதஸ்வரம் ஊதுவது மறைந்து வருகிறது என எல்லாரும் சொல்லும் சமயத்தில் இளைய தலைமுறைக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும் விதத்தில் இவர்கள் நாதஸ்வரத்தில் ஈடுபாடு காட்டி வருகின்றனர் என்பது பாராட்டுக்கு உரியது.


மாயவரம் சித்தர் காடு போன விபரங்களும், திருமணஞ்சேரி போனதும் கொஞ்சம் கொஞ்சமாக எழுதுகிறேன்.

19 comments:

 1. ஆமாம் இப்ப நெறைய கல்யாணங்களில் வெறும் டேப் போட்டுடறாங்க

  ReplyDelete
 2. அட?? அதுவும் அப்படியா? நல்லவேளையா நான் போற கல்யாணங்களிலே இப்படி இல்லை. ஆனால் மூன்றாம் நாள் பெரும்பாலான நாதஸ்வரக் காரங்க இருப்பதில்லை. எங்க அண்ணா பையர் கல்யாணத்தில் மூன்று நாட்களும் இருந்தார்கள்.

  ReplyDelete
 3. சேர் எல்லாம் காலி! போனியே ஆகலையா? :-(((

  ReplyDelete
 4. எல்கே! பாடகர்களை கூப்பிட்டுவிட்டு, அவங்க பாட்டுக்கு பாட, நாம சள சளன்னு அரட்டை அடிக்கறதுக்கு டேப் பரவாயில்லை!

  ReplyDelete
 5. எங்கள் ஊரில் உள்ளது...

  ReplyDelete
 6. உங்களுக்கு மின்வெட்டு. எங்களுக்குப் பாதிப் பதிவு.:(நாதஸ்வரம் இல்லாத திருமணத்துக்கு இது வரை போகலை.

  ReplyDelete
 7. இளைய தலைமுறைக்குப் புத்துணர்ச்சி கொடுக்கும் விதத்தில் நாதஸ்வரத்தில் ஈடுபாடு காட்டி வருகின்றனர் என்பது பாராட்டுக்கு உரியது.

  ReplyDelete
 8. இப்போ எல்லாம் முதல் நாளே நாதஸ்வரத்தில் சினிமாப் பாடல்கள் இசைக்க ஆரம்பித்து விடுகிறார்கள். இவர்கள் நல்லா வாசித்திருக்கிறார்கள் போல!

  அதை விட, திருமண ரிசப்ஷன் அன்று இசை நிகழ்ச்சி என்று காதைக் கிழிப்பது!

  ReplyDelete
 9. வாங்க வா.தி. திருமணத்திற்கு வந்த அனைவருமே நாதஸ்வரத்தை ரசித்தோம் . படம் எடுக்க வசதியாக அந்த நாற்காலிகளைக் காலியாக விட்டோம். மேலும் நாதஸ்வரக் காரர்கள் திருமண மேடைக்குப் பக்கவாட்டில் மேடை தெரியும் வண்ணம் அமர்ந்திருந்ததால் அங்கே யாரேனும் உட்கார்ந்திருந்தால் மேடை நிகழ்ச்சிகள் அவங்களுக்கு மறைக்கும். அதான் அங்கே காலி சேர்கள்! சரியா இப்போ! :)))))))

  ReplyDelete
 10. ரிசப்ஷன் அன்னிக்கு டேப் போடுகிற வழக்கம் எங்க வீடுகளில் உண்டு. அண்ணா பையர் கல்யாணத்தில் டேப் தான் போட்டார்கள். எங்க பொண்ணு, பையர் கல்யாணங்களில் நாதஸ்வரக் காரர்களே வாசித்தனர். ஆகவே இரைச்சல் ஏதும் இல்லை. பாடகர்களைக் கூப்பிட்டுக் கச்சேரி செய்ய வைத்து அவமானப் படுத்தும் வழக்கம் நல்லவேளையா நடக்கலை. வா.தி. சொல்றாப்போல் மணி கிருஷ்ணசாமியும், அனுராதா கிருஷ்ணமூர்த்தியும் பாடிய கல்யாணங்களில் கச்சேரியைக் கேட்டவர்கள் ஓரிரண்டு பேர்களே. :))))

  எல்லாத்துக்கும் மேலே மெல்லிசைனு போடுவாங்க பாருங்க, அதிலே திருமணக் கூடமே அதிரும். பக்கத்திலே உட்கார்ந்து பேசறது கூடப் புரியாது. சைகையிலே தான் பேசிக்கணும். :(((

  ReplyDelete
 11. வாங்க டிடி, பெரும்பாலான கல்யாணங்களில் மறைந்து வருகிறது. :(

  ReplyDelete
 12. வாங்க வல்லி, அதே, அதே, அநேகமா நாங்க போற கல்யாணங்களிலும் நாதஸ்வரம் கட்டாயம் இருக்கும். :))))

  ReplyDelete
 13. வாங்க ராஜராஜேஸ்வரி, இருவருமே அனுபவித்து வாசித்தார்கள். தேர்ந்தெடுத்த பாடல்களும் கூட.

  ReplyDelete
 14. //அதை விட, திருமண ரிசப்ஷன் அன்று இசை நிகழ்ச்சி என்று காதைக் கிழிப்பது!//

  வாங்க ஸ்ரீராம்,

  அதே, அதே,

  திருமணத்திற்கு முதல்நாளே சினிமாப் பாடல்களா? ஆச்சரியம் தான். அம்மாதிரிக் கல்யாணங்களுக்குப் போக நேரவில்லை. :)))))

  ReplyDelete
 15. தில்லியில் நாதஸ்வரம் வாசிக்கும் சிலர் இருக்கின்றனர். கோவில் நிகழ்ச்சிகளிலும் சில கல்யாணங்களிலும் வாசிக்கிறார்கள்.

  மற்றபடி பெரும்பாலான கல்யாணங்களில் அதுவும் ரிசப்ஷனில் “டண்டனக்கா டணக்குனக்கா” DJ தான்!

  ReplyDelete
 16. நாதஸ்வரத்திலும் சினிமாப்பாட்டு பாடி தொல்லை செய்யும்போது மனசு சங்கடப் படுகிறது..

  ReplyDelete
 17. அட ஸ்ரீராமும் அதையே தான் சொல்லி இருக்கார் !

  ReplyDelete
 18. வாங்க வெங்கட், வட இந்தியத் திருமணங்களில் பான்ட் வாத்தியமே பிரதானமா இருக்கும். ஒரு சில பணக்காரங்க ஷெனாய் வாத்தியக் கச்சேரி வைப்பாங்க. :))) பெரும்பாலும் பாங்க்டா நடனம் தான். நம்மூரிலும் மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் நடந்தால் அதிலே பிள்ளை, பெண்ணின் நண்பர்கள், நண்பிகள் பாங்க்டா நடனமோ, டான்டியாவோ ஆடிக் கொண்டு வந்து கலக்குகிறார்கள். கொஞ்சம் ஓவராவே இருக்கும். :)))))

  ReplyDelete
 19. வாங்க ரிஷபன் சார், நல்வரவு. இரண்டாம் முறை(?) வந்ததுக்கு நன்றியும் கூட. :))))

  நாதஸ்வரத்தில் மட்டுமில்லாமல் மற்ற எந்த வாத்தியத்தில் சினிமாப்பாட்டு வாசிச்சாலும் எனக்கும் பிடிக்கிறதில்லை. ஆனால் இன்றைய ரசனை அப்படி இருக்கே! :))))

  ReplyDelete