எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 19, 2013

மெட்ராஸ், நல்ல மெட்ராஸ்!

 மெட்ராஸ் நல்ல மெட்ராஸ்
அநியாயம் ஆத்தாடியோ!

மருத்துவப் பரிசோதனைக்காகச் சென்னைப் பயணம்.  ஞாயிறன்று கிளம்பிப் போனோம்.  ரயில் ஆடிய ஆட்டத்தில் ராத்திரியெல்லாம் தூக்கமே இல்லை.  இப்போல்லாம் ரயில் ரொம்பவே ஆடுது;  என்னனு புரியறதில்லை.  கொஞ்சம் பயமாவும், நிறையக் கவலையாவும் கிட்டத்தட்ட சிவராத்திரியாத் தான் போயிடறது. ஒரு வழியா சென்னைக்கு நல்லபடியாக் கொண்டு சேர்த்திட்டாங்க.  மாம்பலத்தில் இறங்கித் தம்பி வீட்டுக்கு (நடந்து போகும் தூரம் தான், ஆனால் கையில் பெட்டியை வைத்துக்கொண்டு போக முடியலை) ஆட்டோக்காரரைக் கூப்பிட்டால், ஆட்டோவின் விலையைச் சொன்னார்.  அவ்வளவு விலை கொடுத்துக் கட்டிவராதுனு கொஞ்சம் நடந்து வந்தால், பாதி விலைக்கு ஒருத்தர் வரேன்னு சொல்லவே, நடந்த களைப்புத் தீர ஏறி உட்கார்ந்தோம்.  சரியா உட்காருவதற்குள்ளாக வீடு வந்தாச்சு.  அவங்கல்லாம் நல்லாத் தூங்கினவங்களை எழுப்பி உள்ளே போனோம்.

மவுன்ட் ரோடில் ரங்க்ஸுக்கு அவர் அலுவலகத்தில் வேலை இருந்ததால் அங்கே போனார்.  போய்ப் பார்த்தால் அலுவலகத்தையே காணலையாம்!  ஒரு வருஷத்துக்குள் காணாமல் போனதாகச் செய்தி ஏதும் படிக்கலையேனு வியப்புடன் அங்கே இங்கே தேடிக் கடைசியில் மெட்ரோ ரயில் பாலத்துக்குப் பின்னே ஒளிந்திருந்த அலுவலகத்தைக் கண்டு பிடிச்சுப் போயிட்டு வந்தார்.  வெயில் என்னமோ 95* தான் அப்படினு சொல்றாங்க.  ஆனால் உடல் தெப்பமாக நனைஞ்சு போச்சு.  சென்னையிலேயே  இத்தனை வருஷமா இருந்துட்டு இப்போ என்ன வந்தது உனக்குனு சூரியன் ஒரு கடுமையான பார்வையால் என்னைப் பார்த்தான்.  உடனேயே வீட்டிலே உட்கார்ந்திருந்த எனக்கும் உட்கார்ந்திருக்கிறச்சேயே வெள்ளமாக வியர்வை.  மதியத்துக்கு மேலே மருத்துவரைப் பார்க்கப் போனோம்.  அவர் சொன்ன பரிக்ஷையெல்லாம் செவ்வாய்க்கிழமை எழுதினோம்.  ரங்க்ஸ் டிஸ்டிங்ஷனோடு பாஸ் பண்ண, நான் முயற்சியைப் பாதியில் விட்டுட்டேன்னு எனக்கு நோ மார்க்!  மறுபடி எழுதணுமாம். :P :P :P அங்கே இருந்த இரண்டு நாட்களும் போக்குவரத்திலேயே நேரம் போயிடுச்சு. :(

கிளம்பற அன்னிக்கு அவசரம் அவசரமா கால் டாக்சி வைச்சு அம்பத்தூருக்குப் போனோம்.  நான் எங்க வீட்டைப் போய்ப் பார்க்கலை.  ரங்க்ஸ் மட்டும் போயிட்டு வந்தார். எங்கே பார்த்தாலும் மலை மலையாய்க் குப்பை.  தெருக்களில் ஆங்காங்கே பள்ளங்கள் தோண்டிக் கொண்டு எல்லாரும் பச்சைக்குதிரை தாண்டிட்டு இருந்தாங்க.  பக்கத்துத் தெருவில் இருக்கும் அண்ணா வீட்டிற்குப் போகச் சுத்திக் கொண்டு போக வேண்டியதா இருக்கு.  ஜேபிசிக்களும், ரோட் ரோலர்களும், மணலும், சிமென்டும், ஜல்லியும், செங்கற்களும், செங்கற்பொடி பறத்தலும் இன்னமும் நிற்கவில்லை. ஒரு சில தெருக்கள் மட்டும் நல்லாவே போட்டிருக்காங்க.  அந்தத் தெருக்களில் இரு சக்கர, நான்கு சக்கர, மூன்று சக்கர வாகனங்கள் மின்னல் வேகத்தில் பறந்து கொண்டிருக்கின்றன.  நாம தான் ஒதுங்கணும்.  ஆனால் ஒதுங்க இடம்??? அதான் பெரிய பிரச்னை.  அம்பத்தூர்  பேருந்து நிலையத்திலிருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் அண்ணா வீடு, எங்க வீடு வர ஆட்டோக்காரர் 80 ரூபாயிலிருந்து நூறு வரை கேட்கிறார்.  நாம குறைச்சால், அடிக்காத குறைதான்.

"நானா வரீங்களானு உங்களைக் கூப்பிட்டேன்?  நீங்கதானே ஆட்டோ வேணும்னு கூப்பிடறீங்க?  இந்த வாடகைக்கு வந்தால் வாங்க.  இல்லைனா போங்க."  இதான் அங்கே தாரக மந்திரம்.  மிகச் சிலர் பழைய ரேட்டான ஐம்பது ரூபாய்க்கு வராங்க என்றாலும் அவங்களைப் பேருந்து நிலையத்தில் பிடிக்க முடியாது.  பேருந்து நிலைய ஆட்டோக்காரங்க அவங்களை விட மாட்டாங்க.  ஷேர் ஆட்டோக்களையும் உள்ளே செல்ல அனுமதிப்பதில்லையாம். முடியாதவங்களுக்கு வேறே வழியே இல்லை.  கால் டாக்சியில் எழும்பூர் செல்ல முன்னாடி 250 ரூ ஆகிட்டு இருந்தது.  இப்போ ஒரு வருஷத்தில் நூறு ரூபாய் அதிகம்.  ஆட்டோ என்றால் அம்பத்தூர் ஆட்டோக்காரங்க  நானூறு கேட்கிறாங்க.  ரயிலில் டிக்கெட்டின் விலையை விடக் கூட அதிகமாகிடும் போலிருக்கு.  இதுக்கெல்லாம் எப்போ முடிவு?  மொத்தத்தில் கசப்பான பயணம்.

பிகு.:அநாவசியமான மாலை, மரியாதை, சிவப்புக் கம்பள வரவேற்பு, பூத்தூவல், வரவேற்பு பானர், டிஜிடல் ஃப்ளெக்ஸ் விளம்பரங்களைத் தவிர்க்க வேண்டியே ஒருத்தர் கிட்டேயும் சொல்லாமல் ரகசியமாப் போயிட்டு ரகசியமா வந்து சேர்ந்தேன்.  அங்கே ஒரு சில பேட்டிகள், செய்தி சேகரிப்புகள் என நடந்தது.  நாளாவட்டத்தில் பகிர்கிறேன். :P:P:P:P:P:P

22 comments:

 1. 1) சத்தமில்லாத சென்னைப் பயணம். ஆஸ்தான டாக்டர்?

  2) திங்கள் சென்னையில் 95 இல்லை, 104 டிகிரி! மதியம் வரும் காற்று வரப்பிரசாதம்.

  3) 90 ரூபாய் கேட்ட ஆட்டோக்காரர் தெய்வம். 150 க்குக் குறைந்து யாரும் பேசுவதில்லை! இந்தக் காசுக்கு கால் டேக்சியிலேயே போய் விடலாம்!

  4) இந்தமுறை பாடங்களை ஒழுங்காகப் படிக்கவும்.

  ReplyDelete
 2. /////////
  சரியா உட்காருவதற்குள்ளாக வீடு வந்தாச்சு.
  //////////
  இதுதான் Director's Touch!

  அருமை!

  ReplyDelete
 3. நான் சென்னைக்கு வரலாம் என்று நினைத்தால், இப்படி பயமுறுத்திருகிறீர்களே.

  ReplyDelete
 4. கசப்பான சூடான (ஆட்டோ மீட்டர்) பயணம்...!

  ஸ்ரீராம் அவர்களின் பாடங்களுக்கும் நன்றி...

  ReplyDelete
 5. பாஸ் போடலியா அந்த டாக்டர். ரொம்பக் கருணையுள்ளவராச்சே!

  உடல் நலம் பேணவும்.
  ஆட்டோவில் ஏறினால் 80 இறங்கினால் நூறுனு தான் போகிறது வாழ்க்கை.

  அம்பத்தூர் நல்ல நிலமைக்கு மாறுகிறதோ?

  ReplyDelete
 6. மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் தான்.
  இப்போ சென்னை ஆனவுடன் கேட்டுப் போச்!
  வெயில் எங்களூரிலேயே தாங்கவில்லை. உலக வெப்பமயமாதலை வீட்டுக்குள்ளேயே அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம்.

  அடுத்தமுறையாவது டெஸ்ட்களை சரியாக எழுதிவிட்டு வாருங்கள்.
  All the best!

  ReplyDelete
 7. நான் திங்கட்கிழமை, சென்னையில்தான் இருந்தேன். காலையில் மாம்பலத்தில் ஒரு சுற்று சுற்றி, மூடியிருந்த கடைகளைப் பார்த்து, வெறுத்து, மாம்பலத்தில் வாங்க வேண்டிய அ அ, மி வ, ம வ, உ நா எல்லாவற்றையும் குரோம்பேட்டையிலேயே வாங்கி, வீட்டுக்குப் போயி முழு ஓய்வு எடுத்துக் கொண்டேன்.

  ReplyDelete
 8. ஸ்ரீராம் சொன்னது எல்லாமே சரிதான்.
  கௌதமன் என்ன கோட் எழுதறார்? ஐடி ஆசாமியா?
  ஒழுங்கா பரிட்சைக்கு படிக்கறதில்லை! கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

  ReplyDelete
 9. //கௌதமன் என்ன கோட் எழுதறார்? //
  அவங்க கண்டுபிடிச்சுருப்பாங்க!

  ReplyDelete
 10. சத்தமில்லாத சென்னை பயணம்.....

  சென்னை மட்டுமல்ல, தமிழகம் வருவதற்கே கஷ்டமாகத் தான் இருக்கிறது..... :(

  ReplyDelete
 11. வாங்க ஸ்ரீராம், ஹிஹிஹி, சொல்லிட்டுப் போனால் எத்தனை பேரைப் பார்க்க வேண்டி இருக்கும்! அதான் சொல்லலை, பக்கத்திலேயே இருந்த மாதங்கி வீட்டுக்குக் கூடப் போக முடியலை. :( ஒரு வாரமாவது இருந்தால் தான் ஒருத்தர் இரண்டு பேரையாவது பார்க்க முடியும். :(

  திங்களன்று 104 டிகிரியா? அது தெரியாது. மதியம் அன்று மட்டும் தான் காற்றடித்தது. செவ்வாயன்று ஒரு வழி பண்ணிடுச்சு! :)

  ஹிஹி, ஆட்டோக்காரர் தெய்வமா, சரிதான். :)))))

  ஹிஹிஹி, நான் பாடமே படிக்கலைனு சொல்லியும் எங்க மருத்துவர் கேட்டால் தானே! :))) ஆஸ்தான மருத்துவர் தான்! :))))

  இன்னிக்கு நான் இப்படி உட்கார்ந்து எழுத முடியுதுன்னா அவராலே தான். கிட்டத்தட்டப் போயிடுவேன்னு இருந்த என்னை மீட்டெடுத்த புண்ணியவான். :)))))

  ReplyDelete
 12. வாங்க கடைசி பெஞ்ச், பாராட்டுக்கு நன்றி.

  ReplyDelete
 13. வாங்க "இ"சார், உங்க சென்னைக்காதலைக் குறித்து நினைத்துக் கொண்டே தான் எழுதினேன். :))))) இப்போ சென்னை இப்படித் தான் இருக்கு. ஆங்காங்கே குப்பைகள் மலையாய்த் தேங்கிக் கிடக்க, ப்ளாஸ்டிக் பைகளும், டயபர்களும், பெண்களின் உபயோகப் பொருட்களும் காற்றில் பறக்க, மாடுகள் அவற்றைத் தின்ன, அந்தப் பாலை நாம குடிக்கிறோமேனு மனசுக்குள்ளே பயமும், வருத்தமும் வர........... இத்யாதி, இத்யாதி! :(((( மொத்தத்தில் நரகம்=சென்னை மாநரகம்.

  ReplyDelete
 14. வாங்க டிடி, கசப்பான பயணம் தான். :))) ஹிஹிஹி, ஸ்ரீராமுக்கென்ன சொல்லிட்டார். பாடம் எழுதற எனக்கில்லை கஷ்டம் தெரியும்! :))))

  ReplyDelete
 15. வாங்க ரேவதி, அரியர்ஸ் வைச்சாப் பாஸ் எப்படிப் போடுவாங்க? ஹிஹி அம்பத்தூர் நல்ல நிலைமைக்கு மாறுகிறதானு கேட்டதைப் பார்த்துச் சிப்பு சிப்பா வருது. அது எங்கே? இந்த ஜென்மத்தில் நாங்க பார்ப்போமா, சந்தேகமே! :))))

  ReplyDelete
 16. வாங்க ரஞ்சனி, பெண்களூர் வெயில் குறித்துத் தம்பி வீட்டிலேயும் சொன்னாங்க, தம்பி பையர் அங்கே தான் வேலை செய்யறார். :)))

  ஹிஹிஹி, அடுத்த முறை பரிக்ஷைக்கு இப்போவே ஆரம்பிக்கணும் போல! :)))

  ReplyDelete
 17. வாங்க கெளதமன் சார், ஹிஹிஹி, மாம்பலத்திலே வாங்கினா, எடை கம்மியாவும் இருக்கும். குரோம்பேட்டையிலே வாங்கினது தான் சரி. :))) என்ன என்னனு கண்டு பிடிச்சுட்டேனே! :))))

  ReplyDelete
 18. வாங்க வா.தி. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் பரிக்ஷை ஒழுங்கா எங்கே எழுதறது? அரியர்ஸ் வைச்சிருக்கேன். (மூணு வருஷமா) நீங்க கடலூரில் க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ருங்கறது இங்கே வந்து சத்தம் கேட்குது! :P:P:P:P:P:P

  கெளதமன் கோட் என்னனு சொல்ல மாட்டேனே! ஹாஹாஹா, கெளதமனும் சொல்ல மாட்டாரே!

  ReplyDelete
 19. கெளதமன் சார், தாங்கீஸ், தாங்கீஸ், வா.தி.க்குச் சொல்லிடாதீங்க.

  @ வா.தி.

  ஜாலிலோ ஜிம்கானா,
  டோலிலோ கும்கானா!

  ReplyDelete
 20. வாங்க வெங்கட், தமிழகம் முழுதும் மின்வெட்டு இருப்பதால் சொல்றீங்க போல! என்றாலும் சென்னையோடு ஒப்பிடுகையில் இங்கே பரவாயில்லை ரகம் தான். ஆனால் இங்கேயும் தெற்கு கோபுர வாசலில் இருக்கும் ஆட்டோ ஸ்டான்ட் ஆட்டோக்காரங்க அங்கிருந்து எங்க வீட்டுக்குக் குறைந்தது எழுபது ரூபாய் கேட்கிறாங்க. :(((( என்றாலும் பொதுவாகப் பரவாயில்லைதான்.

  கண் மருத்துவர் கிட்டேப் போகிறச்சே 30 ரூபாய் தான் கொடுத்தோம். போக வர 60 ரூபாய் தான் ஆச்சு. :))))

  ReplyDelete
 21. கண் செக்கப் செய்து கொண்டீர்கள் போலும்.

  சென்னை பேட்டி பகிர்ந்து கொள்ளுங்கள்.

  ReplyDelete
 22. வாங்க மாதேவி, பதில் கொடுக்க தாமதம் ஆகிவிட்டது. கண் செக்கப் இல்லை. மொத்த செக்கப்.:))))

  ReplyDelete