எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 27, 2013

நான் கணினி கற்றால், அதை முழுதும் கற்றால் இணைய ரசிகர்களைப் படுத்தாமல் விடமாட்டேன்!

அப்போல்லாம் நாம் வேண்டுகிற தளத்தின் விலாசத்தைத் தான் முழுவதுமாகத் தட்டச்சணும்.  நான் என்ன செய்யறதுனு தெரியாம முழிச்சுட்டு இருந்தேன்.  அப்போ என்னோட ஆசிரியர் வந்து ப்ரவுஸ் பண்ணப் போறீங்களானு கேட்க, நானும் என்னனு யோசிக்காம, ஆமாம்னு சொல்லிட்டேன்.  என்ன சைட்னு கேட்டார்.  சைட்டா?  நான் யாரையும் சைட் அடிக்கலையேனு வாயிலே வந்ததை முழுங்கிட்டேன்.  எனக்குக் கூச்ச சுபாவம் இல்லை;  நேரடியாச் சொல்லி இருக்கலாமோ!  அதுக்கும் திரு திரு.  அப்புறமா அவரே சரினு ஏதோ ஒரு தளத்தைத் திறந்து கொடுத்தார்.  அதிலே சில முக்கியமான தளங்களின் வெப் அட்ரஸ் இருந்தது.  அதிலே இருந்து ஒரு தினசரியின் தளத்தைக் க்ளிக்கிப் பார்க்க  முயல, மெளஸ் அந்தக் குறிப்பிட்ட சுட்டியில் நிக்காமல் ஓடிட்டே இருந்தது.  பொறி வைச்சுத் தான் பிடிக்கணும் போலிருக்கேனு அலுத்துப் போயிட்டேன். மீண்டும் ஆசிரியர் வருகை.  வெண்ணை திருடின கண்ணனாட்டமா நான் முழிக்க, அவருக்குச் சிரிப்பு.  நேத்திக்கு நடந்ததை அந்த ஆசிரியர் சொல்லி இருப்பாரோ? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர். சே, நேத்திக்கு எவ்வளவு ஜாலியா இருந்தது!  நல்லா விளையாட முடிஞ்சதே, இன்னிக்கு என்னன்னா, பாடம் ஆரம்பிச்சு நடத்தறாரே!  எனக்குத் தான் கூச்ச சுபாவமே இல்லைனாலும் அந்த ஆசிரியர் கிட்டே இதைச் சொல்ல முடியலை. :P

என்ன ஆச்சு மேடம்னு கேட்க, மெளஸ் ஓடிப் போயிடறதுனு புகார் கொடுத்தேன்.  நீங்க பிடிச்சுக்கறதிலே இருக்குனு சொன்னார்.  மெளஸ்னு நினைச்சாலே பிடிக்கவா தோணும்! இதோட பெயரை வேறே ஏதானும் வைச்சிருக்கக் கூடாதோ!  யாருங்க அது இதுக்கு மெளஸ்னு பெயர் வைச்சது! னு மனசுக்குள்ளே நொந்து நூலாகிப் போயிட்டேன். அதுக்குள்ளே மெயில் கொடுக்கணுமேனு யோசனை வர, என் பையருக்கும், பொண்ணுக்கும் மெயில் கொடுக்கணும்னு சொன்னேன்.  அவங்க மெயில் ஐடி தெரியுமானு கேட்டார்.  எழுதிக் கொண்டு போயிருந்தேன்.  அதைச் சொல்லவும். என் கிட்டே இருந்து மெளஸை வாங்கி எதையோ க்ளிக்கினார்.  ஒரு தளம் வந்தது.  அதிலே என்னோட பெயர், வயசு எல்லாம் கொடுத்து ஓகே கொடுக்கச் சொல்ல சரினு அவர் சொன்னதெல்லாம் பண்ணி வைச்சேன்.  பாஸ்வேர்ட்னு ஒண்ணு கொடுக்கணுமே.  அப்போல்லாம் யாஹூ தான்.  யாஹூ.காமில் ஒரு அக்கவுன்ட் க்ரியேட் பண்ணினேன்.  பாஸ்வேர்ட் கொடுக்கையில் என்ன கொடுக்கிறதுனு புரியலை.  ஏதோ ஒரு பூவின் பெயரைக் கொடுத்தேன்னு நினைக்கிறேன்.  எல்லாம் முடிச்சாச்சு. மெயில் கொடுக்க என்ன செய்யறதுனு புரியாம எதையோ க்ளிக்கினால் தளம் மறைஞ்சே போயிச்சு.  ஆஹா, காக்கா தூக்கிண்டு போச்சோனு, உஷ், உஷ்னு கத்தலாம்னு நினைச்சேன்.  அதுக்குள்ளே கணினியே முழுசா ஆஃப் ஆக என்னமோ தப்பாயிடுச்சுனு புரிஞ்சது.

அதுக்குள்ளே என்னோட மூஞ்சியைப் பார்த்துட்டே அந்த ஆ"சிரி"யர் வந்து சேர்ந்தார்.  என்னனு கேட்க, வாயே திறக்காமல் கணினியைச் சுட்டிக் காட்டினேன்.  ஹிஹிஹி, ஷட் டவுன் பண்ணி இருக்கீங்க, எப்படிச் செய்தீங்கனு கேட்டார்.  நான் எங்கே ஷட் டவுன் பண்ணினேன்.  மெயில்கொடுக்கணும்னு தான் நினைச்சேன்.  அது ஒரேயடியா காணாமப் போச்சுனு சொன்னேன்.  மறுபடியும் ஸ்விட்சைப் போட்டு கணினியைத் திறக்கச் சொன்னார். திறந்து ஸ்டார்ட் பட்டனைக் க்ளிக்கச் சொல்ல ஸ்டார்ட் க்ளிக் பண்ணினேன்.  டபுள் க்ளிக் என்று சொன்னதாக நினைவு.  ஆகவே இன்னொரு தரம் எதிலோ க்ளிக்க, பெயின்ட், ப்ரஷ்னு வந்துடுச்சு.  அங்கே பார்த்தால் ஒரு ப்ரஷ் ஒண்ணு ஓரமா இருக்க அதைக்க்ளிக்கினால் சென்டருக்கு வந்தது.  மேலும்,மேலும் க்ளிக்கிக் கொண்டே போக விதவிதமான கோடுகள், வளைசல்கள். வட்டங்கள், செவ்வகங்கள்னு தோணினதை எல்லாம் கைக்குக் கிடைச்சபடி போட்டுட்டு இருந்தேன்.  இது நேத்தை விட இன்னிக்கு இன்னும் ஜாலியாவே இருந்தது.  இப்படி எல்லாம் விளையாடலாம்னு யாருமே சொல்லலையே, துரோகிங்கனு பொண்ணையும், பையரையும் திட்டிக் கொண்டேன், மனசுக்குள்ளே தான்.  பார்த்தார் ஆசிரியர். என்னதான் இவங்களுக்குக் கூச்ச சுபாவம் இல்லைனாலும் இதெல்லாம் டூ மச் இல்லை, ஃபோர் மச்ச்னு தோணிப்போய், என்ன மேடம் மெயில் ஐடி க்ரியேட் பண்ணணும்னு சொல்லிட்டு வரையறீங்களேனு கேட்க, அசடு வழிய நான் ஸ்டார்ட் பட்டனிலே டபுள் க்ளிக் பண்ணினதிலே இது வந்ததுனு சொல்ல, அதெல்லாம் இல்லை, ப்ரொகிராமிலே பெயின்ட், ப்ரஷிலே க்ளிக்கி இருக்கீங்கனு நாலு பேர் முன்னாடி சொல்லி என் மானத்தை(இருக்கா என்ன?) ஒட்ட வாங்கினார். ப்ரொகிராமா அது எங்கே இருக்கு??  ம்ம்ம்ம்?? தனியாக் கேட்டு வைச்சுக்கணும், இல்லைனா இன்னொரு நாள் வந்து கணினியைத் துருவிப்பார்க்கணும்னு நினைச்சுக் கொண்டேன்.  பின்னர் அங்கே வந்து யாஹூவைத் திறந்து கொடுத்தார்.

மெயில் கொடுக்க இன்பாக்ஸ் திறந்துடுச்சு.  ஆ னு வாயைப் பிளந்தேன். கொடுங்க மேடம்னு சொன்னார்.  இதிலே ஒருத்தருக்குத் தானே கொடுக்க முடியும்னு சொல்ல, நீங்க மேட்டரை டைப் பண்ணுங்க.  இல்லைனா சொல்லுங்க, நான் டைப்பறேன்னு சொல்லவே, அட, இந்த ஆங்கிலம் கூடவா தெரியாதுனு நினைச்சுட்டார்னு கோபம் வர, கிடு கிடு கிடு கிடுனு டைப்பினேன்.  அவசரத்தில்" கிடுகிடு"  "கிடு கிடு" "கிடு கிடு" அப்படின்னே அடிச்சுருக்கப்போறேனேனு பார்த்துக் கொண்டேன்.  நல்ல வேளையா இல்லை.நான் டைப்பின வேகத்தைப் பார்த்து அசந்துட்டார்.  என்ன இவ்வளவு வேகமா டைப்பறீங்க! ஒண்ணும் அவசரம் இல்லை.  இன்னும் பத்து நிமிஷம் இருக்கு உங்க நேரம் முடிய.  அப்புறமாக் கூட ஒரு ஐந்து நிமிஷம் ஆனாப் பரவாயில்லைனு ரொம்பப் பெருந்தன்மையாச் சொல்ல, அலட்சியமா அவரைப் பார்த்த நான். என்னோட டைப்பிங் குறைந்த பட்ச வேகம் இதுனு சொல்லி அவரைத் திரும்ப அசர அடிச்சேன். அப்புறமா அந்த ஐடியை மேலே டைப் பண்ணச் சொன்னார். சென்ட் கொடுக்கச் சொன்னார். நாளைக்கு பதில் என்னோட இந்த ஐடியிலே இருக்கும், வந்து பார்த்துக்குங்கனு சொன்னார்.  நான் எனக்கு? எனக்கு? னு சுண்டல் கேட்கிறாப்போல் கேட்க, அவரும் இங்கே பக்கத்துப் பிள்ளையார் கோயில்லே தான் தராங்கனு சொல்லிட்டார்.  பதிலுக்கு க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ரின நான், அவர் கிட்டே நானே சொந்தமா என்னோட மெயில் ஐடி ஒண்ணு க்ரியேட் பண்ணணும்னு சொல்ல,  அதான் மேடம் இதுனு செந்தில்--கவுண்டமணி வாழைப்பழ ஜோக் மாதிரிச் சொல்லிட்டார்.

அப்புறமா அங்கிருந்து பொண்ணுக்குத் தனியா, பிள்ளைக்குத் தனியானு மறுபடி  என் முயற்சியாலேயே இன்னொரு மெயில் கொடுத்தேன். அப்பா!  இமயமலையில் எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினாக் கூட இவ்வளவு சந்தோஷம் வந்திருக்காது. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு சந்தோஷமா இருந்தது.  போயிருக்குமானு சந்தேகம் வேறே.  அன்னிக்கு வீட்டிலே போய் ரங்க்ஸ் கிட்டே இதான் பெருமையாச் சொல்லிட்டு இருந்தேன்.  பையர் அன்னிக்கு ராத்திரியே ஃபோன் பண்ணி அம்மா மெயில் வந்ததுனு சொல்லிட்டு, என்னோட ஆர்வத்தைப் பொசுக்கிட்டார். "ஏண்டா, சொன்னே! ஒரு மெயில் கொடுக்கக் கூடாதோ! நான் வந்து அப்பா கிட்டே சொல்லுவேனே!" னு சொன்னா. "ஹை டெக் அம்மா" னு கிண்டல் வேறே!  இப்போவும் என்னை ஹை டெக் அம்மானு தான் சொல்லுவார். :P:P:P:P

மறுநாளைக்குப் பொண்ணு சமத்தா மெயிலில் பதில் கொடுத்திருந்தாள். ரொம்பவே சந்தோஷமா இருந்தது.  அதுக்கப்புறமா ஆரம்பிச்சார் எங்க பையர்.  அம்மா கணினி எக்ஸ்பெர்ட் ஆயிட்டானு, அவர் அமெரிக்கா போகிறதுக்குண்டான வேலையை எல்லாம் இங்கே என்னைச் செய்ய வைச்சு, அதைக் கணினி மூலமா அப்டேட் செய்யச் சொல்லி இன்னும் பழக்கினார்.  ஓரளவுக்குக் கணினியைத் திறக்கவும், மூடவும், மெயில் ஐடியைத் திறக்கவும் வந்தது.  அப்புறமா முதல்முறை அமெரிக்கா போனப்போ பொண்ணு வீட்டு கணினியிலே தான் முதல்முறையாத் தமிழ் படிச்சேன். அந்தக் கதை தனி. அதை வேறே யாரானும் கேட்டா வைச்சுக்கலாம்.  மொத்தத்தில் நான் கணினி கற்றுக் கொண்டதுனு பார்த்தா மெயில் கொடுக்க மட்டுமே தெரிந்து கொண்டிருந்தேன்.  மிச்சம் எல்லாம் அவ்வப்போது செய்த தவறுகளின் மூலமே தெரிந்து கொண்டேன்.


தொழில் நுட்பப் பிரச்னைகள் என வரும்போது நண்பர்கள் உதவி செய்யறாங்க, செய்தாங்க, இன்னும் செய்வாங்க.

நான் அழைக்கும் ஐந்து பேர்

வல்லி சிம்ஹன்

ரஞ்சனி நாராயணன்

வை.கோபாலகிருஷ்ணன்

ஜி.எம்.பி. சார்

ஜீவி அவர்கள்

ரொம்ப யோசிச்சு இவங்களை எல்லாம் யாரும் கூப்பிடலை என்பதை உறுதி செய்து கொண்டு கூப்பிட்டிருக்கேன்.  பதிவு ரொம்பவே பெரிசா ஆயிடுமோனு இதைக் கொஞ்சம் அவசரமாவே முடிச்சிருக்கேன்.  மன்னிக்கவும். :))))

24 comments:

 1. ஹை டெக் அம்மா... உண்மை தான்... ஜி.எம்.பி. ஐயா எழுதி விட்டார் என்று நினைக்கிறேன்... கவனிக்கவும்... நன்றி...

  ReplyDelete
 2. //ஹிஹிஹி, ஷட் டவுன் பண்ணி இருக்கீங்க, எப்படிச் செய்தீங்கனு கேட்டார். நான் எங்கே ஷட் டவுன் பண்ணினேன். மெயில்கொடுக்கணும்னு தான் நினைச்சேன். அது ஒரேயடியா காணாமப் போச்சுனு சொன்னேன். மறுபடியும் ஸ்விட்சைப் போட்டு கணினியைத் திறக்கச் சொன்னார். திறந்து ஸ்டார்ட் பட்டனைக் க்ளிக்கச் சொல்ல ஸ்டார்ட் க்ளிக் பண்ணினேன். டபுள் க்ளிக் என்று சொன்னதாக நினைவு. ஆகவே இன்னொரு தரம் எதிலோ க்ளிக்க, பெயின்ட், ப்ரஷ்னு வந்துடுச்சு. அங்கே பார்த்தால் ஒரு ப்ரஷ் ஒண்ணு ஓரமா இருக்க அதைக்க்ளிக்கினால் சென்டருக்கு வந்தது. மேலும்,மேலும் க்ளிக்கிக் கொண்டே போக விதவிதமான கோடுகள், வளைசல்கள். வட்டங்கள், செவ்வகங்கள்னு தோணினதை எல்லாம் கைக்குக் கிடைச்சபடி போட்டுட்டு இருந்தேன். இது நேத்தை விட இன்னிக்கு இன்னும் ஜாலியாவே இருந்தது. இப்படி எல்லாம் விளையாடலாம்னு யாருமே சொல்லலையே, துரோகிங்கனு பொண்ணையும், பையரையும் திட்டிக் கொண்டேன், மனசுக்குள்ளே தான். //

  நல்ல ஜாலியா குஷியா எழுதித் தள்ளிட்டீங்க.

  ஒரு 10 பதிவாவது தேத்திக் கொண்டாந்துடுவீங்க்ன்னு எதிர் பார்த்தேன்.

  ரொம்பவும் சுருக்கமாகவே முடிச்சுட்டீங்க ! ;((((((

  இதில் எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்.

  பரவாயில்லை .... ஏதோ முடிச்ச்வரை ரைட்டு - மகிழ்ச்சி.

  >>>>

  ReplyDelete
 3. //நான் அழைக்கும் ஐந்து பேர்

  வல்லி சிம்ஹன்

  ரஞ்சனி நாராயணன்

  வை.கோபாலகிருஷ்ணன்

  ஜி.எம்.பி. சார்

  ஜீவி அவர்கள்

  ரொம்ப யோசிச்சு இவங்களை எல்லாம் யாரும் கூப்பிடலை என்பதை உறுதி செய்து கொண்டு கூப்பிட்டிருக்கேன். //

  மிகவும் சந்தோஷம். நன்றி.

  என்னை யார் யார் இதுவரை அழைத்துள்ளார்கள் + இனி யார் யார் என்னை அழைக்க உள்ளார்கள் என்பதெல்லாம் உங்களுக்குத் தெரிய நியாயம் இல்லை தான்.

  ஒருவழியாக அந்த எல்லா அழைப்புகளும் வந்த பிறகு எழுத ஆரம்பித்தால் எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்தி செய்தது போல ஆகும். அதனால் நான் வெயிட்டிங்.

  ஏற்கனவே என்னை முப்பெரும் தேவியர் அழைத்து நான் ஒரு தொடர் பதிவு வெளியிட்டிருந்தேன்.

  அதற்கான இணைப்பு இதோ:


  ”மழலைகள் உலகம் மகத்தானது”
  அமைதிச்சாரல் + மணிராஜ் + முத்துச்சிதறல்
  ஆகிய முப்பெரும் தேவியர்களுக்காக
  http://gopu1949.blogspot.com/2011/11/blog-post_4556.html


  போய்ப்படித்துப் பார்த்துவிட்டு மறக்காமல் கமெண்ட் எழுதுங்கோ, ப்ளீஸ்

  ReplyDelete
 4. நன்றி கீதா.

  இரண்டு,மூன்று நாட்களுக்கு வேலை இருக்கு. உறவினர் ஒருவர் இசபெல்லில்.
  மூளையை வேலை செய்ய வைப்பது கஷ்டம்(இல்லாட்ட மட்டும்!!!)

  ReplyDelete
 5. முடிந்து விட்டதா? தொடர அழைக்கப்பட்டிருப்பவர்களும் சுவாரஸ்யமானவர்கள்தான்.

  ReplyDelete
 6. வாங்க டிடி, எங்க மாப்பிள்ளையும் என்னை ஹைடெக் அம்மானு தான் சொல்லுவார். :)))) ஹிஹிஹிஹி, தகவலுக்கு நன்றி. ஆனால் அவர் பெயரைக் கொடுத்துட்டேன். இனிமே யாரைக் கூப்பிடறது. அநேகமா எல்லாரும் யாரையானும் கூப்பிட்டிருக்காங்க ஏற்கெனவே. :)))

  ReplyDelete
 7. வாங்க வைகோ சார், பத்து வராட்டியும் இன்னும் இரண்டாவது வந்திருக்கும். திடீர்னு போதும்னு தோணித்து. நிறுத்திட்டேன். :)))))

  ReplyDelete
 8. நான் சொன்னது இந்தக் கணினி குறித்த பதிவுக்கு. அதுக்கும் உங்களை யாரானும் கூப்பிட்டுட்டாங்களா? பரவாயில்லை. எல்லாத்தையும் ஏத்துண்டு மொத்தமா எழுதிடுங்க. :)))))

  ReplyDelete
 9. வல்லி, முடிஞ்சா மெதுவா எழுதுங்க, முடியலைனாலும் பரவாயில்லை. :))))

  ReplyDelete
 10. வாங்க ஶ்ரீராம், வல்லிக்கு இப்போ முடியாது. ஜிஎம்பி சாரை யாரோ கூப்பிட்டு ஏற்கெனவே எழுதிட்டாராம். மத்தவங்க என்ன சொல்றாங்கனு பார்ப்போம். வைகோ சார் கட்டாயமா எழுதுவார். மிச்சம் ஜீவி சாரும், ரஞ்சனி மேடமும். பார்க்கலாம்.:)))))

  ReplyDelete
 11. //Geetha Sambasivam said...
  நான் சொன்னது இந்தக் கணினி குறித்த பதிவுக்கு.//

  எனக்கும் அது புரிகிறது மேடம்.

  அதுக்கும் உங்களை யாரானும் கூப்பிட்டுட்டாங்களா? பரவாயில்லை. எல்லாத்தையும் ஏத்துண்டு மொத்தமா எழுதிடுங்க. :)))))//

  இதுவரை நிறைய தலைப்புகளில் தொடர் பதிவுகள் நானும் எழுதிவிட்டேன்.

  அதில் நான் குறிப்பிட்ட “மழலைகள் உலகம் மகத்தானது” என்பதும் ஒன்று.

  அதில் மட்டும் வேடிக்கை என்னவென்றால் பொதுவாக தொடர்பதிவிட ஒருவர் அழைப்பார் அல்லது இருவர் அழைப்பார்கள்.

  அதில் ஆச்சர்யமாக அடுத்தடுத்து மூன்று பேர்கள் அழைத்து அசத்தி விட்டனர்.

  மூவருக்கும் சேர்த்து எழுதியதால் அது மிகச்சிறப்பாக அமைந்து விட்டது.

  அதனால் தான் அதைப் படிக்கச்சொன்னேன், உங்களை.

  மற்ற என் 2011 சாதனைகள் எல்லாம் இதோ இந்த கீழ்க்கண்ட பதிவினில் உள்ளது :

  http://gopu1949.blogspot.in/2011/12/2011.html

  போரடிக்கும் போது படித்துப்பாருங்கோ. சுவையாகவே இருக்கும்.

  தாங்கள் அழைத்துள்ள தொடர்பதிவுக்கும் என்றாவது ஒருநாள் பதிவிட முயற்சிக்கிறேன்.

  அன்புடன் கோபு.

  ReplyDelete
 12. அந்தக் கதை தனி. அதை வேறே யாரானும் கேட்டா வைச்சுக்கலாம். //

  கணினி அனுபவமும் அதை சொல்ற விதமும் கவரும்படி.

  கூட உட்கார்ந்து பேசி சிரிக்கிற மாதிரியான கலகலப்பான நடை!

  ReplyDelete
 13. அடடா அதுக்குள்ளயே முடிச்சுட்டீங்களே..... ஒரு பத்து பதிவாது வரும்னு நினைச்சேன்! :)

  ReplyDelete
 14. முதல்முறை அமெரிக்கா போனப்போ பொண்ணு வீட்டு கணினியிலே தான் முதல்முறையாத் தமிழ் படிச்சேன்.

  வெளிநாடு சென்றால் தானே
  தமிழுக்கு ஏங்குவோம் ..!

  ReplyDelete
 15. அழைப்புக்கு நன்றி கீதாம்மா..

  என் பதிவுகளைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியும். கணினி கையாளலில் அரிச்சுவடி கூடத் தேறாமல் வெகு சாதாரணமாய் வெறும் 'எழுத்துக்கள், எழுத்துக்கள்' என்று இருக்கிற பதிவுகள். 344 பதிவுகள் இதுவரை. அத்தனையும் கணினி நகாசு வேலைகள் என்னும் அலங்காரம் ஏதுமின்றி சோபை இழந்து காணப்படுவதைப் பார்க்கலாம். கணினி வேலைத்திறமையில் கற்றுக் கொண்டது ஏதுமில்லை. வெறும் கையால் எப்படி முழம் போடுவது?
  கற்றறிந்தோர் சபையில் இதுபற்றிய கல்வி அறியாதவன் என்ன செய்ய முடியும்? நீங்களே சொல்லுங்கள்.

  என்னை அழைத்தீர்களே என்கிற திகைப்பு. படைப்பிலக்கியம் தவிர வேறொன்றிலும் நாட்டமில்லாத போக்கும் சேர்ந்து கொண்டது.

  தொடர இயலாத நிலை. புரிந்து கொள்வீர்கள் என்கிற நம்பிக்கை.
  அழைப்புக்கு நன்றி சொல்வதோடு நழுவி விடுகிறேன், ப்ளீஸ்..

  ReplyDelete
 16. பதிவு மிக அருமை.

  ReplyDelete
 17. வைகோ சார், நீங்க கொடுத்திருக்கும் சுட்டிகளை விரைவில் படிக்கிறேன். ஏற்கெனவே பலரோட பதிவுப்பக்கங்களிலும் நிறைய அரியர்ஸ் வைச்சிருக்கேன். :)))))

  ReplyDelete
 18. வாங்க நிலாமகள், ஆமாம், பதிவுகள் எழுத ஆரம்பிச்சது தனிக்கதை தான்! :)))

  ReplyDelete
 19. வாங்க ராஜராஜேஸ்வரி, அங்கே போய் தினமணியும், தினமலரும் படிச்சதோடு அல்லாமல், பல வலைத்தளங்களுக்கும் சிஃபி.காம் மூலம் போகவும் கற்றுக் கொண்டேன். அதுக்கப்புறமாத் தான் 2005 ஆம் வருஷம் மார்ச் மாசம் கணினி வாங்கி, கொஞ்ச நாட்கள் டயலப்பில் இருந்தேன். அப்போ கணினி வாங்கினா மூணு மாசத்துக்கு இணையம் டயலப் இலவசம்னு கொடுத்தாங்க. அதுக்கப்புறமா ப்ராட்பான்ட் பத்தித் தெரிந்து கொண்டு அதை அப்போவே பிஎஸ் என் எல்லில் வாங்கி இருக்கணும். எங்க ஏரியாவுக்குக் கிடைக்கிறது கஷ்டம்னு சொன்னாங்களேனு டாடா இன்டிகாம் வாங்கி படாத பாடு பட்டு, அவங்களே அதைத் திரும்பப் பெற்று அப்புறமா பிஎஸ் என் எல் வாங்கினு நீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈளமாப் போகும். :))))

  ReplyDelete
 20. //கற்றறிந்தோர் சபையில் இதுபற்றிய கல்வி அறியாதவன் என்ன செய்ய முடியும்? நீங்களே சொல்லுங்கள்.//

  நானெல்லாம் எதுவும் படிக்காதவள் தான் சார்.

  ஆனால் நீங்க எழுத முடியலைனு சொன்னதுக்கு அப்புறமும் வற்புறுத்த மாட்டேன். நன்றி. :)))))))

  ReplyDelete
 21. வாங்க கோமதி அரசு நன்றி.

  ReplyDelete
 22. ப்ரெசண்ட் மேடம்!

  ReplyDelete
 23. வாங்க வா.தி. ரொம்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப லேட்! :))))))

  ReplyDelete
 24. ஹைடெக் அம்மா...:))

  கணினி அனுபவங்கள் அருமையாக இருந்தது மாமி.

  ReplyDelete