என்ன இது எல்லாரும் அலங்காரம் முடிஞ்சு வர நேரமாகுது போல! :))) அட, பையருக்கும் ப்யூட்டி பார்லரில் இருந்து வராங்களா இப்போல்லாம்! இது புதுசு! ஒரு வழியா அலங்காரம் முடிஞ்சு இரண்டு குடும்பத்து முக்கியஸ்தர்களும், அருகில் உள்ள கோயிலுக்குப் போயிட்டு மறுபடியும் சத்திரத்துக்கு வரதாப் பேச்சு. சத்திரத்திலும் கூட்டம். ஒரே பேச்சு. நாதஸ்வர இசையே காதில் விழலை. ஆனாலும் அவர் நல்லாவே வாசிக்கிறார். அருமையான பாடல்களாகத் தேர்ந்தெடுத்து வாசிக்கிறார். அங்கே என்னமோ ஒரு ஆலோசனை நடக்குதே. கிட்டே போய் என்னனு கேட்போமா? அட, பெண்ணும், பிள்ளையும் சேர்ந்து நிச்சயதார்த்த மேடையில் உட்காரணுமாங்கறதைப் பத்திப் பேசறாங்க. பிள்ளை வீட்டுக்காரங்க தஞ்சாவூர்க் காரங்களாம். அவங்களுக்கு வழக்கம் இல்லையாம். அதெல்லாம் வேண்டாம் புதுசாங்கறாங்க. இப்போல்லாம் யார் பார்க்கிறா இதெல்லாம் அப்படினு பெண்ணோட மாமா சொல்ல, பெண்ணின் அப்பா, அம்மா, அவங்க வேண்டாம்னால் சரினு சொல்லிடறாங்க.
மாமாவுக்குச் சின்னதா வருத்தம். அவர் பேசாமல் அங்கே இருந்த நாற்காலியில் உட்கார்ந்துக்கறார். பெண்ணின் அப்பா, அம்மா, பிள்ளையின் அப்பா, அம்மா, அவங்க வீட்டு முக்கியஸ்தர்கள்னு மேடையிலே உட்கார்ந்துக்கறாங்க. முதல்லே பிள்ளையை அமர வைத்து நிச்சயமாம். அப்புறமாப் பெண்ணாம். இரண்டு பேருக்கும் நிச்சயம் முடிஞ்சு அதுக்கு அப்புறமா சாவகாசமா மாப்பிள்ளை அழைப்பு.வைச்சுக்கலாம்னு ஒரு சாரார் கூற இன்னொரு சாரார் இப்போக் கோயிலுக்குப் போறச்சே அங்கேயே வைச்சுப் பிள்ளையின் நிச்சயத்தை முடிச்சுப் பிள்ளையைக் கோயில் வாசல்லே இருந்து அழைத்து வரப் போவதாக ஏற்பாடு பண்ணி இருப்பதாகக் கூறினார்கள். அந்தக் கோயிலும் சத்திரத்துப்பிள்ளையார் கோயில் இல்லையாம். கொஞ்சம் தள்ளி இருக்கும் கோயிலாம். போறச்சே சத்திரத்துப் பிள்ளையாரைப் பார்த்துத் தேங்காய் உடைத்துச் செல்வதாக முடிவு செய்யப் பட்டது.
பெண்ணின் அம்மா, அப்பாவுக்கே இந்த விஷயம் இப்போது தான் தெரிய வர, அவங்க விசாரிச்சப்போ ஊர்வலம் வர லைசென்ஸ் ஆறிலிருந்து ஏழுக்குள்ளாகக் குறிப்பிட்ட தெருக்களில், குறிப்பிட்ட கோயிலில் இருந்துனு மாநகராட்சியிடம் அனுமதி வாங்கி இருப்பதாகக் காட்டரிங் காரர் கூறினார். ஆஹா, இப்போல்லாம் அவங்க இல்லை ஏற்பாடுகள் பண்ணறாங்க. அதை விட்டுட்டு நாமே பேசிக்கறோமேனு பெண்ணின் பெற்றோரும், பிள்ளையின் பெற்றோரும் இறுக்கம் தளர்ந்து சிரிக்கப் பெண்ணின் மாமாவும் சிரிப்பில் கலந்து கொள்கிறார். ஆனாலும் பிள்ளை வீட்டினர் பெண்ணின் நிச்சயத்தை இங்கே சத்திரத்திலேயே வைச்சுக்கலாம். ஊர்வலம் முடிஞ்சு வந்து தனியாத் தான் பண்ணணும் என்பதில் உறுதியாக இருந்துட்டாங்க. ஆகவே இங்கே சத்திரத்தில் யார் இருக்கப் போறாங்கனு கேட்டு முக்கியமான சிலர் பாதுகாப்பில் இன்னமும் அலங்காரத்தில் ஈடுபட்டிருக்கும் பெண்ணையும், அவள் தோழியரையும் விட்டு விட்டுச் செல்வதாக முடிவு செய்தனர். பெண்ணின் அம்மா கவலையோடு பெண்ணைப் பார்த்துச் சொல்லிவரச் சென்றார். பெண்ணின் பாட்டி, அத்தை(அவரால் நடக்க முடியலையாம்) இன்னும் சிலர் சத்திரத்தில் தங்க, மற்றவர்கள் எடுத்துச் செல்லவேண்டிய தேங்காய்கள், பழங்கள், பருப்புத் தேங்காய் (மற்ற பக்ஷணங்கள் அங்கேயே அலங்காரமாக வைக்கப்பட்டது.) மற்றும் நிச்சயத்துக்கு வைக்க வேண்டிய தட்டுகளைச் சுமந்து கொண்டு ஒரு குழு பெண் வீட்டினர் முன்னே சென்று இவர்களை வரவேற்கக் காத்திருக்க வேண்டிச் சென்றனர். நாதஸ்வரக் காரர்களும் அவர்களோடு சென்றுவிட, மற்றவர்களில் நடக்க முடியாதவர்களுக்கு வண்டி ஏற்பாடு செய்ய,
மாப்பிள்ளை அழைப்பைப் படம் எடுக்க வேண்டிய ஃபோட்டோகிராஃபர்களும் சென்று விட்டனர். பின்னர் பிள்ளைக்குக் கொடுக்க வேண்டிய டிரஸ், மோதிரம், மாலைகள் போன்றவற்றோடு பெண் வீட்டார் ஒரு காரிலும், பிள்ளை வீட்டார் இன்னொரு காரிலும் ஏறிக் கொள்ள வண்டி கோயிலை நோக்கிச் சென்றது.
அங்கே கார் ஒன்று அழகாக அலங்கரிக்கப்பட்டுக் காத்திருந்தது. காரிலேயே உயரமாக இருக்கை அமைத்து அலங்கரிக்கப்பட்டிருந்தது.
அதன் பத்திரத்தைப் பற்றிப் பிள்ளையின் அப்பா கவலைப்பட கார்க்காரர் அதெல்லாம் கவலைப்படவே வேண்டாம். நல்லாக் கட்டி இருக்கேன். ஜாக்கிரதையாப் பார்த்துப்பேன் என உறுதி அளித்தார். அங்கே ஒரு ஆனைக்குட்டியும் நின்று கொண்டிருந்தது. அட, ஆனை கோயிலோடதானு கேட்டவருக்கு, இல்லைங்க ஆனை மாலை போட்டு மாப்பிள்ளையை வரவேற்கும், திரும்ப மாலை போட்டுக் காரில் உட்கார வைக்கும். கீழே இறங்கறச்சேயும் பெண்ணுக்கும், பிள்ளைக்கும் மாலை போட்டு இறங்கச் சொல்லும் னு சொல்லிட்டு, அப்போக் கீழே இறங்கி இருந்த மாப்பிள்ளையைச் சட்டென அடையாளம் கண்டு கொண்டு யானைக்குட்டியை மாலை போட வைத்தார் ஆனைப்பாகன்.
முன்னெல்லாம் கல்யாணத்துக்கு முதல்நாள் தான் இந்தச் சடங்கு நடந்து வந்திருக்கிறது என நினைக்கிறேன். அதற்கு முன்னர் பெண் பார்த்துப்பிடித்ததும், ஒப்புத் தாம்பூலம் என வெறும் பாக்கு வெற்றிலை மட்டுமே பெண் வீட்டாரும், பிள்ளை வீட்டாரும் மாற்றிக் கொண்டிருப்பார்கள். இப்போதும் பிள்ளையார் பூஜை செய்து நிச்சயம் நடக்கும். மீண்டும் ஒரு முறை பத்திரிகையைப் படிப்பார்கள். இது எல்லாம் அந்தக் கல்யாணத்தில் யாருக்கானும் ஒரு சின்ன ஆக்ஷேபம் இருந்தால் கூட அப்போது கூட எழுப்பலாம். அதற்காகவும், பிள்ளை வீட்டினர் குறித்து எந்த சந்தேகம் பெண் வீட்டினருக்கு இருந்தாலும் கேட்டுக் கொள்ளலாம் என்பதற்காகவுமே. அடுத்துக் கோயிலில் பிள்ளைக்கு நிச்சயம் நடக்கிறது. பெண்ணின் சகோதரன் பிள்ளைக்குச் சந்தனம் குங்குமம் கொடுத்துப் பிள்ளைக்கு என வாங்கி இருக்கும் ஆடையைப் பரிசளிப்பான். மைத்துனன் துணையோடு ஆடை அணிய வேண்டும் என்பது சம்பிரதாயம். இதன் மூலம் ஒருவரோடு ஒருவருக்கான உறவு முறை நெருங்கி வரும் என்பதற்காகவும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதே போல் பெண்ணிற்கு அவள் நாத்தனார், பிள்ளையின் சகோதரி உடை அணிய உதவி செய்வாள். தன் தோழர்களோடு சேர்ந்து உடைமாற்றச் சென்ற மாப்பிள்ளை உடை அணிந்து வந்த பிள்ளைக்கு மாலை போட்டு மீண்டும் சந்தனம், குங்குமம் கொடுத்து பிள்ளைக்கு என வாங்கி இருக்கும் நகைகளையும் கொடுப்பார்கள். இந்த நகை பரிசளிப்பது கட்டாயம் அல்ல. இப்போதெல்லாம் எல்லாரும் பிள்ளைக்கும் பிரேஸ்லெட், மோதிரம், சங்கிலி என வாங்கிக் கொடுக்கின்றனர். :)))))
இதன் பின்னர் தோழர்கள் புடை சூழ மாப்பிள்ளை அலங்கரிக்கப்பட்ட காரில் வந்து ஏறிக்கொள்ள அவரைச் சுற்றிச் சிறு குழந்தைகள் உட்கார வைக்கப்படுவார்கள். மாப்பிள்ளையின் பக்கம் அமர, பெண்ணின் உறவினர் குழந்தைகளும், பிள்ளையின் உறவினர் குழந்தைகளும் போட்டி போடும். இதனாலும் பலருக்கு மன வருத்தங்களும் ஏற்படும். :))) எல்லாவற்றையும் மீறிக் கொண்டு நாதஸ்வரக் காரர் அருமையான பாடல்களை வாசித்துக் கொண்டு வர, மெல்ல மெல்ல ஊர்வலம் நகர்கிறது.
எத்தனை சம்பிரதாயங்கள்...! ஊர்வலத்தில் நடந்து வந்து கொண்டிருக்கிறேன்...
ReplyDeleteதுணை மாப்பிள்ளை பற்றி...
டிடி, மாப்பிள்ளைத் தோழர்களும் வந்துட்டாங்க. :))))
ReplyDelete
ReplyDeleteமனசு திக் திக் என்கிறது. சம்பந்திச் சண்டை எப்போதும் வெடிக்கலாம்......!
அருமையான படங்கள் + அற்புதமான சம்ப்ரதாயங்கள். ஒரே கலகலப்பும் கும்மாளமும் தான். பகிர்வுக்கு நன்றிகள்.
ReplyDeleteநான் மாப்பிள்ளை வீடா, பொண்ணு வீடா?
ReplyDeleteஎல்லாவற்றையும் மீறிக் கொண்டு நாதஸ்வரக் காரர் அருமையான பாடல்களை வாசித்துக் கொண்டு வர, மெல்ல மெல்ல ஊர்வலம் நகர்கிறது.
ReplyDeleteஅமர்க்களமான பகிர்வுகள்..பாராட்டுக்கள்..!
யானை மாலை போட்டு வரவேற்றதை நான் சினிமாவில் கூடப் பார்த்ததில்லை. யானை மாலை போட வருதென்றால் எனக்குக் கொஞ்சம் பயமாகவே இருக்கும் - அதுவும் கல்யாணக் கோலத்தில் இருப்பவருக்கு துணிச்சல் இருக்குமா தெரியவில்லை.
ReplyDeleteபடங்கள் அழகு.
ஜானுவாசம் முடிந்தாச்சா. அப்பாடி பாதிக்கிணறு தாண்டியாச்சு:)
ReplyDeleteகலயாண் ப் பூக்களைக் காணமே. பிள்ளைவீட்டுக்கு எவ்வளவு கொடுத்தாலும் போறாதே:)
கல்யாண வாசனை இங்க வரை அடிக்கிறது.!!!
நானும் ஜானவாச ஊர்வலத்தில் வந்துகிட்டே இருக்கேன். வாக்கிங் போனாப்ல ஆச்சு :)
ReplyDeleteநானும் ஜானவாச ஊர்வலத்தில் வந்துகிட்டே இருக்கேன். வாக்கிங் போனாப்ல ஆச்சு :)
ReplyDeleteவாஷிங்க்டனில் திருமணம் சாவி எழுதிய கதை இப்பவும் மனசுல ஓடும். ஒவ்வொரு கல்யாணத்தின் போதும் மனசுல அந்த டயலாக் கண்டிப்பா வரும். சாமி காப்பாத்து. யார் வீட்டு கல்யாணம்னாலும் பிரச்சனை இல்லாம இருக்கட்டும் என்று.
ReplyDeleteஅந்த டயலாக் “ஷம்பந்தி ஷண்டை எக்ஸ்பக்டட் அட் எனி மொமண்ட்”
:)
வாஷிங்க்டனில் திருமணம் சாவி எழுதிய கதை இப்பவும் மனசுல ஓடும். ஒவ்வொரு கல்யாணத்தின் போதும் மனசுல அந்த டயலாக் கண்டிப்பா வரும். சாமி காப்பாத்து. யார் வீட்டு கல்யாணம்னாலும் பிரச்சனை இல்லாம இருக்கட்டும் என்று.
ReplyDeleteஅந்த டயலாக் “ஷம்பந்தி ஷண்டை எக்ஸ்பக்டட் அட் எனி மொமண்ட்”
:)
பட்டாம்பூச்சி படம் எங்கே?
ReplyDeleteவாங்க ஜிஎம்பி சார், அதெல்லாம் வராது. கவலைப்பட வேண்டாம். :))))
ReplyDeleteவாங்க வைகோ சார், ஆமாம், கல்யாணம்னாலே கும்மாளம் தானே. :)))
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், இரண்டு பக்கத்துக்கும் வேண்டியவரா இருங்க! :)
ReplyDeleteவாங்க ராஜராஜேஸ்வரி, மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க அப்பாதுரை, போன ஜூலையில் மதுரையில் நடந்த என்னோட உறவினர் வீட்டுக் கல்யாணத்திலே தான் நானும் முதல்முதலாப் பார்த்தேன். அப்புறமா இரண்டு, மூன்று கல்யாணங்களில் பார்க்க நேரிட்டது. :))))
ReplyDeleteவாங்க வல்லி, ஜானவாசம் வந்துட்டு இருக்கு. பூக்கள் எல்லார் தலையிலேயும் இருக்கு, பாருங்க. :))))
ReplyDeleteவாங்க புதுகை, மெதுவாக் கச்சேரியைக் கேட்டுட்டே வாங்க. :)))
ReplyDeleteஹாஹா, நோ ஷம்பந்தி ஷண்டை இன் திஸ் பதிவுகள். :)))))
ReplyDeleteவாங்க வல்லி, பட்டாம்பூச்சி, "பேசும் பொற்சித்திரமே" பக்கத்திலே இருக்கு! :)))))
ReplyDeleteஆஹா மேள தாளத்தோட, யானை மாலை போட்டு ஜானவாசம் தொடங்கியாச்சா......
ReplyDeleteஎன்ன எங்கேன்னு தேடாதீங்க..... நான் கொஞ்சம் பின்னால வந்துட்டு இருக்கேன்..... :)
வல்லி, இங்கே போய்ப் பாருங்க பட்டுப் பூச்சியை. :)))))
ReplyDeletehttp://gsambasivam.blogspot.in/2011/03/blog-post_18.html
ஆஹா, வாங்க வெங்கட், நீங்க பின்னாடி வந்தாலும் உங்க உயரம் காட்டிக் கொடுத்துடும். தேடவே வேணாம். :))))))
ReplyDeleteபெண்ணின் சகோதரன் பிள்ளைக்குச் சந்தனம் குங்குமம் கொடுத்துப் பிள்ளைக்கு என வாங்கி இருக்கும் ஆடையைப் பரிசளிப்பான். மைத்துனன் துணையோடு ஆடை அணிய வேண்டும் என்பது சம்பிரதாயம். இதன் மூலம் ஒருவரோடு ஒருவருக்கான உறவு முறை நெருங்கி வரும் என்பதற்காகவும் ஏற்படுத்தப் பட்டுள்ளது. அதே போல் பெண்ணிற்கு அவள் நாத்தனார், பிள்ளையின் சகோதரி உடை அணிய உதவி செய்வாள்.//
ReplyDeleteஎங்களுக்கும் இந்த பழக்கம் உண்டு.
யானையார் மாலைபோட மாப்பிள்ளை அழைப்பு ஜானவாசம்ஆரம்பமாகிவிட்டது நாங்களும் வருகின்றோம்.
ReplyDeleteஆஹா! ஜானவாசம் வந்தாச்சா! கொஞ்சம் லேட்டாயிடுத்து...:))
ReplyDeleteவாங்க கோமதி அரசு, நீங்கள் சொல்லும் காரணம் சரியானதே. மிக்க நன்றி.
ReplyDeleteவாங்க மாதேவி, ரொம்பவே லேட்!:))))
ReplyDeleteவாங்க கோவை2தில்லி, வண்டி லேட்டா? ரொம்பவே லேட்டா வந்துட்டீங்க! :))))
ReplyDelete