எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 09, 2013

படம் பாருங்க, பப்படம் பாருங்க, சினிமாப் படம் பாருங்க!

முந்தாநாள் "வைரமாலை" என்று தமிழில் டப்பிங் செய்யப்பட்ட மலையாளப்படம் பார்த்தேன்.  படம் நன்றாகவே இருந்தது.  அதில் ஹீரோவாக நடிச்சது கோபி என்றும் கலாபவன் மணி அதிலே இருக்கார் என்றும் மட்டும் தெரிஞ்சது.  இன்னொருத்தர் நம்ம ராதாரவியாட்டமா இருந்தார்.  மத்தபடி ஹீரோயினா நடிச்சது யார்னு தெரியலை. :)))) விக்கி விக்கிக் கேட்டா 1954 ஆம் வருஷம் வந்த தமிழ்ப்படம்னு சொல்லிட்டிருக்கு. ஹிஹிஹி, அதில் மனோஹர்  ஹீரோவா நடிச்சப்போ வந்த படம் போல.  Jab We Met.  Kareena Kapoor & Shahid Kapoor .ஸ்ரீராம் கேட்டதுக்கு அப்புறமாப் படத்தோட பெயரை இணைச்சுட்டேன். ஹிஹிஹிஹி. இது கதை அது அல்ல, ஹீரோ, ஹீரோயின் தற்செயலா ரயிலில் சந்திக்கறாங்க. இருங்க இருங்க, நீங்க பார்த்த ஹிந்திப் படம் போல இருக்கா!  ஆமாங்க,, இதே கதைக்கருவோட ஹிந்தியிலே ஹூஸ்டனிலே இருக்கிறச்சே ஒரு படம் பார்த்தேன்.  கிட்டத்தட்ட அதுதான் இதிலே கதைக்கரு.  ஆனால் கொஞ்சம் மசாலா சேர்த்திருந்தாங்க.  அடூர் கோபாலகிருஷ்ணன் மலையாளப்படம் தரம் கெட்டுட்டதாச் சொன்னது இதைப் பார்த்துத் தானோ?


ஹாஹா, தெரியலை.  ஆனால் படம் அப்படி ஒண்ணும் ரசாபாசமான காட்சிகள் கொண்டது இல்லை.  கொஞ்சம் காமெடியாகவே இருந்தது.  அதிலும் அந்த ஹோட்டல் காட்சிகள்! ஹிஹிஹி,ஹுஹுஹுஹு, ஹெஹெஹெஹெ ரகம்.  நம்ம ரங்க்ஸுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.  கவுண்டமணி, செந்தில் காமெடிக்கே விழுந்து விழுந்து சிரிக்கிற ரகம். இது நிஜமாகவே சிரிப்பை வரவழைத்தது.  கேட்கணுமா!   30 லக்ஷம் பணத்துக்காக ஹீரோயினை அவள் காதலன் வேண்டாம்னு சொல்லிடறார்.  அவளிடம் ஒரு வைர மாலை இருக்கு! (எப்படி வந்ததுனு தெரியலை, ஒழுங்கா ஆரம்பத்திலே இருந்து பார்த்துத் தொலைச்சால் தானே!) அந்த மாலையை வித்து அவளுக்கு 30 லக்ஷம் கொடுக்கணும்னு கதாநாயகன் முயற்சிகள்! அவங்க ரயிலிலே போகையிலே சந்திக்கிறது தான்.  ஆனால் ஏதோ ஒரு ஸ்டேஷனில் தண்ணீருக்குக் கதாநாயகி இறங்க, சிக்னல் இல்லாமல் நின்ற வண்டி உடனே கிளம்பி வேகம் எடுக்க, கதாநாயகன் கதாநாயகியை விட்டுட்டு எப்படிப் பிரயாணம் செய்வார்?  அவரும் இறங்க அப்புறமாச் சூடு பிடிச்ச கதை கதாநாயகியின் காதலனின் பணத்தாசையை அப்பட்டமாய்க் காட்டி, நடுவில் அவனுக்கு வேறொரு பணக்காரப் பெண்ணுடன் திருமணம் நடக்க இருந்தது தெரியவர, கடைசியில் நாயகன், நாயகி சேர்ந்துடறாங்க. சுபம்.  ஹிந்தியிலேயும் கிட்டத்தட்ட இதே கதை தான்.

நேத்திக்கு Brick Lane என்ற ஆங்கிலப் படம்.  இந்த ப்ரிக் லேன் இங்கிலாந்திலுள்ள பங்களாதேஷ் வாசிகளின் குடியிருப்பாம்.  அந்தக் குடியிருப்புக்குப் பதினேழு வயதில் தன்னை விட இரு மடங்கு மூத்த ஆண்மகனைத் திருமணம் செய்து கொண்டு வரும் ஒரு பெண்ணின் கதை. நடிச்சது என்னவோ நம்ம இந்தியாவின் நடிகை ஒருத்தரே.  அதிலே இந்கிலாந்தின் புறநகர்ப்பகுதிகள், முக்கியமாய் பங்களாதேஷ் வாசிகளின் இந்தக் குடியிருப்பைப் பார்க்கையில் கொஞ்சம் கொஞ்சம் பழைய மும்பை, கல்கத்தா நினைவு வருகிறது.  அதோடு சுத்தமும் அப்படி ஒண்ணும் பெரிசா இல்லை.  அழுக்காய்த் தான் இருந்தது. பல இடங்கள் இந்தியாவைப் போலவே இருந்தன.  கடைசி வரை படம் விறுவிறு.  கதை சொல்லப் போறதில்லை.  வங்காள மொழியிலும் இந்தப் படத்தை எடுத்திருக்காங்க.  விக்கியிலே இருக்கு. போய்ப் படிச்சுக்குங்க.  இன்னிக்குப் பார்க்கலை.  நகைச்சுவைங்கற பெயரிலே வடிவேலு ரம்பம் போடறதைத் தான் பார்த்துட்டு எழுதிட்டு இருக்கேன். :))))))


14 comments:

 1. ஹீரோ ஹீரோயின் தற்செயலா ரயில்ல சந்திச்சுக்கற ஒரு வரியில் ஒரு ஹிந்திப் படம் ஞாபகத்துக்கு வரும்னு எப்படி எதிர்பார்க்கலாம்? அப்புறம் ஒரு ஆங்கிலப் படமா? என்ன இது சமத்தா உட்கார்ந்து புத்தகம் எழுதற வேலை செய்யாம ஒரே படமாப் பார்த்துக் கொண்டு....

  ReplyDelete
 2. ஶ்ரீராம், புத்தக வேலை ஒருபக்கம் நடக்குது. நடுவிலே கொஞ்சமானும் ரிலாக்ஸேஷன் வேண்டாமா? அதான்! :))))) நீங்க சொன்னதும் படத்தோட பெயரை இணைச்சுட்டேன். விக்கியிலேயும் இந்தப் படம் தானானு உறுதி செய்துண்டாச்சு! :))))

  ReplyDelete
 3. ஓ .... இந்தப் படமா.... இது தமிழ்லயும் பரத்- தமன்னா வச்சு எடுத்துருக்காங்களே....

  ReplyDelete
 4. தியேட்டருக்குப்போய் பொறுமையா உட்கார்ந்து படமெல்லாம் கூடப் பார்ப்பீங்களா? சபாஷ்.

  விமர்சனம் நல்ல இருக்கு. நன்றி.

  ReplyDelete
 5. தமிழிலே பார்த்த ஞாபகம் இல்லை ஶ்ரீராம். :))))

  ReplyDelete
 6. வைகோ சார், தியேட்டருக்கெல்லாம் எதுக்குப் போகணும்?? தொலைக்காட்சியிலே வருதே, அதுவே பார்க்க முடியறதில்லை. இப்படி என்னிக்கானும் பார்ப்பேன். அதைத் தான் பகிர்ந்தேன். :))))))

  ReplyDelete
 7. வரவர படம்லாம் பார்க்க ஆரம்பிச்சீட்டீங்களே! :)

  ReplyDelete
 8. ரியல் ஜோடியான கஜோல், அஜய் தேவ்கன் நடிச்சு ஹிந்தியில் வந்த 'ப்யார் தோ ஹோனா ஹி தா' படத்தையும் கொஞ்சம் நினைவுபடுத்துது நீங்க சொல்லியிருக்கும் கதை.

  ReplyDelete
 9. படவிமர்சனம் நன்றாக இருக்கிறது
  பரத்- தமன்னா நடித்த தமிழ்படம்,
  .கஜோல், அஜய் தேவ்கன் நடித்த ஹிந்தி படம் பார்த்து விட்டேன்.நல்ல சிரிப்பாய் இருக்கும்.
  ReplyDelete
 10. தமிழில் பரத் தமன்னா நடித்ததை பார்த்து நொந்தோம்...:(

  ReplyDelete
 11. ஹாஹா, வெங்கட், வர வரப் படமெல்லாம் பார்க்கலை. எப்போவானும் ஏற்கெனவே வந்த வந்த படங்களாக்கும். :))))))

  ReplyDelete
 12. அமைதி, நீங்க சொல்றபடம் பார்த்ததில்லை. தொலைக்காட்சியில் வந்தால் பார்க்கிறேன். பேரு என்னவோ கேட்டாப்போல இருக்கு. :)

  ReplyDelete
 13. நல்லவேளையா பரத்--தமன்னா நடிச்சுப் பார்க்கலை கோமதி அரசு, நொந்து போனதாக கோவை2தில்லி சொல்றாங்க. :))))

  ReplyDelete
 14. வாங்க கோவை2தில்லி, நல்லவேளையாத் தமிழில் பார்க்கலை. பிழைச்சேன். இப்படித் தான் மலையாளத்தில் காக்கையும் குயிலும் ங்கற படம் ஒண்ணு. கண் தெரியாத வயசான தாத்தா, பாட்டியை ஏமாத்துவாங்க ரெண்டு பேர் பணத்துக்காக. யார் நடிச்சதுனு மறந்துடுச்சு. மலையாளத்தில் நல்லா இருந்தது படம். தமிழில் வேறே ஏதோ பெயரில் கொலை பண்ணி இருந்தாங்க. நிஜம்மாவே நொந்து தான் போச்சு. :((((

  ReplyDelete