எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, December 07, 2013

கான்பூரில் ஒரு இரவு!

கான்பூர் வண்டி இரண்டே காலுக்குத் தான் வந்தது.  அதுவரை ஸ்டேஷனில் உட்கார்ந்திருந்தோம்.  பொழுது போகலையேனு கஷ்டமே இல்லை.  நம்ம முன்னோர்கள் விளையாடுவதைப் பார்த்துக் கொண்டே பொழுது கழிந்து விட்டது. குடும்ப சமேதராக அனைத்து முன்னோர்களும் கூடி இருந்து களித்ததோடு அல்லாமல் எங்களையும் மகிழ்வித்தனர்.  கையிலே எது இருந்தாலும் அவங்க கிட்டேக் கொடுத்துடணும். ஒரு குரங்கார் எதுக்கோ மனைவியைக் கோவிச்சுண்டார்.  அப்போப் பார்த்து ஒருத்தர் வாழைப்பழத்தைச் சாப்பிட வேண்டி உரிக்க, அதன் வாசம் தெரிந்த அந்தக் குரங்கார், பழத்தைப் பிடுங்க. அவரிடமிருந்து அவர் மனைவியார் தட்டிப் பறித்தார்.  இப்போ மனைவியிடம் கோவிக்கவில்லை. :))))


 கீழே சித்திரக்கூடம் ரயில் நிலையத்தில் அமர்ந்திருக்கையில் நம் முன்னோர்கள் விளையாடுவதைப் படம் எடுக்க முயன்றேன்.  காமிராவை அவங்க கேட்பாங்கனு தோணினதாலே, கையிலிருந்த செல்லிலேயே அவங்களுக்குத் தெரியாமல் சுட்டது இது.


இரண்டு பேரும் கணவன், மனைவினு பார்த்ததுமே புரிஞ்சது.  பெரியவரா இருக்கிறவர் தான் ஐயா.  அவர் பயணி ஒருத்தரிடமிருந்து தட்டிப் பறித்த வாழைப்பழத்தை சின்னவங்களா இருக்கிற அம்மா தட்டிப் பறித்துப் போய்ச்  சாப்பிட்டு விட்டார்.  ஆனாலும் ஐயா அதைப் பொருட்படுத்தாமல் அம்மா திரும்ப வந்ததும் கொஞ்ச ஆரம்பிச்சுட்டார்.  இந்தப் படம் ஒருத்தர் கையிலிருந்த பஜ்ஜி, போண்டாவைத் தட்டிப் பறித்தப்போ எடுத்தது.  சுதாரிச்சுக்கறதுக்குள்ளே சாப்பிட்டுட்டாங்க. ஆனால் அவங்களைப் படம் எடுக்கிறோம்னு புரிஞ்சுக்கறாங்க.  அதனால் கவனமா இருக்க வேண்டி இருக்கு! :)))


வண்டி வந்ததும் எங்களுக்கு எதிரேயே நின்ற பெட்டியில் முதலில் ரங்க்ஸ் ஏறி உட்கார இடம் ரிஜர்வ் செய்தார்.  அதுக்குள்ளே நான் பெட்டிகளைத் தூக்கி ஒவ்வொன்றாக மேலே ஏற்ற முயல கூட இருந்தவர்களும் உதவ சாமான்களை வைத்துவிட்டு நாங்க சைடிலே இருக்கும் எதிரும் புதிருமான இருக்கையில் அமர்ந்தோம்.  லக்னோவில் ஏறிய அளவுக்குக் கூட்டம் இல்லைனாலும், கூட்டம் இருந்தது.  ஆனால் ஏறி, இறங்கக் கஷ்டப்படவில்லை.   ஸ்டேஷன் வாசலிலேயே ஒரு கடையில் ரங்க்ஸுக்குச் சாப்பிட உணவும், தேநீரும் (ப்ளாஸ்க் கொண்டு போயிருந்தோம்) வாங்கி வைத்திருந்தோம்.  வண்டியில் ஏறினதும் அதைச் சாப்பிட்டோம்.  பின்னே?  வெளியிலே எடுத்தால் "கு"ரங்காருக்குத் தானே போய்ச் சேரும்! :))))

கான்பூருக்கு ஏழே முக்காலுக்குப்போகணும்.  ஏழு மணிக்குக் கான்பூரில் இருந்து சிறிது தூரமே இருந்த ஒரு லோகல் ஸ்டேஷனில் வண்டியை நிறுத்திட்டாங்க.  ப்ளாட்ஃபார்ம் காலி இல்லையாம்.  கிட்டத்தட்ட ஒரு மணி நேரக் காத்திருப்புக்குப் பின்னர் வண்டி கான்பூர் சென்றது.  நாங்க ஏறின பெட்டியிலிருந்து கீழே இறங்குகையில் நடைமேடை இல்லை.  கொஞ்சம் சிரமப் பட்டுத் தான் இறங்க வேண்டி இருந்தது.  ரயில்வேயில் அறை கிடைக்குமானு விசாரிச்சால் டார்மிட்டரி தான் இருக்குனு சொல்லிட்டாங்க.  அதுக்குள்ளே ஒரு ஆட்டோப் பையர் நான் நல்ல ஹோட்டலாக் கூட்டிப் போறேன்னு சாமான்களைத் தூக்கிக் கொண்டு செல்ல, நாங்களும் பின் தொடர்ந்தோம்.

உண்மையிலேயே நல்ல பையர் தான்.  நல்ல ஹோட்டலாகப் பார்த்து ஆட்டோவைக் கொண்டு நிறுத்தினார்.  அறையும் இருந்தது.  க்ர்ர்ர்ர்ர்ர்ர் இங்கேயும் மாடி!  லிஃப்ட் கிடையாது.  இவ்வளவு வாடகை வாங்கிக்கறீங்க ? ஒரு லிஃப்ட் போடக் கூடாதானு கேட்டுட்டு அறைக்கு மேலே ஏறினோம்.  சாமான்களை ஹோட்டலில் வேலை செய்யும் கேர்டேக்கர் எடுத்து வந்தார்.
அறையில் கொண்டு வைத்துவிட்டு சாப்பிடறீங்களா? என்ன வேணும்னு  விசாரித்தார்.  அது என்னமோ தெரியலை.  எங்களுக்கும் அவருக்கும் முதல் பார்வையிலேயே ஒத்துப் போய்விட்டது.  நாங்களும் நாலு தவா ரொட்டியும், சப்ஜியும், மோரும் வேண்டும் னு சொன்னோம்.  அரை மணியில் சுடச் சுடச் சாப்பாடு ரெடி!  வேறு ஏதும் வேணுமானு கேட்டார்.  காலையில் அறையைக் காலி செய்வதால் காலை ஆகாரத்தைச் சீக்கிரமே கொடுக்கச் சொன்னோம். காலைத் தேநீர் அவங்களே ஆறு மணிக்குக் கொடுத்துடுவாங்களாம்.  சாப்பிட்டுவிட்டுத் தொலைபேசியில் அழைத்த மகளோடு பேசிவிட்டுப் படுத்துத் தூங்கினோம்.

மறுநாள் காலை பாட் டீ வந்தது.  தேநீர்னா அதான் தேநீர்.  சுவையான தேநீர். முதல்நாள் இரவு உணவும் சுவையாகவே இருந்தது.  ஏழரை மணிக்குக் காலை ஆகாரமும் கொண்டு வந்துவிட்டார்.  நாங்க அங்கிருந்து பிட்டூர் வால்மீகி ஆசிரமம் போயிட்டுப் பின்னர் நேரே லக்னோ செல்லவேண்டும் என்பதைச் சொல்லி வண்டி ஏற்பாடு செய்யச் சொன்னோம்.  அவரும் ஒரு ஆளை அனுப்பி வைத்தார்.  அவரோடு வெகுநேரம் பேரம் பேசிக் கடைசியில் கிலோமீட்டருக்கு எட்டு ரூபாய்க்கு அவரும் அரைமனதாக,  நாங்களும் கூட இருக்கேனு அரை மனதாக ஒத்துக் கொண்டோம்.  ஒன்பதரைக்கு வண்டியைக் கொண்டு வரச் சொல்லிவிட்டோம்.  வால்மீகி ஆசிரமத்திலிருந்து ஹோட்டலுக்குத் திரும்பி வந்துட்டுக் கிளம்பினால் பனிரண்டு மணி ஆகிடும். ஆகையால் நேரே லக்னோ போயிட்டால் அங்கே போய்ச் சாப்பிட்டுக்கலாம்னு முடிவெடுத்தோம்.  இங்கே காலை ஆகாரமாக சாதா பரோட்டாவும், சப்ஜி, தயிர், ஊறுகாயோடு கொடுத்தாங்க.  மீண்டும் ஒரு தேநீர் சாப்பிட்டுவிட்டு ஒன்பதரைக்கு வால்மீகி ஆசிரமம் கிளம்பினோம். 

9 comments:

  1. //ஸ்டேஷன் வாசலிலேயே ஒரு கடையில் ரங்க்ஸுக்குச் சாப்பிட உணவும், தேநீரும் (ப்ளாஸ்க் கொண்டு போயிருந்தோம்) வாங்கி வைத்திருந்தோம். வண்டியில் ஏறினதும் அதைச் சாப்பிட்டோம். பின்னே? வெளியிலே எடுத்தால் "கு"ரங்காருக்குத் தானே போய்ச் சேரும்! :))))//

    நல்ல நகைச்சுவையான வார்த்தைப் பிரயோகம். ;)

    >>>>>

    ReplyDelete
  2. //அவர் பயணி ஒருத்தரிடமிருந்து தட்டிப் பறித்த வாழைப்பழத்தை சின்னவங்களா இருக்கிற அம்மா தட்டிப் பறித்துப் போய்ச் சாப்பிட்டு விட்டார். ஆனாலும் ஐயா அதைப் பொருட்படுத்தாமல் அம்மா திரும்ப வந்ததும் கொஞ்ச ஆரம்பிச்சுட்டார்.//

    மனுஷ்யாளைப்போலவேவா;)

    >>>>>

    ReplyDelete
  3. //மறுநாள் காலை பாட் டீ வந்தது. தேநீர்னா அதான் தேநீர். சுவையான தேநீர். முதல்நாள் இரவு உணவும் சுவையாகவே இருந்தது. ஏழரை மணிக்குக் காலை ஆகாரமும் கொண்டு வந்துவிட்டார். //

    நிம்மதியாப்போச்சு.

    பயணக் கட்டுரையும் அதுபோலவே சுவையாக உள்ளது. பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. // ரங்க்ஸ் ஏறி உட்கார இடம் ரிஜர்வ் செய்தார்//

    :))))))

    ReplyDelete
  5. அப்பாடி... நல்ல ஹோட்டல், நல்ல உணவு, நல்ல தேநீர், நல்ல பையர்..... ஹப்பா....டி!

    ReplyDelete
  6. குடும்ப சமேதராக அனைத்து முன்னோர்களும் கூடி இருந்து களித்ததோடு அல்லாமல் எங்களையும் மகிழ்வித்தனர்

    சாப்பாட்டுப்பிரச்சினை தீர்ந்து நல்ல உணவு கிடைத்தும் மகிழ்ச்சிதான் ..!

    ReplyDelete
  7. இனி பயணம் இனிதாய் இருந்திருக்க வேண்டுமே. சில பல வேளைகளுக்குப் பின் திருப்தியாய் வயிறார உணவு. குட்.!

    ReplyDelete
  8. இனிய (பயணத்தையும்) எழுத்து நடை... ரசித்தேன்...

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  9. நல்ல வேளை கான்பூரில் உங்களுக்கு நல்ல உணவு கிடைத்தது.....

    கொஞ்சம் பெரிய ஊர் என்பதால் இங்கே கொஞ்சம் சுமாரான ஹோட்டல்கள் உண்டு!

    ReplyDelete