எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, August 04, 2014

வந்தோம், வந்தோம், மும்பை வந்தோம்

 பொதுவா எங்க வீட்டிலே என்னோட புடைவைகள் தான் இரவலாகப் போகும்.  இப்போ முதல் முறையா எனக்கு இந்த அனுபவம். இங்கே பக்கத்தில் உள்ள கடையில் போய் உள்ளாடைகளும், ஒரு புடைவையும் வாங்கலாம்னு போனால் அந்தக் கடையில் உள்ளாடைகள் கிடைத்தன.  ஆனால் புடைவையே இல்லையாம். என்னடா இது மதுரைக்கு வந்த சோதனைனு நினைச்சுட்டு ஒரு குர்த்தா வாங்கிக் கொண்டேன்.  சல்வார் இருந்தது. இப்போ போட்டுக்கற சுடிதார் அல்லது லெக்கீஸ் எல்லாம் உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கும்.  ஆகையால் அது கிட்டேயே போகலை. குர்த்தா கழுத்து பாகம் ரொம்பவே டைட்டாகப் போச்சு.  தலையே உள்ளே நுழையலை. :( அதை ஆல்டெர் பண்ணிப்போட்டுக்கவும் நேரம் இல்லை. ஆகவே மாமியார் கொடுத்த ஒரு காட்டன் புடைவையைக் கட்டிக் கொண்டேன். ஈரமான ப்ளவுசையே நனைத்துப் போட்டுக் கொண்டேன்.

ஏர் இந்தியாவில் தொலைபேசிக் கேட்டதில் முதலில் நம்பிக்கையான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.  சரி, சாமான் போனது போனதுதான்னு நினைச்சேன்.  ஆனாலும் விடாமல் அவர்களைத் தொடர்பு கொண்டதில் மத்தியானம் 12 மணி போல் நம்பிக்கை ஊட்டும் தகவல் வந்தது.  பெட்டியைக் கண்டு பிடித்து மும்பை கொண்டு வந்து விட்டதாகவும்  இங்கே அலுவலகத்தில் தான் இருப்பதாகவும், கூரியர் மூலம் அனுப்புவதாகவும் சொல்லி விட்டு விலாசத்தைச் சரி பார்த்துக் கொண்டனர்.

அந்தக்கூரியர் காரர் நம்பரைக் கேட்டு வாங்கிக்கலை.அதுக்குள்ளே அவங்க தொலைபேசியை வைச்சுட்டாங்க.  மத்தியானம் 3,4 மணிக்கு வரும்னு எதிர்பார்த்தால் சாயந்திரம் ஆகியும் வரவே இல்லை.  மறுபடி தொலைபேசியே கதினு உட்கார்ந்து ஒரு வழியா கூரியர் எடுத்து வரும் நபரின் தொலைபேசி எண்ணை வாங்கித் தொலைபேசிக் கேட்டதில் இன்னும் இரண்டு பேருக்குக் கொடுக்கணும் எனவும், அது முடிஞ்சதும் கடைசியா நெருல் வருவதாகவும் சொன்னார்.  அவர் வரும்போது இரவு பத்தே கால் மணி ஆச்சு.  அவரைப் பார்க்கப் பாவமாக இருந்தது.  அதுக்கு மேல் வீட்டுக்குப் போக வேண்டும்.மறுநாள் அலுவலகம் போகணும். :)  நம் ஒருத்தரால் எத்தனை பேருக்கு தொந்திரவுனு நினைச்சேன். :(

10 comments:

  1. ஸோ, ஒரு வழியாய் வந்து சேர்த்தது! ஆனால் இப்படி நம்மை அலைய விட்ட ஏர்லைன்ஸ் காரர்களை என்ன செய்ய முடியும்?

    ReplyDelete
  2. ஒருவழியா புடவை வந்து சேர்ந்துருச்சு! அப்புறம் என்ன? அறிய ஆவலுடன்!

    ReplyDelete
  3. ஹ்ம்ம்ம்.கண்ணனைக் காணோமேன்னு தவிச்சுண்டு இருக்கேன். நீங்க மும்பையில இருக்கான்னு சொல்றீங்க. எனக்கு மட்டு நீங்கள் மும்பை போனது தெரியாமப் போனதுக்கு என்ன காரணம். ஸ்ரீராமைக் கேக்கணுமோ. என்ன விஷயம மும்பை விசிட். எப்ப ஸ்ரீரங்கம் பாக். எப்போ கண்ணன் வருவான். எல்லாவற்றுக்கும். பதில் . பொட்டி கிடைத்தது பற்றி சந்தோஷம்.

    ReplyDelete
  4. ஒருவழியாக பொட்டி வந்து சேர்ந்தது....

    பல சமயங்களில் இப்படி பெட்டியை வேறு ஊருக்கு அனுப்பி விடுகிறார்கள்..... எத்தனை தொல்லை!

    ReplyDelete
  5. ஏர்லைன்ஸில் இப்படி அலைய விட்டதற்கு நஷ்ட ஈடு கொடுக்கணும். பெரும்பாலான ஏர்லைன்ஸ் கொடுப்பதில்லை. இதே மாதிரி ஷிகாகோவில் இருந்து மெம்பிஸ் செல்கையில் 2007 ஆம் ஆண்டு என் பெட்டியை ஷிகாகோவில் ஏற்றவே இல்லை. அப்புறமா அதைக் கண்டு பிடித்து வர ஒரு நாள் ஆச்சு. எங்க பெண்ணிற்கு 2005 ஆம் வருஷம் சென்னை வரும்போது ஒரு பெட்டி கூட வரலை. அவளுக்கும் இப்படித் தான் எல்லாம் வாங்கினோம். :) அதுக்குக் கொஞ்ச நாட்கள் கழிச்சு 2006 டிசம்பெர் மாதம் எங்க பையரும், மருமகளும் திருமணம் ஆகி அமெரிக்கா போகையில் மருமகளோட புத்தப்புதுப் பெட்டியோட அதில் இருந்த துணிமணிகள் கிட்டத் தட்ட ஒரு லட்சம் மதிப்பு உள்ள பட்டுப்புடவைகளோட கானாமல் போனது. அதைக் கண்டு பிடிக்கவே முடியலை. ஸ்கானிங்கிலே அது நிறைய புது துணிகள் இருப்பதைப்பார்த்துட்டு யாரோ எடுத்துட்டதாச் சொன்னாங்க. ஆனால் நஷ்ட ஈடாகக் கிடைச்சதோ வெறும் 25,000 ரூபய்கள்தான். :(

    ReplyDelete
  6. சுரேஷ், அப்புறமா என்ன? இங்கே போர் அடிச்சுட்டு உட்கார்ந்திருக்கேன். டாகுமென்ட்ஸ் எல்லாம் ஸ்ரீரங்கத்தில் இருக்கு. எதுவும் எழுத முடியலை. சும்மா கணினியை அவ்வப்போது மேய்ந்து கொண்டு இருக்கேன். :)

    ReplyDelete
  7. வாங்க வல்லி, குறிப்புக்கள், புத்தகம் எதுவும் எடுத்து வைச்சுக்கலை. புத்தகம் மட்டும் எடுத்து வைச்சிருந்தேன். அப்புறமா என்னமோ வேண்டாம்னு தோணித்து. அங்கேயே வைச்சுட்டு வந்துட்டேன். ஆகவே கண்ணன் 14 ஆம் தேதி தான் வருவான். எழுதி வைச்சது அங்கே தான் இருக்கு. :)

    ReplyDelete
  8. மும்பை வரப் போவது யாருக்குமே சொல்லலை வல்லி. :) சஸ்பென்ஸா வைச்சிருந்தேன். இந்தப் பெட்டி தொலைந்து போய் சொல்லும்படி ஆச்சு. :)

    ReplyDelete
  9. வாங்க வெங்கட், தொல்லை தான். ஆனால் எல்லா ஏர்லைன்சிலும் இதே தொல்லை இருக்கு. :)

    ReplyDelete
  10. சிறந்த கருத்துப் பதிவு
    தொடருங்கள்

    ReplyDelete