எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 14, 2014

ரௌடிகளுக்காக ஒரு வகுப்பா? :)

class of rowdies

சமீப காலமாக ஆசிரியப் பணி ஆற்றுபவர்களுக்குப் பல்வேறு பிரச்னைகள்.  மாணவன் ஒருவன் ஆசிரியை ஒருவரை அடித்ததாகவும், இன்னொரு பள்ளியில் மாணவனின் பெற்றோர் பள்ளிக்குள் அடியாட்களை அனுப்பி ஆசிரியரை அடித்ததாகவும் படிக்க நேர்ந்தது.  சென்னையிலோ உமாமகேஸ்வரி என்னும் ஆசிரியப் பெண்மணி மாணவன் ஒருவனால் கத்திக் குத்துப் பட்டு இறந்து போனார். தூத்துக்குடியிலும் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் கொல்லப்பட்டார்.

இதற்குக் காரணங்கள் பல சொல்லப்பட்டாலும் பெற்றோர் தான் முக்கியக் காரணம் என்றே தோன்றுகிறது.  ஆசிரியர் கண்டித்தால் கூடத்  தங்கள் குழந்தையின் நன்மைக்கு என்பதைப் புரிந்து கொள்ளாத பெற்றோர் இருக்கும்வரை இத்தகைய செயல்களே தொடரும். முன்பெல்லாம் ஆசிரியர் கண்டித்தால் மாணவனோ, மாணவியோ அடங்குவார்கள் என்ற ஒரு கருத்து இருந்தது.  பெற்றோரே ஆசிரியரிடம் சொல்லிக் கண்டிக்கச் சொல்வதும் உண்டு.

அதற்காக ஆசிரியரும் சகட்டுமேனிக்குக் கண், மூக்குப் போகும் வரை அடிப்பது தப்பு.கண்டிப்பும் வேண்டும், கனிவும் வேண்டும்.  இங்கே மேற்கண்ட சுட்டியில் ஒரு வகுப்பு மாணவர்களை ஆசிரியை எப்படித் திருத்துகிறார் என்பதைக் குறும்படமாக எடுத்திருக்கிறார்கள்.  பதிவர் வெங்கட் நாகராஜ் இதைப் பகிர்ந்துள்ளார். அதை இங்கே நானும் பகிர்ந்திருக்கிறேன். அவருக்கு வரும் அளவுக்குக் கூட்டம் இங்கே வராவிட்டாலும் அங்கே பார்க்காத மற்றவர்கள் இங்கே பார்க்கலாமே!

12 comments:

 1. பார்த்தோம்! சகோதரி! மட்டுமல்ல அருமையாக இருக்கின்றது. பல கல்லூரிகளும், பள்ளிகளும் அப்படித்தான் இருக்கின்றது. பெற்றோர்கள் முதல் காரணம் என்பது மிகச் சரியே! ஆசிரியர்களும் காரணமாக இருந்தாலும்...முதல் வளர்ப்பு வீட்டிலதானே தொடங்குகின்றது!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், பெரும்பாலான பெற்றோர்கள் புரிந்து கொள்வதில்லை. :(

   Delete
 2. அங்கேயே பார்த்து விட.டேன்.

  காலம் மாறிப்போச்சு.

  ஹூ........ம்!

  ReplyDelete
  Replies
  1. மாற்றங்கள் தேவைதான். ஆனாலும் இப்படியா? :(

   Delete
 3. நானும் பார்த்தேன் வெங்கட் நாகராஜ் பதிவில். ஆசிரியர் ,மாணவர் உறவு, அருமையாக சித்தரிக்கப்பட்டு இருக்கிறது.

  பெற்றோர் வாத்தியார் மேல் மரியாதை காட்டினால் பிள்ளைகளும் மதிப்பார்கள்.

  ReplyDelete
  Replies
  1. எதற்கெடுத்தாலும் ஆசிரியரைக் குற்றம் சாட்டுவது வழக்கமாகி விட்டது. கல்வி வியாபாரம் ஆனதில் இருந்து இது ஒரு பிரச்னையாகி விட்டது.

   Delete
 4. சிறப்பான அலசல்! குறும்படம் வெ.நா பதிவில் பார்த்தேன்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ், நன்றி.

   Delete
 5. குறும்படம் பார்த்தேன். சில மாணவர்களை அவர்கள் போக்கிலேயே நல்வழிப்படுத்தலாம்தான். சில மாணவர்களை என்ன செய்தாலும் திருத்த முடிவதில்லை.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், விச்சு. நீங்கள் சொல்வது சரியே. சிலரை என்ன செய்தாலும் திருத்த முடியாதுதான். :(

   Delete
 6. அருமையான குறும்படம் பற்றிய தகவல் அறிந்தேன். மிக்க நன்றி

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராஜலக்ஷ்மி, இதைப்போடும்போது உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன்.

   Delete