எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, December 07, 2014

உறவுகள் தொடர்கதை!

நான் கூட்டுக் குடும்பத்திலே பிறந்து கூட்டுக் குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டவள்.  ஆகவே கூட்டுக் குடும்பத்தின் சாதக, பாதகங்களை நன்கறிந்திருக்கிறேன்.  அந்த வகையில் கூட்டுக் குடும்பத்தின் தலைவர், தலைவி இருவருமே அனைவரையும் அணைத்துக் கொண்டு அனுசரித்துச் செல்லவேண்டியவர்களாக இருத்தல் வேண்டும் என்பதையும் நன்கு உணர்ந்திருக்கிறேன். என் தாயைப் பெற்ற தாய் அப்படித் தான் இருந்தார். நான்கு மகன்களையும், ஐந்து பெண்களையும் பெற்ற எங்கள் பாட்டியார், (தாத்தாம்மா  என நாங்கள் அழைப்போம்) அப்படித் தான் குடும்ப நிர்வாகம் செய்தார்.

எனக்கு மாமாக்கள், அத்தைகள், பெரியம்மாக்கள், சித்திகள் உண்டு.  அவர்கள் வழிக் குழந்தைகளின் உறவு முறைகளும் உண்டு. மாமாவின் பிள்ளையை அந்தக் காலத்தில் அம்மான் சேய் என அழைத்திருக்கிறார்கள்.  நாளாவட்டத்தில் அது மருவி அம்மாஞ்சி என ஆனதோடு யாரேனும் அசடாக இருந்தால் அவர்களைச் சுட்டும் வார்த்தையாகவும் மாறி விட்டது.  மாமாவின் பெண்ணை அம்மங்கை அல்லது அம்மங்கா என அழைப்பார்கள். அத்தையின் மகன் அத்தான் எனவும், அத்தையின் மகள் அத்தங்கார் எனவும் அழைக்கப்பட்டனர்.  

ஒரு குழந்தைக்குத் தாய் இறந்து போய்த் தந்தையார் இரண்டாம் திருமணம் செய்து கொண்டால் இரண்டாம் மனைவி அந்தக் குழந்தைக்குச் சிறு தாயார் எனப்படுவார்.  இதுவே நாளாவட்டத்தில் மருவி செருத்தையார் என்றும் சிரத்தையார் எனவும் ஆகிவிட்டது. தாயின் தங்கையையும் சித்தி எனவும், தாயின் அக்காக்களைப் பெரியம்மா எனவும் அழைப்போம்.  தந்தையின் மூத்த சகோதரர் பெரியப்பா எனவும், இளையவர் சித்தப்பா எனவும் அழைக்கப்படுவார். தந்தை வழிச் சொந்தமே முதன்மையானது.  எங்கள் வீட்டில் இன்றளவும் அதுதான் கடைப்பிடிக்கப்படுகிறது.  தாய் வழிச் சொந்தங்களோடும் நெருக்கம் இருந்தாலும் முதல் மரியாதையும் சரி, முதல் அழைப்புக்களும் சரி தந்தை வழி உறவினருக்கே செய்யப்படும்.  மாறாகச் சில விதி விலக்குகள் இருக்கலாம். 

என் பிறந்த வீட்டிலும் சரி, புகுந்த வீட்டிலும் சரி இரு வழி உறவுகளையும் இன்றளவும் பேணிப் பாதுகாக்கிறோம்.  இது எங்கள் இருவராலுமே கடைப்பிடிக்கப்படுகிறது.  ஆனால் எங்கள் குழந்தைகள் இதைப் பின்பற்றுவார்களா எனச் சொல்ல முடியாது.  அவர்கள் இருப்பது அமெரிக்காவில். எப்போவோ வரும்போது தாய் வழி உறவினரையும், தந்தை வழி உறவினரையும் நினைவில் கொண்டு பார்த்துச் சென்றாலே பெரிய விஷயம்.  இது அவர்களின் வெளிநாட்டு வாசத்தால் ஏற்பட்டிருக்கும் நிலை.  ஆனால் உள்ளூரிலேயே இருந்தாலும் தாய் வழி, தந்தை வழி உறவினரைச் சென்று பார்த்தல், அவர்களோடு நெருங்கிய பழக்கம் கொண்டிருத்தல் எத்தனை பேரால் சாத்தியப் படுகிறது?  சந்தேகமே.

இப்போதெல்லாம் நட்பு ஒன்றுக்கே முக்கியத்துவம்.  நட்பே பெரிதாகப் பேசப்படுகிறது. பலரும் உறவினரை விட நண்பர்களுக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.  சொல்லப் போனால் கூடப் பிறந்த பிறப்பை விடவும் நட்பு வட்டம் பலருக்கும் இன்று பெரிதாகத் தெரிகிறது.  நண்பர்களிடமே அந்தரங்கங்கள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. உறவுகள் கொஞ்சம் விலகி இருந்து தான் பார்க்க வேண்டி உள்ளது. இது எதனால்?? மாறி வரும் கலாசாரமா?  அல்லது மனோநிலையா?என்னைக் கேட்டால் அவரவர் மனோநிலை என்றே சொல்லுவேன்.  

கொஞ்சம் கொஞ்சமாய்ப் பார்ப்போம்.

தொடரலாம். :))

26 comments:

 1. உறவுகள்தொடராகும் என்று எதிர்பார்க்கவில்லை. முதலில் பின்னூட்டம் போன்றகருத்துக்களே பதிவாகலாம் என்று எண்ணி இருந்தேன். இப்போது தெரிகிறது , கனமான தலைப்புக்கு ஒரு பதிவு போதாது என்று. வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 2. நீங்கள் சொல்வது சரியே. இந்தப் பகிர்வு கூட நட்பு வட்டாரத்தில் தான் என்பது இன்னும் அர்த்தம் கூட்டுவதாக இருக்கிறது.

  ReplyDelete
 3. உறவுகளிடமே நட்பு சரியில்லாத போது, பிற நட்பு... பூ...!

  ReplyDelete
 4. தொடரும் போட்டதால அப்பறமா வரேன்....

  ReplyDelete
 5. மிக அவசியமான தொடர்; வாழ்த்துக்கள்.
  பள்ளியில் 'உனக்கு எத்தனை அக்கா,அண்ணா, தம்பி, தங்கை?' எனக் கேட்ட போது பெரியம்மா,பெரியப்பா, சித்தி சித்தப்பா, அத்தை மாமா என எல்லார் குழந்தைகளையும் கூட்டிச் சொன்னது நினைவுக்கு வருகிறது. இப்போ எல்லாரும் 'கஸின்ஸ்'!!:-(

  ReplyDelete
 6. உறவுகள் தொடர்கதையாக இருப்பது தானே சிறப்பு. உங்கள் தொடரும் சிறப்பு. நானும் தொடர்கிறேன். நானும் இரண்டொரு நாளில் எழுத நினைத்திருக்கிறேன்.

  ReplyDelete
 7. உறவுகளை பற்றி அழகாய் சொல்லி விட்டீர்கள்.
  முன்பு ஒவ்வொரு வீட்டிலும் 10, 15, குழந்தைகள் உறவுகள் பரந்து விரிந்து இருந்தது. அப்புறம் நாம் இருவர், நமக்கு இருவர் ஆனது, அதுவும் குறைந்து ஒன்றே நல்லது என்று ஆகி விட்டது.
  உறவுகள் சுருங்க ஆரம்பித்து விட்டது.

  கூட்டு குடும்பமும் இப்போது சாத்திய படாது. முன்பு வியாபாரம் செய்வார்கள் அண்ணன் தம்பி, எல்லாம் ஒரே வீட்டில் இருந்தார்கள், இப்போது வேறு ஊர்,வேறு நாடுகளில் வேலை பார்க்கும் போது கூட்டுக் குடும்பம் எப்படி சாத்தியப்படும்?
  நாள் கிழமை, நல்லது, கெட்டது கூடுவதே பெரிய விஷயம்.

  ReplyDelete
 8. வாங்க ஜிஎம்பி சார், கனமான பதிவு மட்டுமல்ல, ரொம்ப ஆழமான விஷயமும் கூட. எத்தனை பேருக்கு இதன் உள்ளார்ந்த பொருள் புரியும் எனத் தெரியவில்லை. குறிப்பாய் இந்தத் தலைமுறைக்கு.

  ReplyDelete
 9. ஜீவி சார், நல்வரவு. முகநூலில் என் உறவினர்கள் அனைவரும் இருப்பதால் அங்கேயும் பகிர்ந்திருக்கிறேன். ஆகையால் பகிர்வு நட்பு வட்டாரத்தில் மட்டுமல்ல உறவு வட்டாரத்துக்கும் போய்ச் சேரும். :)))))

  ReplyDelete
 10. வாங்க டிடி, ஒரு வார்த்தை என்றாலும் திரு வார்த்தையாகச் சொல்லி இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 11. வாங்க வெங்கட், நன்றி.

  ReplyDelete
 12. வா.தி. இதுக்கு வந்ததே அதிசயம்! :P :P :P :P

  ReplyDelete
 13. வாங்க மிடில் க்ளாஸ் மாதவி, வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

  ReplyDelete
 14. வாங்க ராஜலக்ஷ்மி, நீங்களும் எழுதுங்க.

  ReplyDelete
 15. வாங்க கோமதி அரசு, உறவுகள் மட்டுமா சுருங்கி விட்டன? எல்லோர் மனமும் அல்லவா சுருங்கி விட்டது! :(

  ReplyDelete
 16. நான் போட்ட ரெண்டு பின்னூட்டங்கள் என்னதான் ஆச்சு? என் பின்னூட்டத்தக் காணோமே தவிர, உங்கள பின்னூட்டங்கள் கரெக்டாக என் மெயில் பாக்ஸுக்கு வந்து விடுகின்றன.

  ReplyDelete
 17. ஶ்ரீராம், உங்க இரண்டாவது பின்னூட்டம் இரு முறை வெளியிட்டேன். வெளியாகவில்லை. ஆனால் என்னுடைய மெயிலுக்கு வந்திருந்தது. முதல் பின்னூட்டம் குலுக்கிக் குலுக்கிப் பார்த்துட்டேன். கிடைக்கலை. மூன்றாம் பின்னூட்டம் வெளியீடு ஆகி இருக்குனு நினைக்கிறேன். மறுபடி கொடுங்க. :)))

  ReplyDelete
 18. உங்க கிட்டேருந்து வரலையேனு நினைச்சேன். :))))

  ReplyDelete
 19. ஸ்ரீராம். has left a new comment on your post "உறவுகள் தொடர்கதை!":

  நேற்று போட்ட பின்னூட்டம் என்ன ஆச்சோ!

  தொடர்கிறேன்.

  ReplyDelete
 20. உறவுகள் பற்றிய உங்கள் பகிர்வு வாசிக்க வாசிக்க வியப்பை ஏற்படுத்துகிறது. உங்கள் அனுபவத்திலிருந்து எவ்வளவோ விஷயங்களை நாங்களும் கற்றுக்கொள்கிறோம். தொடருங்கள் கீதா மேடம்.

  ReplyDelete
 21. உங்கள் தொடரில் இனி வரும் கருத்துக்களை உள்வாங்கிக் கொண்டபின் விரிவான பின்னூட்டம் இடுவேன்.

  ReplyDelete
 22. கீதமஞ்சரி, நீங்கள் பாடம் கற்றுக் கொள்வதாய்ச் சொன்னாலும் பலரும் நான் என் அனுபவத்தை மட்டுமே எழுதுவதாகவும் சொல்கின்றனர். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு பார்வை. அதே போல் இந்த உறவுகள் விஷயத்திலும் உங்கள் பார்வையிலிருந்து எனது மாறுபட்டதே! :))))

  ReplyDelete
 23. ஜிஎம்பி சார், கருத்து என்றெல்லாம் எதுவும் இல்லைனே நினைக்கிறேன். பொதுவாகவே சொல்லலாம்னு ஒரு எண்ணம்.

  ReplyDelete
 24. கூட்டுக் குடும்பத்தில் இருப்பதால் நமது பொறுமையும் அதிகமாகிறது என்று நினைக்கிறேன். நிறைய கற்றுக் கொள்ளுகிறோம். மனிதர்களை கையாளுவது சுலபமாகிறது. தொடர்ந்து படிக்கிறேன், எழுதுங்கள்

  ReplyDelete
 25. என் அத்தையின் மகளை ( இன்று என் மாமியார் ) நான் அத்தங்கா என்றே அழைக்கிறேன்.நம்மை விட வயதில் மூத்தவராய் இருந்தாலே அவர் அத்தங்கா என்றழைக்கப்படுவார். என் மாமியாரின் தங்கை என் மூத்த அண்ணனை விட இளையவர் , முறைப்பெண்ணாகிவிடுவதால் என் அண்ணன் திருமணம் செய்து கொண்டார். அவா எனக்கு மன்னி

  ReplyDelete