எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 03, 2015

ரங்குவைப் பார்க்கப் போனேன்!




இரண்டு நாட்கள் முன்னர் தான் மாசித் தெப்பம் முடிந்தது.  நம்பெருமாளும் தன் ஊர் சுற்றலை முடித்துக் கொண்டுக் கருவறைக்குப் போய் ஓய்வு எடுத்துக்கறார். கிட்டத்தட்ட 2 மாசமாகப் பெரிய ரங்குவைப் போய்ப் பார்க்கணும்னு ஆசை.  ஆனால் வீட்டை விட்டுக் கிளம்புவதே பெரிய விஷயமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் அம்மா மண்டபம் ஆஞ்சியைப் பார்க்கப் போகையில் அம்மா மண்டபத்தின் கூட்டத்தை வைத்து ரங்குவைப் பார்க்கப் போகலாமா வேண்டாமா என முடிவு செய்வேன்.  அது மாதிரி ஒவ்வொரு நாளும் இன்னிக்குக் கூட்டம் இல்லை, கிளம்பலாம்னு நினைச்சு முடியாமலே போயிட்டு இருந்தது.

நேற்றும் அம்மாமண்டபத்தில் கூட்டம் இல்லை.  ஆனால் காலம்பர சமையலறையைச் சுத்தம் செய்யும் வேலை வைத்துக் கொண்டதால் குளிக்கும்போதே பதினோரு மணி.  அதுக்கப்புறமா சமையல், சாப்பாடு, ஓய்வுனு முடியலை.  ஆஞ்சியைக் கூடச் சாயந்திரமாத் தான் போய்ப் பார்த்துட்டு ஹெலோ சொல்லிட்டு வந்தேன். சாயந்திரம் போனால் ஆஞ்சி தன்னந்தனியாக இருப்பார். இன்னிக்குக் காலம்பரயே ஆஞ்சியைப்பார்க்கக் கிளம்பினேன்.  வாசலிலே பார்த்தால் சுற்றுலா வண்டிகள் எதுவுமே இல்லை. இரண்டே இரண்டு வான்கள் இருந்தன.  அவையும் கல்யாண மண்டபத்துக்கு வந்தவை போல! அம்மா மண்டபம் உள்ளேயும் கூட்டம் இல்லை.  ஆஞ்சியைச் சுத்தறதுக்கு இடம் இருந்தது.

வந்து நம்ம ரங்க்ஸ் கிட்டே சொன்னேன். சரி, மத்தியானமா கோயிலுக்குப் போகலாம்னு சொன்னாரே தவிர சுத்தமா மறந்துட்டார். சாப்பிடும்போது நான் மறுபடி நினைவூட்டினேன். அதுக்கப்புறமாக் கொஞ்சம் படுத்து எழுந்து சரியா இரண்டரைக்கு எல்லாம் வீட்டை விட்டுக் கிளம்பிட்டோம்.  மூணரைக்கோ, நாலுக்கோ கிளம்பினால் மூத்த குடிமகன்களுக்கான நேரம் என்பதால் கூட்டம் நிறைய வந்துடும்.  அதோட நாம இளைய குடிமக்கள் ஆச்சே! :) அதுவும் ஒரு காரணம். :)))) கோயிலுக்குப் போகும்போதே பள்ளிக் குழந்தைகள் எங்கோ வெகு தூரத்திலிருந்து சுற்றுலாவாக வந்து கொண்டிருந்தனர். அ வங்களுக்கு முன்னே செல்ல இடம் விட்டு விட்டு நாங்கள் பின்னே சென்றோம். எங்கு பார்த்தாலும் திருப்பணி வேலை மும்முரம்.  ஆங்காங்கே சிமென்ட் கரைசல் ஆறாக ஓட,  அதிலே நடக்க வேண்டி இருந்தது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் வெயில் சூடு தாக்காமல் இருக்கப் போட்டிருக்கும் சாக்குத் தரை விரிப்பை எடுத்து விட்டிருந்தார்கள்.

கல் தரைக்கும் சூரியனோட உஷ்ணத்துக்கும் தீ மிதியாகவே இருந்தது.  தீ மிதி மிதிச்சு உள் ஆண்டாள் சந்நிதிக்குப் போனால் அங்கே திறக்கவே இல்லை.  திரும்பி வரச்சே பார்க்கலாம்னு நேரே உள்ளே போனோம். என்ன ஆச்சரியம், என்ன ஆச்சரியம்! இலவச சேவையில் கூடக் கூட்டம் இல்லை.  ஆனாலும் நம்ம ரங்க்ஸ் 50 ரூ டிக்கெட் எடுத்தார். எங்களை நேரே குலசேகரன் படி வரை அது கொண்டு விட்டு விட்டது. எங்கேயும் நிற்கலை.  நேரே கருவறை தான். இந்தத் தரம் போகும்போதே யாகபேரரைப் பார்க்கணும்னு ஒரு முடிவோடத் தான் போனேன்.  ரங்க்ஸிடமும் சொல்லி நினைவூட்டினேன். பெரிய ரங்குவின் பாதத்தருகில் அவர் இருப்பாராம். அதையும் கேட்டு வைச்சிருந்தோம்.  உள்ளே போறச்சேயே நம்பெருமாள் நமுட்டுச் சிரிப்போட இன்னிக்கு எனக்கு முக்கியத்துவம் இல்லை போலிருக்கேனு கேட்க, முதல்லே கண்ணிலே பட்டதே நீங்க தானே! னு சொல்லி அவரைச் சமாதானம் செய்துட்டுப் பெரிய ரங்குவின் முகத்தைப் பார்த்தேன்.  குழந்தைகள் எல்லாம் கோவிந்தாப் போட அங்கிருந்த காவல்துறைப் பெண்மணி, "பெருமாள் தூங்கறார். எழுப்பிடாதீங்க"னு செல்லமாக மிரட்டினார். குழந்தைகளுக்கு பட்டாசாரியார்கள் அனைவரும் நிதானமாக தரிசனம் பண்ணி வைத்தது மனதுக்குத் திருப்தியாக இருந்தது.

போகும்போது கை நிறைய துளசி பிரசாதமும் கொடுத்து அனுப்பினார்கள். அதுக்கப்புறமா நாங்க உள்ளே போனோம்.  பெரிய ரங்குவின் காலருகே யாகபேரர் நின்று கொண்டிருந்தார்.  அவரைக் குறித்துத் தகவல்கள் அறிய  செல்லுங்கள்.இங்கே. நிதானமாகவே தரிசிக்க முடிந்தது.  திருவிழாக் காலத்தில் போயிருந்தால் நிச்சயம் இப்படி ஒரு தரிசனம் கிடைக்காது. வெளியே வந்து தீர்த்தம் பெற்றுக் கொண்டு தாயாரைப் பார்க்கப் போனோம்.  தாயார் சந்நிதிக்கு அழைத்துச் செல்லும் பாட்டரியில் இயங்கும் வண்டியை நிறுத்தி விட்டிருந்தனர்.  பிரகாரங்களில் வேலை மும்முரம்.  அந்த சிமென்ட், ஜல்லி, கற்கள் வேறு காலைக் குத்த, சூடு வேறு தாக்க ஒரு வழியாத் தாயார் சந்நிதிக்குப் போயிட்டோம்.   அவள் எப்போவுமே கருணாமூர்த்தி. நிற்கவோ, காக்கவோ வைச்சதில்லை.  இன்னிக்கும் நேரே உள்ளே போயாச்சு. நிதானமாகவே தரிசனம் இங்கேயும், மஞ்சள், ரோஜாப் பூப் பிரசாதங்கள் பெற்றுக் கொண்டு சடாரி வைத்துக் கொண்டு வெளியே வந்தோம்.  மற்ற சந்நிதிகள் நாலு மணிக்கு மேல் தான் திறப்பாங்களாம்.

வெளியே வந்தால் உள் ஆண்டாள் சந்நிதியும் திறக்கலை.  நாலரை ஆகும்னு சொன்னாங்க.  நாளைக் காலைப் போய் ஆண்டாளம்மாவைப் பார்த்து என்னம்மா ரொம்ப பிகு பண்ணிக்கிறேனு கேட்டுக்கலாம்னு கிளம்பி வீட்டுக்கு வந்துட்டோம். வீட்டுக்கு வரச்சே மணி நாலு ஐந்து. கோயிலுக்குப்போயிட்டு வந்ததன் அறிகுறியே அங்கே பிரகாரங்களில் நடந்த நடையினால் ஏற்பட்ட அயர்வு ஒன்றினால் தான் தெரிந்ததே தவிர மற்றபடி மனம் புத்துணர்ச்சியுடனேயே இருக்கிறது.


அருஞ்சொற்பொருள்: 

 ரங்கு= ரங்கநாதர்

பெரிய ரங்கு= பெரிய பெருமாள்

ரங்க்ஸ்= வலை உலகில் குறிப்பாய்ப் பதிவர் உலகில் ரங்கமணி என்றால் கணவனையும், தங்கமணி என்றால் மனைவியையும் குறிக்கும்.  அந்த மாறாச் சட்டத்தின் படி நான் பதிவு எழுதுவதால் எனக்கு என் கணவர் ரங்கமணி என அழைக்க வேண்டும்.  இதே ஆண் பதிவர்கள் எனில் அவங்க மனைவியைக் குறிக்கையில் தங்கமணி என்பார்கள்.  இதையே சுருக்கி ரங்க்ஸ், ரங்கு, தங்க்ஸ், தங்கு, த.ம. என்றெல்லாம் அன்புடன் சொல்லப்படும்.  ஆகவே இங்கே ரங்க்ஸ் என வரும் இடத்திலெல்லாம் என் கணவரையும் ரங்கு, பெரிய ரங்கு என்னும் இடத்தில் எல்லாம் பெருமாளையும் குறிக்கும் என்று அறிக. :)))))


20 comments:

 1. அருமையான தரிசனம்..

  //முதல்லே கண்ணிலே பட்டதே நீங்க தானே! னு சொல்லி அவரைச் சமாதானம் செய்துட்டுப் பெரிய ரங்குவின் முகத்தைப் பார்த்தேன்// ஹா..ஹா..

  ReplyDelete
  Replies
  1. வாங்க ராம்வி, பின்னே கோவிச்சுண்டா? என்ன செய்யறது? :)

   Delete
 2. “பெரிய ரங்கு” கடவுளின் மீதான உங்கள் பக்தி அற்புதமானது.எங்களுக்கும் உங்களுடன் சேர்ந்து தரிசித்தது போன்று இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க அனிதாஷிவா, முதல் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

   Delete
 3. கொடுத்து வைத்தவர்

  ReplyDelete
  Replies
  1. யாரைச் சொல்றீங்க? பெரிய ரங்குவையா? சின்ன ரங்குவையா(நம்பெருமாள்) அல்லது என்னோட ரங்க்ஸா? :))))))

   Delete
 4. நல்ல தரிசனம் போலேருக்கு. ம்ம்.. நாங்கள் வந்தபோது ஏகப்பட்ட கூட்டத்தைச் சுற்றி நிறுத்தி எங்களைச் சோதித்தார்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், சில சமயம் அம்மாதிரிக் கூட்டத்தில் நாங்களும் மாட்டிக் கொண்டதுண்டு. இப்போல்லாம் அம்மாமண்டபத்தையும் தெருவையும் சர்வே எடுத்த பின்னரே கோயிலுக்குப் போறதுனு வைச்சிருக்கோம். :))))

   Delete
 5. ரங்கன் சேவை நன்கு திருப்தியாக நிறைவு பெற்றது மகிழ்ச்சி.ரங்கனையும், தாயாரையும் நன்கு சேவித்ததால் மனம் புத்துணர்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு, உங்கள் மும்முரமான வேலைகளுக்கிடையேயும் வந்து கருத்துச் சொன்னதற்கு நன்றி.

   Delete
 6. நீங்கள் எந்த ரங்க்ஸைப் பார்க்கப் போனீர்கள். அவர் உங்கள் கூடவே வந்ததாக எழுதி இருக்கிறீர்கள். என் மகன் பாலாஜியை வெங்கி என்றே கூறுவான் அது ஒரு அன்னியோன்னியத்தைக் காட்டுகிறது என்பான். நீங்களும் ஆஞ்சி ரங்க்ஸ் என்றே குறிப்பிடுகிறீர்கள். எங்களை மாதிரி வெளியூர் ஆட்களுக்கு தரிசனம் என்பதே நிச்சயமில்லாத ஒன்று.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி சார், வெளியூர் ஆட்கள் ரங்கநாதரைத் தரிசிக்கணும்னா பள்ளிகளில் பரிட்சை நடக்கும் நேரம் வரணும். அப்போ யாரும் குழந்தை, குட்டிகளோடு கிளம்ப மாட்டாங்க. இன்னும் கொஞ்ச நாட்களுக்குக் கோயிலில் கூட்டம் இருக்காது. ஏப்ரலுக்கு அப்புறமா மறுபடி கூட்டம் அம்மும். :))))

   நான் ரங்க்ஸ் என்று சொன்னது என் கணவரை. விளக்கமாகப் பதிவிலேயே போட்டிருக்கேன் பாருங்க. :))) ரங்கு தான் பெரிய பெருமாள்.

   Delete
 7. தரிசனம் என்றால் இதுதான். யாகபேரர் பற்றி படிக்கிறேன். மனம் நிறைய மகிழ்ச்சி கீதாமா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, நல்ல தரிசனம் தான் நேத்திக்கு.

   Delete
 8. பரவாயில்லையே.... அவனுக்கு இப்படியும் இருக்கத்தெரியுதா? நானும் உங்களோடு வந்து ஸேவிச்சாப்போல இருக்கு.

  எனக்கு அந்த பரவாஸுதேவர் சந்நிதியில் இடப்பக்கம் இருக்கும் கண்ணாடி ஆண்டாள்தான் ஃபேவரிட் இப்போதைக்கு:-)

  ReplyDelete
  Replies
  1. வாங்க துளசி, இன்னும் வெளி ஆண்டாளைத் தரிசித்தது இல்லை. :))) உள் ஆண்டாள் நாளன்னிக்கு வெள்ளியன்று தரிசனம் கொடுக்கிறேன்னு சொல்லி இருக்கார். கண்ணாடி அறை ஆண்டாள் மார்கழி முப்பது நாளும் பல்வேறு விதமான அலங்காரங்களில் காட்சி அளிப்பாள். அங்கேயும் போவதுண்டு. என்றாலும் நம்ம வேண்டுதல் எல்லாம் உள் ஆண்டாளிடம் தான். :))))

   Delete
 9. அட... சிரமமில்லால்... வாழ்த்துக்கள் அம்மா...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி, நன்றிப்பா.

   Delete
 10. சமீபத்தில் ஸ்ரீரங்கம் வந்திருந்தபோது ஒரு நாள் காலங்கார்த்தால போய் சேவித்தோம், பெரிய பெருமாளை. கிளம்பும் தினம் நீங்கள் குறிப்பிட்ட அதே நேரம் 2 1/2 மணிக்கு (ரங்கவிலாச மண்டபத்தில் நம்பெருமாள் சேவை சாதித்தார். ஆளரவமே இல்லை. உள்ளே பெரிய பெருமாளை சேவிக்க இலவச சேவையிலேயே ஆள் இல்லை. உண்டியல் அருகே கொஞ்சம் ஆட்கள். ஒருமுறை தரிசித்து, பின் மறுபடி கியூவில் வந்து இன்னொருமுறை - மூன்றாவது முறையும் சேவிக்க ஆசையாக இருந்தது. ரங்கஸ் கோபித்துக் கொண்டார். மனமே இல்லாமல் வெளியே வந்தேன். இந்த முறை கண்ணும், மனசும் நிரம்ப நிரம்ப சேவித்தோம். பெருமாள் இன்னும் கண்ணுக்குள்ளேயே!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரஞ்சனி, ஆமாம், நீங்க சொன்ன அன்று அம்மாமண்டபத்திலும் கூட்டம் இல்லை. சுற்றுலாப் பேருந்துகளும் அதிகம் இல்லை. அன்னிக்குப் போயிருக்கலாம் தான். நாத்தனார் இருந்தார். அவரால் வரமுடியுமானு ஒரு சந்தேகம் இருந்தது. பொதுவாய் ஶ்ரீரங்கம் கோயிலில் பெருமாளைப் பார்க்கணும்னா மதியம் இரண்டிலிருந்து நாலுக்குள் பார்த்தால் கூட்டம் அதிகம் இருக்காது. அதிலும் திங்கள், செவ்வாய் என்றால் கூட்டம் குறைவாகவே இருக்கும். :)))

   Delete