எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, March 26, 2015

மதுரைக்குப் போகாதேடி! அந்த மல்லிப்பூ கண்ணு வைக்கும்?

மதுரைக்குச் சென்று இரண்டு நாட்கள் தங்கி மீனாக்ஷியை முடிஞ்சபோது பார்த்துட்டு அப்படியே திருப்பரங்குன்றம், அழகர்கோயில், திருவேடகம், திருமோகூர், ஆனைமலை யோகநரசிம்மர் ஆகியோரையும் பார்க்கணும்னு எண்ணம். திருவாதவூரும் அந்த வழியில் தான் இருக்கு என்றாலும் இப்போ அது பட்டியலில் சேர்க்கலை.அதிலும் டிசம்பரில் மீனாக்ஷியைப் பார்க்காமல் திரும்பி வந்ததில் இருந்து மனசிலே ஒரே வேதனை.  மீனாக்ஷியைப் பார்க்கணும்னு ஆவல்.

ஆகவே  இந்த மாசம் போகலாம்னு முடிவெடுத்தோம்.  தங்குவதற்கான ஹோட்டல்களை இணையத்தில் அலசிப் பார்த்து தானப்ப முதலித் தெருவில் ஹோட்டல் கதிர் பாலஸைத் தேர்ந்தெடுத்தேன்.  நல்ல ரேட்டிங் கொடுத்திருந்ததோடு அங்கு தங்கிச் சென்றவர்களின் கருத்துக்களும் நல்லவிதமாக இருந்தது.  இந்த மாதம் பள்ளிக்குழந்தைகளுக்குப் பரிக்ஷை நடப்பதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் இருக்காது என்பதால் ஹோட்டலில் அறையும் எளிதாகக் கிடைக்கும்.  ஏப்ரலில் பள்ளி விடுமுறை ஆரம்பிப்பதோடு சித்திரைத் திருநாளும் ஆரம்பிக்கும். கூட்டம் தாங்காது.  எல்லாவற்றையும் யோசித்து இந்த மாதமே போய்விட்டு வர முடிவெடுத்தோம்.  அதோட ரங்க்ஸுக்கு மதுரை மாவடு வாங்கணும்னு ஆசை.  இப்போதைய தினத்தை விட்டு விட்டு ஒரு பத்து நாள் தள்ளிப் போனாலும் மாவடு கிடைக்காது.  பத்து நாள் முந்திப் போயிருந்தாலும் கிடைச்சிருக்காது.  திங்களன்று கிளம்பிப் போனால் வார முதல்நாள் என்பதால் அறை கிடைப்பதிலும் கஷ்டம் இருக்காது என்பதோடு கோயிலிலும் கூட்டம் இருக்காது.  ஆகவே திங்களன்று கிளம்பிப் போய் அன்றும், மறுநாளும் மீனாக்ஷியைப் பார்க்கத் திட்டம்.  புதன் காலை கிளம்பி யானைக்கல் மார்க்கெட்டில் மாவடு, பாக்கு இன்னும் வேறே ஏதும் கண்ணில் பட்டால் வாங்கிக் கொண்டு அன்று மதியம் ஶ்ரீரங்கம் திரும்பவேண்டும். இது தான் எங்கள் திட்டம். போறதை யார் கிட்டேயும் சொல்லலை.  அமெரிக்காவில் இருக்கும் எங்க குழந்தைங்களுக்கு மட்டும் தெரியும். உள்ளூரில் நாத்தனார் வந்து தேடப் போகிறாரேனு அவருக்குச் சொன்னோம்.  இணையத்தில் ரேவதிக்கு மட்டும் சொல்லி இருந்தேன்.  இன்னொருத்தருக்குச் சொன்னேன்; அவர் புரிஞ்சுக்கலை.  சரினு விட்டுட்டேன். :) நடக்கப் போவது யாருக்குத் தெரியும்?


ரொம்பவே சந்தோஷத்தோடு  23-ந்தேதி திங்கட்கிழமை காலை திருச்சி பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பும் எங்குமே நிற்காத திருச்சி--மதுரை பேருந்தில் கிளம்பினோம்.  பேருந்துவில் உட்காரும் இடங்களெல்லாம் கிழிந்து போய்ப் பேருந்தே மிக மோசமான நிலையில் பராமரிப்புக்குக் காத்திருந்தது.  இதிலா போகணும்னு மனசு கேட்டாலும், மற்றப் பேருந்துகளெல்லாம் ஊரைச் சுற்றிக் கொண்டு போகும்.  இது ஒண்ணு தான் பைபாஸில் செல்லும் விரைவு வண்டி.  கிளம்பத் தயாராகவும் இருந்தது. சரி, பார்த்துக்கலாம்னு ஏறிட்டோம்.  ஓட்டுநரும் வண்டியை நல்லாவே ஓட்டினார்.  நாங்க போகையிலேயே ஒத்தக்கடையில் இறங்கி ஆனைமலை யோகநரசிம்மரைப் பார்த்துடணும்னு முடிவு செய்து அதுக்கேத்தாப்போல் கண்டக்டரிடம் சொல்லிப் பயணச் சீட்டும் வாங்கினோம்.

ஒத்தக்கடையில் நாங்க இறங்கின இடத்தருகேயே திருமோகூர் செல்லும் ரஸ்தாவும் இருக்க, அங்கேயும் முடித்துக் கொண்டே மதுரைக்குப் போகலாம்னு முடிவு செய்தோம்.  ஒத்தக்கடையில் காலை உணவு உண்ணும்படியான ஹோட்டல்கள் எதுவும் இல்லை.  ஆகையால் ஒரு  பேக்கரிக்குப் போய்  பிஸ்கட்டுகளும், காஃபியும் வாங்கிக் குடித்துவிட்டு அங்கேயே ஓர் ஆட்டோ பேசிக் கொண்டு யோக நரசிம்மரைத் தரிசிக்க முதலில் சென்றோம். ஆட்டோக்காரர்  இரண்டு கோயில்களும் போயிட்டுக் காத்திருந்து கூட்டி வர 200 ரூ. கேட்டார். சரினு ஒத்துக் கொண்டோம். அதிகம் தூரம் இல்லை என்றாலும் நடக்கவும் முடியாது.  இந்த வழியாவும் அழகர் கோயிலுக்கும் போகலாம் என்றாலும்  இங்கே முடித்துக் கொண்டு அங்கே போவதற்குள்ளாக மதியம் ஆயிடும். அப்புறமா நடை சாத்திட்டா மாலை நான்கு மணி வரை காத்திருக்கணும். ஆகையால் அழகர் கோயிலையும் இந்தப் பட்டியலில் சேர்க்கலை.

20 comments:

 1. அப்படியே எங்க ஊருக்கு வந்திருக்கலாம் இல்லே...?

  ReplyDelete
  Replies
  1. அங்கேருந்து ஒன்றரை மணி நேரப் பயணம் டிடி. இதுவே பாதிலே திரும்பிட்டோம். உங்க ஊருக்கு வரதைத் தனியாத் தான் வைச்சுக்கணும். :)

   Delete
 2. போய்ட்டு வந்துட்டு அப்புறம் என்ன மதுரைக்குப் போகாதேடி....அந்த மல்லிப்பூ கண்ணு வைக்கும்னு பாட்டு...அஹஹஹஹஹ்

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, தலைப்பு என்ன கொடுக்கலாம்னு யோசிச்சேன். திருச்சியை விட மதுரையில் மல்லிப்பூ விலையும் ஜாஸ்தி! பூவும் சின்னதா இருக்கு! :(

   Delete
 3. மதுரை பயணமா?? தொடருங்க..

  ReplyDelete
  Replies
  1. அதெல்லாம் தொடரலை, முடிச்சிட்டோம் சீக்கிரமே!

   Delete
 4. மதுரையில் வெயில் கொளுத்துமே. நீங்கள் திருச்சிக்காரர் . அதனால் வெப்பம் தெரியாது. எங்கள் பயணங்கள் எங்கள் கையில் இருப்பதில்லை. மதுரையில் தாழம்பூ குங்குமம் சிறப்பு என்று என் மனைவி சொல்வாள். வாங்கினீர்களா.

  ReplyDelete
  Replies
  1. மதுரை நான் பிறந்து வளர்ந்த ஊர் ஐயா. சென்னையில் மட்டும் வெயில் கொளுத்தவில்லையா என்ன? பார்க்கப் போனால் சென்னையை விட இங்கெல்லாம் வெயிலின் தாக்கம் குறைவாகவே தெரிகிறது. குங்குமம் கோயிலில் அம்மன் சந்நிதியிலேயே கொடுப்பார்களே!

   Delete
 5. மதுரை பயணத்தைத்தான் அப்படி சிம்பாலிக்கா சொன்னீங்களா? பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், சுரேஷ், ஆனால் உடனே திரும்பிட்டோம்.

   Delete
 6. ஆம், சரியாகப் புரிந்து கொள்ளவில்லை.

  மதுரை மாவடு என்று சொல்வதைவிட அழகர்கோவில் வடு என்று சொல்லலாம். ஸோ, மீனாட்சியைப் பார்த்து விட்டீர்கள்!

  ReplyDelete
  Replies
  1. அழகர் கோவில் வடு தான் உருண்டை வடு வாங்கிட்டு வந்திருக்கோம் ஶ்ரீராம். தஞ்சாவூர்க் குடைமிளகாய் வாங்கி மோர் மிளகாய் போட்டு நேத்து ராத்திரிக் கஞ்சிக்குத் தொட்டுக்க வறுத்துச் சாப்பிட்டும் ஆச்சு. நல்ல காரம்! :)

   Delete
 7. வழ்சியாவும்// அப்படின்னா என்ன அர்த்தம்? கொஞ்சம் தமிழ்ல எழுதப்படாதா? :P:P:P:P

  ReplyDelete
  Replies
  1. வாங்க வா.தி.
   வி.எ.வைக் குறைங்க தம்பி. ஒரேயடியா ஊத்திட்டு வந்து படிக்கிறீங்க போல! :P :P :P :P :P

   hihihi திருத்திட்டேன். :)))

   Delete
  2. அட!!!!!!!!!!!!! ப்ரொஃபைல் படம் மாத்தி இருக்கீங்க???? எப்போலேருந்து? ஆனைக்குட்டிக்கு என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா? அடப்பாவமே! :(

   Delete
  3. ஆஆஆமா! எழுதறது தப்பும் தவறுமா! இதுல நா வி.எ. போட்டுகிட்டு வரேனா? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

   Delete
  4. ப்ரொஃபைல் படம் மாத்தி ஒரு வாரம் ஆச்சு! எங்கேயாவது கண்ணை திறந்து பாத்தாதானே? இது அக்னி ஆனைக்குட்டி! உத்து பாருங்க!

   Delete
  5. வி.எ. நீங்க தான் ஊத்திட்டு வந்திருக்கீங்க தம்பி! :))) அதோட ஒரு வாரம் முன்னாடி ப்ரொஃபைல் படம் மாத்தினது எனக்கு எப்படித் தெரியுமாம்? நீங்க தான் என்னோட வலைப்பக்கத்துக்கு ஆடிக்கு ஒரு நாள் தானே வரீங்க? வந்தால் தான் தெரியும்! இது எப்பூடீ இருக்கூ??????? (எ.பி. இல்லை)

   Delete
 8. தெற்கு வாசலில் குட்டி குட்டியா குடைமிளகாய்கள் இருக்கே.... அது தான் தஞ்சாவூர் கு.மிளகாயா மாமி??? மோர் மிளகாய் போடுவதா??? தொடர்கிறேன்..

  ReplyDelete
  Replies
  1. அட? அதை ஏன் கேட்கறீங்க ஆதி! 3 வருஷமா நானும் கேட்டுட்டு இருக்கேன். தஞ்சாவூர்க்காரருக்கே இந்தக் குடைமிளகாய் பத்தித் தெரியலை. அப்புறமா ஒரு வழியா இந்த வருஷம் வாங்கிட்டு வந்தார். இதுவா? இதை நிறையப் பார்த்திருக்கேனேனு விமரிசனம் வேறே! இதிலே கிள்ளு மிளகாய் சாம்பார் வைச்சால் நல்லா இருக்கும். :)

   Delete