எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, March 10, 2015

"நிர்பயா" குறித்த ஆவணப்படத்தின் எதிரொலி! :(

கீழே ஜெர்மனியில் ஒரு பல்கலைக் கழகத்தில் ஒரு மாணவனுக்கு இன்டெர்ன்ஷிப் மறுக்கப்பட்டதைக் குறித்த செய்தியைக் காணலாம்.  சமீபத்தில் கிடைத்த செய்தியின்படி ஜெர்மன் தூதர் இதற்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார். என்றாலும் இதன் தாக்கம் இதோடு நிற்கப் போவதில்லை.  சுற்றுலாவை முதலில் பாதிக்கும்.  சுற்றுலாப் பயணிகளில் முக்கியமாகப் பெண்கள் நம் நாட்டுக்குச் சுற்றுலா வருவதற்கு யோசிப்பார்கள். அதன் மூலம் கிடைத்து வரும் வருமானம், சுற்றுலாவைச் சார்ந்திருக்கும் தொழில்கள் என அனைத்துக்கும் பாதிப்பு ஏற்படும்.  அந்நிய நாட்டு முதலீடு குறைய வாய்ப்புண்டு.  பொருளாதாரம் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகலாம்.  பொதுவில் உலக அரங்கில் இந்தியாவுக்கு இருந்து வரும் மரியாதை இனிமேலும் இருக்குமா என்பது சந்தேகமே!  இந்தியர்களே இந்தியாவைக் குறித்துக் கேவலமாகப் பேசவும், எழுதவும் இது ஆவன செய்து வருகிறது. முதலில் அனைவரும் அதை நிறுத்த வேண்டும். ஒத்த குரல் கொடுத்து இதை எதிர்க்க அரசோடு ஒத்துழைக்க வேண்டும்.

அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும். அது ஒன்றே ஒரே வழி!   இனி கீழுள்ளவற்றைப் படியுங்கள்.//பிபிசி எடுத்த இனவாத நிர்ப்பயா டாக்குமெண்டரியின் விளைவு வெளிநாடுகளில் எதிரொலிக்க துவங்கியுள்ளது

ஜெர்மானிய பல்கலைகழகம் ஒன்று சம்பந்தமே இல்லாமல் இந்திய மாணவன் ஒருவனுகு இன்டர்ன்ஷிப்பை மறுத்துள்ளது. காரணம் அவன் கற்பழிப்பாளர்களின் தேசத்தில் இருந்து வருவதால்..

"இந்தியா ரேபிஸ்டுகளின் நாடு, இந்திய ஆண்கள் வெறிபிடித்தவர்கள், ஆணாதிக்க பாசிஸ்டுகள்" என தொடர்ந்து பிரசாரம் செய்யபட்டு வருவதன் பலன் இந்த மாணவன் தலையில் விடிந்துள்ளது. ஆனாதிக்க பாசிஸ்டுக்கு யார் தான் இன்டர்ன்ஷிப் கொடுப்பார்கள்?

திரு ஜிஎம்பி அவர்கள்  "நிர்பயா"வைக் கற்பழித்துக் கொன்ற குற்றவாளியைப் பேட்டி கண்டதோ, அதை ஆவணமாக எடுத்ததோ சிறிதும் தவறில்லை என்னும் கருத்தை என் பதிவில் போட்டிருக்கிறார்.  அந்த ஆவணப் படத்தின்  தாக்கம்ஏற்படுத்திய ஒரு சிறு விளைவு குறித்து மேலே பகிர்ந்துள்ளேன்.  இனி வரும் நாட்களில் இன்னும் கேவலமாகவே நடத்தப்படுவோம். இப்போதெல்லாம் குற்றவாளியின் மனோநிலை தான் பாதிக்கப்பட்டவர்களின் மனோநிலையை விட அதிகம் பேசப்படுகிறது.  மனித உரிமை என்றெல்லாம் சொல்கிறார்கள். இது எந்த அளவுக்கு நியாயம் எனப் புரியவில்லை. 

நன்றி செல்வன்.


மின் தமிழ்க் குழுமத்தில் மேற்கண்ட பகிர்வைப் பகிர்ந்தது திரு செல்வன்  K Selvan
K Selvan's profile photoholyape@gmail.com

16 comments:

 1. Replies
  1. வாங்க டிடி, அந்தப் பேராசிரியர் கேட்ட மன்னிப்பு இன்றைய தினசரிகளில் வந்துள்ளது. :)

   Delete
 2. Replies
  1. வா.தி. என்ன ஒண்ணுமே சொல்லலை!

   Delete
 3. வணக்கம்
  எல்லாம் தலை விதி என்ன கொடுமை...
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. எல்லாம் கொடுமைதான்!

   Delete
 4. நீங்க அந்த டாகுமெண்டரி பாத்தீங்களா?

  ReplyDelete
  Replies
  1. தடை செய்யப்படுமுன்னரே பார்த்தேன்.

   Delete
 5. ஜெர்மானியப் பல்கலைப் ப்ரொஃபெசர் ஒருவர் ஒரு இந்திய மாணவருக்கு இண்டெர்ன்ஷிப் கொடுக்க மறுத்திருப்பதை ஜெர்மானிய தூதர கண்டித்திருக்கிறார். அந்தப் ப்ரொஃபெசரும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருக்கிறார். அந்த ஆவணப் படத்தில் உள்நோக்கம் இருப்பதாகத் தெரியவில்லை. மாறாக அந்த சம்பவத் தாக்குதலால் இந்தியாகொந்தளித்து எழுந்ததையும் காட்டி உள்ளார். குற்றவாளி கூறிய செய்திகள் அவன் அதை நியாயப் படுத்தக் கூறி இருக்கிறான். ஆனால் இதே கருத்தைப் பல பிரமுகர்களும் கூறி இருக்கிறார்கள். அண்மையில் யேசுதாஸ் அவர்கள் பெண்கள் மேனாட்டு உடை அணிவது குறித்துக் கருத்து சொன்னபோது பலரும் எதிர்ப்பு தெரிவித்ததும் அறிந்ததே. ஒரு நாணயத்தின் இரு பக்கங்களையும் காட்டுகிறது அந்த ஆவணப் படம். சிலருக்கு அது தவறு போல் தெரியும். சிலருக்கு சரி போல் தெரியும். அவரவர் கருத்து அவரவருக்கு. முள்ளில் சேலை பட்டாலும் சேலையில் முள் பட்டாலும் சேதம் சேலைக்குத்தான் இதைத் தெரிந்து கொண்டிருந்தால் நல்லது.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜிஎம்பி சார்.

   Delete
 6. இந்தப் படம் வெளியாவதால் இந்தியாவுக்கு நன்மை விளையும் என்று நினைத்ததாய் இதன் இயக்குனர் சொல்லி இருக்கிறார். ஆராய்ச்சிக்காக எடுக்கப் பட்ட இந்தப் படத்தை வணிக நோக்கில் பயன் படுத்தக் கூடாது என்கிற முன்விதியை இந்த இயக்குனர் மீறி இருப்பதாகச் செய்திகளில் படித்தேன்.

  நம்மவர்கள் திரைப்படம் முதல் செய்திகள் வரை நல்லவற்றை மனதில் பதிய வைத்துக் கொள்வதைவிட, தீயவற்றை வேகமாக மனதில் வாங்கிக் கொள்வார்கள். இதற்கு ஏகப்பட்ட உதாரணங்களை நாம் செய்திகள் வாயிலாகவே அறிகிறோம். நிர்பயா சம்பவத்தைத் தொடர்ந்தே எத்தனை சம்பவங்களை நாமே பார்த்தோம்?

  மனித உரிமை என்ற பெயரில் ஆட்டோ சங்கர் முதல் வீரப்பன் வரை அவர்கள் சொல்வதை எழுத்தாக்கி வியாபாரம் பார்க்கும் நாடு நம் நாடு.


  ReplyDelete
  Replies
  1. இதற்கு அனுமதி கொடுத்தது, எடுத்தது எல்லாமும் முந்தைய ஆட்சியின்போது. ஆனால் படம் எடுத்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போத் தான் இந்தப் படம் வெளியிடப் படுகிறது. அதுதான் ஏன் என்று புரியவில்லை. :(

   Delete
 7. இதில் தவறு ஜெர்மனி பல்கலை கழகத்தினுடையது. உங்கள் கருத்து சிவாஜிகணேசன் நடிப்பை ஞாபகப்படுத்துது. ஹிஹி எழுதுறப்ப எனக்கே நடுக்கமாயிடுச்சு.
  முப்பது வருசத்துக்கு முன்னால் ஜெர்மனி நகரங்கள்ல எத்தனை தொல்லைப்பட்டிருக்கிறேன்னு சொல்லி மாளாது. என் பெயரை வச்சு என்னை 'டேமில் டெரெரிஸ்ட்'னு அவர்களாகவே தீர்மானம் செஞ்சு ரொம்ப தொல்லை கொடுப்பாங்க. சில விவரங்களை (என்னாலயே) எழுத முடியாத அளவுக்கு அசிங்கமா நடப்பாங்க. அதுக்காக விடுதலை புலிகளை நொந்து என்ன பலன்? ஜெர்மானிய ஐந்தறிவை புரிஞ்சுக்கிட்டு போய்கிட்டே இருப்பேன்.ஜெர்மனியில் சில பேர். இன்னும் மிருகமாவே இருக்காங்க. அவ்வளவு தான். ஒரு சோறு பதம் இங்கே ஒத்துவராது.

  குற்றவாளிகளுக்கும் உரிமைகள் உண்டு.

  ReplyDelete
  Replies
  1. //உங்கள் கருத்து சிவாஜிகணேசன் நடிப்பை ஞாபகப்படுத்துது. ஹிஹி எழுதுறப்ப எனக்கே நடுக்கமாயிடுச்சு.//

   ஹிஹிஹிஹி, சீரியஸான காட்சியைப் பார்க்கிறச்சே எனக்கும் சிரிப்பு வந்துடும். அது போல் இந்த சீரியஸான விஷயத்தில் நீங்களும் இப்படி ஒரு கருத்தைச் சொல்லி என்னையும் சிரிக்க வைச்சுட்டீங்க. ஜிவாஜி படம் பத்தின என்னோட கருத்து உங்களுக்குத் தான் தெரியுமே. அந்த ஒரு விஷயத்தில் (கவனிக்க, ஒரு விஷயத்தில் மட்டும்) உங்க கருத்தோடு நான் ஒத்துப் போகிறேன். :))))))

   Delete
  2. அப்பாதுரை, குற்றவாளிகளுக்கும் உரிமை உண்டு தான். ஆனால் அதற்காக ஒரு பெண்ணின் சுய மரியாதையை, அவளுடைய நேர்மையைக் கேவலப்படுத்துவதா? எத்தனை பெண்கள் இரவு நேரப் பணிக்காக இரவில் செல்லுபவர்கள் இருக்கின்றனர். இந்தப் பெண் ஒரு மருத்துவ மாணவி. இரவு நேரத்தில் தனிமையில் செல்வதனாலேயே ஆண் நண்பனின் உதவியை நாடி இருக்கலாம். அந்தக் குற்றவாளியின் வீட்டுப் பெண்ணாக இருந்தாலும் இப்படித் தான் சொல்லுவானா? அந்தப் பெண்ணையும் இப்படிச் சிலர் நடத்தி இருந்தால் அதற்கு அவனுடைய பதில் என்ன? இதே போல் ஒட்டுமொத்தப் பெண்களையும் இழிவு செய்து பேசுவானா?

   ஒரு பெண் இரவு நேரத்தில் வெளியே செல்லப் பல காரணங்கள் இருக்கலாம். அதனாலேயே அந்தப் பெண்ணைக் கெட்ட நடத்தையுள்ளவள் என்று சொல்லிவிடுவதா? இந்த ஒரு பெண்ணைத் தண்டித்ததால் ஒட்டுமொத்த சமூகமும் திருந்தி விட்டதா? ஒரு மருத்துவ மாணவி சாகடிக்கப்பட்டதைத் தவிர வேறே எதைச் சாதித்தார்கள் அவர்கள்? அதிலும் இரும்புக்கம்பியை உள்ளே செருகி! கொடூரம்! அப்படி என்ன மாபெரும் தவறு அந்தப் பெண் செய்துவிட்டாள்?

   Delete
  3. ஆவணப்படுத்தல் கருத்தைச் சொல்லுதல் இவை உரிமைகள். பெண்ணை இழிவு படுத்தியது குற்றம். உரிமை குற்றத்தை நியாயப் படுத்துவதாகச் சொல்லவில்லை.

   Delete