எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, April 14, 2015

தாமதமான புத்தாண்டு வாழ்த்துகள்!


நண்பர்கள் அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள். காலையிலிருந்து கணினி பக்கமே வர முடியலை.  மத்தியானமாய் வந்தேன். ஆனால் காலை படம் எடுக்க முடியலை. ஆகவே மத்தியானமாய்ப் படம் எடுத்துட்டுப் போடலாம்னு இருந்தேன். அதுக்குள்ளே வேண்டாத செயல்முறைத் திட்டம் ஒன்று (ப்ரோகிராம்) தானாகவே நிறுவப்பட்டு விட்டது.  என்னோட கணினியின் பாதுகாவலரான நார்ட்டன் எவ்வளவோ முயன்று அதைத் தடுத்தும் முடியலை.  சில நிமிடங்கள் என்னால் இணையத்துக்கே போக முடியலை.  பாதி மடல்கள் பார்க்கையில் கணினி மூடிக் கொண்டது. பின்னர் எச்சரிக்கைச் செய்தியோடு அதை வேறு வழியில்லாமல் நார்ட்டன் அனுமதிக்க நானும் அதை நீக்க மத்தியானத்திலிருந்து முயன்றும் போகலை. கன்ட்ரோல் பானலுக்குப் போய்ப் ப்ரோகிராம் பட்டியலில் போயும் சோதித்துப் பார்த்தாகி விட்டது. அதிலே இல்லை. டெல்டா ஹோம்ஸ் என்னும் தளம் தானாகவே நிறுவப் பட்டுள்ளது. :(

க்ரோம் ப்ரவுசர் பயன்படுத்துவதால்  அதன் மூலம் நீக்கவும் முயன்று விட்டேன். எதுவும் நடக்கலை.  அதிலே செட்டிங்க்ஸில் போய் அவங்க சொன்னபடி எல்லாம் செய்து பார்த்துட்டேன். ஒரு முறைக்குப் பல முறை. இப்போதைக்கு அதைத் திறக்காமல் மூடி வைச்சிருக்கேன். ஹோம் பேஜாக வேறே வருது. அதிலே தேவையில்லா விளம்பரங்கள்! மோசமான விளம்பரங்கள்! என்ன பண்ணறதுனு புரியலை! விடுங்க, நம்ம பிரச்னை இருக்கவே இருக்கு!  இதை நீக்குவதிலேயே மத்தியானம் முழுதும் சரியாப் போச்சு! :(

மத்தியானமா போளி பண்ணும்போது படம் எடுத்தேன். மேலே ராமரும் கூட மத்தியானமா ராகுகால விளக்கு ஏத்தும்போது எடுத்தது தான். வடையும் உண்டு.  ஆனால் வடை அப்புறமா ரொம்ப தாமதமாக ஐந்து மணிக்குத் தட்டினேன். அப்போ தொலைபேசி அழைப்பு வேறே வந்ததில் படம் எடுக்கிறதில் கவனம் இல்லை. ஆமை வடை தான்! அரிசி, தேங்காய் அரைச்சு விட்டுப் பாயசம். மாங்காய்ப் பச்சடி, வெள்ளரிக்காய்ப் பச்சடி, காரட் சாம்பார், ரசம். அவ்வளவே.  எல்லோரும் சூடான போளி எடுத்துக்குங்க. இந்த வருஷம் அனைவருக்கும் இனிமையாக இருக்கட்டும். ஒவ்வொரு வருஷமும் தான். அனைவர் வாழ்விலும் மகிழ்ச்சியும் சுபிக்ஷமும் பொங்க எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

35 comments:

 1. pl try maxthon browser which is very good- chrome is not preventing many virus as of now- sorry for not inking in tamil
  vishwanath

  ReplyDelete
  Replies
  1. முன்னே வந்த அதே விஸ்வாவா?நல்வரவு. நீங்க சொல்லும் ப்ரவுசர் பத்திக் கேள்விப் படலை. என்றாலும் முயல்கிறேன். வருகைக்கு நன்றி,

   Delete
 2. புத்தாண்டு வாழ்த்துகள்.

  நல்லதொரு கணினி மருத்துவரை அழைத்து விடுங்கள்.

  இங்கு அரிசி அரைத்த பாயசம் மட்டும்!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், முதல்லே நானும் பாயசம் மட்டும் போதும்னு தான் நினைச்சேன். :) அப்புறமா மாத்தினேன்.

   Delete
  2. வேறே வழியில்லைனா கணினி மருத்துவரைத் தான் அழைக்கணும். :)

   Delete
 3. Late but i am latest
  Happy Tamil New Year
  Subbu thstha

  ReplyDelete
  Replies
  1. வருகைக்கு நன்றி சூரி சார்.

   Delete
 4. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்......

  ReplyDelete
  Replies
  1. நன்றி வெங்கட், உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

   Delete
 5. தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் !

  போளி அருமை. நன்றி.

  எனக்கும் இன்று இதே போன்றதொரு பிரச்சனை. விளம்பரம் வரவில்லையே தவிர ஒரு புரோக்ராம் தானாக வந்து உட்கார்ந்து எதையும் திறக்க விடாமல் செய்து கொண்டிருக்கிறது :(.

  தாண்டி வருவோம்.

  தாமதம் ஏதுமில்லை. சித்திரை ஒன்று முடியவில்லையே:)! ஹி. நானும் இப்போதுதான் பதிவு போட முடிந்தது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ரா.ல. நேற்றைய அலமலப்பில் எந்தப் பதிவுமே பார்க்கலை. இன்னிக்கு மின்வெட்டு! குறைந்தது ஒன்பது மணி நேரமாவது இருக்கும்னு சொல்றாங்க. பார்க்கலாம். :)

   Delete
  2. உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

   Delete
  3. ரா.ல. கன்ட்ரோல் பானலுக்கும் போயிட்டேன் பலமுறை! அது அழிச்சாட்டியம் பண்ணிட்டு இருக்கு.

   மேலே பதிவிலே குறிப்பிட்டிருக்கேன் பாருங்க "கன்ட்ரோல் பானலுக்குப் போய்ப் ப்ரோகிராம் பட்டியலில் போயும் சோதித்துப் பார்த்தாகி விட்டது. அதிலே இல்லை" :))))))

   Delete
 6. போளி சூடாக சுவையாக தித்திப்பாக உள்ளது ...... படத்தில் பார்க்கும் போதே ! :)

  இனிய தமிழ்ப் புத்தாண்டு ’மன்மத’ நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வைகோ சார், கொடுத்த கமென்ட் போகலை! :) உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்.

   Delete
 7. அநியாயமாக இப்படி வடையைக் கண்ணிலேயே காட்டவில்லையே ! :)

  ReplyDelete
  Replies
  1. வடையை எடுக்கணும்னு நினைச்சுட்டுத் தான் இருந்தேன். காமிராவெல்லாம் பக்கத்திலேயே இருந்தது. திடீர்னு தொலைபேசி அழைப்பு வரவே இதில் கவனம் இல்லை.

   Delete
 8. 'கணினியை விட்டு விடுவோம். கனிவான வாழ்த்துகள் அனுப்புவோம்.' என்று எழுது என்ரு அசரீரி கூறியது.

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துகள் "இ" சார். கனிவான வாழ்த்துகள் அனுப்புவோம்.

   Delete
 9. ஸ்ரீ ராமர் பட்டாபிஷேகப்படமும், பூஜை விக்ரஹங்களும் அழகாக உள்ளன.

  பார்க்கவே மிகவும் சந்தோஷமாக உள்ளது ....

  வடை, பாயஸம், போளி சாப்பிட்டதுபோலவே !

  ReplyDelete
  Replies
  1. எங்க வீட்டு ராமர் நிறையத் தரம் வந்திருக்கார் என்னோட பதிவுகளிலே. இப்போக் கடைசியா ஶ்ரீராமநவமிக்குக் கூடப் போட்டிருந்தேன்.

   Delete
 10. போளி பார்க்கவே செமயா இருக்கு. எனக்கு ரெண்டு வேணும் :)

  வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
  என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

  இனிய சித்திரைத் திருநாள் வாழ்த்துகள் :)

  ReplyDelete
  Replies
  1. எவ்வளவு வேணுமோ எடுத்துக்குங்க! புத்தாண்டு வாழ்த்துகள்.

   Delete
 11. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்...

  ReplyDelete
  Replies
  1. புத்தாண்டு வாழ்த்துகள் டிடி.

   Delete
 12. //வடையை எடுக்கணும்னு நினைச்சுட்டுத் தான் இருந்தேன். காமிராவெல்லாம் பக்கத்திலேயே இருந்தது. திடீர்னு தொலைபேசி அழைப்பு வரவே இதில் கவனம் இல்லை.//

  நல்லவேளையாக, வடைக்குத்தட்டியமாவு என நினைத்து, கேமராவை எண்ணெய் சட்டியில் போட்டுவிட்டு, தொலைபேசி அழைப்பினை கவனிக்கப்போகாமல் கவனமாக இருந்துள்ளீர்களே ! :)

  ReplyDelete
  Replies
  1. அப்படித் தட்டுக்கெட்டுப் போறதில்லை. ஆனாலும் காமிராவை வடை மாவுக்குப் பக்கத்திலே எல்லாம் வைச்சால் என்ன ஆறது? :) தொலைபேசி கூடத்தில் உள்ளது. ஆகவே குழம்பவெல்லாம் இல்லை. என்ன, பேசினதிலே படம் எடுக்க மறந்து போய் வடையைத் தட்டி முடிச்சுட்டேன். :)

   Delete
 13. இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள், கீதா.

  உங்கள் கணனிக்கு நான் ஒரு வைத்தியம் சொல்லுகிறேன். முயன்று பாருங்கள். கணனியின் வலது மேல் மூலையில் மூன்று கோடுகள் இருக்கும் settings என்று. அதை கிளிக் செய்யுங்கள். கீழே more என்று வரும். அதையும் க்ளிக் செய்யுங்கள். அதில் extension என்று இருக்கும். அங்கு போய் இந்த டெல்டா ஹோம்ஸ் இருக்கிறதா பாருங்கள். அதன் பக்கத்திலேயே குப்பைக்கூடை இருக்கும். அதற்குள் இந்த டெல்டா ஹோம்ஸ் -ஐ தள்ளிவிடுங்கள். போயே போச். எனக்கு ஒவ்வொரு பக்கத்திலும் நான்கு ஐந்து விளம்பரங்கள் வந்து கொண்டிருந்தன. இந்த வைத்தியம் தான் செய்தேன். முயன்று பாருங்கள். good luck!

  ReplyDelete
  Replies

  1. Developer mode
   Norton Identity Safe 1.0.5
   Access your Identity Safe Vault, which remembers your usernames and passwords for single-click access to your favorite sites.
   Details

   Enable

   Norton Security Toolbar 2015.2.0.22
   Norton Safe Search and Safe Web warn you of dangerous sites when you search, shop or browse online.
   Details

   Enable

   Get more extensions

   ரஞ்சனி, ஏற்கெனவே நீங்க சொன்னதைச் செய்துட்டேன். இப்போது மீண்டும் அதையே முயன்று விட்டு வந்த விடையை மேலே பகிர் ந்திருக்கேன். :) கன்ட்ரோல் பானலிலும் ப்ரொகிராம் அன்ட் ஃபீச்சர்ஸில் போய்ப் பார்த்தாச்சு. :)

   Delete
  2. உங்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் ரஞ்சனி.

   Delete
 14. anti virus is not enough, install malware reover. http://bit.ly/1FJsP5t

  ReplyDelete
  Replies
  1. வா.தி. ப்ரொஃபைல் படத்தை மாத்தினாலும் மாத்தினீங்க! யாரோனு நினைச்சுக்கறேன். :( மால்வேர் இன்ஸ்டால் பண்ணிப் பார்க்கிறேன். சுட்டிக்கு நன்னி ஹை!

   Delete
 15. தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு வாழ்த்துக்கள் அம்மா!... இங்கும் மின் தடை, மழை என ஏகத் தொல்லை:(!... இணையம் வரவே முடியலை..

  பண்டிகைகளை விடாமல் கொண்டாடுவதில்,தங்களைப் போன்ற மூத்தவர்களின் பங்கு சொல்லி முடியாது!.. ரொம்பவும் சிரத்தையாகச் செய்கிறீர்கள்!!!..

  ReplyDelete
  Replies
  1. வாங்க பார்வதி, இன்னிக்கு இங்கே ஆறு மணி நேரத்துக்கும் மேலாக மின் வெட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு!. இப்போத் தான் வந்தது. ஹிஹிஹி, பண்டிகையைச் சிரத்தையாய்ச் செய்யறேனோ இல்லையோ, போளி, வடையெல்லாம் சிரத்தையாச் செய்துடறேன். :)

   Delete
 16. புத்தாண்டு வாழ்த்துகள். முடிந்தவரை சிரத்தையாகச் செய்தால் யாவும் நன்கே அமையும். உங்களுக்கு சிரத்தை கொஞ்சம் கூடுதல்தான். நல்லதே எல்லாம். அன்புடன்

  ReplyDelete