எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, August 02, 2015

எப்படி இருக்கீங்க? சௌக்கியமா?
எல்லோரும் எப்படி இருக்கீங்க? சௌக்கியமா? என்னோட அறுவை இல்லாமல் சந்தோஷப்படறவங்களுக்குச் சொல்லிக்கிறேன். சீக்கிரமாவே வருவேனாக்கும். நாளைக்கு ஆடிப்பெருக்குங்கறதாலே இன்னிக்குக் கொஞ்சம் இல்லை ரொம்பவே பிசி! அதோட அப்பு & குடும்பம் வேறே இந்த வருஷம் பண்டிகைக்கு இங்கே இருக்காங்களே. அப்பு ரொம்ப உயரமா இல்லைனாலும், (அவ அம்மா அப்பு உயரம்னு சொல்றா!) நல்லாப் பேச்சு மழலையெல்லாம் மாறிப் போச்சு. முன்னெல்லாம் பாட்டினு ஓடி வந்து கட்டிப்பா! இப்போப் பாட்டினு புரிஞ்சாலும், ஆசையாப் பேசினாலும், கொஞ்சம் வெட்கம் வந்திருக்கு. தாத்தா மேல் ஏறிக் குதிப்பா! இப்போத் தாத்தா கிட்டேயும் போக வெட்கம்.  மற்றபடி அக்காவோட நல்லா சண்டை போட்டுட்டு இருக்கா! :) அக்கா, தங்கைனு இருந்தால் இப்படித் தான் இருக்கும் போல! நமக்குத் தான் அக்காவோ, தங்கையோ இல்லையே! :(

ஆச்சு, இன்னும் ஒரு வாரம், ஒரே ஓட்டமா ஓடிப் போயிடும். அப்புவும் ஊருக்குப் போயிடும். அப்புறமா எப்போவோ! தெரியாது! அப்போ இன்னும் பெரிய பெண்ணா வளர்ந்திருப்பா. இந்த இரண்டு படங்களும் எங்க பொண்ணு எடுத்தது. மேலே உள்ள படம் ராஜகோபுரத்தை வித்தியாசமான கோணத்தில் எடுத்திருக்கா! கீழே உள்ளது நம்ம வீட்டு ஜன்னல் வழியே தென்னை மரத்தில் கொஞ்சிக் கொண்டிருந்த கிளியாரை எடுத்தது.  வேறே இரண்டு படம் தான் போட்டு ஆறு இல்லை அறுபது வித்தியாசங்கள் கேட்க இருந்தேன். ஆனால் அது என்னமோ சரியா வரலை! என்னனு புரியலை! பார்க்கிறேன். :) இப்போதைக்கு இது மட்டும்!

17 comments:

 1. நடுவுல எங்களையும் வந்து கண்டு கொள்வதில் சந்தோஷம். மகள், பேத்திகளுடன் சந்தோஷ பொழுது போகிறதா?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், இரண்டு நாட்களாப் பார்வையாளர்கள் அதிகமா இருந்திருக்காங்க. அந்த அளவுக்குக் கருத்துக்கள் வரலை!:) பொழுது போகலை! ஓட்டமாய் ஓடிட்டு இருக்கு. இன்னும் ஒரே வாரம் தான். அப்புறமாப் பழைய குருடி கதவைத் திறடி தான். :)

   Delete
 2. தங்களின் மகிழ்ச்சி எங்களுக்கும்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி, நன்றிப்பா.

   Delete
 3. மகள், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக இருங்கள், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு, நீண்ட நாட்கள் கழித்து வந்ததற்கும், வாழ்த்துச் சொன்னதுக்கும் நன்றி.

   Delete
 4. Replies
  1. மௌலி, என்ன அர்த்தம் இதுக்கு? :)

   Delete
 5. சொந்தங்களுடன் கொஞ்சம் பொழுதை செலவிடுவதில் மகிழ்ச்சிதான்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. வாங்க சுரேஷ், நன்றிப்பா.

   Delete
 6. நாங்க லேட்டு....எங்களில் கீதாவும் பயணத்தில் இருந்ததால் வரலை....வலைப்பக்கம்...னீங்களும் இளமையாகி இருப்பீர்கள்.....

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, என்னோட பதிலும் லேட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு! :)

   Delete
 7. பெண்,பேத்திகள், மாப்பிள்ளை எல்லோரும் வந்துள்ளார்களா? பொழுது போவதே தெரியாது. இன்னும் கொஞ்சம் நேரம் நீண்டால் தேவலையா. ஆனந்தமென் சொல்வெனே!!!!!!!!!!!!!!!!! அன்புடன் யாவருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. இது போன வருஷம் அம்மா! முகநூலில் மார்க் பழைய நினைவுகளில் இந்தப் பதிவை இன்றைய ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்காக எடுத்துப் போட்டிருந்தார். :)

   Delete
  2. Always new even if it is old ! :)

   Delete
  3. Thank You Sir, for visiting my blog and commenting! :)

   Delete
 8. அப்போ இன்னும் பெரிய பெண்ணா வளர்ந்திருப்பா// how sad!

  ReplyDelete