எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 21, 2015

நாகராஜா கோயிலில்!

சற்று நேரத்தில் அந்தக் காரின் சொந்தக்காரரும் ஓட்டுநரும் ஆகிய மனிதர் வந்தார். கார் பழைய காலத்து அம்பாசடர் கார். ஆனாலும் சரியான பராமரிப்பு இல்லை. உட்காரும் இடத்தில் போடப்பட்டிருந்த மெத்தை எல்லாம் கிழிந்து வர ஆரம்பித்திருந்தது. ஆனாலும் அந்த ஓட்டுநரின் நிலைமையைப் பார்க்க மனம் கஷ்டப் பட்டது. வயதானவர். இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்களாம். ஒரு மகன் மட்டும் ஏதோ வேலை செய்வதாகச் சொன்னார். அவருக்கு ஒரு வருமானமாக இருக்கட்டும் என்ற எண்ணம் எங்கள் இருவர் மனதிலும் தோன்றியது. ஆனாலும் அந்தக் காரில் எல்லா இடங்களும் செல்லவும் யோசனை தான்.

ஆகவே முதலில் ரயில்வே நிலையம் சென்று டிக்கெட் நிலைமையைப் பார்த்துக் கொண்டு, பின்னர் நாகராஜா கோயில், திருவட்டாறு, பத்மநாபபுரம் அரண்மனை, முடிந்தால் திற்பரப்பு அருவி, கன்யாகுமரி, சுசீந்திரம் போன்ற இடங்களைப் பார்த்துக் கொண்டு இரவு திரும்புவதாகப் பேசிக் கொண்டோம். இதில் பத்மநாபபுரம் அரண்மனையைப் பார்க்க நேரம் எடுக்கும் என்று சொன்னதால் திற்பரப்பு அருவியைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டோம். மேலும் நாங்கள் முக்கியமாகப் பார்க்க நினைத்தவை கோயில்களே!  மற்றவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

ஆகவே பேசியபடி அந்த வண்டியில் ஏறிக் கொண்டு முதலில் ரயில்வே நிலையம் சென்றோம். எல்லா வண்டியிலும் பின்னால் ஏறுகின்ற மாதிரி ரங்க்ஸால் இந்த வண்டியில் ஏற முடியவில்லை. ஏற்கெனவே கழுத்துப் பிரச்னை! குனிய முடியாது. ரொம்ப சிரமப் பட்டு ஓட்டுநர் அருகில் அமர்ந்து கொண்டார். பின்னால் உள்ள இடத்தில் நான் அமர்ந்து கொண்டேன். வண்டி திடீர்னு பிரேக் பிடித்தால் உட்கார்ந்திருந்த மெத்தையோடு சேர்ந்து நகர்ந்து முன்னால் தள்ளும்.  பின்னர் மெத்தையைச் சரி செய்து கொண்டு மறுபடி பின்னால் போவேன். மீண்டும் அதே மாதிரி! ஒவ்வொரு வளைவிலும் கூட இப்படித் தான் வேடிக்கை காட்டியது. இதுவும் ஒரு அனுபவம் என மனதுக்குச் சொல்லிச் சமாதானம் செய்தேன்.

ரயில்வே நிலையத்தில் நாங்கள் மறுநாள் போக வேண்டிய வண்டியில் இடம் இருக்கிறதா என்று பார்த்தால்! சுத்தம்! ஒன்றுமே இல்லை. காலை குருவாயூரில் மட்டும் இருந்தது. குருவாயூர் நாகர்கோயிலுக்குக் காலை ஐந்து மணிக்கெல்லாம் வந்து விடும். அத்தனை சீக்கிரம் கிளம்ப முடியுமா என்ற சந்தேகம் வந்தது. ஆகவே பேசாமல் திரும்பி வந்தோம். பயணம் குறிப்பிட்ட நாளில் வாங்கிய பயணச் சீட்டில் தான் என்று நான் நினைத்தேன். ரயில் நிலையத்திலிருந்து நாகராஜா கோயிலுக்குச் சென்றோம். கேரள முறைப்படி கட்டப்பட்டிருந்த கோயில்.  பல வருடங்களாகப் போக நினைத்த கோயில். அங்கே அர்ச்சனை செய்யவென்று என் அண்ணா, தம்பி எல்லோரும் பணம் கொடுத்திருந்தார்கள். எங்கள் குடும்பத்திற்கும் சேர்த்து அர்ச்சனைக்கு வேண்டிய பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டோம். அவ்வளவு கூட்டமெல்லாம் இல்லை.

தமிழ்நாட்டில் இருந்தாலும், தமிழில் பேசினாலும் கேரள முறைப்படியே வழிபாடுகள் நடைபெறுகின்றன. என்றாலும் அத்தனை நிதானமாக இல்லை என்பது என் வருத்தம். எங்களிடமிருந்து அர்ச்சனைகளுக்கான பொருட்களை வாங்கிக் கொண்டவர் சங்கல்பம் செய்யும் போது ஒவ்வொரு குடும்பத்திற்கும் தனித்தனியாக சங்கல்பம் செய்ய மறுத்துவிட்டார். பொதுவாய்ச் சொல்லுங்க என்றார். எல்லாம் வெவ்வேறு குடும்பம். அண்ணாவும், தம்பியுமாவது ஒரே கோத்திரம். நாங்க வேறே கோத்திரமாச்சே! அதுக்கும் மறுத்துவிட்டார். பின்னர் வேறொருவர் வந்து ஒரு பேப்பரில் எழுதிக் கொடுங்க, படிக்கிறேன் என்று கூறவே ஏற்கெனவே எழுதி வைச்சிருந்ததை உடனே எடுத்து அவரிடம் கொடுத்தோம். என்ன அர்ச்சனை செய்தாரோ தெரியாது! ஐந்தே நிமிடத்தில் பிரசாதங்கள் புற்று மண்ணோடு வந்துவிட்டன! :( நாங்கள் எங்கள் மனமார இறைவனைப் பிரார்த்தித்துக் கொண்டோம்.  அது ஒன்று தான் ஒரே வழி! பொதுவாகக் கோயில்களில் அர்ச்சனைகள் எல்லாம் செய்வது இல்லை. இந்தக் கோயிலில் பிரார்த்தனைக்கு என்றே போனதால் அர்ச்சனை செய்தோம். அவர்கள் அளித்த பிரசாதங்களைப் பெற்றுக் கொண்டோம். பின்னர் பக்கத்தில் உள்ள சந்நிதிகளுக்குச் சென்றோம்.

அடுத்துத் தலவரலாறு! படங்கள் எடுக்க அநுமதி கிடையாது. வெளியே இருந்து எடுத்திருக்கும் படங்களை மட்டும் பகிர்கிறேன்.கோயிலின் முக்கிய நுழைவாயில் நேரே நாகராஜா சந்நிதி


சந்நிதியின் இடப்பக்கம் உள்ள நாகர் தீர்த்தம்15 comments:

 1. நான் பெண் பார்க்க கரூர் சென்றபோது எடுத்துச்சென்ற அம்பாசடர் கார் என் நினைவுக்கு வந்தது உங்கள் கார் பயண அனுபவம். பொதுவாக எந்த பெரிய கோயில்களிலும் இப்போதெல்லாம் பொறுமையாக அர்ச்சனை, சங்கல்பம் எல்லாம் செய்வது கிடையாது. எல்லாம் வேகமயம், பணமயம் ஆகிவிட்டது!

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, சுரேஷ், மலரும் நினைவுகளா!!!!!! நாங்களும் எந்தக் கோயிலிலும் அர்ச்சனைகள் செய்வதில்லை. இது விதிவிலக்கு! :(

   Delete
 2. உங்கள் கார் அனுபவம் சிரிப்பை வரவழைத்தது. "ஸோரி கேட்டேளா.... நீங்க உங்க கஷ்டத்தச் சொல்றேள்.. நான் சிரிக்கிறேன்.." (என்ன பட வசனம் என்று சொல்லவும். தெரியவில்லையானால் உங்கள் வீட்டு வல்லுனரைக் கேட்கவும்!

  அர்ச்சனை செய்யும்போது அர்ச்சகர்கள் கண்கள் பெரும்பாலும் பக்தர்கள் வரிசையையே பார்த்தவாறு இருக்கும்! சுவாமியைப் பார்த்துச் செய்ய வேண்டாமோ?

  ReplyDelete
  Replies
  1. எனக்குத் தெரியலை ஶ்ரீராம், மன்னியைத் தான் கேட்கணும்! :) அர்ச்சகர்கள் எங்கே அர்ச்சனை செய்கின்றனர்! சும்மா உள்ளே போயிட்டு உடனே திரும்பறாங்க! :(

   Delete
  2. பார்வதி மன்னி! எங்கிருந்தாலும் வரவும், இந்த வசனம் எந்தப்படம்னு சொல்லுங்க! :)

   Delete
 3. நாகர்கோயில்...நாகராஜா கோயிலை விட எனக்கு சுசீந்திரம் கோயில்தான் பிடிக்கும்...பூதப்பாண்டி கோயிலும் ரொம்ப பிடிக்கும்...னிறைய இடங்கள் இருக்கு அங்கு சுற்றிப்பார்க்க...களிக்க என்று....அருமையான ஊர்..என் நினைவுகள் மீண்டன...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. சுசீந்திரம் எனக்கும் பிடிக்கும். பூதப்பாண்டி கோயிலுக்கெல்லாம் போகலை! சுற்றிப் பார்க்க நிறைய இடங்கள் உண்டு தான்! எல்லாமும் பார்க்கவும் உடல்நிலை இடம் கொடுக்கணுமே!

   Delete
 4. பெரும்பாலான கேரளக் கோவில்களில் அர்ச்சனை டிக்கெட் வாங்கும் போதே பெயர் நட்சத்திரம்போன்ற விஷயங்களை ஒரு பேப்பரில் எழுதி வாங்கி கொள்கின்றனர்/ அர்ச்சனைட் டிக்கெட்டோடு அந்தப் பேப்பரும் அர்ச்சகரிடம் கொடுக்க வேண்டும். அந்தப் பெயர்களுக்கெல்லாம் அர்ச்சனை நடை பெறுவதாக நாம் நினைத்துக் கொள்ள வேண்டும்

  ReplyDelete
  Replies
  1. அப்படியா, எங்களுக்கு இது புதுசு! இப்படிஎல்லாம் பார்த்தது இல்லை. பொதுவாய் எங்க ஊர்க் கோயில்களில் மட்டுமே அர்ச்சனை செய்வோம். :)

   Delete
 5. ஒரே ஒரு முறை நாகராஜா கோவிலுக்குப் போய் இருக்கிறோம் சுசீந்திரம் பத்மநாபசாமி கோவில் எல்லாம் இரண்டு மூன்று முறைக்கு மேல் போய் இருக்கிறோம்

  ReplyDelete
  Replies
  1. நாகராஜா கோயிலுக்கு நாங்களும் இதான் முதல்முறை. முன்னர் நாகர்கோயில் போனபோது இங்கெல்லாம் போகவில்லை.

   Delete
 6. இதற்காகத் தான் பெரும்பாலும் கோவில்களில் அர்ச்சனை செய்வதே இல்லை. அம்பாசிடர் காரில் பயணம் உயரமானவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்.

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், ஒரு காலத்தில் அம்பாசடர் தான் வசதியாகத் தெரிந்தது! :) கோயில்கள் விஷயத்தில் எங்களுக்கும் கசப்பான அனுபவங்கள் நிறையவே உண்டு!

   Delete
 7. மைக்கேல் மதன காமராஜன். காமேஸ்வரனிடம் ஊர்வசி சொல்லும் வசனம்>}}}}ஸ்ரீராம்..
  கீதா சிரமப்பட்டு இத்தனை கோவில்களும் தரிசனம் செய்து எங்களுக்கும் படிக்கக் கொடுக்கறீர்கள்.
  மிக நன்றி மா.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா, இதை நம்ம "மன்னி" (பார்வதி ராமச்சந்திரன்) கண்டு பிடிச்சு கூகிள் ஜி+ இல் சொல்லி இருக்காங்க ரேவதி. :)

   Delete