எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, August 25, 2015

கொண்டாட்டமாம் கொண்டாட்டம்!

இப்போது சுடச் சுடப் பேசப்படும் விஷயம் வெங்காய விலையும், ராணுவத்தினரின் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டமும் தான். இரண்டுக்காகவும் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இதில் வெங்காய விலை அதிரடியாகக் குறையவும் வாய்ப்புகள் உண்டு. அநேகமாக எந்த அரசு பதவிக்கு வந்தாலும் சில குறிப்பிட்ட ஆண்டுகளில் வெங்காய விலை ஏறுவதும் அதற்கு எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்துவதும் வழக்கமான ஒன்றாக இருக்கிறது. பொதுவாகப் பொருளாதார நிலை பாதிப்பும், சர்வதேசப் பங்கு மார்க்கெட் வீழ்ச்சியும் விலை ஏற்றத்துக்குக் காரணமாகச் சொல்லப்பட்டாலும், சீனா தன் நாட்டு நாணய மதிப்பை மிகக் குறைத்ததே சர்வ தேசப் பொருளாதாரச் சிக்கலுக்கு முக்கியக் காரணம் ஆகும்.

நம் நாடு இதைத் தாண்டி நிற்கும். ஏனெனில் இங்கு சேமிப்பு அதிகம். இன்னமும் சில இடங்களில் கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறை உள்ளது. குடும்ப வாழ்க்கை முறை அடியோடு அழியவில்லை. என்னதான் தனி மனித சுதந்திரம் என்று பேசிக் கொண்டு அதற்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தாலும் சமூக வாழ்க்கையில் அப்படித் தனி மனித சுதந்திரம் எல்லையற்றுப் போவது சீரழிவை உண்டாக்கும் என்பதையும் அனைவரும் உணர்ந்தே இருப்பார்கள். இந்தத் தனி மனித சுதந்திரம் இப்போது எல்லையற்றுப் போய்க் குழந்தை பெற்றுக் கொள்வது கூடத் தனி மனித சுதந்திரத்தைப் பாதிக்கும் என்பதால் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் இருப்பதும் அதைப் பலரும் பாராட்டி ஏற்றுக் கொள்வதும் நடக்கிறது. இது எவ்வளவு தூரத்துக்கு நன்மை பயக்கும் விஷயம் என்பது போகப் போகத் தான் தெரியும். நம் தாய், தந்தை தனி மனித சுதந்திரம் குறித்து நினைத்திருந்தார்களானால், அதைக் கடைப்பிடித்திருந்தார்களானால் நாமே இல்லை!

இப்போது ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் பிரச்னைக்கு வருவோம். எல்லா அரசு ஊழியர்களையும் போல் ராணுவத்தினரின் வேலையும் இல்லை. அவர்களுக்குக் கடுமையான பயிற்சிகள், கடுமையான வேலைகள், நேரக்கட்டுப்பாடு எல்லாம் கிடையாது. எங்கு வேண்டுமானாலும், எந்தச் சூழ்நிலையிலும் இருந்து சமாளிக்க வேண்டிய நிர்ப்பந்தங்கள், பனி பொழியும் இமயமலைச் சாரலில் இருந்து ராஜஸ்தானின் பாலைவனம் வரை அவர்கள் கட்டாயமாக அனைத்தையும் சமாளித்துத் தங்கள் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இதில் பலரும் ஒரே பதவியில் இல்லை. சிலர் ராணுவ வீரர்களே! வேறு சிலர் வேலையில் சேரும்போதே அதிகாரிகளாகச் சேர்ந்திருப்பார்கள். சிலர் ராணுவ மருத்துவத் துறையில் இருக்கின்றனர். சிலர் பொறியியல் துறை. சிலர் தொலைத் தொடர்புத் துறை. சிலருக்கு எழுத்துப் பணி! பலருக்கும் நேரடியாகப் போரிடும் பணி. இப்படி அனைத்தும் சேர்ந்த கலவையே ராணுவம் ஆகிறது.

ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கால கட்டத்தை ஓய்வு பெறுவதற்கு என அரசு நிர்ணயித்துள்ளது. உதாரணமாக ஒரு ராணுவ வீரரின் (ஜவான்) பணிக்காலம் 20 ஆண்டுகள் என நிர்ணயித்திருக்கலாம். அந்த இருபது ஆண்டுகளுக்குள்ளாக அவர் பணி ஓய்வும் பெற்றிருக்கலாம். அல்லது 20 ஆண்டுகள் முடிந்த பின்னரும் பெற்றிருக்கலாம். அல்லது பணி உயர்வு 20 ஆண்டுகளுக்குள் பெற்றிருக்கலாம். அப்படிப் பணி உயர்வு பெற்றிருந்தால் எந்தப் பணி உயர்வு பெற்றிருக்கிறாரோ அதற்கென நிர்ணயிக்கப்பட்டக் கால அளவு உண்டு. அது வரை அவர் ராணுவப் பணியில் இருக்கலாம். அல்லது பணி ஓய்வு பெறும் காலகட்டத்தில் பணி உயர்வு பெற்றால் ஆறு மாதம், ஒரு வருடத்துக்குள்ளாக ஓய்வு பெற்றிருக்கலாம். இன்னும் சிலர் பதினைந்து ஆண்டுகளிலேயே தங்கள் பணியை விட்டு விலகி இருப்பார்கள். அவர்களுடைய ஓய்வூதியம் கணக்கிடப்படுவது ஒரு வகை எனில் மற்றவருக்குக் கணக்கிடப் படுவது வேறு வகையாக இருக்கும்.
அதிகாரிகளில் காப்டன், மேஜர், லெஃப்டினன்ட் கர்னல், கர்னல், பிரிகேடியர் என்று பதவி உயர்வு பெற்றுப் பதவியில் இருந்திருக்கலாம். அல்லது காப்டன் பதவியிலேயே ஓய்வும் பெற்றிருக்கலாம். இந்த ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு பணிக்காலம் உண்டு.  ஒவ்வொரு பணிக்கும் ஒவ்வொரு சம்பள விகிதம். காப்டன் பதவியிலேயே ஓய்வும் பெற்றிருக்கலாம். பணி உயர்வும் பெற்றிருக்கலாம்.  பணி உயர்வு பெற்றால் அதே மாதிரியான சம்பளம் கிடைக்காது. மேஜர் பணிக்கு என்ன சம்பளமோ அது கிடைத்திருக்கும்.  இரண்டு வெவ்வேறு நபர்கள் ஒரே சமயம் ராணுவப் பணியில் காப்டன் ஆகச் சேர்ந்திருக்கலாம். ஒருத்தர் காப்டன் பதவியிலேயே பணி ஓய்வு பெற்றிருப்பார். இன்னொருவர் பணி உயர்வு பெற்றுப் பணியைத் தொடர்ந்திருக்கலாம். அப்போது இவர்களுக்கான ஓய்வூதியத்தை அவர்கள் கடைசியாக இருந்த பணியின் தகுதியைக் கணக்கிட்டே கொடுக்க முடியும்.


காப்டன் பதவியில் இருந்து ஓய்வு பெற்றவரும், காப்டனில் இருந்து மேஜர் ஆக உயர்வு பெற்றவரும் ஒரே மாதிரியான  ஓய்வூதியம் வாங்க முடியாதே! பணியில் சேர்ந்தது என்னமோ ஒரே நாள், ஒரே தேதி, ஒரே தகுதியில் பதவியும் இருந்திருக்கலாம்.  மேஜராகப் பணி உயர்வு பெற்ற நபர் பணி ஓய்வு பெறும்போது லெஃப்டினன்ட் கர்னல் ஆகவோ அல்லது கர்னல் ஆகவோ பணி ஓய்வு பெற்றிருக்கலாம். ஓய்வு பெற்று ஓய்வூதியம் வாங்கும் அதிகாரிகளும் மீண்டும் ராணுவப் பணிக்கு வருவது உண்டு. அவர்கள் கடைசியாக இருந்த பதவியைக் கணக்கிட்டு அதற்கேற்றவாறு மறுபதவி கொடுப்பார்கள். ஆக இத்தனை சிக்கல்கள் இருக்கையில் ஒவ்வொன்றையும் கணக்கிட்டு அவற்றைச் சரி செய்த பின்னரே ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கொண்டு வர முடியும். ஆனால் பதவிக்கு வரும் முன்னர் பிரதமர் மோதி இதை மிக எளிதாக நினைத்திருக்கிறார். பதவிக்கு வந்த பின்னரே நடைமுறைச் சிக்கல்கள் புரிய வந்திருக்கிறது. ஆகவே அவர் நேரிடையாக ராணுவத்தினரிடம் அவகாசம் கேட்டிருக்கலாம். நிலைமையைப் புரிந்து கொள்ள முடியாதவர்கள் அல்ல. கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார். விரைவில் தகுதி அடிப்படையில் எல்லாம் சரி செய்யப்படும் என்றும் கூறி உள்ளார்.

கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிறைவேற்றப்படாமல் உள்ள இந்தக் கோரிக்கை இப்போது ஒரே ஆண்டில் மோதி பிரதமர் ஆனதும் நிறைவேற்றவில்லை எனப் போராட்டம் வலுத்துள்ளது. சுதந்திர தின உரையில் மோதி இந்தத் திட்டத்திற்கான செயல்பாட்டை அறிவிப்பார் என எதிர்பார்த்த நிலையில் போராட்டம் வலுவடைந்துள்ளது. அவ்வளவு எளிதாக நிறைவேற்ற முடியாது இந்தத் திட்டத்தை என்று பொருளாதார வல்லுநர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும். அல்லது நிதி மந்திரியோ, ராணுவ மந்திரியோ நிலைமையை விளக்க வேண்டும். இதற்காக அதிக நிதியும் தேவை.  ஆகவே இந்தக் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்பது கொஞ்சம் கடினமே. எல்லாப் பக்கங்களில் இருந்தும் மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுத்து அரசால் எதையும் நிறைவேற்ற முடியவில்லை; இது கையாலாகாத அரசு என்பதை நிரூபிக்கப்பாடுபடும் எதிர்க்கட்சிகளுக்குக் கொண்டாட்டம் தான்.  இதனால் இந்த அரசு செய்திருக்கும் ஓரிரு சாதனைகளும் வெளியே தெரியாமல் போய்விடுகிறது.  யாருமே அறியாமல் போய் விடுகிறது. :)

16 comments:

 1. ஒரே டெக்னிகலா இருக்கே? சாம்பு சார் இதுல வராரா?

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தம்பிக்கு அக்காவோட புத்திசாலித் தனத்தின் மீது எவ்வளவு நம்பிக்கை! :P :P :P :P :P :P ஆனால் அவர் இந்தத் துறையில் இல்லை எனில் எனக்கு இவை தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆகவே அவரும் இதிலே வந்து தான் ஆகணும்! :))))

   Delete
  2. இந்த ஒரே பதவி ஒரே ஓய்வூதியம் கொள்கையைக் குறித்து எவ்விதம் நிறைவேற்ற முடியும் என நாங்கள் எங்களுக்குள் பேசிப்போம்! :))

   Delete
 2. மோதி அரசின் ஸ்போக்ஸ்பர்சனாகவே மாறி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஜிஎம்பி ஐயா, உண்மையை உரக்கச் சொல்ல வேண்டும்! அது ஒன்று தான் நான் அறிந்தது! அது யார் அரசாக இருந்தாலும்! இதுவே காங்கிரஸின் செயல்பாடாக இருந்தாலும் இப்படித் தான் எழுதி இருப்பேன். ஆனால் துரதிர்ஷ்டவசமாகக் காங்கிரஸ் அப்படி இல்லை! :(

   Delete
 3. இந்த ராணுவப் பதவி உயர்வு விஷயங்கள் பெரும் குழப்பம். சீனா யுவான் மதிப்பைக் குறைத்ததில் இந்திய நாணய மதிப்பும் பாதித்தது. சீனாவுடன் ஒப்பிடும்போது நம் அந்நியச் செலாவணிக் கையிருப்பும் கம்மி என்று படித்தேன். அதுவும் குழப்பமாகத்தான் புரிந்தது.

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, ஶ்ரீராம், நான் பள்ளியிலேயே இந்தக் கொடுக்கல் வாங்கலைப் படிச்சு வைச்சதோடு அல்லாமல் அப்புறமாயும் தனியாக இதையே படித்துத் தொலைத்தேன். ஆகவே ஓரளவுக்குப் புரியும்! என்றாலும் ஷேர் பற்றிய விபரங்கள் கொஞ்சம் தடுமாற்றம் தான்! ஆகவே அது குறித்து விரிவாக எழுதவில்லை! :) நம் அந்நியச் செலாவணி குறைவாக இருந்தாலும் உள்நாட்டில் சேமிப்புக்குக் குறை இல்லை. ஸ்திரமாக இருக்கும் என நம்புகிறேன். ரிசர்வ் வங்கி கவர்னரும் அதையே தான் சொல்கிறார். இந்தியா இதைத் தாங்கும் என்றே சொல்கிறார். போன வாரம் தான் பண வீக்கம் மைனஸில் இருந்தது! :) இது சீனா வேண்டுமென்றே செய்தது. சீனாவின் பொருளாதார நிலை மோசம் என்பதால் செய்ய நேரிட்டது!

   Delete
  2. நேற்றைய 'ப்ளாக் மன்டே' வுக்கும் இதற்கும் சம்பந்தமிருக்காது என்று நம்புவோம்.

   Delete
  3. இன்னிக்குப் பேப்பர் பார்க்கலையா? சீனாவின் நாணய மதிப்புக் குறைவே உலகெங்கும் பங்குச் சந்தைகளின் சரிவுக்குக் காரணம்!

   Delete
 4. ம்ம்ம்ம் டாலர் மட்டும் எப்படி பலமா நிக்குது? அதையும் சொல்லி அருள வேணும்!

  ReplyDelete
  Replies
  1. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், தேர்வு வைக்கறீங்க? அது எல்லோருக்கும் தெரிஞ்சது தானே! சர்வதேச அளவில் அனைத்து வியாபாரங்களும் அமெரிக்க டாலரிலேயே கணக்கிடுவது தான் காரணம் என்பது என் கருத்து!

   Delete
  2. இன்னிக்குப் பங்குச் சந்தை உயர்ந்திருக்கிறது! போகப் போகப் பார்க்க வேண்டும். தங்கம் விலையும் குறைந்துள்ளது.

   Delete
 5. ஒரே ஓய்வூதிய திட்டம் என்பது கொஞ்சம் கஷ்டமான ஒன்று! விரிவான விளக்கம்! நன்றி!

  ReplyDelete
 6. அடே யப்பா எவ்வளவு ஆராய்ச்சி. பாராட்டுகள் கீதா..
  இங்கே நான்கு நாட்களாக இதே ஆர்பாட்டம்தான். நேத்திக்கு உயர்ந்ததாக இவர்கள் பேசிக் கொண்டார்கள். வெங்காயம் அரசியல்
  செய்யாமல் ஒரு வருஷத்தையும் முடிக்காது.>}}

  ராணுவத்தினருக்கு நன்மை நடக்கட்டும்.
  எனக்குத் தெரிந்து மகனின் நண்பன், கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஊர் மாற்றி ஊர் போய் வந்து
  கொண்டிருக்கிறான்.

  ReplyDelete
  Replies
  1. ஆராய்ச்சி எல்லாம் எதுவும் இல்லை ரேவதி. முழுக்க முழுக்க ராணுவத்தோடயே எங்க வாழ்க்கையின் பெரும்பகுதி கழிந்திருக்கிறது. அப்போப் பேசிக் கொண்டவை, கேட்டவை, நினைவில் இருந்தவை, அதோட ரங்க்ஸ் ராணுவக் கணக்குத் துறையில் தானே வேலையும் செய்திருக்கார்! அவர் சொன்னது என எல்லாமும் கலந்த ஓர் கலவை இது

   Delete