எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, September 03, 2015

வெள்ளை அப்பங்களுக்கு இலவசம்! காதுத் தொங்கட்டான்கள்! ! :)

ஜிமிக்கி க்கான பட முடிவு ஜிமிக்கி க்கான பட முடிவு


ஜிமிக்கி க்கான பட முடிவு  ஜிமிக்கி க்கான பட முடிவு தோடும் ஜிமிக்கியும்


                தோடு ஜிமிக்கி க்கான பட முடிவு                                                தோடும் ஜிமிக்கியும் சேர்ந்து!  மற்றவை தோடோடு சேர்ந்தாற்போல் வரும் தொங்கட்டான்கள்.


சரி, இதோடு வெள்ளையப்பம் படத்தை இணைக்கலாமா? வேண்டாமா?

வெள்ளையப்பம் படத்தையும் கீழே இணைத்திருக்கிறேன். பாருங்க!


இட்லி மாவில் இஞ்சி, ப.மிளகாய், பெருங்காயம், கருகப்பிலை கலந்தது. தேவையானால் ஒரு வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம்.


எண்ணெயில் வேகும் வெள்ளை அப்பங்கள். எண்ணெய் அதிகம் தேவையில்லை எனில் அப்பக்காரையில் கூடக் குத்தி எடுக்கலாம். என்னோட அப்பக்காரை உள்ளே எங்கேயோ இருக்கு. தேடி எடுக்கணும். ஆகையால் எண்ணெயிலேயே போட்டாச்சு.  கீழே வெந்து எடுத்த வெள்ளை அப்பங்கள். அப்படியே சாப்பிடலாம். சட்னி ஏதேனும் இருந்தால் அவற்றோடும் சாப்பிடலாம்.  அப்படி ஒண்ணும் எண்ணெய் குடிக்கலை.32 comments:

 1. கைவிட்டு ஒண்ணொண்ணா எடுக்கும் வசதி எப்போ வரும்? கண்ணைக் கவருதே வெ அ படங்கள்...

  ReplyDelete
  Replies
  1. கைவிட்டு ஒண்ணொண்ணா எடுக்கும் வசதி எப்போ வரும்?//
   எப்ப எடுக்கணும் ?
   நன்னா வெந்துகிட்டு இருக்கும்போது திருப்பி போடணும் . இரண்டு பக்கமும் நன்னா பொன் முறுவலா வந்தப்பறம் அப்படியே கையினாலேயே எடுத்து வாயிலே உடனே போட்டுக்கணும்.

   ஆஹா என்ன சுவை ? என்ன சுவை?

   அது சரி. கீதா மேடம். ஒரு சந்தேஹம் இருக்கு.

   இந்த தொங்கட்டான் படம் கிட்டத்தட்ட ஜிமிக்கி மாதிரி லே இருக்கு.

   எங்க அம்மா அந்தக் காலத்துலே ஒரு சின்ன சாவி வளையம் மாதிரி ஒன்னு 1 கிராம் லே , அதுலே இரண்டு மூணு மணி (பூஜை மணி நோ. கருகமணி அப்படின்னு நினைக்கிறேன்., இல்ல அதுமாதிரி குண்டு மணி ) தொங்கிட்டு இருக்கும். அதை காதிலே போட்டு விடுவாக .

   அது, அதான் அந்த தொங்கட்டான் புள்ளைங்க பாண்டி விளையாடும்போது, இப்படியும் அப்படியுமா ஊஞ்சல ஆடும் பாருங்க..
   நான் என் தங்கச்சியும் அடுத்தாத்து அம்மு குட்டியும் இந்த தொங்கட்டானை போட்டுண்டு பட்டு பாவாடை கட்டிண்டு, நட்ட நடு கூடத்துலே கிருஷ்ணா நீ பெகானோ பாட்டுக்கு அபி நயம் புடிப்பா பாருங்க...

   அடடா அடா. அடுத்த ஜன்மத்துலேயாவது கிருஷ்ணனா நம்ம புரக்கணுமே அப்படின்னு ஒரு ஏக்கம் தோணிடும்.

   அது சரி. வெள்ளை அப்பத்துக்கு தொட்டுக்க கொத்தமல்லி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னி, எது டெஸ்ட் ஜாஸ்தி ?

   சு தா.


   Delete
  2. கைவிட்டு ஒண்ணொண்ணா எடுக்கும் வசதி எப்போ வரும்?///

   எப்ப எடுக்கணும் ?
   நன்னா வெந்துகிட்டு இருக்கும்போது திருப்பி போடணும் . இரண்டு பக்கமும் நன்னா பொன் முறுவலா வந்தப்பறம் அப்படியே கையினாலேயே எடுத்து வாயிலே உடனே போட்டுக்கணும்.

   ஆஹா என்ன சுவை ? என்ன சுவை?

   அது சரி. கீதா மேடம். ஒரு சந்தேஹம் இருக்கு.

   இந்த தொங்கட்டான் படம் கிட்டத்தட்ட ஜிமிக்கி மாதிரி லே இருக்கு.

   எங்க அம்மா அந்தக் காலத்துலே ஒரு சின்ன சாவி வளையம் மாதிரி ஒன்னு 1 கிராம் லே , அதுலே இரண்டு மூணு மணி (பூஜை மணி நோ. கருகமணி அப்படின்னு நினைக்கிறேன்., இல்ல அதுமாதிரி குண்டு மணி ) தொங்கிட்டு இருக்கும். அதை காதிலே போட்டு விடுவாக .

   அது, அதான் அந்த தொங்கட்டான் புள்ளைங்க பாண்டி விளையாடும்போது, இப்படியும் அப்படியுமா ஊஞ்சல ஆடும் பாருங்க..
   நான் என் தங்கச்சியும் அடுத்தாத்து அம்மு குட்டியும் இந்த தொங்கட்டானை போட்டுண்டு பட்டு பாவாடை கட்டிண்டு, நட்ட நடு கூடத்துலே கிருஷ்ணா நீ பெகானோ பாட்டுக்கு அபி நயம் புடிப்பா பாருங்க...

   அடடா அடா. அடுத்த ஜன்மத்துலேயாவது கிருஷ்ணனா நம்ம புரக்கணுமே அப்படின்னு ஒரு ஏக்கம் தோணிடும்.

   அது சரி. வெள்ளை அப்பத்துக்கு தொட்டுக்க கொத்தமல்லி சட்னி, வெங்காய சட்னி, தேங்காய் சட்னி, எது டெஸ்ட் ஜாஸ்தி ?

   சு தா.   Delete
  3. ஶ்ரீராம், நீங்க படத்திலே கைவிட்டு எடுக்கறதைச் சொல்றீங்கனு நினைக்கிறேன். :) அதுவும் ஒரு காலத்தில் நிஜமாகலாம். ஆனால் கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு மதுரையில் ஒரு அம்மா வடை, பஜ்ஜி, போண்டாக்களை எடுப்பார் என்பதைத் தொலைக்காட்சியில் பல சானல்களிலும் காட்டி இருக்கிறார்கள்.

   Delete
  4. சுப்புத் தாத்தா, என்னோட சாய்ஸ் நல்ல காரமான சின்ன வெங்காயச் சட்னி தான். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு ருசி மாறுபடும் அல்லவா? நான் வேலைக்குப் போயிட்டிருந்த அந்தக்காலத்தில் என் அம்மா மதியம் டப்பாவுக்கு இந்த வெள்ளையப்பத்தைக் குழி அப்பச்சட்டியில் குத்தி எடுத்து வெங்காயச் சட்னியோடு வைத்துக் கொடுப்பார். அருமையா இருக்கும். முன்னெல்லாம் சின்ன வயசில் இட்லி அவ்வளவாப் பிடிக்காது. அப்போ அப்பாவுக்குத் தெரியாமல் (!!!!!!) ரகசியமாக சின்ன இரும்புச் சட்டியில் குண்டு குண்டாகத் தோசை வார்த்துக் கொடுப்பார். அதற்கும் தொட்டுக்க வெங்காயச் சட்னி தான்! :)

   Delete
  5. சட்னி என்றாலே தேங்காய்ச் சட்னி தான்.

   Delete
  6. பத்து வருடங்களுக்கு முன்னால் ஹைதராபாத் சட்னிஸ் ரெஸ்டரான்டில் தக்காளி சட்னி சாப்பிட்டிருக்கிறேன் - அட்டகாசமாக இருந்தது இப்போது நினைவுக்கு வருகிறது. இப்போதெல்லாம் ஏமாந்தால் எல்லாவற்றிலும் சட்னி செய்து போடுகிறார்கள். முருகன் இட்லிக்கடையில் எள்ளுச்சட்னி என்று மிளகாய்ப்பொடியை கரைத்து விட்டாற்போல் ஒன்றைப் பரிமாறினார்கள்.
   தேங்காய் சட்னிக்குத் தனி இடம். (சில இடங்களில் சிவப்பு கலரில் தேங்காய் சட்னி தருகிறார்கள் - அவர்கள் இந்த இடத்தில் சேர்த்தியில்லை).

   Delete
  7. புதினா சட்னி, கொத்தமல்லி சட்னி.. ஏமாந்தா கீரையைக்கூட சட்னினுடுவாங்க.

   Delete
  8. யெஸ் தேங்காய் சட்னி தேங்காய் சட்னிதான்.....ஸ்ஸ்ஸ்ஸ்பாஆ...

   Delete
  9. அப்பாதுரை, மதுரையிலே ஆப்பச்சட்டியில் ஆப்பம் வெள்ளை வெளேர் எனச் செய்துவிட்டு அதன் மேல் நீங்க சொல்லும் சிவப்புக் கலர் தேங்காய்ச் சட்னியை ஊற்றித் தருவாங்க. பார்க்கவே கண்ணையும், மனதையும் பறிக்கும்! :) இந்தச் சிவப்புச் சட்னிக்கும் அடிமைகள் உண்டு தெரியுமா? என்ன தான் தேங்காய்ச் சட்னி இருந்தாலும் தோசைக்குத் தக்காளி, கொத்துமல்லி, வெங்காயம் இவற்றைச் சட்னி செய்து சாப்பிடுவது போல் வராது. :) தேங்காய்ச் சட்னிக்கு இரன்டாம் இடம் கூட இல்லை.:)

   Delete
  10. துளசிதரன், நீங்களும் தேங்காய்ச்சட்னி ரசிகரா? :)

   Delete
  11. அப்பாதுரை, புதினா சட்னியும் நான் பண்ணுவேன், துவையலும் செய்வேன். அதே போல் கொத்துமல்லிச் சட்னி, துவையல் இரண்டும் உண்டு. கீரையைப் பொடியாக நறுக்கி வதக்கிச் சட்னி அல்லது துவையல் அரைக்கலாம். என் அம்மா சேனைக்கிழங்கில் துவையல் செய்வார். சௌசௌ, முட்டைக்கோஸ் போன்றவற்றிலும் நறுக்கி வதக்கித் துவையல் அரைக்கலாம். புடலங்காய்க் குடலிலும் சிலர் துவையல் செய்வார்கள். எங்க வீட்டில் பச்சைப் பறங்கிக்காயில் நான் பிசைந்து சாப்பிடும் துவையல் பண்ணுவேன். இப்போ இரண்டு நாட்கள் முன்னர் கூடச் செய்தேன். :)

   Delete
 2. நான் எடுத்துக் கொண்டுவிட்டேன் ஸ்ரீராம்.:)

  ReplyDelete
  Replies
  1. எதை வல்லி, தொங்கட்டான்களா? வெள்ளை அப்பமா? :)

   Delete
 3. இட்லிமாவு,தோசைமாவு எல்லாத்திலும் செய்யலாம். ஆமாம் பரதநாட்டியம் எல்லாம் கத்துண்டேளா? தொங்கட்டான், லோலாக்குன்னு கல்வைத்த தொங்கட்டான்களைச் சொல்வார்களே.அது ஞாபகம் வரது. ஒரு குழந்தை பிறந்து விட்டால் தொ்கட்டான்களுக்கெல்லாம் குட்பை சொல்லுவார்களே . ஆமாம் வெள்ளw அப்பத்திற்கும் தொங்கட்டான்கள் இலவசமா? பரவாயில்லயே அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. வாங்க காமாட்சி அம்மா! பரத நாட்டியமா? சும்மா ஸ்லோகங்களைக் கூடப் பாட்டாகப் பாடிண்டு இருக்க முடியாது வீட்டிலே. அப்பா அவ்வளவு கண்டிப்பு. அவர் வீட்டில் இல்லாத சமயம் தான் எங்க கொட்டம் எல்லாம். :) இதிலே பரதநாட்டியம் எங்கே நான் கத்துக்கறது! :)))) நான் நினைவு தெரிந்து ஜிமிக்கி, தொங்கட்டானெல்லாம் போட்டுக் கொண்டதே இல்லை. என் பெண்ணுக்குச் சின்ன வயசா இருக்கிறச்சே போட்டு அழகு பார்த்திருக்கேன். விபரம் தெரிஞ்சதும் அவளே போட்டுக்க மாட்டேன்னு சொல்லிட்டா! :(

   Delete
 4. தொங்கட்டான் அழகா இருக்கு.வெள்ளையப்பம் தீபாவளி வரதுன்னு சொல்லறது. ஆமா! ரெண்டுக்கும் என்ன இப்போ சம்பந்தம்? மண்டையை உடைச்சிண்டு இருக்கேன். நீங்க தரப்போரேளா ?

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜெயஶ்ரீ, பல மாதங்கள் ஆகிவிட்டன பதிவுகளில் உங்களைப் பார்த்து! கடைசியில் வெள்ளை அப்பம் இழுத்துக் கொண்டு வந்துவிட்டது போல! :) சம்பந்தம் ஒண்ணும் இல்லை. நேத்துப் பதிவில் அப்பாதுரை தொங்கட்டான் என்றால் என்னனு கேட்டிருந்தார். அது படம் போடுவதற்காகச் சேமித்து வைத்திருந்தேன். கூடவே வெள்ளை அப்பமும் சேரவே பதிவை எப்படியோ ஒருங்கிணைத்தேன் அவ்வளவு தான்! :)

   Delete
 5. என்ன இது ? மொட்டைத் தலையையும், முழங்காலையும் இணைத்து வச்''சுட்டீங்க''

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, சுட்டுட்டேன், நானும்! எங்கள் ப்ளாக் வெ.அ. பற்றிப் போடவும் அதோட படம் போடும்போதே எடுத்துப் போட முடிவு செய்திருந்தேன். இதோடு சேர்த்து அப்பாதுரை வேறே தொங்கட்டான் பத்திக் கேட்டிருந்தாரா! அதையும் சேமித்திருந்தேன். தனித்தனியாப் போடுவதற்கு பதிலாகச் சேர்த்துப் போட்டேன். இலவசம்னா தான் நமக்கெல்லாம் ரொம்பப் பிடிக்குமே! :) முதல்லே தொங்கட்டான்களுக்கு வெள்ளை அப்பங்களைத் தான் இலவசம்னு அறிவிச்சேன். அப்புறமா வெள்ளை அப்பம் போணி ஆகுமோ ஆகாதோனு கவலை! தொங்கட்டான்களை இலவசமாய்க் கொடுக்க முடிவு செய்தேன். :)

   Delete
  2. அடடே எப்படியெல்லாம் ஐடியா வச்சு இருக்கீங்க ? இது முன்பே எனக்கு தெரிஞ்சிருந்தால் நானும் இந்நேரம் ஃப்ராளம் இல்லாமல் பிரபலமாகி இருப்பேனே....

   Delete
  3. எங்கல் ப்ளாகும் இப்ப திங்க, பாசிட்டிவ் சேர்த்து 7 நாள் கதையும் போடலையா அதைப் போலத்தான்...ஹஹஹஹ்ஹ் என்ன சொல்றீங்க சகோதரி?!!!

   Delete
  4. ஹப்பா எங்கள் ப்ளாக்க இங்க இழுத்தாச்சு.....ஹஹஹ

   Delete
 6. எந்த ஊரில் வெள்ளையப்பத்திற்கு தொங்கட்டான்கள் கொடுக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டே படித்தேன்.
  நீங்களும் நானும் ஒன்று. நோ தொங்கட்டான், நோ ஜிமிக்கி! ஸ்ரீராமிற்குப் போட்டியா வெள்ளையப்பத்தில்?

  ReplyDelete
  Replies
  1. போட்டி எல்லாம் இல்லை ரஞ்சனி, முன்னரே வெள்ளையப்பம் செய்முறை பத்திச் சாப்பிடலாம் வாங்க பக்கத்திலே எழுதினப்போப்போடப் படம் இல்லை. அதான் இப்போச் செய்யும்போது படம் எடுத்துட்டேன். தொங்கட்டான் அப்பாதுரைக்காக. :)

   Delete
  2. ஹிஹிஹி, அப்போவும் படம் எடுத்துத் தான் போட்டிருக்கேன். :) http://geetha-sambasivam.blogspot.in/2013/07/blog-post_1279.html

   Delete
 7. அட இதானா? ஜிமிக்கினு அழகா தமிழ்ல சொல்லாம தொங்கட்டான்னு சொன்னா யாருக்குத் தெரியும்?

  ReplyDelete
  Replies
  1. ஜிமிக்கி வேறே தொங்கட்டான் வேறே அப்பாதுரை! :) ஜிமிக்கியைக் கழற்றி வைத்துவிட்டுத் தோடு மட்டும் போட்டுக்கலாம். ஆனால் இந்தத் தொங்கட்டானை முழுசாக் கழற்றினால் காதில் வேறே தொங்கட்டானோ, தோடோ தான் போடலாம். தோடோடு சேர்ந்தே தொங்கும் இது! :)

   Delete
  2. பொதுவா இந்த குடை மாதிரி தொங்குவதை ஜிமிக்கி என்றும் அதன் மேலே அதாவது இந்த ஜிமிக்கியைச் செருக பயன்படுவது தோடு....

   மற்றபடி வெறுமனே தொங்குவது, நீளமாக, குட்டியாக, நேராக, வளைந்து இலைகள் பூக்களுடன் என்று .....குடை போல அல்லாமல் தொங்குவது எல்லாமே தொங்கட்டான் என்று சொல்லப்படுகின்றது...இது நான் புரிந்து கொண்டது...

   கீதா

   Delete
  3. வெள்ளை அப்பம் செய்வதுண்டு வீட்டில் அடிக்கடி.....நீங்கள் செய்தது போல் இட்லி மாவிலும், எங்கள்ப்ளாக் ரெசிப்பியும்....செய்வதுண்டு....உங்கள் படங்கள் அருமை....ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் நாக்குல தண்ணி.........ஸோ இன்னிக்கு எங்க வீட்டுல அதே.....நன்றி...

   கீதா

   Delete
  4. ஜிமிக்கி, தொங்கட்டான் விளக்கம் நீங்க சொல்வது தான் நான் சொல்வதும் கீதா! சரியே! வெள்ளை அப்பம் செய்து சாப்பிட்டுப் பார்த்தீர்களா?

   Delete