எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, December 03, 2015

குற்றம், குறை காண வேண்டாம்!

சென்னை வெள்ளம் க்கான பட முடிவு


சென்னை வெள்ளம் க்கான பட முடிவு


சென்னை வெள்ளம் க்கான பட முடிவு

Rescue operations are on on a large scale and the Indian Navy and Army have been pressed into service. Here are some useful helpline numbers for anyone stranded in the floods or needing help.
This is the Indian Navy's helpline number in Chennai: +914425394240
The Indian Army's helpline: 9840295100
Helplines provided by Tamil Nadu government:
Chennai city: 1070
Districts: 1077
Chennai Corporation: 1913 and 044-4567 4567
படங்கள் கூகிளாருக்கு நன்றி

சென்னையின் அதீத வெள்ளமும், பேரழிவும் மனதைக் கனக்க வைக்கிறது. பொதுவாக மக்கள் நல்லவர்களே! ஆகவே இந்தப் பேரிடர் சமயத்தில் ஒருவருக்கொருவர் உதவிக் கொண்டு தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்பவர்களும், பிறரைக் காப்பாற்ற உதவுபவர்களும் இருக்கின்றனர். ஆனால் இந்தச் சமயத்திலும் அரசியல் பேசும் அரசியல் வியாதிகளை என்னவென்று சொல்வது? அவரவர் தங்களால் இயன்றதைச் செய்யாமல் அரசையும், அரசு ஊழியர்களையும் குறை சொல்லலாமா?

காவலர்கள் தங்கள் வீடுகளையும், மனைவி, மக்களையும் மறந்து தான் நமக்கு உதவுகின்றனர். அதே போல் பொதுப்பணித் துறை ஊழியர்கள், தீயணைப்பு வீரர்கள், மின் வாரிய ஊழியர்கள், துப்புரவுத் தொழிலாளர்கள் என அனைவரும் அரசு ஊழியர்கள் தான். இந்த இக்கட்டிலிருந்து நம்மை மீட்டெடுக்கும் பொறுப்பு அவர்கள் தலையில் சுமத்தப்பட்டிருக்கிறது. ஆனாலும் நாம் எங்க பகுதிக்கு யாரும் வரவில்லை, எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை என்கிறோம். சொல்பவர்களுக்கு இது எப்படிப் பட்ட பேரிடர் என்பது தெரியாமலா இருக்கிறது?

எங்கே என்று போவார்கள்? ஒரு இடத்துக்குச் சென்றால் அங்கே உள்ள மக்கள் அனைவரையும் பத்திரமாக மீட்ட பின்னர் தானே மற்றொரு அழைப்பைக் கவனிக்க முடியும்? இந்தச் சூழ்நிலையில் வேகம் எப்படிக் காட்டுவது? பெருகி வரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் சூழ்நிலையில் அவர்கள் அனைவரும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு வேலை செய்கின்றனர். அவர்களுக்கும் குடும்பம் இருக்கிறது அல்லவா? அவர்கள் குடும்பமும் இதே சென்னையில் தானே வசிக்கிறது? அவர்களை யார் காப்பாற்றுவார்கள்? நாம் நம்மைப் பற்றியே நினைக்காமல் வரும் உதவியை ஏற்றுக் கொண்டு தற்போது நம்மைக் காத்துக் கொள்ளவேண்டும்.

தன்னார்வலர்கள் பலரும், சேவா பாரதி போன்ற அமைப்புகளும் செய்து வரும் உதவிகள் சொல்லுக்கு அடங்காதது. இந்தச் சமயம் மக்கள் ஜாதி, மத பேதமில்லாமல் ஒருவருக்கொருவர் மனிதம் என்பதை மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு உதவி செய்கின்றனர். இதில் சில தொலைக்காட்சிச் செய்திகளில் மத்திய, மாநில அரசைக் குற்றம் சாட்டும் போக்குத் தான் பெரிய அளவில் செய்திகளாகச் சொல்கின்றனர். இது குற்றமும், குறையும் சொல்லும் நேரம் அல்ல! செயல்பட வேண்டிய நேரம்! சென்னையின் அழிவு தமிழ்நாட்டுக்கே அழிவாகி விடும். அண்டை மாநிலங்களின் உதவியும் தில்லி, பிஹார் போன்ற வட மாநிலங்களின் உதவியும் கடுகளவு இருந்தாலும் இந்த நேரத்தில் அவை நமக்குத் தேவையானதே. பலரும் வீடு, வாசல்கள், உடைமைகளை இழந்துள்ளனர்.

இது ஒரே நாளில் சில மணி நேரங்களில் முடிந்து விடும் விஷயம் அல்ல. இதன் தாக்கம் முழுவதும் தெரியவே ஒரு மாதம் ஆகி விடும். மெல்ல மெல்லத் தான் இயல்பு நிலைக்கு வர வேண்டும். பலருக்கும் அவர்கள் இழப்பின் மதிப்பீடு தெரியவும் அதிர்ச்சியாகத் தான் இருக்கும். அதில் இருந்தும் மீண்டு வர வேண்டும். இந்த நேரத்தில் இடர்கள் அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டியதே நம் முக்கியமான கடமையாகும். சொல்வது எளிது. எனக்கு இப்படி ஒன்று வந்திருந்தால் என்ன செய்திருப்பேனோ சொல்ல முடியாது! அவரவருக்கு வந்தால் தான் தெரியும். அல்லவா? இப்போது என்னால் முடிந்தது அனைவருக்கும் ஆறுதல் சொல்வது ஒன்றே.  நேற்றிரவு கிடைத்த செய்தியின்படி அரக்கோணம் ராணுவ விமான தளத்தைச் சில நாட்கள் பயணிகளின் பயன்பாட்டிற்காக மத்திய அரசின் ஆலோசனையின் பேரில் விமானப்படை திறந்து விட்டிருக்கிறது. ஏர் இந்தியாவின் ஒரு விமானம் தன் சோதனைப் பயணத்தையும் செய்து பின்னர் ஜெட் ஏர்வேஸின் விமானம் ஒன்றும் அங்கு தரையிறக்கப்பட்டிருக்கிறது. இப்படிப் பல திசைகளிலிருந்தும் உதவிகள் வரும்போது மனம் தளர வேண்டாம். ரயில் போக்குவரத்தும் விரைவில் சீரடையும் என நம்புவோம்.

நேற்றிலிருந்து சென்னையில் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முயல்கிறேன். முடியவில்லை. தொலைபேசிகள் வேலை செய்யவில்லை என எண்ணுகிறேன். எங்களுக்கும் கடந்த இரண்டு நாட்களாக தொலைபேசி இணைப்பும், இணைய இணைப்பும் இல்லை. நேற்று மாலை ஆறு மணிக்குப் பின்னர் தான் வந்தது!

அனைவரும் மனோபலத்துடனும், தைரியத்துடனும் எதிர்கொள்ளப் பிரார்த்தனைகள்.

9 comments:

 1. ப்ரார்த்தனைகள்!

  ReplyDelete
 2. மனிதாபிமானம் மேலோங்கி இருக்க வேண்டிய தருணங்கள் இவை. இதுவும் கடந்து போகும் என்று நம்பிக்கை கொள்வோம்

  ReplyDelete
 3. எனது பிரார்த்தனைகளும்...

  ReplyDelete
 4. பிரார்த்தனைகள்கள் தான் இப்போது மிக அவசியம். அனைவரும் பிரார்த்திப்போம்.

  ReplyDelete
 5. பிரார்த்தனையைத் தவிர வேறு நல்ல வழி எதுவுமில்லை.

  ReplyDelete
 6. மனிதாபிமானம் மிக்க பதிவுக்கு நன்றி.

  ReplyDelete
 7. சீர்தூக்கிப் பார்க்கும் சரியான பார்வை இது.. விடியும் விரைவில்...

  ReplyDelete
 8. அனைவரின் கருத்துக்கும் நன்றி. ஜீவி ஐயா, தாங்களும், சுப்புத் தாத்தாவும் நலம் என்பதறிந்து மகிழ்ச்சி!

  ReplyDelete