எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, December 29, 2015

ஜக்குவைப் பற்றிய சில செய்திகள்!

புரி, ஜகந்நாதர் கோயில் க்கான பட முடிவு

பின்னால் கூடி நின்ற கூட்டம் அவ்வப்போது, "ஹோ" :ஹோ" என உற்சாகக் கூச்சல் எழுப்பி ஜக்குவை அழைத்துக் கொண்டிருந்தனர். அந்தக் கூச்சல் ஒலி தூக்கிவாரிப் போட வைத்தது.  ஜக்கு தூங்கிக் கொண்டிருந்தால் கூட எழுந்து வந்து தான் ஆகணும். அப்படி ஒரு கூச்சல்! துவாரகையில் "ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!" என்றே கூறுவார்கள். மென்மையாக இருக்கும். கூட்டம் இருந்தாலும் நெரிசல் இருக்காது. வெளியே இருந்து வருபவர்களுக்கு முன்னுரிமை!  ஆனால் இங்கே சாமானிய மக்களும் அதிகம் காணப்பட்டனர். அனைவரும் ஜக்குவைக் காண வேண்டிக் காத்திருந்தனர்.

சற்று நேரத்தில் கதவு திறக்கப் போகும் அறிகுறிகள் தெரிய கூட்டம் பித்துப் பிடித்தது போல் ஆகிவிட்டது. தள்ளு முள்ளு ஆரம்பிக்கும் போல் இருந்தது. எங்கள் வழிகாட்டி இளைஞர் என் அருகேயே எனக்குப் பாதுகாப்பாக நின்று கொண்டார். சட்டெனக் கதவு திறக்கப்பட என்னைப் பிடித்து முன்னால் தள்ளி நன்கு தரிசனம் செய்ய உதவினார் வழிகாட்டி இளைஞர்!. பலபத்திரர், சுபத்ரா, ஜகந்நாதர் ஆகியோரை அடையாளம் காட்டித் தரிசிக்க உதவினார். மரத்தால் ஆன இந்தச் சிற்பங்கள் பனிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்கப்படுகின்றன. இப்போது சமீபத்தில் தான் புதுப்பித்திருப்பதால் தரிசனம் செய்வதை மிக விசேஷமாகச் சிறப்பித்துக் கூறுகின்றனர். தரிசனம் முடிந்ததும், எங்கள் பின்னால் இருந்த கதவும் திறக்கப்பட்டுப் பொது தரிசனத்திற்காகக் காத்திருந்த மக்கள் திபு திபுவென உள்ளே புகுந்தனர். நல்லவேளையாகக் கூட்ட நெரிசலில் மாட்டிக் கொள்ள இருந்த என்னை வழிகாட்டி இளைஞர் தரதரவெனத் தோள்களைப் பற்றி இழுத்து வெளியே கொண்டு வந்தார்.

ரங்க்ஸ் சமாளித்துக் கொண்டு முன்னே சென்றார். என்னை இழுத்துக் கொண்டு வழிகாட்டி வெளியே வந்தார். ஜக்குவைப் பார்த்துச் சொல்ல நினைத்தது எல்லாம் மறந்து போக ஜக்குவைப் பார்த்தது மட்டுமே நினைவில் இருக்க நானும் வெளியேறினேன். நன்றாகப் பார்த்தேன் தான்! ஆனால் அந்த நேரம் ஏன் ஒன்றுமே கேட்கத் தோன்றுவதில்லை? புரியலை!  இப்போது இந்தக் கோயிலின் வரலாற்றைக் கொஞ்சம் பார்ப்போமா?

பனிரண்டாம் நூற்றாண்டில் கீழைக்கங்க குல அரசன் ஆனந்த வர்மனால் கட்டப்பட்டதாக் கூறப்படும் இந்தக் கோயிலின் கட்டுமானம் கொஞ்சம் பௌத்த முறைப்படியும் கொஞ்சம்  கலிங்க தேசக் கட்டுமானத்திலும் கட்டப்பட்டது. பழமையான இதன் வரலாறு வருமாறு:

புரியை ஆண்டு வந்த இந்திரத்துய்மன் என்னும் மன்னன் சிறந்த பக்தன். மஹாவிஷ்ணுவைத் தியானித்து வந்தவன் கனவில் விஷ்ணு தோன்றி தனக்கு ஒரு கோயில் கட்டித் தரும்படி கேட்டார்.  சிற்பத்தை எதனால் செதுக்குவது என யோசித்த மன்னனிடம், கடற்கரையில் கோயில் அமைந்திருப்பதால் கடலில் மிதந்து வரும் பொருளைக் கொண்டு செய்யும்படி மன்னனிடம் ஆக்ஞையிட்டார் மஹாவிஷ்ணு. கடல் பகுதியில் மன்னன் தன் காவலர்களை நிறுத்தி வைத்திருந்தான். கடலில் ஒரு பெரிய மரக்கட்டை மிதந்து வரக் காவலர்கள் அதை எடுத்துச் சென்று மன்னனிடம் ஒப்படைத்தனர். மன்னன் அந்த மரக்கட்டைக்குச் சிறப்பான வழிபாடுகளை நடத்திச் சிறந்த தச்சர்களை வரவழைத்தான்.  தச்சர்களின் தலைவர் தன் உளியை எடுத்து அந்த மரத்தில் வைக்க உளி உடைந்து விட்டது. மன்னன் சகுனம் சரியில்லை என மனம் வருந்த அங்கே ஆண்டவனே முதிய தச்சன் வடிவில் தோன்றினான்.

மன்னனிடம் 21 நாட்களில் வேலையை முடித்துத் தருவதாகக் கூறினான் இறைவன். தனக்கு ஒரு அறையை ஒதுக்கித் தரும்படியும் தான் வேலையை முடிக்கும்வரை தான் இருக்கும் அறைக்கதவைத் திறக்கக் கூடாது என்றும் கூறினான். அரசன் ஒப்புக்கொள்ள ஓர் அறைக்குள் புகுந்த தச்சன் மும்முரமாக வேலையைத் தொடங்கினான். தொடர்ந்து பதினைந்து நாட்கள் உளிச்சப்தம் கேட்டுக் கொண்டிருந்தது. அடுத்து மூன்று நாட்கள் எவ்விதமான சப்தமும் இல்லாமல் போகவே தச்சன் தூங்கிவிட்டான் போலும் என நினைத்த அரசன் கதவைத் திறந்து விட்டான். உள்ளே இருந்த ஈசனுக்குக் கோபம் வந்தது. தன் சுய உருவைக் காட்டினார். மன்னன் பொறுமையில்லாமல் கதவை அவசரப்பட்டுத் திறந்துவிட்டதால் இந்தக் கோயிலில் ஸ்தாபிக்கப்படும் சிலைகள் அனைத்தும் அரைகுறையாகவே இருக்கும் என்றும் அப்படியே பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் செய்யுமாறும், இந்தக் கோயிலுக்கு வருபவர்கள் இதன் காரணத்தை அறிந்து கொண்டு பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும் எண்ணத்துடன் செல்வார்கள் என்றும் கூறினார். அந்த அறையில் அரைகுறையாகச் செதுக்கப்பட்ட பலராமன், சுபத்ரா, ஜகந்நாதர் சிலைகள் காணப்பட்டன.

மன்னனால் அவை பிரதிஷ்டை செய்யப்பட்டன. அவன் காலத்திற்குப் பிறகுக் கோயில் பாழடைந்து போக அந்த இடத்தில் பல கோயில்கள் கட்டப்பட்டன. எல்லாவற்றையும் கடல் மூழ்கடிக்க, பின்னர் கி.பி. பனிரண்டாம் ஆண்டில் அப்போதைய அரசன் அனந்தவர்மன் வாளி என்பவனால் கட்டப்பட்டுப்பின்னர் அவன் பேரன் அனங்காபி மாதேவ் என்பவனால் இப்போது இருக்கும் கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலைக்கட்ட கங்கையிலிருந்து கோதாவரி வரையுள்ள கலிங்க சாம்ராஜ்ய மக்களின் பனிரண்டு வருட வரிப்பணம் செலவு செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.  இந்தக் கோயில் பஞ்சரத முறையில் கட்டப்பட்டதாகவும் சொல்கின்றனர். கடற்கரையிலேயே துவாரகை அமைந்திருப்பது போல் இந்தக் கோயிலும் கடற்கரையிலேயே அமைந்துள்ளது  இங்குள்ள கடலில் நீராடி இறைவனை வழிபடுவது விசேஷமாகச் சொல்லப்படுகிறது.  பார்கவி, சர்வதீர்த்த ம்ஹி என்னும் நதிகளால் இந்தக் கோயில் சூழப்பட்டு ஒரு வலம்புரிச் சங்கைப் போல் தோற்றம் அளிப்பதாகவும் சொல்கின்றனர்.

இந்தக் கோயிலின் கொடிமரத்தை பதிதபாவன பாவன என அழைக்கின்றனர். ஏழைகளுக்கு அருள்பவன் என்னும் பொருளில் இது அமைந்திருக்கிறது. இந்தக் கோயிலின் மேற்கே எட்டு உலோகக்கலவையால் செய்யப்பட்ட நீலச் சக்கரம் ஒன்று உள்ளது. இந்தக் கொடிமரத்தையும், சக்கரத்தையும் வணங்கினாலே ஜகந்நாதரைத் தரிசித்ததற்குச் சமம் என்கின்றனர். ராமாயணத்தில் ராமனும், மஹாபாரதத்தில் பாண்டவர்களும் இங்கே வந்து பிரார்த்தனைகள் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

புரி, ஜகந்நாதர் கோயில் க்கான பட முடிவு


படங்களுக்கு நன்றி கூகிளார்

16 comments:

 1. கடவுளிடம் எதுவும் கேட்காமலிருப்பதெ சிறப்பு! நமக்கு என்ன வேண்டும் என்று அவனுக்குத் தெரியாத? இது போன்ற தரிசனங்களில் எதுவும் கேட்கவும் தோன்றாது பிரமித்து நின்று விடுவோம்!!

  ஆனந்தவர்மன் மன்னன் பற்றி சாண்டில்யனின் கடல் ராணி கதையில் படித்த ஞாபகம்.

  //மன்னன் அந்த கரக்கட்டைக்குச்//

  கரக்கட்டை?

  பொறுமை இழந்ததற்கு மன்னன் வருந்தவில்லையா? :)))

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, திருத்திட்டேன். இப்போப் பாருங்க.

   Delete
  2. தெரியாதா என்று படிக்கவும்!

   அப்புறம் ஆ இல்லை, அ!!!

   அனந்தவர்மன்!

   Delete
  3. ஆனந்தவர்மன் என்றே சொல்கின்றனர். "தெரியாதா?" இம்பொசிஷன் எழுதவும்.

   Delete
  4. மரக்கட்டைக்கு நீங்கள் இம்போசிஷன் எழுதியதும் நான் எழுதுகிறேன்! :P

   Delete
  5. சாண்டில்யன் கடல் ராணி என்று நாவல் எழுதினாரா? கடல் புறா, மற்றும் யவன ராணி இரண்டையும் சேர்த்து கடல் ராணி ஆக்கி விட்டீர்கள் என்று தோன்றுகிறது.

   --
   Jayakumar

   Delete
  6. http://www.goodreads.com/book/show/17214554-kadal-rani :))))

   Delete
  7. சாண்டில்யன் கடல் ராணி என்ற நாவலை எழுதியிருக்கிறார். வானதி பதிப்பக வெளியீடு (1981 முதல் பதிப்பு, 2008ல் பதினொன்றாம் பதிப்பு) - அரபிக் கடற் கொள்ளையர்களைப் பற்றிய புத்தகம். கல்கியில் தொடராக வந்தது என்று சாண்டில்யன் முன்னுரையில் சொல்லியிருக்கிறார். எப்படி ஸ்ரீராம் எழுதாமல் விட்டார்?

   Delete
 2. எழுத்துப் பிழை எனக்கு மட்டுமே என்று நினைத்தேன்.
  அருமையான வரலாறு கீதா. .கட்டையானால் என்ன கண்ணன் தானே.
  இத்தனை சிரமங்களுக்கு நடுவில் நீங்கள்ள் இருவரும் சென்று வருவதுதான் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுக்கிறது.
  இன்னும் திடமும் மகிழ்ச்சியும் அதிகரிக்கப் புத்தாண்டு அருளட்டும்.

  ReplyDelete
  Replies
  1. ஹாஹாஹா, வல்லி, அது டைபோ! ஶ்ரீராமுக்கு என்ன வேலை! :P :P :P :P

   Delete
 3. நம்ம ராஜாவோட கதை விஸ்தாரமா, கோர்வையா சொல்லியிருக்கேள். நானும் அவனும் ரொம்ப அன்யோன்யம். ஏன்? ஒரு நாள் பூரி மாநகரம் முழுதும் கவலை அப்பிக்கொண்டது. என்னடான்னா ஜக்குவுக்கு லேசா ஜலதோஷம்னு சொல்லிட்டு எல்லார் வீட்லேயும் கஷாயம் போட்டிண்டுருக்கா. இதுக்கு முந்தின, அதற்கு முந்தின, அதற்கும் முந்தின நபகளேபர் போது சாக்ஷிகோபாலுக்கு நல்ல மழைலெ போய் 'தாரு பிரம்மன்னை' பாத்துட்டு நமஸ்காரம் பண்ணிட்டு, ஒரு புதுமாட்டுப்பெண்ணையும் எஸ்கார்ட் பண்ணிண்டு வந்தோம். சொல்றத்துக்கு எத்தனையோ இருக்கு. அந்த பிரமாண்டமான தேரை நாலு தடவை இழுத்துருக்கேனாக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க சார், எழுதும்போதே உங்களைத் தான் நினைத்துக் கொண்டேன். ஜக்குவுக்கு நீங்க நெருங்கிய நட்பாச்சேன்னு! வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. சாக்ஷி கோபாலனைப் பத்தி எழுத மறந்துட்டேன். நினைவூட்டியதுக்கு நன்னி ஹை! முதலில் அவரைத் தான் பார்த்தோம். அப்புறமாத் தான் புரி போனதே! :) தேரை இழுக்க உங்களுக்குக் கொடுத்து வைச்சிருக்கு. தாரு பிரம்மனைப் பார்க்க நேரம் இல்லை. :(

   Delete
 4. சுவாமி சின்மயாநந்தா சொன்னது நினைவுக்கு வருகிறதுமுட்டி மோதி கூட்ட இடிபாடுகளில் சிக்கி ஆண்டவனைத் தரிசிக்கும் க்ஷணத்தில் நாம் கண்களை மூடிக் கொண்டு அருள்வாய் அப்பா என்றுதான் வேண்டுகிறோம் சுவாமியின் உருவத்தை எங்கே தரிசிக்கிறோம் என்பார்

  ReplyDelete
  Replies
  1. ஆனால் இங்கே நல்ல தரிசனம் கிடைச்சது.

   Delete
 5. சுவாமியின் முன் சென்றுவிட்டால் எதையும் வேண்டத் தோன்றாது. ப்ரமிப்புதான் வரும். அவர் பார்த்துக் கொள்வார். அந்த நம்பிக்கைதானே நம் வாழ்க்கைத் தேரை இழுத்துச் செல்கின்றது இல்லையா....அதனாலாயே கொஞ்சம் கூட்டம் என்றாலும் அலர்ஜிதான்.

  ReplyDelete
 6. மரத்தினால் சிலை புதுமை.

  ReplyDelete