எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, April 22, 2016

அங்கே அழகன்! இங்கே அரங்கன்!


சித்திரா பௌர்ணமியை ஒட்டி இங்கே ஶ்ரீரங்கத்தில் இன்று மாலை கஜேந்திர மோக்ஷம். சித்திரைத் திருவிழாவின் ஒரு பகுதியாக அம்மாமண்டபம் படித்துறையில் நடக்கும். கூட்டம் இருக்கும் என்பதால் மாலை போவதில்லை. ஆனால் பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு ஒவ்வொரு மண்டகப்படியாகக் கண்டருளி இங்கே எங்க குடியிருப்பு வளாகத்தின் அருகே உள்ள மண்டகப்படிக்கும் வருடா வருடம் வருகிறார். இந்த மண்டகப்படிகளையும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று கோயில் அறங்காவலர்களும், இந்து அறநிலையத் துறையும் முயற்சி செய்வதாகக் கேள்விப் பட்டேன். காரணம் என்னவெனில் ஒவ்வொரு மண்டகப்படியிலும் பெருமாள் வந்து செல்வதற்கு நேரம் ஆகிறதாம். வேகமாக எல்லாவற்றையும் முடிச்சுட்டு என்ன செய்யப் போறாங்களோ தெரியலை! :(  கொஞ்சம் கொஞ்சமாகக் கோயில் நடைமுறைகளையே மாத்திடுவாங்க போல! :( நல்லவேளையாக நாம் அதை எல்லாம் இருந்து பார்க்காமல் போய்ச் சேர்ந்துடுவோம். 
இது பெருமாளின் பின்னழகு

வெயில் அதிகமாக இருப்பதால் நம்பெருமாள் திறந்த பல்லக்கிலேயே வந்திருக்கார். ஆனாலும் வெயிலில் இருந்து தப்பிக்கக்குடை, மற்றும் ஒரு பெரிய திரை போன்றவையும் நம்பெருமாளோடு எடுத்து வருகின்றனர். இங்கே மண்டகப்படி எல்லாம் முடிஞ்சு அம்மாமண்டபம் போய்ச் சாயந்திரம் வரை அங்கே தங்குவார். விளக்கு வைத்தானதும் நம்ம ஆண்டாளம்மா வருவாங்க. அவங்க தான் எப்போவுமே ஆக்டிங் கஜேந்திரன். அவங்களோட முன்னிலையில் கஜேந்திர மோக்ஷம் நடைபெற்றதும் நம்பெருமாள் யதாஸ்தானம் திரும்புவார். ரொம்பவே எளிமையான அலங்காரம் இன்னிக்கு. மாலைகள் கூட அதிகமா இல்லை. வெயில்னாலனு நினைக்கிறேன். 

மதுரையிலே இன்னிக்கு அழகர் பச்சைப்பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கிய வைபவம் விமரிசையாக நடைபெற்றிருக்கிறது. உட்கார்ந்து பார்க்க முடியலை! வேலை இருந்தது. கூகிளார் தயவில் அழகர் படம் ஒண்ணு போடறேன். வெயில் கடுமையாக இருந்தும் அழகருக்கு இன்று நல்ல கூட்டம் கூடி இருந்தது. 

படத்துக்கு நன்றி கூகிளார். 


16 comments:

 1. இங்கே அரங்கன்!
  அருமையான பதிவு
  வாழ்த்துகள் சகோ...

  ReplyDelete
 2. அழகிய புகைப்படங்களுடன் விளக்கம் நன்று நன்றி சகோ

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 3. அழ்கர் ஆற்றில் இறங்குவதை நேரில் போய் பார்க்க முடியவில்லை, தொலைக்காட்சியில் பார்க்கலாம் என்றால் மின்சாரதடை ஏற்பட்டு விட்டது.

  ReplyDelete
  Replies
  1. கூட்டம் அதிகமாகத் தெரிந்தது! நாங்கள் தொலைக்காட்சியில் பார்த்தோம். முழுதும் பார்க்கவில்லை!

   Delete
 4. அருமையான பகிர்வு

  உங்கள் பதிவுகளை இணையுங்கள்; நாம் மின்நூலாக்குகிறோம்!
  http://www.ypvnpubs.com/2016/04/blog-post_18.html

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஐயா. ஏற்கெனவே என் ஒரு சில படைப்புகள் க்ரியேடிவ் காமன்ஸ் மூலம் மின்னூல்கள் ஆக்கப்பட்டிருக்கின்றன.

   Delete
 5. அழகரையும்,அரங்கரையும் தரிசிக்க செய்தமைக்கு நன்றி! அழகர் ஆற்றில் இறங்கும் பொழுது என்ன நிறத்தில் பட்டு அணிந்துள்ளாரோ அதை ஒட்டியே அந்த வருடம் அமையும் என்று ஒரு நம்பிக்கை உண்டு.

  ReplyDelete
  Replies
  1. உங்கள் பதிவுக்கு வரமுடியவில்லை. முதல் வரவுக்கு நன்றி. அழகர் பற்றிய இந்த நம்பிக்கை எனக்கும் ஓரளவு தெரியும். மதுரைக்காரி தான் நான்! :)

   Delete
 6. அழகரும் அரங்கரும் என் மனசுக்குப் பிடித்த தெய்வங்கள். இரண்டு கோவில்களும் தரும் ஈர்ப்பு சொல்லில் அடங்காதது. அழகான புகைப்படங்கள் அக்கா!

  ReplyDelete
 7. சித்திரை மாதத்தில் பெரும்பாலும் எல்லாக் கோவில் களிலும் திருவிழாதான் எங்கள் கிராமத்திலும் தேர்த் திருவிழாகாண அழைப்பு இருந்தது

  ReplyDelete
  Replies
  1. மாசி, பங்குனியிலே இருந்தே திருவிழாக்கள் ஆரம்பிச்சுடும்.

   Delete
 8. கஜேந்திர மோட்சம் தகவல்களுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. நன்றி சுரேஷ், பல மாதங்கள்/நாட்கள் கழித்துப் பார்க்க நேர்ந்தமைக்கு நன்றி.

   Delete