எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, May 28, 2017

வலை உலகில் நானும் இருக்கேனே! :)

அங்கே இருக்கையில் இந்தியா நினைவு. இங்கே வந்ததும் குழந்தை நினைவு! வாட்டி எடுக்கிறது. என்றாலும் குழந்தைக்கு ஏதோ கொஞ்சம் புரிந்திருக்கு போல! அதிகம் ஏங்கவில்லை என்று பையர் சொன்னார். தேடி இருக்கிறாள். ஆனால் நாங்கள் பெட்டி, படுக்கையுடன் காரில் ஏறுவதைப் பார்த்ததாலேயோ என்னமோ ரொம்பவே அழவில்லை. அதே போன மாசம் நாங்க ஒரு பத்து நாட்கள் பொண்ணு வீட்டுக்குப் போனப்போ ரொம்ப அழுதிருக்கா! ஏங்கி இருக்கா! முகத்தைப் பார்த்தாலே தெரிஞ்சது! ரொம்பக் கஷ்டமா இருந்தது. இம்முறை கொஞ்சம் பரவாயில்லை என்பதோடு இவங்க நம்மோட நிரந்தரமா இருக்கிறவங்க இல்லைனு புரிஞ்சு வைச்சுண்டா போல! :) நேத்து ஸ்கைபில் பார்க்கையில் ஒரே குதியாட்டம் தான்!அழகாக் கிருஷ்ணா, ராமா, கோவிந்தா எல்லாம் சொன்னா!  தூக்கச் சொல்லிக் கேட்டா! அவங்க அப்பா ஃபோனில் பேசுகையில் ஃபோனைப் பிடுங்கித் தன்னிடம் கொடுக்கச் சொல்றா! நான் செல்லமாகக் கூப்பிடும் பெயரால் கூப்பிட்டதும் நன்றாகப் புரிந்து கொள்கிறாள்.


எப்போவுமே ஜெட்லாக் எனக்குத் தான். இம்முறை யு.எஸ்.ஸில் இருக்கிறச்சே ஜெட்லாக் அதிகம் படுத்தலை. ஆனால் இங்கே வந்ததும் ரொம்பவே படுத்தல். ஜெட்லாக் கொஞ்சம் கொஞ்சமாகச் சரியாகிக் கொண்டு வருகிறது. இம்முறை நாங்கள் திரும்பி வருகையில் ஹூஸ்டனில் இருந்து விமானம் கிளம்பவே தாமதம். போக்குவரத்து அதிகம் என்பதால் விமானம் கிளம்ப ஒரு மணி நேரத்துக்கும் மேல் தாமதம் ஆனது. ஆனாலும் சரியான நேரத்துக்கு ஃப்ராங்ஃபர்ட் வந்து விட்டோம். அங்கேயும் சரி, ஹூஸ்டனிலும் சரி கடுமையான சோதனை இம்முறை. ஹூஸ்டனில் எப்போதுமே சோதனை இருக்கும். இம்முறை புடைவை மடிப்புக்களை எல்லாம் பிரித்துப் பார்த்தார்கள். அதே போல் ஃப்ராங்ஃபர்ட்டிலே கால் செருப்பைக் கூட ஸ்கான் செய்து பார்த்தார்கள். எப்போவும் ஃப்ராங்ஃபர்டிலே சோதனை இருக்காது; அல்லது கடுமையாக இருக்காது. இம்முறை கடுமையான சோதனை!

உணவும் ஒழுங்காக வந்தது. என்றாலும் எங்களால் சாப்பிட முடியவில்லை. என்பதால் ஜூஸ் மட்டும் வாங்கிச் சாப்பிட்டுக் கொண்டு இருந்து விட்டோம். இங்கே வருவதற்கு முன்னரே வீடு சுத்தம் செய்ய ஆட்களை வரச் சொல்லி ஏற்பாடு செய்திருந்ததால் வசதியாக இருந்தது.  இன்னிக்கு மத்தியானம் தூங்கக்கூடாது என்று பிடிவாதமாக இணையத்தில் உட்கார்ந்திருக்கேன். கடுகு சார் "கமலாவும் நானும்" புத்தகம் அனுப்பி இருக்கார். புத்தகம் எப்போவோ வந்துடுச்சு! இங்கே எடுத்து பத்திரமாக வைத்திருந்தார்கள். அதைத் தான் கொஞ்சம் கொஞ்சமாகத் திரட்டுப் பால் சாப்பிடுவது போல் படித்து வருகிறேன்.  அங்கே இருக்கையில் இன்னும் இரண்டு படங்கள் பார்த்தேன். ஒண்ணு ஷாருக்கான், ஜூஹி சாவ்லா நடிச்ச 1,2 கா ஃபோர் படம். ரொம்ப ரொம்ப சுமார் ரகம். இன்னொண்ணு "கால்" படம். கால் அல்லது காலா? தெரியலை.

ஆனால் காடுகள் அழிவதைக் குறித்த ஓர் படம்னு சொல்லலாம். அதிலே கொஞ்சம் ஆவியும் வருது!  இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜிம் கார்பெட் நேஷனல் பார்க்கில் உள்ள ஒரு புலி இரண்டு இங்கிலாந்து நாட்டுப் பயணிகளைக் கொன்று தின்றுவிடுவதாகச் செய்தி வருகிறது. தொடர்ந்து அடுத்தடுத்துக் கொலைகளைப் புலி செய்வதாகச் சொல்லி அந்த ஆட்கொல்லிப் புலியைப் பற்றித் தகவல் அறியச் செல்கிறார் ஒரு வன ஆர்வலர். ஜான் ஆபிரஹாம் இந்த வேடத்தில் வருகிறார். அவர் மனைவியாக ஹேமமாலினியின் பெண் இஷா டியோல் நடிக்கிறார்.  தேவ் மல்ஹோத்ரா என்னும் வனவிலங்குகளை வேட்டை ஆடும் இளைஞனாக விவேக் ஓபராய்! அவருக்கு ஜோடி முன்னாள் உலக அழகி லாரா தத்தா! இந்த இரண்டு குழுக்களும் சந்திக்கையில் நடக்கும் நிகழ்வுகளே படத்தில் காண முடியும்!  அஜய் தேவ்கன் முக்கியமான வேடத்தில் வருகிறார். அவருடைய மாறா முகபாவம் இந்த வேடத்துக்குப் பொருந்தத் தான் செய்கிறது.

நெஞ்சைக் கலக்கும் பீதியான உறைய வைக்கும் சம்பவங்கள்! கடைசியில் உண்மை தெரிந்து உயிருக்குப் பயந்து ஓடும் விவேக் ஓபராய், லாரா தத்தா, ஜான் ஆபிரஹாம் ஆகியோர் தப்பினார்களா? படத்தில் தெரிந்து கொள்ளுங்கள்!  ஜிம் கார்பெட் நேஷனல் பார்க்கிலேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கின்றன. உண்மையான மனித ரத்தம் கிட்டத்தட்ட மூன்று லிட்டர் அளவு பயன்படுத்தப்பட்டிருக்கிறதாம். புலிகளும் நிஜமான புலிகளாம். க்ளேடியேட்டர் படத்தில் நடித்த புலிகள் என்கின்றனர். அவற்றை இங்கே வைத்து உலாவ விட்டுப் படம் எடுக்க முடியாது என்பதால் பாங்காக்கில் அதன் இஷ்டத்துக்கு உலவ விட்டுப் படம் எடுத்தார்களாம். ஒரு முறை பார்க்கலாம். ஷாருக்கான் இந்தப்படத்தின் தயாரிப்பில் பங்கு பெற்றிருக்கிறார். அறிமுகப் பாடலில் வந்து நடனம் ஆடுகிறார். அதைப்பார்த்தால் படம் பார்க்கவே தோன்றவில்லை! ஆனால் படம் பார்த்ததும் எழுந்திருக்கத் தோன்றவில்லை. :)

ஒரு வாரமா அதிகமா இணையத்துக்கு வரலையா பார்வையாளர் எண்ணிக்கை குறைந்து போய் நூறு, நூற்றைம்பதுனு ஆயிருக்கு! அதிலும் நேற்று 88 நபர்களே தானாம்! போனால் போகட்டும்னு சொல்லிட்டேன். இன்னும் ஒரு வாரம் ஆகும் நிதானத்துக்கு வர! :)

39 comments:

  1. ஃப்ராங்ஃபோர்ட் என்றால் ஜெர்மனிதானே ?
    அதன் வழியாகவா யூ.எஸ் போகிறது ?
    தேவகோட்டை வழியாக போயிருந்தால் இவ்வளவு செக்கிங் இருந்திருக்காது.

    அடுத்த பட விமர்சனம் எப்போது வரும் ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி! ஹிஹிஹி, ஃப்ராங்ஃபர்ட், லண்டன், ப்ரஸல்ஸ், துபாய், கடார், அபுதாபி(?) வழியா எல்லாம் யு.எஸ் போகலாம். நாங்க பயணச் சீட்டு வாங்கறச்சே லுஃப்தான்ஸா காரங்க தான் பயணச்சீட்டை மலிவு விலைக்குக் கொடுத்தாங்க! அதான் அப்படிப் போனோம். போன முறை போனப்போ எமிரேட்ஸ் மூலமாத் தான் போனோம்! துபாயில் மாறினோம்! :)))) ஆமாம், தேவகோட்டை வழியாப் போயிருக்கலாம் தான்! அடுத்த பட விமரிசனம் இனிமேப் படம் பார்த்தாத் தான்! :))))

      Delete
  2. பேத்தியை பார்த்து சந்தோஷபட்டச்சா? பிரிவு கவலை குறைந்து இருக்கும். சூழ்நிலைகளுக்கு ஏற்ப குழந்தைகள் தங்களை மாற்றிக் கொள்வார்கள். வளர்ந்த நமக்குதான் முடிவது இல்லை.
    நாங்கள் போன போது பாதுகாப்பு வளையத்தை என் வளையல் தொந்திரவு செய்தது, தலைமுடிக்கு போட்டு இருந்த கிளிப், சேலைக்கு குத்தி இருந்த சேப்டி பின் பீப் ஒலி கொடுத்து பீதியை கிளப்பியது. கிளிப், வளையல், பின் எல்லாம் கழற்றி டிரேயில் போட்டபின் தான் விட்டார்கள். என் தாலி கயிற்றை இழுத்து பார்த்தார்கள் காவலர் பெண்கள்.

    செருப்பு, ஷூ , பெல்ட் எல்லாவற்றையும்தான் செக் செய்தார்கள்.

    பறவைகள் உங்களை தேடி வந்து விட்டதா?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி அரசு, உண்மையில் நேற்று ஸ்கைபில் குழந்தையைப் பார்த்ததும் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது தான். என் வளையல்களைக் கழற்றி ஒரு ட்ரேயில் போடச் சொல்லிப் போட்டு விட்டேன். மற்றபடி க்ளிப்போ, பின்னோ பயன்படுத்தியதே இல்லை. தாலிக்கயிற்றை எதுவும் செய்யவில்லை. பெல்ட் எல்லாம் அவர் கழற்றிப் போட்டு விட்டார். செருப்பைப் பார்த்தது எனக்குத் தெரிந்து இதுவே முதல் முறை! கடந்த காலங்களில் பார்த்த மாதிரி நினைவில் இல்லை.

      Delete
    2. பறவைகள் இன்னும் வர ஆரம்பிக்கவில்லை. மெல்ல மெல்ல வரும்னு நினைக்கிறேன். முதல்லே இந்தக் கேள்வியைக் கவனிக்கலை! :)

      Delete
  3. என் நண்பரின் மனைவி யூஎஸ்ஸிலிருந்து வந்திருந்தார்கள் அவர்களது பாகேஜ் ஆம்ஸ்டர்டாமிலிருந்து வராததால் இரு நாட்கள் கழித்து கண்டு பிடித்து வீட்டில் கொண்டு கொடுத்தார்கள் அவர்கள் மைசூரில் இருக்கும் ஒரு ஆசிரமத்துக்குக் கூட்டுப்பிரார்தனைக்கு வந்தார்கள் ஜெட் லாக் பற்றி ஏதும் சொல்லவில்லை

    ReplyDelete
    Replies
    1. இந்த ஜெட்லாக் எல்லோருக்கும் இருக்குமானு தெரியலை! ஆனால் பெரும்பாலோருக்கு உண்டு. அதிலும் எனக்கு இம்முறை அதிகமாவே இருக்கு! :)

      Delete
  4. பாட்டியின் ஏக்கத்தை அழகாய் எழுதியிருக்கிறீர்கள்! நானும் அதே நிலையில் இருப்பதால் உங்களின் உணர்வுகள் முழுமையாய் புரிகிறது! அடுத்த வாரம் நானும் என் பேரனிடம் இருப்பேன்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள் மனோ சாமிநாதன். பேரனுடன் உங்கள் பொழுது இனிமையாகக் கழியப் பிரார்த்தனைகள்.

      Delete
  5. விமானப் பயணத்துக்கு சாப்பிட ஏதேனும் எடுத்துவந்தீர்களா? (கட்டுச்சோறு). நிறைய நேரப் பயணம், நிறைய இடத்துல நிறுத்தம்னு படுத்தியிருக்குமே.

    உங்களுக்கு ஜெட்லாக் மட்டுமல்ல, பட விமரிசனம் பண்ணுவதும் இன்னும் இருக்கு போலிருக்கு. அதை விட்டுவிட்டு, 'உணவே மருந்து' கொஞ்சம் எழுதுங்க.

    ReplyDelete
    Replies
    1. இந்தியாவிலே இருந்து போறச்சேயும் சப்பாத்தி! விமான நிலையத்திலேயே செக் இன் முடிஞ்சு விமானத்திற்காகக் காத்திருக்கையில் சாப்பிட்டாச்சு! சென்னை விமான நிலையத்திலேயே சாப்பிட்டு முடிச்சோம். அதே போல் ஹூஸ்டன் விமான நிலையத்திலும் சாப்பிட்டோம். மற்றபடி பிஸ்கட்டுகள் தான் கொண்டு போனோம். அவையும் ப்ரான்டட்! ஹாஹா பட விமரிசனம் இன்னும் பாக்கி இருக்குத் தான்! :)

      Delete
  6. //வலை உலகில் நானும் இருக்கேனே! :)//

    அப்படியா !!!!! இதனைக் கேட்கவே மிக்க மகிழ்ச்சியாக உள்ளது. :)))))

    அப்போ ..... நான் தான் இல்லை போலிருக்குது.

    ReplyDelete
    Replies
    1. ​நான் இல்லை நான் இல்லை என்று கடவுள் மாதிரி அங்கே இங்கே என்று ஒவ்வொரு பதிவிலும் எட்டிப் பார்க்கிறீங்களே. அது போதாதா?
      கீதாம்மா பதிவு பின்னூட்டங்களில் கொஞ்சம் கிண்டல் காணும். அது மிஸ்ஸிங். ​

      Delete
    2. ஹாஹாஹாஹா! வைகோ சார், ஜேகே அண்ணாவின் கேள்விக்கு என்ன பதில்?

      Delete
    3. jk22384 28 May, 2017

      //​நான் இல்லை நான் இல்லை என்று கடவுள் மாதிரி அங்கே இங்கே என்று ஒவ்வொரு பதிவிலும் எட்டிப் பார்க்கிறீங்களே. அது போதாதா?//

      ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்ஹா !

      என் கோயில் பக்கம் அவர்கள் எட்டிப்பார்க்காமலேயே இருந்தும்கூட, பக்தகோடிகளில் ஒரு சிலரையாவது அவ்வப்போது, சில சமயங்களிலாவது போய், கண்டு கொள்ள வேண்டியது கடவுளின் முக்கியமான பொறுப்புக்களில் ஒன்றல்லவா?

      அதனால் மட்டுமே புறப்பாட்டு ஸ்வாமி போல, பிறர் பதிவுகள் பக்கம் வருகை தருவதை, நானும் ஓர் வழக்கமாக வைத்துக்கொண்டுள்ளேன், ஸ்வாமீ !!

      Delete
  7. பையரும் பெண்ணும் இந்தியா வந்து இருக்க முடியாது. அதே போல் உங்களாலும் அமெரிக்காவில் நிரந்தரமாக குடியிருக்க முடியாது. கையும் காலும் நன்றாக இருக்கும் வரை அங்கேயும் இங்கேயும் மாறி மாறி இருக்கலாம். அதற்கு பின்?
    --
    Jayakumar

    ReplyDelete
    Replies
    1. எங்களுக்கு ஐந்து வருஷம் முன்னாடியே க்ரீன் கார்ட் வாங்கித் தரேன்னு பொண்ணு சொன்னா! நாங்க தான் வேண்டாம்னு சொல்லிட்டோம்! ஆகவே நாங்க சரினு சொன்னால் அமெரிக்காவில் தங்கலாம் தான்! ஆனால் மனசு வரலை! :(

      Delete
  8. நாங்கள் இப்போது யு.எஸ் ஸில்
    உங்களைப் போலவே பேத்தியுடன்
    உல்லாசமாய்...

    பிரியும் போதுதான் மனக் கஷ்டம் தெரியும்

    பட்டி விக்கிரமாத்திதன் கதைபோல
    இந்தியா ஆறு மாதம் யு.எஸ் ஆறுமாதம்
    என் இருப்பது கொஞ்சம் ஞானத் தெளிவு
    தரத்தான் செய்கிறது

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. இருக்கும் நாட்களைக்குழந்தையுடன் சந்தோஷமாகக் கழியுங்கள். பிரார்த்தனைகள். எங்களைப் பொறுத்தவரை இந்தியாவில் ஆறு மாசம், யு.எஸ்ஸில் ஆறு மாசம்ஞ் வைச்சுக்கலை. :)))) அம்மாதிரி போய் இருக்கப் பிடிக்கலை. அதான் க்ரீன் கார்ட் வேண்டாம்னு சொல்லிட்டு இருக்கோம். :)

      Delete
  9. பேத்தியின் நினைவு படுத்துகிறது உங்களை. தூரம் என்று ஒன்று இருக்கிறதே, என்ன செய்வது ?

    நீங்கள் குறிப்பிட்ட படம் ‘கால்’. 2005-ல் வந்த வித்தியாசமான படம். இந்தமாதிரி தமிழில் எடுக்கத்தோணுமா யாருக்கும்? ஹிந்தியில் ’கால்’ என்றால் காலம். அல்லது முடிவு என்கிற பொருளிலும் வரும்.

    நமது ‘காலா’ வந்தவுடன் மேற்கொண்டு பேசலாம் !

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், தூக்கத்தில் கூட அவளைக் கொஞ்சும் வார்த்தைகளைக் கூறுகிறேன் என்று நம்ம ரங்க்ஸ் சொல்கிறார். :)))) வாராது வந்த மாமணியாயிற்றே. நல்லபடி ஆரோக்கியமாவும் புத்திசாலித்தனமாயும் பூரண ஆயுளுடன் இருந்தால் போதும்! :)))

      Delete
    2. கால் படம் மாதிரி இங்கே எடுத்தால் அவ்வளவு தான்! :) உலக்(கை)நாயகரையோ அல்லது ரஜினியையோ போட்டு இஷ்டத்துக்குக் கதையை மாத்திடுவாங்க. இந்தப் படம் உள்ளது உள்ளபடி காட்டைக் காட்டி இருக்கிறது.

      Delete
  10. நீங்கள் சொல்லியிருக்கும் இரண்டாவது பட விவரணை அந்தப் படத்தைப் பார்க்கும் ஆவலைத் தூண்டுகிறது. சரியான பெயர் தெரிந்து பார்க்க வேண்டும். ஆனால் நான் சோம்பேறி! எப்போது பார்ப்பேனோ!

    பேத்தியைப் பிரிந்து வந்திருக்கும் கஷ்டம் தெரிகிறது. கொஞ்ச நாளில் பழகி விடும்.

    ReplyDelete
    Replies
    1. படத்தின் பெயர் "கால்" Kaal! Shahrukh Khan தயாரிப்பாளர்களில் ஒருத்தர்.

      Delete
  11. உங்களின் ஏக்கம் புரிகிறது அம்மா...

    ReplyDelete
  12. பேரக் குழந்தைகளை பிரிந்து வருவது வேதனையான நிகழ்வு. குழந்தைகள் நிமிடமாய் கவனத்தை மாற்றிக் கொண்டுவிடும். நமக்கு தான் தொண்டையில் முள் !

    ReplyDelete
    Replies
    1. குழந்தை மாத்திக்கலைனால் ஏங்கிடுமே தம்பி! முதல்முறை விட்டுட்டுப்போனப்போ ஒரு வாரம் ஆச்சாம் சரியாக! நல்லவேளையா இப்போ ஒரு மாதிரி புரிஞ்சுண்டிருக்கு! :(

      Delete
  13. Replies
    1. வாங்க ஏடிஎம். ரொம்பநாளைக்கப்புறமா வருகை! நன்றி.

      Delete
  14. வலையுலகில் இருக்கேன் என்பதை ரசித்தேன். பலர் நிலை அப்படித்தான்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க முனைவர் ஐயா! நன்றி.

      Delete
  15. வெளி நாட்டில் பிறந்து வளரும் குழந்தைகள் பாட்டி தாத்தாவுடன் ரொம்ப ஒட்டுதலா இருப்பாங்க அதிலும் பெண் குழந்தைகள் ரொம்பவே அன்பும் அதிகமா இருக்கும் .பழகிடுவா ஆனாலும் ஏக்கம் இருக்கும் ..
    சும்மாவே செக் பண்ணுவாங்க ப்ராங்பர்ட்ல ..இப்போ கூடுதலா இருக்கும் .ஒரு ஹோமியோபதி பில்ஸை என்னுது எடுத்து ஆராய்ச்சி செஞ்சி வச்சாங்க 2006 ல ..
    கால் ஹிந்திப்படத்தை நான் ஜெர்மனில இருந்தப்போதான் டிவிடில பார்த்தேன்.. திகில் வகைதான் படம் .

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், குழந்தைகள் ஒட்டுதலாத் தான் இருக்காங்க. ஃப்ராங்ஃபர்ட்டிலே முன்னெல்லாம் கொஞ்சம் தாராளமா இருப்பாங்க. இப்போத் தான் கடுமை எனத் தோன்றியது. ஒருவேளை முன்னர் சென்ற பயணங்களில் எமிரேட்ஸில் பயணம் செய்ததால் அப்படித் தோன்றுகிறதோ என்னமோ! எமிரேட்ஸிலும் சோதனை கடுமை தான்.

      Delete
  16. தாய் நாட்டிற்கு வருக வருக என்று வரவேற்கிறோம். ஜெட்லாக் இருக்கட்டும், இன்னும் சினிமாலாக் விடவில்லை போலிருக்கிறதே..?

    ReplyDelete
    Replies
    1. ஹாஹாஹா, இந்த சினிமா அங்கே பதினைந்து நாட்கள் முன்னாடி பார்த்தேன். அதைப் பற்றி எழுத இப்போத் தான் நேரம் கிடைச்சது. அதிசயம் பாருங்க, கொஞ்ச நேரம் முன்னாடித் தான் உங்களைக் காணோமேனு நினைச்சேன். நினைக்கும்போதே உங்க பின்னூட்டம் கண்ணெதிரே வந்தது. நூறு வயசு வாழ்வாங்கு வாழ வேண்டும். :)

      Delete
  17. ஸோ கடைசில சொர்கத்துக்கு வந்தாச்சு! ஜெட் லாக் பலருக்கும் இருக்கிறது ஒரு சிலரால மட்டும்தான் சமாளிக்க முடியுது...

    நீங்க சொல்லியிருக்கற சினிமா பத்தி கேள்விப்பட்டதில்லை.அங்க பாத்த படமோ?? உண்மைதான் குட்டி அதுவும் பேரக் குழந்தையை விட்டுப் பிரிவது கஷ்டம்தான்...அந்த வருத்தமும் கடந்து போகும் உங்கள் வழக்கமான வேலைகள் தொடங்கிவிடும் போது....

    ReplyDelete