எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, August 23, 2017

சென்னைக்குப் பிறந்த நாளாம்! :)

சென்னை க்கான பட முடிவு

சென்னைக்கு 378 ஆவது பிறந்த நாள் எனவும் ஒரு மாதம் முழுவதும் விழா கொண்டாடப் படப் போவதாகவும் பார்த்தேன். அதோடு நேற்றுச் சென்னை தினம் என்று முகநூலில் மற்றும் பதிவுகளில் சென்னைக் காதலர்கள் பதிவிட்டிருந்தார்கள். என்னைப் பொறுத்தவரை சென்னை அவ்வளவாகப் பிடிக்காத/மனம் ஒன்றாத ஓர் ஊர்! 62-63 ஆம் வருடங்களில் என் அண்ணா, தம்பி பூணூலுக்காகத் திருப்பதி போயிட்டுத் திரும்புகையில் சென்னையில் சில நாட்கள் தங்கியது தான் என்னோட முதல் சென்னை விஜயம். ஆனால் மனதைக் கவரவே இல்லை. இவ்வளவு தானா இந்த ஊர் என்னும் எண்ணமே தோன்றியது!  மாமதுரையில் எங்கே போவது என்றாலும் நடந்தே போயிடலாம் என்பதோடு நேரமும் ஆகாது! இது என்ன ஊர் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடம் போக இத்தனை நேரம் ஆகுதே! இது அறுபதுகளிலேயே எனக்குள் தோன்றியது.

பெரியப்பா திருவல்லிக்கேணியில் இருந்தார்! மற்ற உறவினர்கள் மாம்பலம். சித்தி அப்போக் கல்யாணம் ஆகி வரலை! அதோடு நாங்க ஊருக்குப் போவதற்கு ரயில் ஏற வேண்டிய இடம் எழும்பூர். அங்கிருந்து பஸ் பிடிச்சுத் தான் திருவல்லிக்கேணி வரணும். மாம்பலம் போகணும்! ஹிஹிஹி, மதுரையின் தெருக்களுக்குள்ளேயே சுத்திட்டு இந்த பிரம்மாண்டம் ஓரளவு சலிப்பை உண்டாக்கியது. ஆனால் அப்போத் தெரியாது இதே ஊரில் தான் வந்து வாழ்க்கை நடத்தப் போறோம்னு! ஆனாலும் அப்போதைய சென்னையில் பழைய கட்டிடங்கள் பார்க்க அழகாகவே இருந்தன. முக்கியமாய் ஸ்பென்சர்! இப்போது இருக்கும் ஸ்பென்சரைப் பார்க்கையில் பழைய ஸ்பென்சர் கட்டிடம் அழிந்ததை நினைத்து வருத்தமாக இருக்கிறது.

அதோடு இல்லாமல் அப்போல்லாம் மெட்ராஸ் என்றாலே எல்லாமும் அடங்கியது என்றே நினைத்துக் கொண்டிருந்தேன். உதாரணமாக எழும்பூர், சைதாப்பேட்டை, தி.நகர் போன்றவை எல்லாமும் சென்னை என்னும் நினைப்பு! மாம்பலத்தில் என் அம்மாவின் சித்தி வீட்டில் தங்கினப்போ அவங்க ஒரு நாள் என்னை "வா, மெட்ராஸ் போய் பர்மா பஜார், ஹைகோர்ட், பீச் எல்லாம் போகலாம்" னு கூப்பிட்டாங்க!  நான் ஹிஹிஹி! மெட்ராஸில் தானே இருக்கோம்னு நினைச்சேன். அப்புறமாத் தான் புரிஞ்சது! சென்ட்ரலை ஒட்டி உள்ள பழைய நகரம் தான் ஒரிஜினல் சென்னைனு! அங்கே எல்லாம் சுத்தறது அப்போல்லாம் ரொம்பப் பிடித்தமான ஒன்று.

கல்யாணம் ஆகி வந்தப்போ ஒவ்வொரு சனிக்கிழமையும் ரங்க்ஸுக்கு அரை நாள் அலுவலகம். எனக்கு இரண்டாம் சனிக்கிழமை மட்டும் லீவு! ஆனாலும் சனிக்கிழமை மாலை கொஞ்சம் சீக்கிரமாவே தண்டையார்ப்பேட்டை அலுவலகத்திலிருந்து கிளம்பி சென்ட்ரல் வந்துடுவேன். அவரும் வந்து ஹிகின்பாதம்ஸ் அருகே காத்திருப்பார்.  இரண்டு பேருமாய்க் கந்தசாமி கோயில் (சென்னை மொழியில் கன்ட்சாமிகோயிலு) போய்ப் பார்த்துட்டு அங்கே பெருமாள் செட்டி கடையில் பெருங்காயம் வாங்கிக் கொண்டு பொடிநடையாக ஹைகோர்ட் வரை நடப்போம். என் எஸ்சி போஸ் ரோடில் அப்போது ஒரு பெரிய காதி பவன் இருந்தது. ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோம் பக்கத்திலேனு நினைக்கிறேன். அங்கே சுக்குமல்லிக் காஃபியும் (எத்தனை தரம் எழுதுவே! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்) (ஹிஹிஹி, ம.சா. கூவுது! அப்போப்போ கூவும்! கண்டுக்கப்படாது) கொண்டைக்கடலைச் சுண்டலும் காரசாரமாகச் சாப்பிடுவோம். எங்கள் குடித்தனத்துக்குத் தேவையான பொருட்கள் ஜாடி, கண்ணாடி பாட்டில்கள், சூட்கேஸ், குடை, மழைக்கோட் போன்றவை அங்கே இப்ரஹிம் ராவுத்தர் கடையில் அல்லது மற்றக் கடைகளில் வாங்குவோம்.

பின்னர் பசி எடுக்கவே யாரோ ஒருத்தர் சொன்னதன் பேரில் ஆர்மெனியன் தெருவில் உள்ள பாலிமர் ஹோட்டலுக்குச் சாப்பிடச் சென்றோம். சாப்பாடுன்னா சாப்பாடு, இத்தனை வருடங்கள் ஆகியும் மறக்கவே முடியாத சாப்பாடு! அதுக்கப்புறம் அந்தப்பக்கம் நிறையத் தரம் போயும் அந்த ஹோட்டலுக்குப் போக முடியலை! என்னோட முதல் கல்யாண நாளன்று நாங்க சென்ட்ரல் பக்கத்தில் இருக்கும் பிக்னிக் ஓட்டலில் சாப்பிட்டோம். அப்போப் பழைய மாதிரிக் கட்டிடம் என்பதோடு ரூஃப் கார்டன் ரெஸ்டாரன்டும் இருந்தது. அங்கே தான் சாப்பிட்டோம். பட்டாணி புலவு இரண்டு ப்ளேட் தெரியாத்தனமாச் சொல்லிட்டு (இப்போல்லாம் நக்ஷத்திர ஓட்டலில் நாம் ஆர்டர் செய்யும்போதே சொல்றாங்க, இவ்வளவு வேண்டாம், இது போதும்னு! அப்போச் சொல்லலை!) சாப்பிட முடியாமத் திணறினோம்.

அதுக்கப்புறமா என்னோட அலுவலகத்தில் ஒரு மீட்டிங்கின் போது எனக்காக தங்கசாலைத் தெரு ஹரிஓம் பவனிலிருந்து மில்க் அல்வா வாங்கிக் கொடுத்தாங்க. அதைச் சாப்பிட்டு விட்டு மறுபடியும் வேணும்னு அதைச் சாப்பிடவே நாங்க இரண்டு பேரும் எங்க பொண்ணு என் வயித்திலே இருக்கும்போது அம்பத்தூரில் இருந்து தங்கசாலைத் தெரு வந்து அந்த ஓட்டலைத் தேடிக் கண்டு பிடிச்சுச் சாப்பிட்டோம். இப்போ அந்த ஓட்டல் இருக்கா, இல்லையானு தெரியலை! அதுக்கப்புறமா ராஜஸ்தான், ஆந்திராவில் செகந்திராபாத்(பழைய ஆந்திரா) எல்லாம் போயிட்டு மறுபடி சென்னைக்கு அம்பத்தூருக்கே வந்ததும் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்கள் எவ்வளவு கஷ்டங்கள் உண்டோ அத்தனையும் அனுபவிச்சதும் கல்வெட்டில் பொறிக்கப்பட வேண்டிய சரித்திர சம்பவங்கள்.  ஆனால் சென்னை மேல் எனக்கிருந்த பிடிப்பு முற்றிலும் விட்டுத் தான் போனது! என்றாலும் மறுபடி பத்தாண்டுகள் ராஜஸ்தான், குஜராத் வாசத்திற்குப் பிறகு சென்னைக்குத் தான் வர வேண்டி இருந்தது.

சென்னை க்கான பட முடிவு

மனம் ஒட்டாமலேயே சென்னை வாசம்! இப்போவும் சென்னை வந்தால் ஓர் மன இறுக்கத்தோடு தான் இருக்க வேண்டி இருக்கு! ஏதோ பதைப்பு! ஏதோ தொலைச்சுட்ட மாதிரி ஒரு எண்ணம்! தவிப்பாக இருக்கும். இது எனக்கு மட்டும் தான் இப்படினு நினைச்சால் இன்னும் சிலரும் இருக்காங்க! சென்னைக் காதலர்களுக்கு இனிய சென்னை தின/சென்னை மாத விழாக்கால வாழ்த்துகள்.


படங்களுக்கு நன்றி கூகிளார்

32 comments:

 1. சென்னையிலும், கோவையிலும் 1980களில் பணியாற்றியுள்ளேன். கோவை ஒன்றிய அளவு சென்னை மனதளவில் ஒன்றவில்லை. இருப்பினும் தன்னை தேடி வருவோர்க்கு அடைக்கலம் தருவதில் சென்னைக்கு ஒரு முக்கியமான பங்கு உண்டு.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஐயா! ஆங்கிலேய ஆட்சி ஆரம்பமே சென்னை தானே! அதன் பின்னர் தானே கல்கத்தா சென்றார்கள்! எனக்கு ஆறாம் வகுப்பில் சென்னப்பட்டணம் என்னும் பெயரில் சென்னை பற்றிய வரலாற்றுப் பாடம் தமிழ் இரண்டாம் தாளில் இருந்தது. அப்போது சென்னை பற்றிப் படிக்கையில் ஆர்வமாகத் தான் இருந்தது. ஆனால் நேரில் வந்ததும் என்னமோ பிடிக்கலை! :)

   Delete
 2. சென்னையில் வசித்த வருடங்கள் எனக்கு வசந்த காலங்கள்...!

  ReplyDelete
  Replies
  1. சென்னைக்காதலர்கள் பலருக்கும் இப்படித் தான் டிடி!

   Delete
 3. 1983-ல் முதன் முறையாக சென்னை போனேன் பிறகு பலமுறை போயிருந்தாலும் எனக்கு சென்னை ஏனோ மனதுக்கு இஷ்டப்படாமல் போயிற்று முக்கிய காரணம் டிராஃபிக் இது எனக்கு கோபத்தை வரவழைக்கிறது.

  இதன் காரணமாகவே நான் சினிமாவில் நடிக்க முடியாமல் போய் விட்டது.

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி, கில்லர்ஜி! சினிமாவில் நடிக்க முடியலையா? அது சரி! சென்னைப் போக்குவரத்து இப்போத் தானே இப்படி! நீங்க அறுபதுகள், எழுபதுகளில் பார்க்கலை! ஆனால் எழுபதுகளில் எங்க தலைதீபாவளிக்கு அம்பத்தூரில் இருந்து எழும்பூர் ரயிலைப் பிடிக்கச் சென்ற போது அப்போதைய போக்குவரத்திலேயே எங்களுக்குப் பேருந்து தாமதம் ஏற்படுத்தி ரயிலைத் தவற விட்டோம். :)

   Delete
  2. கிலல்ர்ஜி நான் தினமும் நொந்து நூடுல்ஸ் ஆகிக் கொண்டிருக்கிறேன் ஹாஹாஹா..சென்னை ட்ராஃபிக். அதுவும் பேருந்துக்கு எங்கள் ஏரியாவிலிருந்து மெயின் ரோட் வருவதற்கு..ஸ்மால் பஸ்ஸிற்காகக் காத்துக் காத்து....இருந்தாலும் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொண்டுவிடுவேன். இல்லை என்றால் வாழ்க்கையை ஓட்ட முடியாதே!!

   கீதா

   Delete
  3. ஆமாம், சென்னையில் இந்தப் பேருந்துப் பயணத்தைப் போன்ற கொடுமை வேறே எதுவும் இல்லை. பல சமயங்களில் அவதிப் பட்டிருக்கோம்.

   Delete
 4. People born n brought up in Chennai will never say this. It's the best with all it's plus n minus. I really love this place

  ReplyDelete
  Replies
  1. வாங்க சென்னைக் காதலரே! நாங்கல்லாம் சென்னையிலே பிறக்கலையே! இருந்தாலும் பல விஷயங்களுக்கு வசதி தான் என்பதையும் நினைவில் வைத்திருக்கிறேன் தான். நாங்க ஶ்ரீரங்கம் வந்ததும் பலரும் சென்னையை விட்டுட்டுக் குக்கிராமம் தேடிப் போய்க் குடித்தனம் பண்ணறதாக் கேலி செய்வாங்க. செய்யறாங்க! இங்கே ஒரு வசதியும் இல்லையாம்!

   Delete
 5. சென்னைல 6 பேருக்கு 3 பேராவது, சென்னையைச் சேர்ந்தவங்க இல்லை (உண்மையில 5 பேராவது). எல்லாம் migrate ஆனவங்கதான். இப்போ இருக்கற காசை வச்சுக்கிட்டு, Time Travel பண்ணி 50 வருஷம் முன்னால போகமுடிஞ்சா, மௌன்ட் ரோட்டின் நடுவுல 2 கிரௌண்ட் (ரோடின் மேலேயே) நிலம் வாங்கியிருக்கலாம்.

  நீங்க ஏதோ, மதுரைனா, நடந்தே போயிடலாம்னு சொல்றீங்க. நான் 84-86ல, ஒவ்வொரு இடத்துக்கும் பஸ்லதான் போனேன். இப்போ இடங்கள் பேர்கூட மறந்துபோச்சு. படம் பார்க்க, காலேஜ் ஹவுஸ்ல சாப்பிட, ஓரிரு முறை அம்மையைப் பார்க்க (அப்போகூட அங்க ஸ்வீட் கடைகள் இருக்குன்னெல்லாம் தெரியாது), ஓஹோ, இந்த இடத்துலதான் நக்கீரர் நின்றிருந்தாரா, இங்கிருந்துதான் பெண்ணுளாம் சடையன் நெற்றிக்கண்ணை வைத்து எரித்தாரான்னெல்லாம் யோசித்த சமயம். அப்போ, ரயிலடி கற்பகம் ஹோட்டல்ல ரவா தோசையும் மசாலா பாலும் சாப்பிட்ட ஞாபகத்துல என் குடும்பத்தோட மதுரை போனால், அப்போ இருந்த நினைவெல்லாம் அழிந்துவிடுவதுபோல் இருந்தது.

  ReplyDelete
  Replies
  1. மதுரையில் இப்போவும் முக்கிய நகருக்குள்ளே எங்கே வேண்டுமானாலும் நடந்து போயிடலாம். இப்போதைக்குத் திருச்சியும் அப்படித் தான் இருக்கு! ஆனால் இங்கேயும் போக்குவரத்து அதிகம் ஆகிக் கொண்டு இருக்கிறது. ரயிலடி கற்பகம் ஹோட்டல் நான் எண்பதுகளில் போனது! அப்புறமா அது அங்கே இல்லை! எனக்குத் தெரிந்தது அந்தக் காலங்களில் பிரபலமான சிம்மக்கல் மாடரன் லாட்ஜ், மேலமாசி வீதி மாடர்ன் லாட்ஜ், வடக்கு, மேலச் சித்திரை வீதி முனையில் இருக்கும் கோபு ஐயங்கார் கடை, வடக்காவணி மூலவீதி சுமுக விலாஸ், மேலமாசி வீதி ஆரிய பவன் ஆகியவையே! இதில் கோபு ஐயங்கார் கடை மட்டும் இன்னும் அவர்களாலேயே பராமரிக்கப்படுவதாகச் சொல்கின்றனர். அதோடு மேலக்கோபுர வாசல் ஒரிஜினல் நாகப்பட்டினம் நெய் மிட்டாய்க் கடையும் வாரிசுகளாலேயே நடந்து வருகிறது. அந்தக் கடை எங்க உறவினர் கடை தான்! இதன் கிளை கீழ வாசலில் இருக்கு!

   Delete
  2. ஆமாம் நெல்லை சென்னைட்ஸ் என்று அவ்வளவாக இருக்க மாட்டார்கள். பெரும்பான்மையோர் மைக்ரேட் பண்ணி வந்தவர்கள்தான் நீங்கள் சொல்லியிருப்பது போல்..

   கீதா

   Delete
  3. சென்னை நகருக்குள்ளே நான் சொல்வது ஜார்ஜ் டவுன் போன்ற புராதனப் பகுதிகளில் வசித்தவர்கள்/ வசிப்பவர்கள் பழைய சென்னைவாசிகள் எனக் கேள்வி!

   Delete
 6. சுவாரஸ்ய தகவல்கள்! நானும் சின்ன வயதில் சென்னைக்கு வந்திருக்கிறேன் - சில இடங்களைப் பார்த்திருக்கிறேன் - பல இடங்களைப் பார்க்க ஆசைப்பட்டிருக்கிறேன்!! தற்சமயம் புத்தம்புதிய சென்னைவாசி ஆகியிருக்கிறேன் - இனி மேல்தான் பழக வேண்டும்!!

  ReplyDelete
  Replies
  1. அப்படியா? இப்போச் சென்னையிலா இருக்கீங்க? எந்தப் பகுதி? பழகிடும்! நாங்க குஜராத், ராஜஸ்தான், ஆந்திரா, மஹாராஷ்டிராவில் எல்லாம் கஷ்டப்படவே இல்லை! சென்னை தான் பல்வேறு கஷ்டங்கள், மன வேதனைகள், சிக்கல்கள் கொடுத்தது, கொடுக்கிறது! :(

   Delete
 7. ஆமாம் எனக்கும் சென்னை ஒட்ட வில்லை திருமணம் ஆன பின்புதான் சென்னை வந்தேன் .ஒருவருட சென்னை வாழ்க்கை என்னை புரட்டி போட்டது. பின்பு பூனா வந்து செட்டில் ஆயாச்சு என்றாலும் ஒர் கோவிலுக்கு செல்ல மட்டுமே சென்னை செல்வேன். திரும்பி வருவதர்குள் மூச்சு முட்டுவது போல் உணர்கிரேன்.

  ReplyDelete
  Replies
  1. சிலருக்கு நல்லதா இருக்கும் இடம் பலருக்கு இப்படித் தொல்லையாக இருக்கும் தான்! புனேயில் வாழ்க்கை நடத்தியதில்லை என்றாலும் பார்த்தவரை அமைதியான ஊராகத் தெரிந்தது. சென்னையின் புழுக்கம், இறுக்கம் அதுவே ஓர் மன இறுக்கத்தைக் கொடுத்து விடுகிறது!

   Delete
  2. புனே நல்ல ஊர்! எனக்கு மிகவும் பிடித்தது. ஆனால் விலைவாசி அதிகம்...கொள்ளை விலை...அங்கும் சென்னை போல் பாரிஸ் கார்னர், பாண்டிபஜார், ரங்கநாதன் தெரு போல் லக்ஷ்மி ஸ்ட்ரீட் என்று இருக்கிறது அங்கு கொஞ்சம் விலை மலிவாக இருக்கும்.

   கீதா

   Delete
  3. புனே லக்ஷ்மி தெரு ராஸ்தாப் பேட்டையில் இருந்து நடந்து செல்லும் தூரம் தான் என நம்ம ரங்க்ஸ் சொல்வார். அது லக்ஷ்மி ரோடு என்றும் கூறினார்.

   Delete
 8. சென்னை பற்றி எழுதியதைப் படிக்கும் போது அலை அலையாக நினைவுகள் வருகிறது ஒரு பதிவு போறாது

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி சார், எனக்கும் நிறைய அனுபவங்கள். கொஞ்சமாகவேச் சொல்லி இருக்கேன்.

   Delete

 9. சென்னைக்குப் பர்த்டே என்று ஒரு சிலர் சென்னை பற்றிப் பதிவுகள் போல....நான் சென்னைக்கு எல்லாம் எப்போதேனும் வருவதுதான்...என்றாலும் ஏனோ சென்னை பிடிப்பதில்லை. என்ன ஏதேனும் சாமான்கள் பாரிஸ் கார்னரில் வாங்கலாம் அவ்வளவே...கேரளத்தில் மலை ஆறு சூழ்ந்து ரப்பர் தோட்டம் தோட்டங்களுக்கு இடையில் மிக மிக அமைதியாக இருப்பதால் அதை விட்டு எங்கும் நகர மனம் இஷ்டப்படுவதில்லை....பதிவில் பல அறிய முடிந்தது.


  கீதா: // என்னைப் பொறுத்தவரை சென்னை அவ்வளவாகப் பிடிக்காத/மனம் ஒன்றாத ஓர் ஊர்! // கீதாக்கா ஹைஃபைவ்!!! நானும் உங்க கட்சிதான். ஆனால் பாருங்க இங்கதான் இப்ப வாழ்க்கைனு ஆகிப் போச்சு. அதுவும் ஆறு, குளம், வயல்னு வாழ்ந்துவந்த நான் அதன் பின் பல ஊர்கள் சென்றும் அங்கெல்லாம் மனம் ஒன்றியிருந்தாலும், கல்லூரியில் படிக்கும் போது பக்கின்காம் கனால் பற்றி அறியத் துடித்து சென்னை வந்த போது பார்த்தால்....பூ இவ்வளவுதானா என்று ஆகிவிட்டது...சென்னை சுத்தமாகப் பிடிக்கவில்லை..

  அக்கா நான் இப்போதும் பாரிஸ் கார்னரில் தான் பெருங்காயம் வாங்குவேன். சில சாமான்கள் குறிப்பாக கண்ணாடி சாமான்கள், துணிகள் ஜாடிகள் என்றால் அங்கு சென்று வாங்குவேன்...

  ReplyDelete
  Replies
  1. எங்களுக்கும் மலை, ஆறு சூழ்ந்து இருக்கப் பிடிக்கும் தான். அதற்காகவே திருநெல்வேலியில் செங்கோட்டை, தென்காசி, பாபநாசம், கல்லிடைக்குறிச்சி ஆகிய ஊர்களில் சென்று குடியேறவும் நினைத்தோம். பல காரணங்களால் தென் தமிழ்நாடு வேண்டாம்னு விட்டுட்டோம். இப்போ இங்கே இருந்து எங்கேயும் போக முடியும்! ஆறு இருக்கு, நீரில்லை, தோட்டங்கள் இல்லை!

   Delete
 10. நல்ல பதிவு எனக்கு பல நினைவுகளை எழுப்பியது உங்களைப் போல...இங்கு இருக்கும் போதே ஹாஹாஹாஹா

  கீதா

  ReplyDelete
  Replies
  1. அனைவருக்கும் நினைவலைகள் எழும்பும்! :)

   Delete
 11. இரண்டு நாட்களுக்கு மேல் அங்கே தங்கியதில்லை. என்னவோ, சென்னை பிடிக்கவில்லை. தலைநகரிலிருந்து தமிழகம் வரும்போது இங்கே இறங்கி திருச்சி/நெய்வேலி போக மட்டுமே இங்கே வருகிறேன்.

  உங்கள் நினைவுகளையும் பகிர்ந்து கொண்டது சிறப்பு.

  ReplyDelete
  Replies
  1. சென்னை பிடிக்காதவங்களும் இருப்பது கண்டு மகிழ்ச்சி! :) என் நினைவுகளைக் கோடி தான் காட்டி இருக்கேன்.

   Delete
 12. சென்னை- இன்றளவும் எனக்குப் பிடித்தமான ஊர் அல்ல. மதுரையிலிருந்து சென்னைக்கு மாற்றலாகி வந்ததும் மீண்டும் மதுரைக்குச் செல்ல முயற்சி செய்தேன். மூன்று வருடங்கள் ஆகவில்லை என்று உயரதிகாரிகள் மறுத்து விட, தொடர்ந்த என் சென்னை வாழ்க்கை தொடர்கதையாகிப் போனது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், நீங்களும் நம்ம பக்கம் தான் என்பதை அறிந்து சந்தோஷமா இருக்கு! இப்போ முயற்சி செய்து பார்க்கலாமே! ஆனால் மதுரை நீங்க விட்டு வந்த மதுரையாக இருக்காது! :(

   Delete
  2. சென்னை மட்டும் என்ன, மாறிக்கொண்டேதான் இருக்கிறது. ஆனால் மகன்கள் வேலை முதலான காரணத்தால் இப்போதைக்கு சென்னைதான்!மகன்கள் திருமணம் முடியட்டும் பார்க்கலாம்!

   :)))

   Delete
 13. சென்னை உறவுகள் வீட்டு விசேஷங்கள் நலம் விசாரிக்க என்று மட்டும் தான் போவது. ஒரு வீட்டுக்கு போனால் இன்னொரு உறவினருக்கு வருத்தம் அனைவரையும் திருப்தி படுத்த முடியவில்லை.
  ஒவ்வொரு வீடும் ஓவ்வொரு முலையில் பயணம் பயமுறுத்தும்.

  ReplyDelete