எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, July 10, 2019

(Bhurota) புரோட்டா சாப்பிட்டால் உயிர் போகுமா? (Paratha) பராத்தா சாப்பிட்டுத் தான் பாருங்க!

இரண்டு நாட்கள் முன்னர் ஒரு இளைஞர் மனைவியுடன் பேசிக் கொண்டே பராட்டா சாப்பிட்டதில் மூச்சுக் குழாயில் பராட்டா சிக்கிக் கொண்டு மூச்சுத் திணறி இறந்துவிட்டதாகச் சொன்னார்கள். அன்றே ஒரு மருத்துவர் அதைக் குறித்து விளக்கமும் கொடுத்திருந்தார். இன்று மீண்டும் தொலைக்காட்சிச் செய்தியில் பராட்டா சாப்பிடலாமா/கூடாதா என்பது குறித்துக் கேள்விகள்/பதில்கள். என்னைக் கேட்டால் (Pa) பராட்டா/பராத்தா/பராந்தா சாப்பிடுங்க தாராளமாய். அது கோதுமை மாவில் செய்ததாக இருக்கணும். ஆனால் தமிழ்நாட்டில் இதைச் சப்பாத்தி என்றே சொல்லுகின்றனர்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்! நம்ம இட்லிக்கு வேறே பெயரை வட மாநிலத்தவர் வைச்சா நாம சும்மா இருப்போமா? பொங்கி எழ மாட்டோமா?  :))))) போகட்டும் விடுங்க! ஆனால் மைதா தயாரிப்பான (Bhu) புரோட்டா மட்டும் வேண்டவே வேண்டாம். எண்ணெய் அதிகம் சேர்ப்பதோடு மைதாவில் செய்தவை உடல் நலத்துக்கும் முக்கியமாய் வயிற்றுக்கும் தீங்கு விளைவிக்கும். ஆனால் நம்ம தமிழ் மக்கள் கேட்கப் போவதில்லை. அவங்க இந்த (Bhu) புரோட்டாவுக்கும், பிரியாணிக்கும் அடிமை!( என்னதான் இருக்கு பிரியாணியிலே???) (Pa)பராத்தா என்று சொல்லவும் மாட்டாங்க. (Bhu)புரோட்டா தான். அதே போல் (Poori) இல்லை. (Bhuri) தான் சொல்லுவாங்க. அதற்குத் தொட்டுக்கக் கொடுப்பதைப் பெருமையாக "மசாலா" என்றும் சொல்லுவார்கள்.  அது வெறும் உ.கி. கறி. ஆனால் நம்மவர்கள் ஏற்க மாட்டாங்க! இப்போக் கீழே உண்மையான பராத்தா/பராந்தா/பராட்டா செய்யும் முறை கொடுத்திருக்கேன். ஒரு முறையானும் செய்து பாருங்க. சில ஆண்டுகள் முன்னர் ரஞ்சனிக்காகப் போட்ட பதிவு அது! சுட்டி கொடுத்திருக்கேன் கீழே! அங்கேயும் போய்ப் படிக்கலாம்.


சாப்பிடலாம் வாங்க

 மைதா பரோட்டா பத்தின எச்சரிக்கை பலரும் போட்டிருந்தாங்க.  இணையத்திலே சில ஆண்டுகளாக இது உலவி வருது.  ஆனால் உண்மையா பரோட்டாவே சாப்பிடக் கூடாதா?  தாராளமாய்ச் சாப்பிடலாம். கோதுமை மாவில் செய்திருந்தால்.  இன்னிக்குக்காலம்பர வெளியே போயிட்டு வர நேரம் ஆகும் என்பதால் வழக்கமான இட்லி, தோசை வேண்டாம், வேறே ஹெவியாக்காலை ஆகாரம் கொடுனு ரங்க்ஸ் கேட்க, சட்டுனு உ.கி. எடுத்துக் குக்கரில் வேகப் போட்டுட்டு, கோதுமை மாவைக் கொஞ்சம் போல் உப்பு, நல்லெண்ணெய் சேர்த்துக் கலந்து நீர் விட்டுப் பிசைந்து வைத்தேன்.
வெங்காயம் இல்லை.  அதனால் என்ன?  மத்தது இருந்தது.  தக்காளி, பச்சை மிளகாய், கருகப்பிலை, இஞ்சி போன்றவை இருந்தன. கடாயில் எண்ணெய் ஊற்றி ஜீரகம் தாளித்துக் கொண்டு இஞ்சி ப,மி, கருகப்பிலை, பெருங்காயம் போட்டு வதக்கித் தக்காளி நறுக்கிப் போட்டு வதக்கிக் கொண்டு, வெந்த உருளைக்கிழங்கில் அரை டீஸ்பூன் மி.பொடி, ஒரு சிட்டிகை மஞ்சள் பொடி சேர்த்துக் கொண்டு நீர் விட்டுக் கலந்து உதிர்த்தாப்போல் வதக்கிய தக்காளியில் கொட்டிக் கலந்து தேவையான உப்புச் சேர்த்தேன்.  இறக்கும் முன்னர் லவங்கம், லவங்கப்பட்டை, ஏலக்காய் வறுத்துப் பொடித்த தூள் ஒரு கால் டீஸ்பூன் சேர்த்துக் கீழே இறக்கிப் பச்சைக் கொத்துமல்லி சேர்த்தேன்.

இப்போப் பரோட்டா.இதான் பிசைந்த மாவு.  ஹிஹிஹி,கொஞ்சமா இருக்கேனு பார்க்கிறீங்களா?  மறந்து போச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச் அப்புறமாக் கடைசிப் பரோட்டா பண்ணறச்சே நினைப்பு வந்தது.  மாவை எடுத்துக் கொண்டு உருட்டி அதில் வெண்ணெய் தடவி மடித்துப் போட வேண்டும்.  மீண்டும் வெண்ணெய், மடித்துப் போடணும்.  இம்மாதிரி நான்கைந்து முறையாவது வெண்ணெய் தடவி மடித்துப் போட்டால் நன்கு உள்ளே லேயர் லேயராக வரும்.  வெண்ணெய் தடவிக் கீழே பார்க்கலாம்.இது வெண்ணெய்னு சொல்லித் தெரியவேண்டாம். :))))))


வெண்ணெய் தடவி இரண்டு மூன்று முறை மடித்துப் போட்டாச்சு.  மடித்ததைக் கடைசியில் இப்படிக் கீழே காண்கிறாப்போல் சுருட்டணும்.சுருட்டினதை நீள வாட்டத்திலே எடுத்து அப்படியே மடிக்கணும்.  கீழே பாருங்க.


இந்த மாதிரி உள்ளுக்குள்ளே மடிப்புக்களோடு சுருட்டணும்.  சுருட்டியதை அப்படியே மீண்டும் குழவியால் சமன் செய்து இடணும்.


இட்டதை காய்ந்து கொண்டிருக்கும் தோசைக்கல்லில், (நான் சப்பாத்திக்குத் தனிக்கல், தோசைக்குத் தனிக்கல் என வைத்திருக்கேன்.) கொஞ்சம் போய் அடியில் நெய் தடவிப் பரத்திவிட்டுப் போடணும்.  உடனடியாக வேக எண்ணெயோ அல்லது நெய்யோ(நெய்யே நல்லா இருக்கும், முடியாதவங்க நெய்யோடு கடலை எண்ணெய் கலந்துக்கலாம்.) விடக் கூடாது.  ஒரு பக்கம் வெந்து இம்மாதிரி உப்பி வரும்.  அப்போ மறுபக்கம் திருப்பிட்டுக் கொஞ்ச நேரம் கழித்து நெய் ஊற்றினால், நன்கு உப்ப ஆரம்பிக்கும்.உங்கள் பரோட்டா வெந்து கொண்டிருக்கிறது.  விரைவில் ரெடியாயிடும்.  சாப்பிட வாங்க.


அப்பாடா, சமைக்கும்போதே படம் எடுத்து ஒரு வழியாப் போட்ட்டுட்டேன்.  இப்படித் தான் முறுக்குச் சுத்தும்போதும் எடுக்க நினைச்சு மறந்து போச்ச்ச்ச்ச்ச்!  கிருஷ்ண ஜயந்திக்குச் சுத்தறச்சே படம் எடுத்துப் போட்டேன்.  ஆனால் இங்கே போடலைனு நினைக்கிறேன். :))))

44 comments:

 1. பராத்தா மஹாத்மியம் அறிந்தேன். செய்துவிடுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க நெ.த. தமிழ்நாட்டில் என்ன சொன்னாலும் இதைச் சப்பாத்தி என்றே சொல்லுவார்கள். பல ஓட்டல்களிலும் சப்பாத்தி-குருமா என்று கேட்டால் இதான் கொடுப்பார்கள். பரோட்டா என்று கேட்டால் மைதாவில் செய்தது தான்! :( இங்கே கோதுமை பராட்டாவின் ருசியும், மணமும், நன்மையும் அறிய மாட்ட்டார்கள்! :(

   Delete
 2. மைதா பரோட்டா எனக்கும் பிடிப்பதில்லை. ஜவ்வு மாதிரி இருக்கும். துபாய்ல நம்ம வீட்டு வசந்தபவன்ல, பராத்தால எண்ணெய் விடாமல் (மைதா தான்) எனக்கு செய்யச்சொல்லுவேன். மாவில் எண்ணெய் இருக்கும், ஆனால் திரும்ப கடாயில் வாட்டும்போது எனக்கு எண்ணெய் சேர்க்க மாட்டார்கள். அங்க ரொம்ப நல்லா இருக்கும். நம்ம ஊர்ல எங்கயுமே எனக்கு பராட்டா பிடிப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. நான் வட மாநிலங்கள் தவிர்த்து எங்கேயும் பராத்தா வாங்கிச் சாப்பிட்டதில்லை. அங்கே பல ஊர்களில் காலை உணவாக விதம் விதமான பராத்தாக்கள்! அநேகமா உ.கி. தான் தொட்டுக்க! சிலவற்றுக்குத் தயிர், ஊறுகாய்!

   Delete
 3. பராத்தாவுக்கு நல்ல சைட் டிஷ் - என்னைப் பொறுத்தவரைல நல்ல குருமா. நீங்க போட்டிருக்கும் சைட் டிஷ் நல்லா இருக்குமான்னு டவுட்டு.

  ReplyDelete
  Replies
  1. நெ.த. தமிழ்நாட்டுக்குருமாவெல்லாம் வடக்கே கிடையாது! பெரும்பாலும் உ.கி. மட்டும் போட்டுக் கறியாகவோ, கிரேவியாகவோ கொடுப்பார்கள். முன்னெல்லாம் ஆக்ரா ஸ்டேஷனில் பராத்தாவுடன் உ.கி. கூட்டுக் கொடுப்பாங்க! அதிலே வெங்காயம், தக்காளி எல்லாம் இருக்காது. ஆனாலும் நன்றாகவே இருக்கும். எங்களுக்கெல்லாம் பழக்கம் என்பதால் நாங்க இம்மாதிரிக் காய்களோடு சாப்பிடுவோம். குருமா அவ்வளவாப் பிடிக்காது, அதுவும் தமிழ்நாட்டு ஓட்டல்களில் செய்வது!

   Delete
 4. நான்லாம் பிரியாணி (அல்லது புலாவ்) 6 மாசத்துக்கு ஒரு முறை சாப்பிட்டாலே அதிகம். அதுபோல நான் சொன்ன பராட்டா மூன்று மாதங்களுக்கு ஒரு முறை. (அப்போல்லாம் துபாய் போகும்போதெல்லாம் சாப்பிடுவேன்). அவ்ளோதான். வாரம் ஒரு முறைலாம் என்னால் சாப்பிட முடியாது.

  சமீபத்தில் வில்லிவாக்கம் பஸ் ஸ்டாண்ட் அருகில் ஒரு ஹோட்டலில் சென்னா பட்டூரா சாப்பிட்டேன். ரொம்ப எண்ணெய் இல்லாமல் அருமையாக இருந்தது. அதுக்காகவே அங்கு இன்னொரு முறை போகணும்.

  ReplyDelete
  Replies
  1. பிரியாணியோ, சனா படூராவோ வீட்டில் செய்து தான் சாப்பிடுவோம்/சாப்பிட்டிருக்கோம். ஓட்டல்களில் இதெல்லாம் ஆர்டர் கொடுப்பதே இல்லை. வட மாநில ஓட்டல்கள் எனில் தைரியமாகச் சாப்பிடலாம். தி.நகர் போக்ரோடில் இருக்கும் அம்டாவாடி, அண்ணா நகர் சுக்சாகர், அகர்வால் பவன் போன்றவற்றில் வாங்கலாம்.

   Delete
 5. பராத்தா நன்றாக இருக்கிறது. தொட்டுக் கொள்ள உருளை, தக்காளியும் நன்றாக இருக்கிறது.
  வெங்காயம் இல்லை என்றாலும் உருஅளை தக்காளி நன்றாக இருக்கும்,
  வெங்காயம் சேர்த்தால் இன்னும் நன்றாக இருக்கும் இல்லையா?
  படங்கள் எல்லாம் நன்றாக இருக்கிறது.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, வெங்காயம் சேர்த்தால் நன்றாக இருக்கும் தான். நாங்க பெரும்பாலும் வெங்காயம் இல்லாமலேயே பண்ணுவோம். படாட்டா(Bhatata Baji) பாஜி என வெறும் உருளைக்கிழங்கிலேயே தொட்டுக்கச் செய்தும் சாப்பிடலாம். எங்களுக்குப் பிடிக்கும்.

   Delete
 6. நான் அரபு நாட்டில் இருபது வருடம் இருந்தாலும் பிரியாணி எனக்கு பிடிக்காத உணவு.

  மாதத்தில் இரண்டு வெள்ளிக்கிழமை நண்பர் என்னை விருந்துக்கு அழைப்பார்.

  சகோதரி ஃபாத்திமா எனக்கு மட்டும் தனியாக சோறு, மீன்குழம்பு வைத்து விடும் மறக்க இயலாத குடும்பம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, பிரியாணி எல்லாம் வாங்கிச் சாப்பிட்டதே இல்லை! ரயிலில் கொண்டு வருவதைப் பார்த்திருக்கேன். விமானப் பயணங்களில் கூடப் பெரும்பாலும் ஜீரா ரைஸ், தால் தான் கொடுக்கிறாங்க! அதுவும் வெளிநாடுப் பயணம் எனில் நாங்க ஜெயின் மீல்ஸ் தான்! ஆகவே பிரியாணி எல்லாம் வெளியே அதிகம் சாப்பிட்டதில்லை. அவ்வளவாப் பிடிக்கவும் பிடிக்காது.

   Delete
 7. புரோட்டா சாப்பிட்டால் உயிர் போகுமா - தலைப்பே தவறு. அப்படிப் பார்த்தீங்கன்னா, நெல்லிக்காய் சாப்பிட்டாலும், தேங்காய் சாப்பிட்டாலும், சேவை சாப்பிட்டாலும் உயிர் போகும், பக்கத்துல தண்ணீர் இல்லாம, தொண்டை முழுக்க அடைக்கறமாதிரி சாப்பிட்டால்.

  அதே மாதிரி பசி வந்தபோது தண்ணீர் சேராத ஐட்டங்களை அவுக் அவுக்னு (மி.பொடி தடவின இட்லி போன்று) சாப்பிடக்கூடாது.

  ReplyDelete
  Replies
  1. நான்கு நாட்களாகத் தொலைக்காட்சிச் செய்தியில் இதைத் தான் காட்டுகின்றனர். இறந்தவரின் அம்மா, மனைவி அழுவது, பேட்டி எல்லாம் வந்து கொண்டிருக்கிறது. மருத்துவப் பரிசோதனையும் பரோட்டா மூச்சுக்குழலில் சிக்கியதால் மரணம் என்றே சொல்லி இருக்கிறது.

   Delete
 8. இது ஒரு கொடுமை....

  ஆனால் நம்மவர்கள் திருந்த மாட்டார்கள்..

  70 களில் இத்தனை பரோட்டாக் கடைகள் நம்மூர்களில் இருந்ததில்லை...

  ஒரு சாரர் தொடங்கி வைத்த வேலை...
  மட்டரகமான மசாலாக் குழம்பில் ஊற வைத்த பரோட்டாவை சிறு பிள்ளைகளுக்கும் கொடுக்கிறார்கள்...

  மைதா மாவு மிகவும் விபரீதமானதாகி விட்டது...

  அவரவர் விதியை அவரவரே வகுத்துக் கொள்ளட்டும்...

  சாலையோர பரோட்டாக் கடைக்காரர்கள்
  பலரும் செய்யும் அயோக்கியத்தனங்களைச் சொல்வதற்கு இது இடமில்லை....

  ReplyDelete
  Replies
  1. வாங்க துரை! நீங்க சொல்வது சரியே! மைதாவினால் தயாரித்த ப்ரெட் கூட நாங்க வாங்க மாட்டோம். கோதுமை ப்ரெட், அதுவும் ப்ரவுன் ப்ரெட் தான் வாங்குவோம். ஆனால் எல்லோரும் சுவைக்கு அடிமையாகி மைதாவின் செய்தவற்றை வாங்குகின்றனர். இந்தப் பரோட்டா/புரோட்டாக் கடைகள் பத்தி எல்லாம் அவ்வளவாய்த் தெரியாது.

   Delete
  2. அக்கா இங்கும் அதே...கோதுமை ப்ரெட் ப்ரவுன் ப்ரெட் அல்லது ஓட்ஸ் ப்ரெட், மல்டி க்ரெய்ன் ப்ரெட். வீட்டிலும் ப்ரெட் பேக் செய்து கொண்டிருந்தேன்...மகன் இங்கு இருந்த வரை, சென்னையில் இருந்தவரை பேக் செய்து கொண்டிருந்தேன். இங்கு வந்து இன்னும் கோதுமை ப்ரெட் செய்யவில்லை.

   கீதா

   Delete
  3. நான் ப்ரெட், பன் எல்லாம் குழந்தைங்க இருக்கிறச்சே செய்தது. பிட்ஸா கூட பேஸ் தயாரித்து அவனில் வைத்துச் செய்திருக்கேன். என்ன, கொஞ்சம் கொஞ்சம் தென்னிந்திய பாணியில்! பேசல் இலைகளுக்குப் பதிலாகப் புதினா இலைகள், கொத்துமல்லி இலைகள், தக்காளித் தொக்கு, சாஸ், எனச் சேர்ப்பேன். க்ரீமுக்கும் வெண்ணெய்க்கும் எப்போதும் பஞ்சம் இல்லை. சீஸ் தான் வாங்க வேண்டி இருக்கும். அமுல் சீஸ் நல்லா இருக்கும் என்பதால் அதை வாங்குவேன். இப்போக் கூட சீஸ் சான்ட்விச் பண்ணினால் அமுல் சீஸ் தான் வாங்கறேன்.

   Delete
 9. அப்பால வர்றேன்...

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், கோயில் எங்கேயானும் போறீங்களோ?போயிட்டு வாங்க! பிறந்தநாள் நல்லபடியாக உங்கள் பிரச்னைகளைத் தீர்க்கும் நாளாக ஆரம்பிக்கட்டும்.

   Delete
  2. வணக்கம் சகோதரி

   சகோதரர் ஸ்ரீராம் அவர்களுக்கு பிறந்த நாளா? மிக்க மகிழ்ச்சி. அவருக்கு என் மனம் நிறைந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தங்கள் தகவலுக்கு நன்றி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. வாங்க கமலா, உடம்பு சௌக்கியமா? கால் வலி தேவலையா? வரவுக்கும் வாழ்த்துக்கும் ஸ்ரீராம் சார்பில் நன்றி.

   Delete
 10. சுத்திகரிக்கப்பட்ட மைதா உணவு உடலுக்கு நல்லதல்ல. தெரிந்தும் சுவைக்காகவே உண்கின்றனர்.

  ReplyDelete
  Replies
  1. மைதா வாங்கினாலும் அரைக்கிலோ வாங்கினால் பெரிய விஷயம். அதுவும் 3,4 மாதங்களுக்கு வரும்! எதுக்கானும் மாவில் போட்டுப் புரட்டத் தேவைப்படும்போது பயனாகும்.

   Delete
 11. இந்த பராட்டாவும் செய்வதுண்டு நல்ல லேயர் லேயராக வரும்.... அதே போல வட இந்திய லாச்சா (LACHCHA) பராத்தா/பராட்டா வும் இங்கு புரோட்டா என்று மைதாவில் பல தாபாக்களில் செய்வது போலவே கோதுமை மாவிலும் செய்வதுண்டு. புரோட்டா செய்வது போலவே கோதுமை மாவையும் நன்றாக அடித்து அடித்துப் பிசைந்து கொஞ்சம் ஊற வைத்து விட்டு.. நல்ல மெலிதாக ரொம்பவே மெலிதாகத் தேய்த்துக் கொண்டு கொஞ்சம் நெய் அல்லது வெண்ணை தடவி விட்டு சாரி ஃப்ரில் போல மடித்து சுருட்டி வைத்துக் கொண்டு அப்புறம் மென்மையாக அதைத் தேய்த்து கல்லில் போட்டு எடுத்தால் ஹோட்டல்/தாபாக்களில் செய்யப்படும் மைதா புரோட்டா போலவே வரும் அக்கா. நான் பல வருடங்களுக்கு முன் மைதாவில் கடைகளில் செய்யப்படும் புரோட்டா செய்ததுண்டு அதன் பின் அதற்குப் பதில் கோதுமை மாவில் அதே போன்று...லச்சா பராட்டா...

  சூப்பரா இருக்கு அக்கா நீங்க செய்துருக்கறது.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆலூ, முள்ளங்கி, மேதி தான் அடிக்கடி பண்ணும் பராத்தா வகைகள். மத்தது மாமாவுக்குப் பிடிக்காது என்பதால் பண்ணுவதில்லை. "நான்" கூட ஓட்டல்களில் போனால் கூட நாங்க இரண்டு பேர் மட்டும் போனால் ஆர்டர் பண்ணுவதில்லை. தவா ரொட்டி, அல்லது ஃபுல்கா ரொட்டி அல்லது சப்பாத்தி சொல்லிடுவோம்.

   Delete
 12. கீதாக்கா எந்த உணவாக இருந்தாலும் சாப்பிடும் போது பேசிக் கொண்டே சாப்பிடக் கூடாது என்று சொல்வதுண்டுதானே இல்லையா. புரைக்கேறுவது கூட ஏடாகூடமாக ஏறிவிட்டால் உயிருக்கு ஆபத்துத்தான். புரோட்டா என்றில்லை. சாம்பாரிலுள்ள முருங்கைக்காய் சிக்கினாலும் ஆபத்துத்தான். சாப்பிடும் போது பேசுதல், வேக வேகமாகச் சாப்பிடுதல் எல்லாம் தவிர்க்க வேண்டும். சீக்கிரமா போணும் அதனால சீக்கிரமா சாப்பிடணும் என்று சொன்னால் நான் கூடியவரை சாப்பிடுவதை தவிர்த்துவிடுவேன். அல்லது தயிர்சாதம் மட்டும் அல்லது மோர் மட்டும் குடித்துவிட்டுக் கிளம்பிவிடுவேன். என்னால் அவக் அவக்கென்று சாப்பிட முடியாது. நிதானமாகத்தான் சாப்பிடுவது வழக்கம்.

  அதனாலேயே கல்யாணங்களில் சாப்பிடுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது. அவர்கள் பாட்டுக்குப் போட்டுக் கொண்டே போகிறார்கள். சாப்பிட்டு முடிப்பதற்குள் இலை எடுக்க ரெடியாக இருக்கிறார்கள். இலை எடுத்துவிட்டால் பேப்பரை மடித்துக் கொண்டே நம் இலை வரை வந்துவிடுகிறார்கள்...கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. //கல்யாணங்களில் சாப்பிடுவது என்பது மிகவும் கடினமாக இருக்கிறது.// - ஹை ஃபைவ் - எனக்கும் சில நாட்கள் முன்பு அந்த அனுபவம்தான். மெகானிகலாக ஒண்ணு மாத்தி ஒண்ணு போட்டுக்கிட்டே இருக்காங்க. நிம்மதியா சுவைத்துச் சாப்பிட முடியலை. அடுத்தவங்களைப் பார்த்துக்கொண்டே அதே வேகத்தில் சாப்பிடவேண்டியதாக இருக்கு, கொஞ்சம்கூட ருசிக்காமல்.

   எனக்கு சாப்பிடும்போது, தனியா ரசித்து சாப்பிடணும்...யாரும் கூடப் பேசிக்கொண்டு இருக்கக்கூடாது. சாப்பிடுவது என்பதும் ஒரு வேலை தானே. அதை கவனத்துடன் செய்யணும் இல்லையா?

   Delete
  2. கல்யாணங்களில் சாப்பிடுவது எனக்கும் கஷ்டம் தான். ஆனால் நான் பரிமாறுபவர்களிடம் சொல்லிடுவேன். அப்படியும் பரிமாறினால் அப்படியே வைச்சுட்டு எழுந்து வந்துடுவேன். இல்லைனா அடுத்தடுத்துக் கொண்டு வருவதை வேண்டாம்னு சொல்லிடுவேன். இப்போல்லாம் ரொம்பவே மென்னியைப் பிடிக்கிறாங்க.

   Delete
 13. அவர் பேசிக் கொண்டே சாப்பிட்டதால் ஒரு வாய் சாப்பிட்டு அந்த புரோட்டா உணவுக் குழாய் வழியாகக் கீழே இறங்குவதற்குள் அடுத்த புரோட்டா துண்டை சாப்பிட்டிருப்பார். அதுவும் மென்று சாப்பிட்டுருக்க மாட்டார் என்றே தோன்றுகிறது. அதான் அது உணவுக் குழாயில் சிக்கியிருக்கிறது. மற்றொன்று. இந்தப் புரோட்டா சரியாக வேக வில்லை என்றால் அந்த மைதா வழ வழ என்றுதானே இருக்கும் எங்கேனும் ஈஷிக் கொண்டதோ என்னவோ..இப்படிப் பேசிக் கொண்டே சாப்பிட்டதால். அதான் நம்ம வீட்டுல எல்லாம் சொலுவாங்களே அக்கா சாப்பிடும் போது சாப்பாட்டில் தான் கவனம் தேவிய. டிவி பார்த்துக் கொண்டோ அல்லது பேசிக் கொண்டோ சாப்பிடக் கூடாது என்று.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நெல்லிக்காய், சேவை-குழம்பில் தோய்த்துச் சாப்பிடலைனா - ரொம்ப கவனமா இருக்கணும். நான் பக்கத்தில் தண்ணீர் இல்லாமல் இவைகளைச் சாப்பிட மாட்டேன்.

   Delete
  2. எந்த உணவு சாப்பிட்டாலும் நன்கு மென்று சாப்பிட்டால் பிரச்னை இல்லை தான்! பாவம், அந்த மனிதருக்கு விதி பராட்டாவில் இருந்திருக்கிறது.

   Delete
 14. புரோட்டா என்று ஆரம்ப காலங்களில் சொல்லிக் கொண்டிருந்தேன். இப்போதெல்லாம் பரோட்டா என்று சொல்கிறேன். அதன் மீதான காதலை கொஞ்சம் கொஞ்சமாக விட முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்.

  என் நண்பர் ஒருவர் சில லிங்க்ஸ் எல்லாம் கொடுத்து பரோட்டா ஏன் சாப்பிடக் கூடாது என்று சொன்னார். மைதாவில் வெள்ளை நிறம் வர என்ன செய்வார்களென்றும் சொன்னார். நியாயமாக அதை எல்லாம் படித்தால், கேட்டால் அப்புறம் பரோட்டா சாப்பிடவே கூடாது.

  ReplyDelete
  Replies
  1. கோதுமை பராத்தா நன்கு தைரியமாகச் சாப்பிடலாம். ஒருமுறை நம்ம வீட்டுக்கு முன்கூட்டியே சொல்லிட்டு வாங்க. பராத்தா செய்து தருகிறேன்.

   Delete
 15. படத்தைப் பார்த்தால் பரோட்டா மாதிரித் தெரியாமல் அடை மாதிரி தெரிவது எனக்கு மட்டும்தானா? கோதுமை மாவு போட்டு செய்யலாம்தான். மனமும் பொறுமையும் வரவேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. முதல் படத்தில் உப்பிக்கொண்டு வந்திருக்கே, தெரியலையா? அதோடு நாங்க கோதுமையை வாங்கி அங்கேயே மிஷினில் சுத்தம் செய்து உடனே அரைத்து வாங்குவோம். நம்ம ஊர் மாதிரி வெயிலில் எல்லாம் காய வைப்பதில்லை. கோதுமையின் ப்ரவுன் நிறம் சப்பாத்தி, பராத்தா, பூரி எல்லாவற்றிலும் தெரியும். குஜராத், மஹாராஷ்ட்ராவில் போளி கூட கோதுமை மாவில் தான்.

   Delete
 16. பிரியாணி எனக்கு பிடிப்பதில்லை. அதேபோல ஃபிரைட் ரைஸும் பிடிப்பதில்லை.

  ReplyDelete
  Replies
  1. நாங்க குழந்தைங்களுக்குச் செய்து கொடுப்போம். இப்போவும் ஒரு மாறுதலுக்காக இதெல்லாம் எப்போதேனும் பண்ணுவேன்.

   Delete
 17. அருமையான பராத்தா. தொட்டுக்க தக்காளி ,உ.கிழங்கு.
  மைதாமாவை வாங்கியே நாட்களாகிறது.

  பட்டேல் ப்ரதர்ஸ் சப்பாத்தி நன்றாக விலை போகிறது.
  கண்முன்னே மாவு பிசைந்து கைபடாமல் மெஷினில் செய்து சுடச்சுட தருகிறார்கள்.
  அந்த இளைஞன் குடும்பத்தை நினைத்தால் வருத்தம்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி, இந்தியாவை விடவும் யு.எஸ்ஸில் தான் இந்தியப் பொருட்கள் தாராளமாய்க் கிடைக்கின்றன! :)))) எங்க பையரும் வாங்குவார். பெண் எப்போதேனும் வாங்குவாள்.

   Delete
 18. வணக்கம் சகோதரி

  இந்த பரோட்டா செய்தியை நானும் படித்தேன். மிகவும் வருத்தமாக இருந்தது. உணவு இல்லாமல் எத்தனை பேர் உயிர் விடுகின்றார்கள். உணவே ஒரு மரணத்திற்கு உதவியாய் இருந்திருக்கிறதே என மிகவும் மனசுக்கு கஸ்டமாக இருந்தது.

  தங்களின் பரோத்தா செய்முறையும், உ. கி மசாலா செய்முறையும் நன்றாக இருந்தது அழகாக புகைப்படங்கள் எடுத்து விபரமாக செய்முறைகளையும் பதிவிட்டு இருக்கிறீர்கள். மிக்க நன்றி.

  நானும் கோதுமையில் எப்போதாவது பரோட்டா செய்திருக்கிறேன். முக்கால்வாசி சப்பாத்திதான் சுலபமாக செய்து விடுவேன். மைதா உடல் நலத்துக்கு தீங்கு என தெரிந்தவுடன் அதை உபயோகிப்பதில்லை. ஆனால் நிறைய இடங்களில் பரோட்டா இன்னமும் மைதாவில் தான் செய்கிறார்கள். போளி மைதாவில் செய்யப்படுகிறது. இந்த உணவெல்லாம் சாப்பிட்டு நாளாகி விட்டது.தங்கள் செய்முறையை பார்த்தவுடன் கோதுமை மாவை வைத்து பரோத்தா செய்யும் எண்ணம் வருகிறது. பார்க்கலாம்.. பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. இங்கெல்லாம் சப்பாத்தி என்பதே நாங்க பராத்தா என்கிறோம்னு நினைக்கிறேன். மற்றபடி பராத்தா செய்வது கஷ்டம் ஏதும் இல்லை கமலா. ஒரு முறை முயன்று பாருங்கள். நான் அதிகம் மசாலா சேர்க்காமல் தொட்டுக்கொள்ளும் காய்கள் செய்வேன். வெங்காயம், பூண்டு இல்லாமலும் ஜெயின் சாப்பாடு முறையில் செய்வதும் உண்டு.

   Delete
 19. ராஜபாளையத்தில் படிக்கும் போது விரும்பி, விருதுநகர் புரோட்டா சாப்பிட்டதுண்டு... இப்போதெல்லாம் எப்போதாவது...

  செய்முறை அருமை...

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி. நீங்க சாப்பிட்டது புரோட்டா! ஹாஹாஹா! இது பராட்டா/பராத்தா! :)

   Delete