எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, July 13, 2019

காஞ்சிபுரத்துக்குப் போகலையா?

என் பயணங்களில்  இந்தச் சுட்டிக்குப் போனால் மேல் அதிக விபரங்கள் படிக்கலாம்.

2009 ஆம் ஆண்டு நாங்க காஞ்சிபுரம், சுற்றுவட்டாரக் கோயில்களுக்குச் சுற்றுலாவாகப் போனோம். காஞ்சிபுரத்திற்குக் கல்யாணம் ஆனதில் இருந்து பலமுறை போயிருந்தாலும் இம்முறையும் போகவேண்டும் என்னும் ஆவல். ஏதேனும் பார்க்காமல் விட்டிருப்பதைப் பார்க்கலாமே என்பதோடு நாம தான் எழுத்தாளி வேறே ஆயிட்டோமா! எழுதறதுக்கும் விஷயம் வேண்டாமா என்பதே!  இந்தச் சுற்றுலா அம்பத்தூரிலேயே ஒருத்தர் ஏற்பாடுகள் செய்து அழைத்துச் சென்றார். மிக நல்ல மனிதர். அதிகம் கூட்டம் சேர்த்துக்கொள்ள மாட்டார். 20 பேர்களுக்கு மேல் (அவரையும் ஓட்டுநரையும் உதவி ஆளையும் சேர்த்து) சேர்த்துக் கொள்ள மாட்டார். உணவு விஷயத்தில் மிகவும் தாராள மனப்பான்மையுடன் நல்ல ஓட்டல்களில் ஏற்பாடு செய்து தருவார். நாங்க குழுவாகப் போனதிலேயே இவருடன் சென்றதைத் தான்மிகவும் ரசித்துச் சென்றோம். திருவண்ணாமலைக்கும் இவரே அழைத்துச் சென்றார். அந்த வருஷம் கார்த்திகை தீபத்துக்குக் கூட அழைத்துச் செல்வதாய்த்தான் சொன்னார். நாங்க தான் கூட்டத்தில் வேண்டாம்னு போகலை! மிச்சம் கீழே! இவை சுமார் பத்து வருஷங்கள் முன்னால் போய்விட்டு வந்தது குறித்து எழுதியது. ஏற்கெனவே எழுதி இருந்தாலும் யாரும் அதிகம் படிக்கவில்லை. இப்போது காஞ்சிபுரம் செல்வது தான் அனைவருக்கும் ஒரே நோக்கம் என்பதால் காஞ்சியைப் பற்றி எழுதலாமா என யோசித்தபோது இவை நினைவுக்கு வந்தன. ஆகவே இங்கே எடுத்துப் போட்டிருக்கேன்.

அத்தி வரதர் வரலாறு க்கான பட முடிவு

இந்த ட்ராவல்ஸ்காரர் இருக்காரே, இவர் தான் இதுவரைக்கும் நாங்க போனதிலேயே சிறந்த சுற்றுலா நடத்துநர். ரொம்ப நல்லாக் கவனிச்சுக்கிட்டார் எல்லாரையும். முக்கியமாச் சாப்பாடு விஷயத்திலே ஏமாத்தலை. மந்திராலயம், நவ பிருந்தாவனம் முதல் முறை போனப்போ ட்ராவல்ஸ்காரர் மூன்று நாட்களும் கிட்டத் தட்ட எங்களை விரதமிருக்கச் சொல்லலை. சாப்பாடே சரியாக் கொடுக்கலை. பலரும் திண்டாடினாங்க. இங்கே அதுமாதிரி நடக்கலை. ட்ராவல்ஸ் விலாசம். கடைசியிலே கொடுக்கிறேன். இப்போ காமாக்ஷி அம்மன் பற்றிய ஒரு குறிப்பு.

காஞ்சி காமாட்சி அம்மன் க்கான பட முடிவு

சக்தி பீடங்களில் ஆகாயத் தலமாகவும், பஞ்ச பூதத் தலங்களில் பிருத்வி எனப்படும் மண் தலமாகவும் விளங்குவது காஞ்சிபுரம். “நகரேஷு காஞ்சி” என்று பாரவி /( சிலர் காளிதாஸன் என்று சொல்கிறார்களே?? நான் படிச்சது பாரவினு தான்.) என்னும் மஹாகவியாலும், “கல்வியிற் சிறந்த காஞ்சி” என்று தமிழ்நாட்டுக் கவிஞர்களாலும், (யாருங்க சொன்னது??) புகழப்பட்ட காஞ்சி எப்போது தோன்றியது என்று சொல்ல முடியாத காலத்திலேயே தோன்றியது. காஞ்சி புராணமே எழுதலாம். சிதம்பர ரகசியத்துக்குப் போட்டியா அமையும். செண்பகவனம் என ஒரு காலத்தில் செண்பகக்காடாக இருந்த இடமான காஞ்சிக்குப் பல பெயர்கள் உண்டு. அதை எழுதினா மத்தது எழுத முடியாது. சுருக்கமா அம்பிகையின் நாபி விழுந்த இடம் காஞ்சி என்று சொல்லுவார்கள். மோக்ஷபுரிகளில் ஒன்றாகவும் காஞ்சி மட்டுமே தென்னிந்தியத் தலங்களில் இடம் பெற்றுள்ளது.

பாலாற்றங்கரையில் அமைந்த காஞ்சி நான்கு கோட்டங்களைக் கொண்டது. புண்ணியகோட்டம் என்னும் விஷ்ணு காஞ்சி, ருத்ர கோட்டம் என்னும் சிவகாஞ்சி, குமரகோட்டம் என்னும் சுப்ரமண்யரின் திருக்கோயில் இருக்குமிடம், காமகோட்டம் என்னும் ஸ்ரீகாமாக்ஷியின் கடைக்கண் பார்வை கிடைக்குமிடம் ஆக நான்கு கோட்டங்கள். மற்ற ஊர்க்கோயில்கள் அனைத்தும் கிழக்கோ, மேற்கோ பார்த்து அல்லது வடக்குப் பார்த்து அமைந்தால் காஞ்சியின் கோயில்கள் அனைத்துமே அன்னையின் கடைக்கண் பார்வைக்காக காமாக்ஷி அம்மன் கோயிலையே பார்த்த வண்ணம் அமைந்திருக்கின்றன. இந்த ஆலயங்களின் உற்சவங்களின் போது வீதி உலா வரும் மூர்த்தங்கள் காமாக்ஷி அம்மன் கோயிலைச் சுற்றியே செல்லும் எனக் கேள்விப் படுகிறோம். மேற்குறிப்பிட்ட நான்கு கோட்டங்கள் தவிர, ஜைனகாஞ்சி, புத்த காஞ்சி என்றும் இருந்ததாகச் சொல்லப் படுகிறது. இதில் புத்த காஞ்சியானது தற்போதைய பெரிய காஞ்சிபுரத்திலே அடங்கிவிட்டது எனவும், ஜைனகாஞ்சி அருகில் உள்ள திருப்பருத்திக்குன்றதைச் சொல்லப் படுகிறது என்றும் சொல்கின்றனர். ஜைனர்களின் கோயில்கள், ஜைன மதத்தைச் சேர்ந்தவர்கள் வசிக்குமிடங்கள் என இன்றும் அங்கே ஜைனர்கள் இருப்பதாயும் சொல்லுகின்றனர்.

காமாக்ஷி அம்மன் பிலத்துவாரத்தில் இருந்து தோன்றியவள் . பண்டாசுரனை அழிக்கத் தோன்றிய அன்னை, பண்டாசுரனை வதைத்ததும், அம்பாளின் கட்டளைப்படி காயத்ரி மண்டபம் அமைக்கப் பட்டு, கன்னியான அம்பிகை அங்கே பிரதிஷ்டை செய்யப் பட்டாள். பின்னர் அந்த மண்டபம் மூடப் பட்டு, இரவு முழுதும் அம்பிகையை துதித்தவண்ணம் அனைவரும் வெளியிலேயே நின்றார்கள். அருணோதய காலத்தில் கதவு திறக்கப் பட்டது. உள்ளே பார்த்தால் கன்யா ரூபமாய் உள்ளே சென்ற அம்பிகை, சர்வாலங்கார பூஷிதையாக, நான்கு புஜங்களுடன், பத்மாசனத்தில் அமர்ந்திருக்கக் கண்டனர். இப்படித் தோன்றிய காமாக்ஷியைத் தான் இன்றும் நாம் கண்டு ஆனந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

ஈசனைத் திருமணம் செய்து கொள்ளுவதற்காகத் தன்னைச் சுற்றிப் பஞ்சாக்கினி வளர்த்து தவத்தில் ஈடுபட்டிருந்த அம்பிகை மணலால் சிவலிங்கம் பிடித்துப் பூஜை செய்ய, இறைவன் அம்பிகையின் பக்தியைச் சோதிக்க எண்ணிக் கம்பாநதியில் வெள்ளப் பெருக்கை உண்டாக்க, சிவலிங்கம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் படும் போல் ஆகிவிட்டது. அம்பிகை மாசி மாதமும், பங்குனி மாதம் கூடும் சமயம் இருக்கும் விரதமான காரடையான் நோன்பு இருந்து, மணல் லிங்கத்தை அணைத்தவண்ணமே வழிபாடுகள் செய்ய, இறைவன் அருள் கிடைத்தது. அடுத்து நாம் பார்க்கப் போகும் ஏகாம்பரேஸ்வரர் கோயிலில், லிங்கத்தை அணைத்த வண்ணமே அம்பாள் இருக்கும் மூலஸ்தானத்தைத் தான் பார்க்கப் போகிறோம்.


ஆதிசக்தியை ராஜராஜேஸ்வரியாக வழிபட்ட பிரம்மன் பூஜித்த தாமரை மலர் ஒன்று மானுடனாக மாறி விண்ணில் இருந்து பூமிக்கு வர, அவனுக்கு ஆகாச பூபதி என்ற பெயருடன் காஞ்சியை ஆண்டுவரச் செய்தனர். அவன் குழந்தைப்பேறுக்காகத் தவம் இருக்க விநாயகரை அவனுக்கு மகவாகப் பிறக்கும்படி அருளுகின்றாள் அம்பிகை. குழந்தைக்குத் துண்டீரன் எனப் பெயரிட்டு வளர்த்து வந்த வேளையில், அரசன் நடத்திய சுமங்கலி போஜனத்தில் அவன் அறியாமல் காமாக்ஷியும் கலந்து கொள்ள, குழந்தையாய் வந்த விநாயகரை தாயைக் கண்டு தவழ்ந்து அவளிடம் செல்ல, அன்னை மறைந்தாள். அன்னை அருந்திய உணவில், அரசியின் மாலையின் முத்து ஒன்று பருப்போடு கலந்து அன்னையின் வயிற்றில் போக, தான் எடுத்துக் கொண்ட ஒரு தங்க முத்துக்காக, நகரம் பூராவும் தங்கமாய் வருஷிக்கச் செய்தாள் அன்னை. துண்டீரன் ஆண்டதாலேயே இந்தப் பகுதி தொண்டை நாடு என்ற பெயரும் பெற்றது.

காமாட்சி பற்றி ஆரம்பிச்சிருக்கே என நினைக்க வேண்டாம். தொடர்ந்து வரதரும் வருவார். வரம் தருவார். சென்னையில் இருந்தவரை அநேகமாக ஆறு மாதத்துக்கு ஒரு முறையாவது ஏதானும் காரணத்தினால் காஞ்சிபுரம் சென்று வருவோம். இப்போக் கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்கும் மேல் ஆகின்றன காஞ்சிபுரம் போய்!


53 comments:

 1. அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி.
  நானும் வரதரை சந்திக்கணும்னு எண்ணம் இருக்கு.

  வாழ்க்கையில் பிரச்சனை வரும்போதுதான் நம்மளை நினைக்கிறான் என்று அவர் நினைப்பாரோ...
  என்ற தயக்கம் மனதில்.

  அவரோட அடுத்த விசிட்டில் கண்டிப்பாக நானும் பார்க்க முடியாது. பார்க்கலாம்.

  ReplyDelete
  Replies
  1. போயிட்டு வாங்க கில்லர்ஜி! உங்களுக்கு எளிதில் தரிசனம் கொடுப்பார் வரதர்! ஆனால் 23 தேதிக்குப் பின்னர் போயிட்டு வாருங்கள். அது வரைக்கும் விஐபி, விவிஐபி என வந்து கொண்டு இருக்கிறார்கள்.

   Delete
  2. அவர் அதெல்லாம் ஏதும் நினைக்க மாட்டார். அவரே கதி என்று போய் நில்லுங்கள்! பிரார்த்தனை செய்யுங்கள்.

   Delete
 2. ஊரெங்கும் அவர் பற்றியே பேச்சு. எல்லோரும் நம்மைப் பார்த்து கேட்கும் கேள்வி "பார்த்தாச்சா?" இல்லை என்று சொல்ல வெட்கப்பட்டு, சங்கடப்பட்டே பாதிபேர் சென்று பார்த்து விட்டு வந்து விட்டார்கள். எல்லோரும் பார்த்து நாம் மட்டும் பார்க்காமலிருந்தால் எப்படி!

  எனக்குஇன்னும் அழைப்பு வரவில்லை!

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஶ்ரீராம், நானெல்லாம் போய்ப் பார்க்கவே முடியாது! :) வீட்டிலேயே நிற்கத் தடா! அங்கே போய் எப்படி நிற்பது? இதுக்கெல்லாம் வெட்கப்பட்டால் என்ன ஆவது? 79 ஆம் வருடம் அத்தி வரதர் வந்தப்போ நாங்க செகந்திராபாதில் இருந்தோம்.

   Delete
  2. ஸ்ரீராம் இப்போது இதுதான் டாப்பிக்!!

   எங்கள் குடும்ப குழுவில் சிலர் தரிசனம் பற்றி நொந்துகொண்டிருக்க நொந்த அனுபவ ஃபார்வேர்டும் வந்து கொண்டிருக்க நேரில் சென்ற சித்தப்பாவின் அனுபவத்தை உங்கள் அனுபவம் எப்படி என்று ஒருவர் கேட்க...

   அதற்கு மற்றொரு உறவினர் ஒருவர் போட்டிருந்தார்... "எனக்கு எந்தவிதக் கஷ்டமும் இல்லாமல் திவ்யமான தரிசனம் கிடைத்தது. பாண்டிச்சேரியில் உட்கார்ந்து கொண்டு வாட்சப்பைத் திறந்தேன். தள்ளுமுள்ளு இல்லாத திவ்யமான ஏகாந்த விஐபி தரிசனம்!" என்று !!!!!!!

   கீதா

   Delete
  3. முதல் வாரம் அவ்வளவாகக் கூட்டம் இல்லை. அதன் பின்னர் கூட்டம் அதிகம் ஆகிவிட்டது! இப்போக் கடந்த ஐந்தாறு நாட்களாகக் கூட்டம் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு இருக்கிறது. இவை எல்லாம் முகநூல் நண்பரான காஞ்சீபுரத்துக்காரரான கேசவபாஷ்யம் வி.என். அவர்கள் அவ்வப்போது அளிக்கும் தகவல்கள். தற்சமயம் அனைவரும் இரவே வந்து படுத்துக் கொள்வதாகச் சொல்கிறார். குழந்தைகள், முதியோர்கள் தக்க பாதுகாப்பு இன்றி வரவேண்டாம் எனவும் கைக்குழந்தைகளை எடுத்துக்கொண்டே வரவேண்டாம் எனவும் சொல்கிறார்.

   Delete
  4. இப்போது கூட அத்திவரதர் தரிசனம் செய்து கொண்டே தான் எழுதுகிறேன். நமக்கெல்லாம் இது தான் வசதி!

   Delete
 3. ஆரம்பித்திருக்கும் பதிவு காஞ்சி பற்றிய சிறப்புகளை சொல்வதாக இருக்கிறது. இங்கிருந்து புண்ணியம் தேடி வடநாடு செல்கிறோம். இங்கு அருகில் இருக்கும் தலத்தை விட்டு விடுகிறோம். அருகில் இருந்தாலே அலட்சியம்!

  ReplyDelete
  Replies
  1. ஶ்ரீராம், அங்கிருந்தும் இங்கே யாத்ரிகர்கள் வருகின்றனர் அல்லவா? ஒவ்வொரு தலத்துக்கும் ஒவ்வொரு வகையில் சாந்நித்தியம் இருக்கும். அருகில் இருந்தால் அலட்சியம் என்றெல்லாம் இல்லை. மெதுவாப் பார்த்துக்கலாம்னு ஒரு எண்ணம். ஆனால் நாங்க அடிக்கடி காஞ்சிபுரம் போவோம். ஒரிக்கையில் தான் போய் இருக்கணும்னு ஒரு எண்ணமும் இருந்தது. ஆனால் விசாரித்தால் சரியானபடி ஒத்துழைப்புக் கிடைக்கவில்லை.

   Delete
  2. ஶ்ரீராம்.. அலட்சியம் என்றில்லை.. பக்கத்துல தானே.. பஸ் பிடித்தால் போயிடலாம் என்ற எண்ணம்.

   கடவுள் அருளால் நான் போயிட்டு வந்துட்டேன் 4ம் நாளில். இப்போலாம் 5-6 மணி நேரம் ஆகிறதாம். விவிஐபி படையெடுப்பு

   Delete
  3. பலரும் போயிட்டுப் பார்க்க முடியாமல் திரும்பினதையும் எழுதி இருக்காங்க! இன்று கூட்ட நெரிசலும் அதிகம். காஞ்சிபுரத்துக்காரர் ஆன கேசவபாஷ்யம் வி.என். முகநூல் நண்பர் அவ்வப்போது தகவல்கள் தெரிவிக்கிறார். காலை 3 மணிக்கே வரிசை கூட ஆரம்பிக்கிறதாம். எட்டு மணிக்குத் தான் கோபுர வாசல். பத்து மணிக்கு தரிசனம். இன்றிலிருந்து இரவே போய்ப் படுக்கப் போறாங்களாம். கைக்குழந்தைகளை எல்லாம் கொண்டு வர வேண்டாம்னு எச்சரிக்கை கொடுத்திருக்காங்க!

   Delete
 4. ஆரம்பித்திருக்கும் பதிவு காஞ்சி பற்றிய சிறப்புகளை சொல்வதாக இருக்கிறது. இங்கிருந்து புண்ணியம் தேடி வடநாடு செல்கிறோம். இங்கு அருகில் இருக்கும் தலத்தை விட்டு விடுகிறோம். அருகில் இருந்தாலே அலட்சியம்!

  ReplyDelete
  Replies
  1. இரண்டு முறை வந்திருக்கு! :))))

   Delete
 5. வணக்கம் சகோதரி

  காஞ்சி வரலாறு அருமை. அம்பிகையின் வரலாறு படிக்க நன்றாக உள்ளது. தங்கள் அனுபவங்களும் நன்றாக உள்ளது. இந்த மாதிரி அழைத்துச்செல்ல நல்ல மனிதர்கள் கிடைத்தால் பயணங்கள் இனிதாகவே இருக்கும்.

  நான் சென்னையில் இருந்த போது ஒரு தடவை உறவினர்களுடன் காஞ்சிபுரம் சென்றுள்ளேன். எல்லா கோவில்களையும் தரிசித்து விட்டு காஞ்சி மடத்துக்கும் பெரியவாளை நமஸ்கரிக்க சென்றிருந்தோம். லைனாக நின்று தரிசித்து வரும் போது தீடீரென கூட்டம், தள்ளு முள்ளு, என்னவென்றே புரியாத நிலையில் கூட்டத்தின் நடுவே சிக்கி திணறி விட்டோம். அப்போதுதான் வாங்கி அணிவித்திருந்த என் மகளின் (3 வயதிருக்கும்) தங்கச் செயின் அங்கு தவறி விட்டது. நல்லவேளை குழந்தைக்கு ஏதும் காயமில்லாத அளவுக்கு பறிமுதல் செய்திருந்தார்கள். கொஞ்ச நாட்களுக்கு அந்த நினைவாகவே இருந்தது அன்று கோவில்களை தரிசித்த நிம்மதி சற்று குறைந்து போய் விட்டது. அதிலிருந்து கூட்டம் நிறைய இருக்கும் இடங்களை பார்த்தாலே எங்களுக்கு அலர்ஜி. காஞ்சிபுரம் என்றதும் அந்த நிகழ்வும் நினைவுக்கு வந்து விடும். அத்திவரதரை சென்று தரிசிக்க நானும் இப்போது ஆசைப்படுகிறேன். அவன் அருள் இல்லாமல் எப்படி அது நடைபெறும்? சகோதரர் கில்லர்ஜி சொல்வது போல் "அவருடைய அடுத்த விசிடில் நானும் பார்க்க இயலாது.." என்னசெய்வது? எது கிடைக்க,எது நடக்கவிருக்கிறதோ அதுதானே நமக்கு சாஸ்வதமாகும்.

  நடக்க, நடக்க நாராயணன் செயல்.
  படிக்க, படிக்க பரந்தாமன் அருள். என்று அடிக்கடி கூறிக் கொள்வேன்.

  மேலும் காஞ்சிபுரத்தைச் பற்றி தங்கள் பதிவில் படிக்க ஆவலாக உள்ளேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, நானும் ஒரு சில முறை காஞ்சிபுரத்தில் தங்கி இருந்து பார்த்திருக்கோம். அநேகமாக எல்லாக் கோயில்களுமே 2,3,4(?) முறைகள் போனதாகத் தான் இருக்கும். கல்யாணம் ஆன புதுசிலே சங்கர மடத்திற்குப் பரமாசாரியார் இருக்கையில் போனது தான்! ஆனால் அப்போது கலவையில் இருப்பதாகச் சொல்லவே அங்கிருந்து கலவை சென்று போய்ப் பார்த்தோம். எல்லோருக்கும் சாப்பாடு போட்டிருக்கிறார்கள். எங்களுக்குத் தெரியலை. தாமதமாய்ப் போனோம். ஆனாலும் விடவில்லை. சாதம் வடித்துத் தயிர்சாதம் கலந்து தரச் சொல்லி இருக்கிறார்கள் போல! யார் சொன்னார்களோ தெரியாது! அந்த மாதிரித் தயிர்சாதம் அதன் முன்னும், பின்னும் சாப்பிட்டதில்லை! அதன் பின்னரும் சில முறைகள் சங்கர மடம் சென்றிருக்கிறோம். ஒரு முறை உறவினர் பாதபூஜை! அங்கேயே சாப்பாடு!

   Delete
  2. அத்தி வரதரின் அடுத்த விசிடில் நாம் யாருமே பார்க்க முடியாதே! சந்ததிகளுக்கு அனுகிரஹம் கிட்டட்டும்!

   Delete
 6. //வாழ்க்கையில் பிரச்சனை வரும்போதுதான் நம்மளை நினைக்கிறான் என்று அவர் நினைப்பாரோ...
  என்ற தயக்கம் மனதில்.//

  இறைவனை எப்போதும் நினைக்க வேண்டும், பிரச்சனை வரும் போது அவன் மட்டுமே உதவ முடியும் என்று மேலும் சிக்கென பிடிக்க வேண்டும்.
  தேவகோட்டை ஜி மனதில் தயக்கம் இல்லாமல் அவரை பார்த்து வாருங்கள்.
  எல்லோருக்கும் வேண்டி வாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி அரசு, இதுக்குக் கொடுத்த கருத்துக் காணாமல் போயிருக்கு! பிரச்னை இல்லைனாலும் நாம் எல்லோருமே அவனே கதி என இருந்துவிட்டால் கவலை ஏது? பரிபூரண சரணாகதி தான் இங்கே தேவை! கில்லர்ஜிக்கும் அது தெரியாமல் இருக்குமா? என்னவோ தயக்கம் அவருக்கு!

   Delete
 7. நாங்களும் காஞ்சிபுரத்தில் மூன்று நாள் ஓட்டலில் தங்கி, பாடல்பெற்ற தலங்களையும், திவய தேசங்களையும் பார்த்தோம். (குடும்பத்தோடு)

  அந்த நாட்கள் நினைவில் வருகிறது. பல வருடங்கள் ஆச்சு.

  காமாட்சி அம்மனின் விரிவான வரலாறு அருமை.
  வரதரை பற்றி அறிய தொடர்கிறேன்.
  இங்கும் எல்லோரும் வரதரை பார்க்க வில்லையா ? என்று கேட்கிறார்கள்.
  வரதர் குளத்திலிருந்து வந்த நாள் முதலாக அவரை பார்த்துக் கொண்டு இருக்கிறோம். இது போனற கேள்விகளை கேட்டுக் கொண்டு இருக்கிறோம்.

  ReplyDelete
  Replies
  1. கோமதி, நாங்க குடும்பத்தோடு சென்ற இடங்கள் ராமேஸ்வரம், கன்யாகுமரி, திருச்செந்தூர், "பெண்"களூர், மைசூர், ஶ்ரீரங்கப்பட்டினம், கோவா இப்படி! எல்லாம் எல்டிசியில் போவோம். அதன் பின்னர் நாங்களாகப் போனது தான் மற்றவை எல்லாம். காஞ்சிபுரத்துக்குக் குழந்தைகளும் போயிருக்காங்க. ஆனால் எங்களுடன் வந்ததில்லை. நாங்க 2010 வரை போய்க் கொண்டுஇருந்தோம். அத்தி வரதரைப் பார்க்க எல்லாம் போக முடியாது. அத்திவரதர் அங்கிருந்தே நம்மை ஆசீர்வாதம் பண்ணட்டும். இங்கிருந்தே நாங்க வேண்டிக்கிறோம்.நீங்க போயிட்டு வந்தால் விரிவாக எழுதுங்கள். படங்களுக்குச் சொல்லவே வேண்டாம். ஆனால் அந்தக் கூட்டத்தில் கஷ்டம்னு நினைக்கிறேன்.

   Delete
  2. மணி கணக்கில் நிற்க வேண்டும் என்றாலே சார் வேண்டாம் என்று விடுவார்கள்.
   இப்போது வெகு நேரம் நிற்க முடியாது, வெகு நேரம் நடக்க முடியாது. போனோம், வந்தோம் என்றால் தான் முடியும். நாளுக்கு நாள் கூட்டம் அதிகமாகிறது வரதனைப் பார்க்க.
   தினம் மயங்கி விழுவது, வலிப்பு வந்து விழுவது போலீஸார் பரிவுடன் பார்த்துக் கொள்வது என்று செய்திகளை பார்த்துக் கொண்டு இருக்கிறோம்.

   நீங்கள் சொல்வது போல் அங்கிருந்தே நம்மை ஆசீர்வாதம் செய்யட்டும் வரதன்.

   Delete
  3. குறைந்தது நான்கு மணியில் இருந்து ஆறு மணி வரை நிற்கணும் என்கின்றனர். அதைத் தவிரவும் கோயிலின் கிழக்கு கோபுர வாசலுக்குப் பேருந்து நிலையம்/அல்லது கார் நிறுத்துமிடம் அங்கிருந்து நடை! திரும்பச் செல்லும்போது வேறு வாயில் வழியாக விடுவதால் அங்கிருந்து மறுபடியும் நீண்ட நடை! என எல்லாம் இருப்பதால் நம்மால் ஆகாது தான்! இங்கே இருந்தே இப்போ இருமுறைக்கும் மேல் தரிசனம் கிடைத்து விட்டது.

   Delete
 8. இடுகை படித்துவிட்டேன். பெங்களூர் பயணம் (அப்போ கீதா ரங்கன் சென்னைக்கு கிளம்பியிருக்கணுமே)

  நாளை கருத்திடுகிறேன்.

  மொத்தத்தில் பல இடுகைகளுக்கு அப்புறம்தான் டிராவலர்ஸ் பத்தி எழுதுவீங்களா?

  ReplyDelete
  Replies
  1. நெ.த. பதிவை நன்றாகக் கவனித்துப் படிங்க! எப்போ எழுதினதுனு புரியும். இப்போ அந்த ட்ராவலர் இன்னமும் இந்த மாதிரிச் சுற்றுலாக்கள் நடத்துகிறாரா என்பதே தெரியாது! ஆகவே உங்களுக்குச் சொன்னாலும் பிரயோஜனம் இல்லை! :)))))

   Delete
  2. ஹா ஹா ஹா ஹா நெல்லை நான் பங்களூரில்தான்....

   கீதா

   Delete
  3. அட்டா... ஏற்கனே வார்த்த தோசையை க்லில் எண்ணெய் போட்டு மீண்டும் சுட வச்சிருக்கீங்களா? புது தோசைனு நினைத்துவிட்டேன்

   Delete
  4. //ஏற்கனே வார்த்த தோசையை க்லில் எண்ணெய் போட்டு மீண்டும் சுட வச்சிருக்கீங்களா? புது தோசைனு நினைத்துவிட்டேன்.//

   அது என்ன "க்லில்" எண்ணெய்? புதுசா இருக்கே!

   Delete
 9. அன்பு கீதாமா,
  லக்ஷ்மி,சரஸ்வதி ஆகிய இருவரும் இணைந்து காமாட்சியுடன் வீற்றிருக்கிறார்கள் அல்லவா.
  2004 வரை அடிக்கடி காஞ்சிப் பயணம் உண்டு. முடிந்த வரை எல்லாக் கோவில்களையும்
  தரிசித்தோம்.

  வரதர் தண்ணீரில் இருக்கையில் நிம்மதியாக இருந்தாரோ என்று தோன்றுகிறது.
  இப்பொழுது வெளியே வந்த பிறகு அலசல்,ஆராய்ச்சி,ஹேஷ்யங்கள், விமரிசனம்
  என்று அவர் பெயரைப் படாத பாடு படுத்துகிறார்கள்.

  பார்த்ததை விடப் போட்டி போட்டுக் கொண்டு பேசுகிறார்கள் பெரியவர்கள்.
  அண்ணனும் தங்கையும் அனைவரையும் காக்கட்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வல்லி. காஞ்சிபுரம் எல்லோரையுமே சீக்கிரம் இழுத்துட்டு வந்துடுத்து! பானுமதி கூட வந்துட்டாங்க! ஹிஹிஹி!
   நீங்க சொல்வது போலத் தான் நானும் நினைத்தேன். வரதர் தண்ணீரிலேயே இருந்திருக்கலாமோனு! ஆனால் சொல்லத் தயக்கம். நீங்க சொல்லிட்டீங்க! உண்மையில் வரதர் படாத பாடு படுகிறார்தான். அவர் தான் இதை எல்லாம் நிறுத்தணும்.

   Delete
 10. காஞ்சி வரலாறு சுவை. அடுத்த முறை அத்தி வரதர் வரும் பொழுது இந்த உடலோடு தரிசிக்க முடியாது. இந்த முறை தரிசித்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
  காஞ்சிபுரத்தில் தங்கி எல்லா கோயில்களையும் தரிசிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, அத்தி வரதர் உங்களையும் இங்கே உடனே இழுத்துட்டாரே! போயிட்டுப் பார்த்துட்டு வந்து
   "சிக்" என்று ஒரு பதிவு போடுங்க!

   Delete
 11. காஞ்சி வரலாறு சுவை. அடுத்த முறை அத்தி வரதர் வரும் பொழுது இந்த உடலோடு தரிசிக்க முடியாது. இந்த முறை தரிசித்து விட வேண்டும் என்று நினைக்கிறேன். பார்க்கலாம்.
  காஞ்சிபுரத்தில் தங்கி எல்லா கோயில்களையும் தரிசிக்க வேண்டும்.

  ReplyDelete
  Replies
  1. நாங்க அநேகமா எல்லாக் கோயில்களும் கைலாசநாதர் கோயில் உள்பட, நாலைந்து முறை போயிருக்கோம்.இன்னிக்கு என்னமோ சில கருத்துகள் 2 முறை வந்திருக்கு! :)

   Delete
  2. வணக்கம் சகோதரி

   இருமுறை ரகசியம்.. அத்திவரதரின் அருள் பார்வைகள்தான். வேறென்ன?

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   Delete
  3. வாங்க கமலா, ஆமாம், அத்திவரதரின் அருள் தான் வேறென்ன?

   Delete
 12. ம்... புவனேஸ்வரி அருள் பொறுத்து...(!)

  ReplyDelete
  Replies
  1. வாங்க டிடி. என்ன சொல்றீங்க? புவனேஸ்வரியும் அவளே! அத்தி வரதரும் அவளே! ஆகவே புவனேஸ்வரியின் அருள் எப்போதும் இருக்கும்/கிடைக்கும்!

   Delete
 13. காஞ்சியில் கைலாச நாதர் கோவில் போயிருக்கிறீர்களா அங்கு கர்பக்கிரகத்தைச்சுற்றி ஒரு பிறவி இல்லா பிரதட்சிணம் கோவில் கருவறையை சுற்றி வருவது செய்திருக்கிறீர்களா உங்களால் முடியும் என்று தோன்றவில்லை

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஜிஎம்பி சார், கைலாச நாதர் கோயிலுக்குப் பல முறை போயிருக்கேன். இப்போ என்னைப் பார்த்துட்டு என்னால் சுற்ற முடியாதுனு சொன்னால் என்ன அர்த்தம்? கடைசியில் போனப்போக் கூட கருவறையைச் சுற்றி வந்தோம். காஞ்சி போனால் கைலாசநாதரைப் பார்க்காமல் வருவதா? ஆனால் முதல் முதல் பார்த்ததுக்கும் நான் கடைசியாப் பார்த்ததுக்கும் வித்தியாசம் நிறைய. நிறையச் சிதிலங்கள் கடைசியாப் பார்த்தப்போ! ஆங்காங்கே சிற்பங்கள் சேதம் ஆரம்பமாகி இருந்தது. இந்தக் கோயில் மண், மரம், செங்கல், சுண்ணாம்பு, உலோகம் இன்றிக் கட்டப்பட்ட கோயில். இதன் கட்டுமானமே ஓர் அதிசயம் இன்றும் அன்றும், என்றும்!

   Delete
 14. கைலாசநாதர் கோவில் பற்றிநான் எழுதி இருந்தபதிவின் சுட்டி https://gmbat1649.blogspot.com/2013/11/1.html

  ReplyDelete
  Replies
  1. உங்கள் சுட்டியையும் வந்து பார்க்கிறேன்.

   Delete
 15. காஞ்சிக்குச் சென்றது 1991 செப்டம்பரில்..

  ஸ்ரீகாமாக்ஷி அம்மன் தரிசனம்..
  அதன்பின் ஸ்ரீ சங்கர மடத்தில் பரம்மாச்சார்ய ஸ்வாமிகள் தரிசனம்..

  அதற்குப் பிறகு இன்னும் வேளை கூடி வரவில்லை...

  பிழை என்னுடையதாகத் தான் இருக்கும்..

  ReplyDelete
  Replies
  1. நேரம் கூடி வரணும் துரை! எல்லாத்துக்கும் மேல் அவன் அழைப்பும் வேண்டும். நாங்க ஆகஸ்ட் மாதம் காசிக்குப் போவதற்காக விமானப் பயணச் சீட்டு வாங்கிக் காசியிலும் சங்கரமடத்தில் சொல்லி, திரும்பி வரப் பயணச்சீட்டெல்லாம் வாங்கி எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தோம். ஆனால் எதிர்பார்க்காதவிதத்தில் ஸ்பைஸ்ஜெட் ஏர்வேஸில் பிரச்னை. விமானம் கிளம்பும் நேரத்தைக் கன்னாபின்னாவென மாற்றி அமைத்து விட்டார்கள். அதன் படி நடு இரவு காசிக்குப் போகிறாப்போல் இருந்தது. திரும்புவது நடு இரவு சென்னைக்கு! அங்கிருந்து திருச்சிக்கு வர விமானமோ, ரயிலோ அந்த நேரம் இல்லை! இருந்தாலும் பிடிப்பது கஷ்டம்! நடு இரவில் விமான நிலையத்தில் இருந்து தனியாக வரணும். எல்லாவற்றையும் உத்தேசித்து பயணத் திட்டத்தையே ரத்து செய்யும்படி ஆகிவிட்டது. தேவையில்லாத பண நஷ்டம். விஸ்வநாதர், விசாலாக்ஷி அழைப்பு வரலை என நினைத்தேன்! நாம் என்னதான் திட்டமிட்டாலும் அதை நிறைவேற்றித் தரும் பொறுப்பு அவனுடையது அல்லவோ!

   Delete
 16. தமிழகத்தில் பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்று கோயில்கள் நிறைந்த காஞ்சீபுரம். நான் சென்றுள்ளேன். கும்பகோணத்தில் பிறந்த எனக்கு காஞ்சீபுரம் மற்றொரு கும்பகோணமாகவே தெரிகிறது. அவ்வளவு கோயில்கள். ஒவ்வொரு கோயிலும் ஒவ்வொரு அழகு. என் மனதைவிட்டு அகலாமல் இருப்பது கைலாசநாதர் கோயில்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க முனைவரே! காஞ்சிபுரம் எத்தனை பார்த்தாலும் அலுக்காது. காமாட்சி அம்மன் கோயிலில் ஒவ்வொரு முறை ஒவ்வொன்று புதிதாக இருக்கும். உலகளந்த பெருமாள் கோயிலில் பல்லவர்களின் மூதாதையர்கள் பற்றிய குறிப்புக்கள் காணப்படும். அஸ்வத்தாமாவால் ஆரம்பிக்கப்பட்டது என அந்தக் குறிப்புக்கள் சொல்கின்றன.

   Delete
 17. அக்கா ரொம்ப அழகா சொல்லியிருக்கீங்க. அன்னையைப் பற்றி. உங்கள் பயண அனுபவங்கள் பற்றியும்.

  நான் காஞ்சி கோயில்கள் என்று பல வருடங்கள் முன்பு மாமனார் மாமியாரோடு சென்றதுண்டு.

  கல்யாணத்திற்குமுன் அத்தை அங்குதான் இருந்தார். அப்போது அங்கு சென்று தங்கி என் கஸின்ஸோடு அத்தை அவர் கணவரின் அன்பில் திளைத்ததுதான் எனக்கு நினைவில் வரும் காஞ்சி என்றாலே.

  இப்போது வரதருக்குக் கூட்டம் பயங்கரமா இருக்கு போல. எங்கள் உறவினர்களில் சிலர் ரொம்ப நொந்து கொண்டார்கள். சிலர் ரொம்ப புகழ்ந்தார்கள். அவரவர் பார்வை அவர்கள் சென்ற தினத்தின் கூட்டம் கெடுபிடிகள் என்று நினைக்கிறேன்.

  கீதா

  ReplyDelete
  Replies
  1. வாங்க தி/கீதா, காலையில் வண்டியை எடுத்துக்கொண்டு போனால் முக்கியக் கோயில்களை தரிசனம் செய்து கொண்டு இரவு வீடு திரும்பிடலாம். அதற்கெல்லாம் சென்னை வசதி தான்! ஆனால் இப்போது அந்தப் பூந்தமல்லி நெடுஞ்சாலையின் போக்குவரத்தில் சாத்தியமா என்பது தெரியலை! ஸ்ரீபெரும்புதூர் கூட 3 முறை போயிருக்கேன். அங்கேயே பக்கத்தில் உள்ள திருப்புட்குழி!

   Delete
 18. காமாட்சியும்,ஏகாம்பரேஸ்வரரும்
  கண்முன்னே.....நாங்களும்
  பலவருடஙுகளுக்கு முன் சென்றது.

  ReplyDelete
  Replies
  1. அட! ஆச்சரியம் தான் மாதேவி, நீங்களும் பார்த்திருக்கீங்க என்பது ஆச்சரியம் தான்!

   Delete
 19. அலுவல் சம்பந்தமாக ஒரு முறை காஞ்சி சென்றதுண்டு. முழுவதுமாக சுற்றி வர அந்தப் பயணத்தில் முடியவில்லை/முடியாது! நாள் முழுவதும் அப்படி ஒரு அலுவலக வேலைகள்! தமிழகத்தில் பார்க்க வேண்டிய இடங்கள் பட்டியலில் காஞ்சியும் உண்டு. எப்போது அழைப்பு வரும் எனக் காத்திருக்கிறேன்!

  சிறப்பாக இருக்கிறது உங்கள் பயணம் பற்றிய தகவல்கள். பின்னால் அங்கே சென்றால் பயன் தரும்.

  ReplyDelete
  Replies
  1. நீங்க போயிட்டு அழகாகப் படங்களும் எடுத்து விபரமாகப் பதிவு போடுங்கள் வெங்கட்! இதுக்காக விடுமுறை எடுத்துக் கொண்டு வாருங்கள்! :)

   Delete
 20. காஞ்சிபுரம்...செல்ல வேண்டும் என எண்ணியுள்ள இடம் ..இரு நாள் தங்கி பொறுமையாக அனைத்து இடங்களையும் காண வேண்டும்...

  ஆனால் இப்பொழுது ஒரு QUICK விசிட்டாக வரதரை மட்டும் தரிசித்து வரும் எண்ணம் உள்ளது ..அவன் அருள் வேண்டும் ..

  ReplyDelete