எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, July 30, 2019

கஞ்சி வரதப்பா! எங்கே போனாயோ?

 à®•à®¾à®žà¯à®šà®¿ வரதராஜ பெருமாள் க்கான பட முடிவு


பெருந்தேவித் தாயாரின் சந்நிதி தனியாய் அமைந்துள்ளது. விமானத்தின் பெயர் கல்யாணகோடி விமானம். இந்தக் கோயிலில் முதலில் தாயாரைப் பார்த்துவிட்டே பின்னர் பெருமாளைச் சேவிக்கவேண்டுமாம். ஆனால் நாங்க முதல்லே பெருமாளைத் தான் பார்த்தோம். அப்புறமாய்த் தாயாரைப் பார்த்தோம். எழுதறது மட்டும் முதல்லே தாயார் பத்தி. கிழக்கு நோக்கி தாமரை மலர்களைக் கையில் ஏந்தியவண்ணம் அபயஹஸ்தம் காட்டும் தாயாருக்கு அரித்ரா தேவி, மகாதேவி என்ற திருநாமங்களும் உண்டு என்றார் பட்டாசாரியார். அருகில் உற்சவர். இந்தத் தாயாரின் அவதாரம் பற்றிய பட்டாசாரியார் சொன்ன புராணக் கதையானது.

காஞ்சி வரதராஜ பெருமாள் க்கான பட முடிவு

பிருகு மகரிஷி பிள்ளை வரம் வேண்டி புத்ரகாமேஷ்டி யாகம் செய்ய யாகத்தில் ஸ்ரீபெருந்தேவித் தாயார் அவதரித்தார் என்கின்றனர். அவர் பொற்றாமரை மலர்களால் ஸ்ரீவரதராஜரைப் பூஜித்து வழிபட்டு வர, அவருக்கு அருள் புரிய எண்ணிய பெருமான், சிவன், பிரம்மா, பிருகுமஹரிஷி, காசியபர், கண்வர், காத்யாயன ரிஷி, ஹரித ரிஷி போன்றோர் முன்னிலையில் அம்பாளின் கரம் பிடித்து மணம் புரிந்து கொண்டார். அப்போது உள்ளே சென்ற அம்பாள் இன்று வரை படிதாண்டுவதில்லை. பல பெருமாள் கோயில்களிலும் தாயார் படி தாண்டுவது இல்லை.  படிதாண்டாப் பத்தினி எனப் படும் அம்பாள் பிரம்மோற்சவத்தின் போது எழுந்தருளும் பெருமாளுடன் கூட திருவீதி உலாவுக்குச் செல்வதில்லை. ஆனால் இருந்த இடத்தில் இருந்தபடியே ஸ்ரீவேதாந்த தேசிகருக்காகப் பொன்மழை பொழியச் செய்தாள் பெருந்தேவித் தாயார். வேதாந்த தேசிகரின் மீது பொறாமை கொண்ட சிலர் அவரை எவ்விதமாவது அவமானப் படுத்த எண்ணினார்கள். காஞ்சிக்கு வந்த வறிய பிரம்மசாரி ஒருவனை வேதாந்த தேசிகரிடம் சென்று பொருள் வேண்டும் எனக் கேட்கும்படி ஏவினார்கள். அவனும் அவ்விதமே அவரிடம் சென்று பொருள் கேட்க, தேசிகரோ அம்பாளை வேண்டினார். ஸ்ரீதுதி பாடினார். அவரின் ஸ்ரீதுதிகளால் மனமகிழ்ந்த அம்பாள் அங்கே பொன்மழை பெய்வித்து தேசிகரின் பெருமையை நிலைநாட்டினாள்.

பெருந்தேவித் தாயார் க்கான பட முடிவு

படங்களுக்கு நன்றி கூகிளார்

அது மட்டுமா? ஸ்வாமிக்குனு தயார் செய்யப் பட்ட வெள்ளித் தகடுகள் வேய்ந்த கதவுகளையும் தனக்கென வாங்கிக் கொண்டுவிட்டாள். பின்னர் வேறு வெள்ளித் தகடுகள் வேய்ந்த புதுக்கதவுகள் செய்து பெருமாளுக்குக் கதவுகள் பொருத்தப் பட்டது என்கின்றனர். தாயார் சந்நிதியில் இருந்து உள்பிரஹாரத்துக்கு வந்தால் அங்கே நரசிம்மர், ஆண்டாள், விஷ்வக்சேனர் போன்றோர் காணப்படுகிறார்கள். இங்கே விநாயகர் வலம்புரி விநாயகர் என்ற பெயரிலேயே காணப்படுகிறார். இங்கிருந்து இப்போ நாம் ஏறப் போவது அத்திகிரி எனப்படும் பெருமாள் சந்நிதிக்கு.

இருபத்து நான்கு படிகள் என்கின்றனர். காயத்ரி மந்திரத்தின் இருபத்து நான்கு தத்துவங்களையும் குறிக்கும் வண்ணம் எழுப்பப் பட்டது என்று சிலர் கூற்று. விமானம் புண்ணியகோடி விமானம். மூலவர் தேவராஜர். இவருக்கு தேவப் பெருமாள், அத்தியூரான், அத்திவரதன், தேவாதிராஜன். கஜேந்திர வரதன், தேவராஜப் பெருமாள், மாணிக்கவரதன் போன்ற வேறு பெயர்களும் இருக்கின்றன. திருப்பதியின் வெங்கடாசலபதியைக் கிருஷ்ணரின் அம்சம் என்றும் வகுளா தேவிதான் யசோதை என்றும் சொல்வார்கள். ஸ்ரீரங்கநாதரோ ஸ்ரீராமரின் அம்சம் ஆவார். இங்கே கஞ்சி வரதரோ எனில் ராமர், கிருஷ்ணர் இருவரின் அம்சங்களையும் கொண்டு ராமகிருஷ்ண அம்சத்தோடு விளங்குகிறார். ஒவ்வொரு வருஷமும் சித்ரா பெளர்ணமி அன்று பிரம்மா இவரை வழிபட்டுச் செல்வதாக ஐதீகம். சித்ரா பெளர்ணமிக்குப் பின்னர் வரும் பதினான்கு நாட்களும் மாலைக்கதிரவனின் கிரணங்கள் மூலவரின் பாதங்களைத் தொட்டுச் செல்லும்.சொன்னவண்ணம் செய்த பெருமாள்னு ஒருத்தரும் இந்த ஊரில் உண்டே!


எப்படினு கேட்கறீங்களா? இதே ஊரில் உள்ள யதோத்காரிப் பெருமாள் திருமழிசை ஆழ்வாரின் இஷ்ட தெய்வம். அவரைச் சொன்னவண்ணம் செய்த பெருமாள் என்பார்கள்.  திருமழிசை ஆழ்வார் இந்த நகரில் தன் சீடனான கணிகண்ணன் என்பவருடன் வசித்து வந்தார். பல்லவ மன்னர்கள் காஞ்சியை ஆட்சி புரிந்த காலம் அது. கணிகண்ணனின் தமிழ்ப் பாடல்களின் அழகைப் பார்த்து ரசித்த மன்னர், இந்தப் பாடல்கள் தன்னைப் பற்றிப் போற்றிப் பாடினால் இன்னும் நன்றாய் இருக்கும் என எண்ண ஆரம்பித்தார். கணிகண்ணனைத் தன் அவைக்கு வரவழைத்துத் தன்னைப் போற்றிப் பாடச் சொன்னார். ‘மாதவனைப் பாடும் வாயால், மனிதர்களைப்பாட மாட்டேன்.” என்று திட்டவட்டமாக மறுத்தார் கணிகண்ணன். மன்னன் அவரைப் பல்லவ நாட்டை விட்டே வெளியே போகச் சொல்லி நாடு கடத்தினான். கணிகண்ணனும் காஞ்சியை விட்டும் பல்லவநாட்டை விட்டும் வெளியேறினார். தன் அருமைச் சீடன் நகரை விட்டுச் செல்வது அறிந்த திருமழிசை ஆழ்வார் துக்கம் பொங்கப் பெருமாளைப் பார்த்து,

“கணிகண்ணன் போகின்றான், காமரு பூங்கச்சி
மணிவண்ணா! நீ கிடக்கவேண்டா! துணிவுடைய
செந்நாப் புலவன் யானும் போகின்றேன் நீயுமுன்
பைந்நாகப் பாய் சுருட்டிக் கொள்!”

என்று சொல்லிவிட்டார். திருமழிசை ஆழ்வாரும் காஞ்சியை விட்டுக் கிளம்ப பெருமாளும் ஆழ்வார் கேட்டுக்கொண்டபடிக்கு தன் பைந்நாகப் பாயைச் சுருட்டி எடுத்துக்கொண்டு ஆழ்வாரைத் தொடர்ந்து போய்விட்டார். காஞ்சியை இருள் சூழ்ந்து கொண்டது. மறுநாள் மூலவர் சந்நிதியில் பெருமாள் இல்லை. மன்னன் நடுங்கிப் போனான். ஏற்கெனவே நகரம் இருளில் ஆழ்ந்திருந்தது. இப்போ இங்கே பெருமாளையே காணோம். எங்கே போனார்? அது தனியாக வேறே ஊர். என்றாலும் இங்கே திரும்பி வந்தாரானு மட்டும் நாம இப்போ தெரிஞ்சுக்கலாமா? 

23 comments:

  1. நாடு கடத்தப்பட்ட தன் பக்தனுக்காகத் தன்னையே கடத்திக்கொண்ட காஞ்சிப் பெருமான்! கதை தொடரட்டும்..

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஏகாந்தன், கணிகண்ணனும், பெருமாளும் உங்களை இழுத்து வந்துவிட்டார்கள்.

      Delete
  2. உங்களின் இறைக்கதைகளைப்படிகும்போடுபலதும் கேட்டிராதது இல்லை நினைவில் இல்லாதிருப்பது எனிவே வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வாங்க ஜிஎம்பி ஐயா, கருத்துக்கு நன்றி

      Delete
  3. தெரிந்த விஷயங்கள்...மீண்டும் படித்தேன். தொடர்கிறேன்.

    தலைப்பு உங்களுக்கே பொருந்துகிறதே... எங்கே போனீங்களோ...ரொம்ப நாளா தொடரைத் தொடராமல்..

    ReplyDelete
    Replies
    1. நெல்லைத்தமிழரே, மருத்துவர் எழுந்தே உட்காராதே என்கிறார்! ஆனால் அப்படி எல்லாம் இருக்க முடியலை! இப்போத் தான் வீட்டில் அடுத்தடுத்து வேலைகள்! ஆகவே கொஞ்சம் வேலை, கொஞ்சம் ஓய்வுனு இருக்கு. நடுவில் கால்களுக்கு வலு ஊட்டும் மருந்துகளைக் கொண்டு கால்களைப் பராமரிக்கணும்! :))))) எண்ணெய் தடவி ஒத்தடம் கொடுக்கணும். ஒரு மணி நேரத்துக்கு ஒரு தரம் கொடுக்கச் சொல்லி இருக்கார். நான் ஒரு நாளைக்கு 2 வேளை கொடுத்தாலே அதிகம்! :)))))

      Delete
    2. மன்னிக்கணும் கீசா மேடம்...சும்மா ஜாலியான கமெண்ட் அது. தவறா எடுத்துக்காதீங்க.

      விரைவில் உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குலதெய்வம் கோவிலுக்கும் போயிட்டு வந்துட்டீங்க.

      Delete
  4. வரதரின் கதைகள் தொடர்ந்து வரட்டும்...

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, இன்னும் 2,3 பதிவுகள் தான் என நினைக்கிறேன்.

      Delete
  5. இரண்டு பேருக்கும் ஏக ராசிதான் அதுதான் கால்வலி படுத்துகிறது.
    நானும் எண்ணெய் தடவி வெந்நீர் ஊற்றி வலியை கடத்தி வருகிறேன்.
    ஒற்றை தலைவலி மீண்டும் தலைதூக்கி உள்ளது அதற்கு தைலம் தேய்த்து வெந்நீர் ஒத்தடம் கொடுத்து வருகிறேன்.

    வரதரின் வரலாறு அருமை. அத்தி வரதர் உடல்நலத்தை அருளவேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கோமதி! ஒரு காலத்தில் வேகமான நடைக்குப் பெயர் பெற்றிருந்தேன். இப்போ மெதுவான நடைக்குப் பெயர்! :))))) காலம் செய்த கோலம்! நல்லவேளையாக இந்த ஒற்றைத் தலைவலி எல்லாம் இல்லை! மனோ தைரியத்தில் தான் ஓடுகிறது. அவருக்கும் சில நாட்களாக நெஞ்செரிச்சல்! சாப்பிடும்போது தொந்திரவு!

      Delete
    2. வணக்கம் கோமதி சகோதரி.

      தங்கள் உடல்நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள். தங்களுக்கு கால்வலி தொந்தரவுகள்.ஒற்றைத் தலைவலி பிரச்சனைகளும் பரிபூரண குணமடைய இறைவனை மனமாற பிரார்த்திக்கிறேன்

      நன்றியுடன்
      கமலா ஹரிஹரன்.

      Delete
    3. தனுர் ராசிக்குத்தான் கஷ்டகாலம்னு நினைத்தேன். உங்கள் ராசியும் தனுசா?

      Delete
    4. கஷ்டம் என்பது எல்லா ராசிகளுக்குமே உண்டு நெல்லைத் தமிழரே! கிரஹங்களின் பார்வையால் சிலருக்கு பாதிப்புத் தெரியாவண்ணம் இருக்கும். பலருக்கு பாதிப்பு அதிகம் இருக்கும். தனுர் ராசினு எல்லாம் இல்லை. எப்போவுமே கஷ்டத்தில் இருப்பவர்களும் உண்டு! எப்போவுமே ஆசீர்வதிக்கப்பட்டவர்களைப் போல் சந்தோஷமாக இருப்பவர்களும் உண்டு. அவரவர் கர்ம பலன்!

      Delete
  6. வணக்கம் சகோதரி

    நலமா? பெருந்தேவி தாயாரின் கதையும், அத்திவரதரின் கதையும் சுவாரஸ்யமாக இருக்கின்றன. படி தாண்டா பத்தினி கதையும் வெகு அருமை. இனியும் தொடர்ந்து வரும் அத்திவரதர் கதைகளை படிக்க ஆர்வமாயுள்ளேன். குல தெய்வ வழிபாட்டிற்கு செல்ல வேண்டுமென்றீர்களே? கால் வலியில் சிறிது நாள் தள்ளிப் போட்டுள்ளீர்களா? கால் வலிக்கு நல்ல சிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள்.தங்களது இறை பக்தியினால் தங்களது உடல்நலம் பழையபடி திரும்பும். உடல்நலத்திற்கு முதலிடம் கொடுங்கள். உடல் உபாதைகள் அகன்று பழையபடி முற்றிலும் குணமாக நானும் இறைவனை பிரார்த்திக்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, வரவுக்கும் கருத்துக்கும் நன்றி. குலதெய்வம் கோயிலுக்குப் போய்விட்டு வந்தாச்சு. ஞாயிறன்றே சௌகரியமாகப் போய்விட்டு வந்து விட்டோம். இப்போதைக்கு வேறே எங்கும் போகலை! வரதராஜர் குறித்த பதிவை ரசித்தமைக்கு நன்றி. விரைவில் காஞ்சிப் பதிவுகள் முடிவுக்கு வந்துவிடும்.

      Delete
    2. நீங்கள் என் முந்தைய பதிவைப் படிக்கவில்லை என நினைக்கிறேன் கமலா! முடிந்தால் பார்த்துப் புத்தகங்களைப் படித்துக் கருத்துப் பரிமாறுங்கள்.

      Delete
  7. பொன்னைக் கொடுத்து விட்டு வெள்ளியை வாங்கிக்கொண்டாரா தாயார்?

    // படி தாண்டா...//

    அதாவது சில சன்னதிகளில் தாயார் தனி சன்னதியிலும் இருப்பாரே, அதைச் சொல்கிறீர்களா?

    ReplyDelete
    Replies
    1. அநேகமாக எல்லாக் கோயில்களிலுமே தாயாருக்குத் தனி சந்நிதி தான் இருக்கும். அந்தத் தாயாரின் உற்சவர் அந்த சந்நிதிப் பிரகாரங்களை விட்டு வெளியே வர மாட்டார். அதற்குள்ளேயே கொலுவின் போதும் ஊஞ்சல் உற்சவங்களிலும் இருப்பார். பெருமாள் சந்நிதி கருவறையில் உற்சவருக்கு அருகே இருக்கும் இரு உபய நாச்சியார்கள் தான் உற்சவரோடு பவனி வரும் பெருமையைப் பெற்றிருப்பார்கள்.

      Delete
  8. பக்தர்களுக்காக பெருமாள் இப்படி எல்லாம் செய்திருக்கிறார்.ஆச்சர்யம். அதெல்லாம் அந்தக்காலம்!

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், இப்போதெல்லாம் இம்மாதிரி நடக்க வாய்ப்பே இல்லை!

      Delete
  9. ஸ்ரீரங்கநாதரோ ஸ்ரீராமரின் அம்சம் ஆவார். இங்கே கஞ்சி வரதரோ எனில் ராமர், கிருஷ்ணர் இருவரின் அம்சங்களையும் கொண்டு ராமகிருஷ்ண அம்சத்தோடு விளங்குகிறார். //

    ஓ! இதெல்லாமே இப்போதுதான் தெரியும் கீதாக்கா உங்கள் பதிவின் மூலம்.

    இந்தக் கதை விவரம் உட்பட.

    தேசிகர் ஸ்ரீதுதி எழுதிய நிகழ்வு மட்டும் தெரியும். மற்றபடி எல்லாம் இப்போதுதான்.

    மீண்டும் எப்படி வந்தாரா என்பதைத் தெரிந்து கொள்ளத் தொடர்கிறேன் அக்கா

    கீதா

    ReplyDelete
  10. காஞ்சி கதைகள் - தொடரட்டும். பைநாகப்பை சுருட்டிக் கொண்டு சென்ற கதை தெரிந்தது. மீண்டும் படித்தாலும் ஸ்வாரஸ்யம்!

    கீதா கல்யாண வைபோகமே - மின்புத்தகம் படித்து முடித்து விட்டேன். இப்படி புத்தகமாக படிப்பதில் ஒரு வசதி - தொடர்ந்து படித்து முடித்திடலாம்!

    தொடர்கிறேன்.

    ReplyDelete