எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Tuesday, October 15, 2019

ரொம்ப நாள் கழிச்சுத் "திங்க"ற கிழமைக்கு ஒரு பதிவு!

ரொம்ப நாளாச்சு எ.பியோட திங்கற கிழமைகளிலே போட்டி போட்டு! இன்னிக்குப் போடலாம்னு நினைச்சேன். அங்கே இந்தியாவில் செவ்வாய்க்கிழமை வந்தாச்சு! இன்னும் கிழக்கே இருப்பவர்களுக்குச் செவ்வாய் மதியம், மாலைனு ஆகி இருக்கும். ஆனால் இங்கே இன்னமும் திங்கள் கிழமை தானே! இந்த சமையல் குறிப்பைப் பிரதிலிபி நடத்திய சமையல் போட்டிக்கு அனுப்பி இருந்தேன். பரிசு கிடைக்காதுனு தெரியும். என்றாலும் சமையல் போட்டி என்பதால் இந்தச் சாக்கில் அனைவருக்கும் போய்ச் சேருமே என்று தான். ஃபேஸ்புக்கிலும் போட்டிருந்தேன். ஆனால் கோமதி அரசுவையும் இன்னும் யாரோ ஒருத்தர் பார்த்திருந்தார். ஸ்ரீராம்? ஆமாம்னு நினைக்கிறேன். வேறே யாரும் பார்க்கலை. அப்போவே இது போணி ஆகாதுனு புரிஞ்சு போச்சு. அதான் எ.பிக்கு அனுப்பாமல் இங்கேயே போட்டுட்டேன். இனி உங்க பாடு, பீட்ரூட் பாடு!

பீட்ரூட்டெல்லாம் சாலட் போன்றவற்றில் சேர்த்தோ அல்லது துருவி அல்வா மாதிரி செய்தோ சாப்பிடுவார்கள். ஒரு சிலர் பீட்ரூட்டில் கறி, கூட்டு எல்லாம் பண்ணுகின்றனர். அல்வா, பாயசம், ப்ரெடில் தடவும் ஜாம் போன்றவையும் செய்யலாம். பெரும்பாலும் ஓட்டல்காரர்களும், காடரிங் காரர்களும் வாரம் ஒரு நாளாவது பீட்ரூட் சேர்ப்பார்கள். விலை மலிவு என்பதால் இருக்கலாம். ஆனால் இது மிகுந்த சத்துள்ளது என்றாலும் சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது. பொதுவாக இதை அதிகம் யாரும் விரும்புவதில்லை என்றாலும் இம்முறையில் செய்து பாருங்களேன், அனைவரும் விரும்புவார்கள்.

நான்கு நபர்களுக்குத் தேவையான பொருட்கள்: பீட்ரூட் கால் கிலோ, 3,அல்லது 4 வரும். நாம் இதில் வெங்காயம், தேங்காய்த் துருவல் எல்லாம் சேர்க்கப் போவதால் நான்கு பீட்ரூட் இருந்தால் நான்கு நபர்களுக்குப் போதுமானது. உப்பு தேவைக்கு
பெரிய வெங்காயம் பெரிதாக ஒன்று அல்லது நடுத்தரமான அளவில் 2
பச்சை மிளகாய் 2 அல்லது 3 . காரம் வேண்டும் என்பவர்கள் கூடப் போட்டுக்கலாம். பீட்ரூட்டின் இனிப்பில் அது அவ்வளவாகத் தெரியாது. இஞ்சி ஒரு சின்னத் துண்டு
தேங்காய்த் துருவல் இரண்டு டேபிள் ஸ்பூன், ஜீரகம் 2 டீ ஸ்பூன், கடுகு ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு, ஒரு மிளகாய் வற்றல், கருகப்பிலை, கொத்துமல்லி தாளிக்க சமையல் எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன். (வெங்காயம் வதங்கணும்.)


ஒரு சின்னக் குக்கரில் பீட்ரூட்டைத் தோலோடு சேர்த்து வேக வைக்கவும். வெந்த பீட்ரூட்டின் தோலை உருளைக்கிழங்கு உரிப்பது போல் உரிக்கலாம். உரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். இப்போத் தாளிக்கும் பொருட்களைத் தயார் செய்து கொள்ளவும்.

வெங்காயம் பொடியாக நறுக்க வேண்டும். பச்சை மிளகாய், இஞ்சி, ஜீரகம், தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்சி ஜாரில் போட்டுக் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.

கடாயில் சமையல் எண்ணெய் ஊற்றிக்கொண்டு கடுகு, உளுத்தம்பருப்புப் போட்டு மி.வத்தல் தேவையானால் போட்டுக்கொண்டு கருகப்பிலை போட்டு வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் சீக்கிரம் வதங்க அரை டீஸ்பூன் சர்க்கரை சேர்க்கலாம். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் வேக வைத்து நறுக்கிய பீட்ரூட் துண்டங்களைப் போட்டுக் கொண்டு தேவையான உப்பைச் சேர்த்துக் கிளறி விட்டு அரைத்த விழுதையும் சேர்க்கவும். விழுதிலே இருக்கும் தண்ணீரே போதும். என்றாலும் தேவையானால் ஒரு கரண்டி நீரைத் தெளிக்கவும். மூடி வைத்து நன்கு கலந்து விட்டுக் கிளறவும். கீழே இறக்கும் போது கொத்துமல்லி தூவவும். இதே போல் காலிஃப்ளவர், நூல்கோல், காரட், டர்னிப் போன்றவற்றிலும் செய்யலாம்.

76 comments:

 1. வந்துவிட்டேன் வந்துவிட்டேன் திங்க பார்த்ததும்!! கீதாக்கா இனிய மாலை வணக்கம்..

  நான் தானே ஃபர்ஸ்ட்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊ? இல்லையோ?! இருந்தாலும் எங்க நேரத்துக்கு நான் தான் ஹா ஹா ஹா

  அப்புறமா முழுவதும் வாசிக்க வருகிறேன்

  கீதா

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், நீங்க தான் முதலில் வந்திருக்கீங்க! இங்கே இப்போ இரவு ஏழே முக்கால்! ஒன்றரை மணி நேரம் பின்னால் போனால் உங்க காலை நேரம் வரும். இன்னும் கொஞ்ச நாட்கள். அப்புறமா இங்கே ஒரு மணி நேரம் பின்னாடி வைச்சுடுவாங்க! ஒரு மணி நேரம் கூடக் கிடைக்கும். அப்போ எங்களுக்கு மாலை ஏழரை எனில் உங்களுக்குக் காலை ஏழு. This is central timings. Eastern, Western and Hill side timings change varum.

   Delete
 2. படி படியாக செய்முறை படங்களுடன் அருமையான பீட்ரூட் துவரம். நீங்கள் இதற்கு பேர் கொடுக்கவில்லை.
  பச்சையாக துருவி வெங்காயம், பச்சைமிளகாய், தேங்காய் பூ எல்லாம் போட்டு செய்வேன். மெதுவாக இருக்க ஆவியில் வேக வைத்துக் கொண்டும் செய்யலாம். என் அத்தை(மாமியார்) எல்லா பொரியல் , துவரம், கூட்டு எல்லாவற்றிக்கும் சின்னவெங்காயம், ஒரு பல் பூண்டு, சீரகம், மிள்காய் வற்றல் தேங்காய் எல்லாவற்றையும் பிறு பிறு என்று அரைத்து போடுவார்கள். நானும் அதை போல் செய்வேன்.

  நீங்கள் சொன்னது போல் செய்து பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கோமதி, நாங்க இதைக் கறி என்றே சொல்லுவோம். துவரம் என்றால் அது மலையாளத்திலே சொல்லுவாங்க. இல்லைனா நாகர்கோயில்க் காரங்க சொல்லுவது இல்லையா? ஒரு முறை நானும் சின்ன வெங்காயம், மி.வத்தல், ஜீரகம், தேங்காய்த்துருவல், பூண்டு இல்லாமல் பண்ணிப் பார்க்கிறேன்.

   Delete
  2. ஆவியில் வேகவைத்து எல்லாம் தோல் உரித்ததில்லை.  தோல் உரித்துதான் வேகவைப்பதெல்லாம்.

   Delete
  3. அதே அதே நாங்க துவரம்னு தான் சொல்வோம் .அம்மா அடிக்கடி செய்வாங்க 

   Delete
  4. @ ஏஞ்சல், ஓ, நீங்களும் துவரம் கட்சியா? :)))))

   Delete
 3. ஒரு சின்னக் குக்கரில் பீட்ரூட்டைத் தோலோடு சேர்த்து வேக வைக்கவும். வெந்த பீட்ரூட்டின் தோலை உருளைக்கிழங்கு உரிப்பது போல் உரிக்கலாம். உரித்துப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.//

  கீதாக்கா ஹைஃபைவ் இப்படித்தான் நான் வேக வைப்பது. ஏன்னா தோல் உரித்து நறுக்குவதும் எளிதாக இருக்கும்ன்றதுனால...எல்லாம் நமக்கு கொஞ்சம் சுளுவா இருந்தா நல்லதுனு அதிராவின் தமிழ் டி யில் சொல்வதென்றால் கிட்னியை ஊஸ் செஞ்சு ஹிஹிஹ்ஹி..

  அதுவும் இடது கைவலி வந்து செர்வைக்கல் ரிப் டெலிவரிக்கு அப்புறம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து இப்படியான வழிகள்...ஹிஹிஹி

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பீட்ரூட் வேகும் முன்னர் தோல் சீவினால் என்னால் ஒழுங்காகச் சீவ முடியறதில்லை. அதுக்காகவே குக்கரில் வேக வைக்கிறேன். இப்போக் கைவலி பரவாயில்லையா?

   Delete

  2. 2 கீதா மேடத்திற்கும் எனக்கி ஒரு சந்தேகம் வாழைபழ தோலை உரிப்பதற்கும் உங்களுக்கு தெம்பு இருக்கிறதா அல்லது அதையும் வேக வைச்சுதான் தோலியை நீக்குவீங்களா?

   Delete
  3. அட என்ன ஒரு சந்தேகம் ...

   Delete
  4. ஹாஹாஹா, மதுரைத் தமிழரே, வாழைப்பழம் மட்டுமில்லை, பூஷணிக்காய், சேனைக்கிழங்கு ஆகியவற்றில் கூடத் தோல் சீவக் கஷ்டப்படுகிறேன் இப்போல்லாம். :))))) நம்ம ரங்க்ஸைச் சீவித் தரச் சொன்னாக் கால்வாசிக் காய் தோலோடு போய் விடுகிறது. :))))

   @Anuprem, haahaahaahaa

   Delete
 4. நான்கு பேர்களுக்கு நான்கு பீட்ரூட்டா?   ஒரு பீட்ரூட் நறுக்கினாலே நான்கு பேர்களுக்கு செலவாவதில்லை!  பீட்ரூட்டை என் அக்கா உருளைக்கிழங்கோடு சேர்த்து கறி செய்வாள்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸ்ரீராம், இங்கே கொத்தவரைக்காய், அவரைக்காய், பயத்தங்காய், வெண்டைக்காய் எல்லாத்தோடயும் உருளைக்கிழங்குக் கூட்டணி வகுக்கிறது. நான் முன்னெல்லாம் கத்திரிக்காயோடு உருளைக்கிழங்கைக் கூட்டணி அமைத்துக் கறி பண்ணுவேன். அதுக்கே எல்லோரும் சிரிப்பாங்க! இப்போல்லாம் எல்லோரும் எல்லாத்திலேயும் உருளைக்கிழங்கு போடறாங்க! அவியலில், திருவாதிரைக்குழம்பில்னு எல்லாத்திலேயும். நான் போடுவதே இல்லை.

   Delete
  2. /கத்திரிக்காயோடு உருளைக்கிழங்கைக் கூட்டணி // - எல்லோரும் சிரிப்பாங்கன்னு போட்டிருக்கீங்க இல்லையா? அதில் என் பெயரையும் சேர்த்துக்கோங்க. எதுக்கு எதைச் சேர்க்கிறதுன்னு கிடையாதா? இதுக்குத்தானே கோத்திரப் பாடம்லாம் எடுத்திருக்காங்க சின்ன வயசுலயே

   Delete
  3. வெண்டையோடு உருளையா?      கேள்விப்பட்டதில்லை.  கத்தரி-உருளையும் செய்ததில்லை.  பீட்ரூட்டோடு ஜோடி சேரும்போது உருளை சிவப்பாக மாறி பயங்கரமாக இருக்கும்!   புதிய சுவையாக இருக்கும்!

   Delete
  4. நெல்லைத்தமிழரே, முன்னரே ஒரு முறை எழுதி இருக்கேன், பதிவிலோ, பின்னூட்டத்திலோ. என் அம்மா நான் பத்துப் பனிரண்டு வயதாக இருக்கும்போதே கத்திரி+உருளை கூட்டணியில் கறி, சப்பாத்திக்கூட்டுப் பண்ணிப் போட்டிருக்கார். காரட் அல்வா நான் முதல் முறை சாப்பிடும்போது ஆறாம் வகுப்பு. (சொன்னால் நம்ப மாட்டீங்க, அப்போ வயசு ரொம்பக் கொஞ்சம் தான். பதினைந்து வயதுக்குள்ளேயே எஸ்.எஸ்.எல்.சி. முடிச்சேன். அப்போ அது பதினோராம் வகுப்பு. என் கடைசி நாத்தனார் நான் சர்டிஃபிகேட்டைக் காட்டியும் இன்று வரை அதை நம்பவில்லை. அது தனிக்கதை! ) ஆகவே இதெல்லாம் அம்மா பண்ணி இருக்காங்க. காய்கள் சேர்த்த ரவா உப்புமா, கோதுமை ரவா உப்புமா எல்லாமே அம்மா ப்ண்ணுவா. எல்லாம் எங்களுக்கு எப்படியாவது காய்களின் சத்தைக் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் இருக்கும்.

   Delete
  5. @ஸ்ரீராம், அப்படித்தான் நானும் என் பெண்ணிடம் சொல்லிட்டு வாங்கிக் கட்டிக்கொண்டேன். சாப்பிட்டுப் பாரு, ஒண்ணும் ஆயிடாதுனு சொல்லிட்டா. அதோட வெண்டைக்காயோட வெங்காயம், தக்காளி, குடமிளகாய் சேர்த்தும் சப்பாத்திக்குக் கறி பண்ணுவா. நானும் பண்ணுவேன் வெங்காயம் இல்லாமல்! :))))) தக்காளி, குடமிளகாய் மட்டும் சேர்த்து.

   Delete
 5. இதுமாதிரி செய்தால் சுவை வித்தியாசமாய் இருக்கக்கூடும்.  எனவே ஓர்முறைசெய்து  பார்க்கவேண்டும்.  டைப் அடித்தால் எழுத்துகள் சட்சட்டென வரவேண்டும். அடித்து பலநொடிகள் கழித்து (தமிழ்) எழுத்துகள் வந்தால் கமெண்ட் போடும் வேகம் குறைகிறது.  சமயங்களில் என் கணினியில் இப்படி ஆகும்.

  ReplyDelete
  Replies
  1. என்னோட கணினியில் திடீர் திடீர்னு பக்கங்கள் ஓட்டமாக ஓடி ஒளிஞ்சுக்கும். நாலு டாப் திறந்து வைத்தால் ஒண்ணே ஒண்ணு தான் இருக்கும். மற்றதைத் தேடணும். அப்புறமாச் சில சமயங்களில் க்ளிக் செய்யாமலேயே வேறே வேண்டாததை நீக்கும். அல்லது திறந்து வைக்கும்.

   Delete
 6. எபி திங்கற கிழமைக்கு போட்டியாக சரி...    இந்தமுறை உங்களுக்கு நீங்களே போட்டி!

  ReplyDelete
  Replies
  1. இஃகி,இஃகி,இஃகி, என்னோட போட்டி எ.பி. தானே, நான் இல்லை!

   Delete
  2. ஸ்ரீராம்.. ஏதோ நினைவுல, முயல் மாதிரி தூங்கிட்டாங்க. அதுனாலதான் திங்கக் கிழமை பதிவு போடுவதற்குப் பதிலா செவ்வாய்க் கிழமை போட்டிருக்காங்க. அப்புறம், சந்திரனில் இன்னும் திங்கக் கிழமை, சூரியனில் ஞாயிற்றுக் கிழமைன்னு சாக்குப் போக்குச் சொல்றாங்க. பாவம்..விட்டுவிடுவோம். ஹா ஹா

   Delete
  3. ஹாஹா,ஹா,ஹா, வழக்கம்போல் நெல்லைத்தமிழரின் அனுமானங்கள். நான்போட நினைச்சது வேறே பதிவு. அதுக்கான படங்களைக் கணினியில் ஏற்றவில்லைனு பாதிப் பதிவு எழுதிட்டுத் தான் கண்டு பிடிச்சேன். ஆகவே அதை அப்படியே ட்ராஃப்ட் மோடில் வைச்சுட்டு இது ஏற்கெனவே எழுதிப் பிரதிலிபியில் வெளியானதைப் போட்டேன். அதோட அப்போ எங்களுக்குத் திங்கட்கிழமை தானே! செவ்வாய்க்கிழமை இப்போத் தான் காலம்பர பதினோரு மணி ஆகி இருக்கு! :))) நீங்கல்லாம் தூங்குமூஞ்சிங்க, தூங்குவீங்க! நாங்க முழிச்சிட்டு இருக்கோமாக்கும்! இஃகி,இஃகி,இஃகி

   Delete
 7. சூப்பர் ரெசிப்பி கீதாக்கா....

  அக்கா நான் பீட் ரூட்டில் பல வகைகள் நீங்க சொல்லிருப்பது போலச் செய்வதுண்டு. பீட் ரூட் சாதம், கேரளத்தில் பீட் ரூட் கூட ப்ரியாணியில் சேர்த்திருந்தாங்க ஒரு ஹோட்டலில் அது போல நானும் சேர்த்துச் செய்வதுண்டு.

  நானும் இனியவள் தானே இருந்தாலும் பீட் ரூட்டை எல்லாம் அத்தனை அவாய்ட் செய்வதில்லை அக்கா. ஏன்னா அது நம் இரத்த ப்ளேட்லெட்ஸ் மற்றும் ஹீமோக்ளோபின் உயர்த்த உதவும் என்பதால்...இது வரை பிரச்சனை இல்லாமல் போகிறது. நான் ஸ்வீட்டைக் கூட முழுவதும் அவாய்ட் செய்துவிடுவேன். ஆனால் காய்கள் பழங்களைத் தவிர்ப்பது இல்லை. கொஞ்சமேனும் எடுத்துக் கொள்கிறேன்.

  அப்புறம் நானே ஒரு கோட்டா வைத்துக் கொண்டு என்ன சாப்பிட்டோம் சாப்பிடுகிறோம் என்ற கணக்கு வைத்துக் கொண்டு அதுக்கே ஏற்றாற் போல சாப்பிட்டுக் கொள்வது....

  பீட் ரூட் சூப், பீட் ரூட் ரோஸ் மில்க் )இது பத்தி பதிவு கூடப் போட்டிருந்தேன் நம்ம ஸ்ரீராம் அவர் தோழி ஹேமா அவங்க பீட் ரூட் ரோஸ் மில்க் ரெசிப்பி போட்டிருந்தப்ப...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. நானும் முன்னெல்லாம் வெஜிடபுள் பிரியாணி பண்ணும்போது பீட்ரூட் போட்டுக் கொண்டிருந்தேன். அப்புறமா விட்டுட்டேன். இங்கே மிக்சட் வெஜிடபுள் ஃப்ரோஸனில் நிறையக் கிடைக்கிறது. முக்கியமான காய்களோடு பட்டாணியும், பிஞ்சுச் சோள முத்துக்களும் கலந்து வரும். அதிலே வெஜிடபுள் சாதம் பண்ணுவோம். வெங்காயம், பூண்டு சேர்க்காமல்!

   Delete
  2. மகள் இம்முறையில் தான் வெஜிடபுள் சாதம், வெங்காயம், பூண்டு சேர்க்காமல் நவராத்திரி அழைப்பில் விருந்தினருக்குச் சமைத்திருந்தாள்.

   Delete
 8. இதே போலத்தான் போன வாரம் பீட் ரூட்டில் செய்தேன். பொதுவாகவே நான் இப்படியான கறி வகைகள் செய்யறப்ப ப மி, ஜீ, இஞ்சி அப்புறம் தேங்காய் கூடவே கொஞ்சம் கருகப்பில்லை (இப்ப நானும் உங்களைப் போல இப்படிச் சொல்லத் தொடங்கிட்டேன்!!!!!) கருகப்பிலை பெரும்பாலும் எல்லாரும் தூர எறிவதால் (நம் வீட்டில் யாரும் தள்ளி வைக்க மாட்டாங்க இருந்தாலும்) கூடவே ஒரு ஓட்டு ஓட்டி சேர்ப்பது வழக்க மாகிவிட்டது.

  இங்கு கருகப்பிலை வாங்கி அதை நன்றாகக் கழுவி துணியில் (இரு நாட்கள் மட்டுமெ அப்புறம் னன்றாக ஈரம் வடிந்ததும் துணியை விரித்துப் போட்டு வைக்கும் போது நன்றாக உலர்ந்து விடுகிறது மொறு மொறு வென்று. எனவே அதை நான் பொடித்து வைத்துக் கொண்டு விடுகிறேன். சேர சேர பொடித்து வைத்துக் கொண்டுவிடுகிறேன் நல்ல மணமாகவும் பச்சை நிறம் மாறாமலும் இருக்கு...

  கீதா

  ReplyDelete
  Replies
  1. பொதுவாக நான் பேச்சுத் தமிழில் தானே எழுதுவேன். பலரும் முன்னாடி நிறையச் சொல்லுவாங்க. பின்னால் கொஞ்சம் கொஞ்சம் மாற்றிக் கொண்டேன். அதனால் கறிவேப்பிலை என்று சொல்லாமல் கருகப்பிலை என்று சொல்லுகிறேன். இந்தக்கருகப்பிலையை வெறும் பொடியாக வைத்துக்கொள்ளாமல் அதோடு மி.வத்தல், மிளகு, உளுத்தம்பருப்பு, உப்பு வறுத்துச் சேர்த்துப் பொடித்து வைங்க! ஒரு நாள் கருகப்பிலைக்குழம்பு பண்ணலாம். ஒரு நாள் மிளகு குழம்பு பண்ணினால் அதிலே இதைக் கொஞ்சம் சேர்த்து மற்ற சாமான்களோடு மிளகு குழம்பு பண்ணலாம். கருகப்பிலைப் பொடி மோர் சாதத்துக்குத் தொட்டுக்க விறுவிறுப்பாக இருக்கும். சாதத்திலும் நல்லெண்ணெய் ஊற்றிப் பொடி போட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

   Delete
  2. கீதா ரங்கன்... சென்னைல கரேப்பிலை இலவசம் (காய்கறியோட). நான் இலைகளை உருவி காற்றுப்புகாத டப்பாவில் போட்டு குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் 1 வாரம் வரும் (சேமிக்க அங்கு தேவையில்லை. காய்கறி வாங்கும்போதெல்லாம் நிறைய கரேப்பிலை கொடுப்பாங்க). பெங்களூர்லதான் ஓசிக்குக் கேட்டா ஒரு மாதிரி பார்க்கறாங்க. 10 ரூபாய். ஹா ஹா

   Delete
  3. ஓ...கீதா ரங்கன்..இப்போ புரிஞ்சது. நீங்க குளிர்சாதப் பெட்டி உபயோகத்தைத் தவிர்க்கிறீங்க இல்லையா (பெங்களூர்ல). அதான் இந்த ஜிம்னாஸ்டிக்ஸ் வேலைலாம் செய்யறீங்க (காயவைத்து, பொடித்து...)

   Delete
 9. இன்னும் உங்க பாரம்பரிய சமையல் பக்கத்துக்குப் போகலை. கொஞ்சம் மிஸ் ஆகியிருக்கு அதையும் போய்ப் பார்க்கிறேன் கீதாக்கா..

  கீதா

  ReplyDelete
  Replies
  1. மெதுவாக வாங்க. அவசரமே இல்லை.

   Delete
 10. பீட்ரூட் எனக்குப் பிடித்த காய்களுள் ஒன்று. வழக்கமாய் பொரியல் செய்வேன். இந்த முறை சற்று வித்தியாசமாக உள்ளது. செய்துபார்க்கிறேன். நன்றி கீதா மேடம்.

  ReplyDelete
  Replies
  1. ஆச்சரியமான உங்கள் வரவு மகிழ்ச்சியைத் தருகிறது கீதமஞ்சரி. நன்றி.

   Delete
  2. கீதமஞ்சரி அவர்களின் வரவு அத்திவரதர் போலத்தான்... அவர்களின் தரிசனம் கிடைப்பது எளிதல்ல

   Delete
 11. சுவையான குறிப்பு. சிறு வயதில் பீட்ரூட் துருவி அதில் சர்க்கரை தூவி சாப்பிடுவது எனக்கு பழக்கம்!

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், வெங்கட், சாலடிலேயே நாங்க மிளகுத்தூளோடு கொஞ்சம் சர்க்கரையும் சேர்ப்போம். நன்றாக இருக்கும்.

   Delete
 12. அட... இதப் பார்றா... என்னிடம் புது பீட்ரூட் இருக்கிறது. ஆனால் வெங்காயம் உபயோகிக்க முடியாது. மற்ற எல்லாம் இருக்கு. நாளை இதே முறையில் பீட்ரூட் கரேமது, தக்காளி போட்ட பருப்பு சாத்துமது, உருளை தேங்காய் அரைத்த கூட்டு அல்லது கோஸ் போட்டு பாசிப்பருப்பு/மிளகு சேர்த்த மிளகூட்டு (பொரிச்சகூட்டுன்னு இதைச் சொல்லாதீங்க. நாங்க தின்னவேலி)

  ReplyDelete
  Replies
  1. உருளைக்கிழங்குக் கூட்டெல்லாம் நான் பண்ணுவதில்லை. இப்போ காடரர் உருளைக்கிழங்கு, வெங்காயம் போட்டுத் தேங்காய், ஜீரகம் அரைத்துவிட்டுக்கூட்டுப் பண்ணிக் கொடுக்கிறார். பீட்ரூட்டிலும் இப்படிப் பண்ணுகிறார். நாங்க 2 முறை சாப்பிட்டுப் பார்த்துட்டுப் பிடிக்கலைனு அதுக்குப் பதிலாகக் கறி என்ன பண்ணுகிறாரோ அதை இரண்டாக வாங்கிப்போம். இதிலெல்லாம் கூட்டுப் பண்ணுவது எனில் சப்பாத்திக்கு மட்டுமே!

   Delete
 13. நீங்க ஏன் போணி ஆகலைன்னு எழுதறீங்க? நிச்சயம் எ.பி.க்கு அனுப்பியிருக்கலாம்.

  நேரம் கிடைக்கும்போதெல்லாம் உங்க செய்முறைகளை படத்தோட அனுப்புங்க. அது ஒரு டாகுமெண்டாக இருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. நான் என்னிடமும் வைத்துக்கொள்ள வேண்டும் அல்லவா? அங்கேயும் போட்டுவிட்டு இங்கேயும் போட்டால் சரிப்படுமா?

   Delete
 14. நான் பெரிய பீட்ரூட்டை நன்கு கழுவி, நாலா கட் பண்ணி பாத்திரத்தில் குக்கர்ல வைத்துடுவேன். அப்புறம் தோல் எடுக்க ஈஸி. பாத்திரத்தில் சேர்ந்த பீட்ரூட் நீரை அப்படியே சாப்பிட்டுடுவேன் (பெருமாளுக்குக் கண்டருளப்பண்ணின பிறகுதான்).

  சில சமயம் ரொம்ப வெந்துடும். அதை மாத்திரம் கொஞ்சம் பார்த்துக்கிட்டா போதும்.

  ReplyDelete
  Replies
  1. @நெல்லைத்தமிழரே, ஆட்கள் இருப்பதைப் பொறுத்து அது. இங்கே பையர் பீட்ரூட்டே வாங்குவதில்லை. நாங்க வாங்கினால் இம்மாதிரிப்பொறுக்கிச் சின்னதாகத்தான் வாங்குவோம். இங்கே யு.எஸ்ஸில் ஒரு பீட்ரூட் அரைக்கிலோ கூட இருக்கும். அவ்வளவு பெரிதாக இருக்கும். ஒரு வெங்காயம் நறுக்கினால் எங்கள் நான்குபேருக்குப் போதும். பல சமயங்களிலும் மிஞ்சும். அப்போது அதை சாலட் மாதிரி ஏதேனும் காய்களைச் சேர்த்துப் பண்ண வேண்டி இருக்கு. வெங்காயமெல்லாம் நறுக்கி மிச்சம் வைக்க முடியாதே! உருளைக்கிழங்கும் அப்படித்தான்! ரொம்பப் பெரிதாக இருக்கும்.

   Delete 15. //பீட்ரூட் கால் கிலோ, 3,அல்லது 4 வரும். ///

  ஹ்ளோ கீதாம்மா இது எந்த ஊருல.... அமெரிக்காவில் ஒரு பீட் ரூட் கால் கிலோவுக்கு மேல் வருமே.....படத்தில் நீங்க போட்டு இருக்கும் பீட் ரூட் எங்க ஊரு பிள்ம்ஸ் போல உள்ளதே

  ReplyDelete
  Replies
  1. ஆமாம், மதுரைத் தமிழரே, இங்கேயும் அப்படித் தான். நல்லவேளையா இந்தியாவில் அப்படி இல்லை. இங்கே இருப்பதை நறுக்கிட்டு மிச்சத்தை வேறே ஏதேனும் பண்ண வேண்டியது தான். நான்கு பேர் இருக்கும் குடும்பம் எனில் சரியாக இருக்கும்.

   Delete
 16. நீங்கள் சொன்னதுபோல் சத்துள்ள உணவை நமது மக்கள் விரும்புவது குறைவே. ஆனால் எனக்கு பீட்ரூட் பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கில்லர்ஜி, நன்றி.

   Delete
 17. பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி ஆவியில் வேகவைத்துக் கொள்ளவும். பச்சைமிளகாய் இஞ்சி தேங்காய் துருவல் இவற்றை மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வாணலியில் கடுகு பெருங்காயம் தாளித்து அரைத்ததை போட்டு வதக்கவும். பச்சை வாசனை போனவுடன் பீட் ரூட்டையும் சேர்த்து வதக்கவும். பின்னர் கட்டித்தயிர் சேர்த்து கிளறி இறக்கவும். இந்த பீட்ரூட் பச்சடி கேரளத்தில் கல்யாண சத்யகளில் நிச்சயம் இருக்கும். அதாவது தயிர்ப்பச்சடி வெள்ளை  மஞ்சள் சிவப்பு என்று 3 நிறங்களில் பரிமாறுவார்கள். Jayakumar

  ReplyDelete
  Replies
  1. சாப்பிட்டிருக்கேன். நானே செய்தும் இருக்கேன் ஜேகே அண்ணா. ஆனால் கேரளத்தில் பிரபலம் எனத் தெரியாது. வெஜிடபுள் ரைஸுக்குத் தொட்டுக்கப் பண்ணுவோம்.

   Delete
 18. உண்மையில் சொல்லவேண்டுமென்றால் பீட்ரூட் கறி எப்போதாவதுதான் சாப்பிடுவேன்.  எங்கள் வீட்டில் எப்போது செய்தாலும் பீட்ரூட் தேங்காய்க்கறி, அல்லது வெறும் கறிதான்!   வெங்காயம் போட்டு வருஷத்துக்கு ஒருமுறை செய்தால் பெரிது...  பாஸிடம் இதைக் காட்டுகிறேன்!

  ReplyDelete
  Replies
  1. இந்த மாதிரி ஒரு முறை பண்ணிச் சாப்பிட்டுப் பாருங்கள் ஸ்ரீராம். நம்ம ரங்க்ஸுக்கு பீட்ரூட்டே பிடிக்காது. அவரே சாப்பிடுகிறார்! :))))

   Delete
 19. பீட்ரூட் இனிப்பாக அமைவதே அரிது!   சுவையே இல்லாமல் வெறும் தண்ணீர் மாதிரிதான் சப்பென்று இருக்கிறது இப்போதெல்லாம்!

  ReplyDelete
  Replies
  1. விளையும் இடத்தின் மண் வாகு! பொதுவாகத் திருச்சியில் எல்லாக் காய்களுமே சுவையாக இருக்கும். சென்னையிலும் அம்பத்தூரில் இருந்தவரை அக்கம்பக்கம் கிராமங்களில் இருந்தெல்லாம் காய்கள், கீரைகள் வந்ததால் சுவையும் சரி, காய்க்காரர்கள் போடும் எடையும் சரி நன்றாகவே இருக்கும்.

   Delete
 20. இன்று வீட்டில் பீட் ரூட் பொரியல்

  ReplyDelete
 21. //வெந்த பீட்ரூட்டின் தோலை உருளைக்கிழங்கு உரிப்பது போல் உரிக்கலாம்.//

  இதுநாள் வரைக்கும் தெரியாமப்போச்சே ..எப்பவும் பீட்ரூட் வெட்டின கறை கத்தி போர்ட் எல்லாத்திலும் இருக்கும் .இது புது முறையா இருக்கு செய்து பார்க்கிறேன் .நாங்க பீட்ரூட் கொத்தா இலையுடன் வாங்கி அதையும் நறுக்கி பொரியல் செய்வேன் .

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஏஞ்சல், பீட்ரூட்டின் இலையைச் சமைப்பதோடு அல்லாமல் சாலட்களிலும் சேர்க்கின்றனர். இந்த முறையிலும் செய்து பாருங்க! நன்றாகவே இருக்கும்.

   Delete
 22. வணக்கம் சகோதரி

  பீட்ரூட் பொரியல் நன்றாக வந்திருக்கிறது.
  (நீங்கள் இதற்கு என்ன பெயர் வைத்திருக்கிறீர்களோ..? நான் பொரியல் என்று கூறி விட்டேன்.) படங்களும் செய்முறை விளக்கங்களும் அருமையாக வந்துள்ளது. நான் இதை முழுதாகவே எப்போதுமே நன்கு அலம்பி பின், எங்கெல்லாம் கொஞ்சம் டேமேஜ் இருக்கிறதோ அதை அகற்றி விட்டு தோலுடனே குக்கரில் வைத்து தோலுடனே துருவி, தேங்காயும் துருவி சேர்த்து தாளித்து பொரியல செய்வேன். இல்லை. பா பருப்பு கொஞ்சம் சேர்த்து, வெங்காயம், உ. கி சேர்த்து தேங்காய் அரைத்து விட்டு கூட்டாக செய்வேன். இது பூரிக்கு மிகவும் நன்றாக இருக்கும். எங்கள் வீட்டில் இது அடிக்கடி நேயர் விருப்பமாக வரும். இதை படங்கள் எடுத்து வைத்துள்ளேன். கோர்வையாக எழுத சமயந்தான் இன்னமும் கிடைக்கவில்லை.

  தங்கள் செய்முறை நன்றாக இருந்தது. தேங்காய் மட்டுமின்றி வெங்காயமும் சேர்த்து சுவை நன்றாகத்தான் இருந்திருக்கும். அது சரி..! பொதுவாக திங்கத்தான் போட்டி வரும். "திங்க"ற கிழமைக்கும் போட்டி வந்ததா? அதுவும் சுவையாகத்தான் இருந்திருக்கும். ஹா.ஹா.ஹா. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க கமலா, நாங்க இதைக் கறி என்றே சொல்லுவோம். வெங்காயம்,உருளைக்கிழங்கு சேர்த்த கூட்டெனில் அது சப்பாத்திக்கு மட்டுமே! சாப்பாட்டுக்கு வைச்சுக்கறதில்லை.

   Delete
  2. //பொதுவாக திங்கத்தான் போட்டி வரும். "திங்க"ற கிழமைக்கும் போட்டி வந்ததா?// இல்லை கமலா, வம்புக்குத் தான் போடுவேன். முன்னெல்லாம் எ.பி.ஆசிரியர்களில் ஒருவரான கௌதமன் சார் ஞாயிற்றுக்கிழமைப் படம்னு போடுவார். அதுக்குப் போட்டியாக நானும் போடுவேன். அதே போல் இந்தத் "திங்கற"கிழமை திங்கற பதிவு போடுவதும் அவர் தான் ஆரம்பிச்சு வைச்சார். அப்போ அவருக்குப் போட்டியா நானும் இங்கே ஏதேனும் சமையல் குறிப்புப் போடுவேன். பின்னாட்களில் நெல்லைத் தமிழன்+ஸ்ரீராம் கூட்டணியில் சமையல் பதிவுகள் வந்தப்போவும் போட்டிருக்கேன். இப்போ ரொம்ப நாட்களாக "டச்" விட்டுப்போயிடுத்துனு நினைவு படுத்திக் கொண்டேன். :)))))

   Delete
  3. //http://sivamgss.blogspot.com/2013/07/blog-post_14.html// இந்தச் சுட்டியிலே போய்ப் பாருங்க, கொஞ்சம் கொஞ்சம் புரியும். :))))))

   Delete
 23. அப்பாடா....எனக்கு தெரிந்த செய்முறை ...


  வேக வைத்த பீட்ரூட் யை கொஞ்சம் மெலிசா நீள வாக்கில் நறுக்கி செய்வோம் ...

  இந்த முறையில் செய்றது எனக்கு ரொம்ப பிடிக்கும் ....

  ReplyDelete
  Replies
  1. அப்பாடா அனுப்ரேம், நீங்களும் தி/கீதாவும் தான் தெரியும்னு சொல்லி இருக்கீங்க. நன்றி.

   Delete
 24. அன்பு கீதாமா, தாமத வருகைக்கு மன்னிப்பு கேட்டுக்கறேன்.
  பீட் ரூட் மிகவும் பிடித்த கறி. வெறும வதக்கினாலே சாப்பிட்டு விடுவேன் .இப்பவும் ரெண்டு ஸ்பூனாவது சாப்பிடாமல இருப்பதில்லை.

  பெண்ணும் வேகவைத்து சிறு துண்டுகளாக வதக்குவாள்.
  நீங்கள் செய்திருக்கும் முறை சத்துள்ளது.

  படங்கள்,செய்முறை அருமையாக வந்திருக்கிறது. உலகில் சர்க்கரையே
  இல்லாமல் போகட்டும்னு சொல்ற அளவுக்கு உங்கள் சமையல்
  ஆவலத் தூண்டுகிறது.

  மிக மிக நன்றி மா.

  ReplyDelete
  Replies
  1. வந்ததே போதும் வல்லி, எதுக்கு மன்னிப்பெல்லாம். நீங்க வேலை மும்முரத்தில் இருப்பீங்க. ஊருக்கு வேறே கிளம்பணுமே! ஆகவே மெதுவா வந்து படிச்சாப் பரவாயில்லை. கருத்துக்கும், பாராட்டுக்கும் நன்றிம்மா.

   Delete
 25. aஆஆஆ மீ ரொம்ப லேட்டூ..

  //அப்போவே இது போணி ஆகாதுனு புரிஞ்சு போச்சு. அதான் எ.பிக்கு அனுப்பாமல் இங்கேயே போட்டுட்டேன். இனி உங்க பாடு, பீட்ரூட் பாடு!// ஹா ஹா ஹா

  ReplyDelete
  Replies
  1. போணி ஆகாதுனு தான் நினைச்சேன். ஆனால் இதுக்குத் தான் வராதவங்க எல்லாம் வந்திருக்காங்க. ஜேகே அண்ணா, மதுரைத் தமிழர், கீதமஞ்சரினு! :))))))

   Delete
 26. //பொதுவாக இதை அதிகம் யாரும் விரும்புவதில்லை என்றாலும் இம்முறையில் செய்து பாருங்களேன்//

  கீசாக்கா இப்பூடிச் சொல்லலாமோ நீங்க? இங்கே ஒரு பீற்றூட் பிரியை இருக்கும்போது? நான் சும்மா தூள் போட்டு பிரட்டல் கறிபோல செய்து சும்மாவே சாப்பிடுவேன்ன்ன்ன்.. எனக்கு மட்டுமே இது வீட்டில் பிடிக்கும்.. அதுவும் நல்லாவே பிடிக்கும்.

  ReplyDelete
  Replies
  1. உங்களை மாதிரிச் சிலர் பிடிக்கும் என்பது ஆச்சரியமாகவே உள்ளது. நானெல்லாம் சின்ன வயசில் நிறையச் சாப்பிட்டிருக்கேன். பின்னர் அதிகம் சாப்பிட்டதில்லை. ஸ்ரீரங்கத்தில் எங்க காடரர் பீட்ரூட்டில் ரசம் செய்து கொடுக்கிறார்.

   Delete
 27. குறிப்பைப் பார்க்க நல்லாத்தான் இருக்கும் கீசாக்கா.. இங்கு ரெடிமேட்[அவிச்ச] பீற்றூட் எப்பவும் கிடைக்கும்.

  உங்கள் சமையல் ரெசிப்பியில்.. சாம்பார்பொடி, ரசப்பொடி ரெசிப்பி இருந்தா லிங் தாங்கோ கீசாக்கா.

  ReplyDelete
  Replies
  1. https://geetha-sambasivam.blogspot.com/2019/03/ இங்கே போய்ப் பாருங்க அடக்கவொடுக்கமான அதிரடி அதிரா!

   Delete
  2. வேக வைச்ச எந்தக்காயும் நான் வாங்குவதில்லை. எனக்குப்பிடிக்கிறதில்லை. எந்தத் தண்ணீரில் வேக வைச்சாங்களோனு தோணும். எல்லோரும் அவிச்ச கடலை வாங்குவாங்க. நான் பச்சைக்கடலையை வாங்கிச் சுத்தம் செய்து வீட்டிலேயே அவிச்சுச் சாப்பிடுவதைத் தான் விரும்புவேன்.

   Delete
  3. ஆவ்வ்வ் கீசாக்கா அனைத்தும் பொடியும் ஓரிடத்தில்.. பார்த்திட்டு செய்யப்போறேன்ன் நன்றி.

   Delete
 28. பீற்றூட் இதேமுறையில் காரத்துகாக மிளகாய்பொடியும் போடுவோம். தேங்காய்பால்விட்டு பிரட்டடல் கறியும் செய்வோம்.

  ReplyDelete