எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 19, 2020

நாட்டில் நடப்பவை நல்லனவாயிருக்க வேண்டும்! ஆனால்! :(

இன்னிக்குத் தொலைக்காட்சிச் செய்திகளில் நெஞ்சைப் பதற வைக்கும் காட்சி! ஒரு மனிதர் தான் கல்யாணம் செய்து கொண்ட மனைவியைக் கையைக் காலைக் கட்டிப் போட்டு அடித்து,வெட்டி எல்லாம் செய்கிறார். அந்தப் பெண் கத்தினாள் என்பதால் வாயில் துணியை அடைத்துவிட்டுப் பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தப் பார்த்திருக்கிறார். நல்லவேளையாக அந்தப் பெண்ணின் கதறல் சப்தம் கேட்டுக் கதவை உடைத்துக் கொண்டு வந்த சில நல்ல மனிதர்களால் அந்தப் பெண் உயிருடன் மீட்கப்பட்டு அந்தக் கணவனையும் காவல்துறை கைது செய்திருக்கிறது. மனைவியை இப்படியெல்லாம் கொடுமைப் படுத்த இவர்களுக்கு அதிகாரம் கொடுப்பது யார்? திருமணம் செய்து கொண்டு வாழ்க்கை தான் நடத்த வேண்டும். முடியலையா/பிடிக்கலையா/ இருக்கவே இருக்கு விவாகரத்து! அதை விட்டுட்டு ஏன் இந்தக் கொடுமை? மனித மனத்தின் கொடூரம் நாளாக ஆக அதிகரிக்கிறது. 

***********************************************************************************

இது இப்படின்னால் இன்னொரு ஊரில் ஒரு பெண் முறை தவறிப் பிறந்த ஆண் குழந்தையை நான்கு நாட்கள் கூட ஆகாத குழந்தையை உயிருடன் மண்ணெண்ணெய் ஊற்றி எரித்திருக்கிறாள். இதற்கு அந்தப் பெண்ணின் தாய் உதவி செய்திருக்கிறார். இத்தனை காலம் எப்படி அந்தப் பெண் ஊர் வாயில் விழாமல் தப்பித்தார்? அது போலவே இந்தக் குழந்தையையும் காப்பாற்றி இருக்கலாமே! பத்து மாதம் சுமந்து பிள்ளை பெறுகிற வரை சும்மா இருந்துட்டுப் பிறந்தப்புறம், அந்தப் பிஞ்சு முகத்தைப் பார்த்தப்புறமா ஒரு தாய்க்குக் குழந்தையைக் கொடுமையாக எரித்துக் கொல்லவும் மனம் வந்திருக்கு! என்ன சொல்லுவது என்றே தெரியவில்லை.

***********************************************************************************

இன்னொரு பெண்மணி பிரபல ஜோசியராம், ராசிக்கல் ஜோதிடம் சொல்லுவாராம்! அவர் மருமகளைக் கொடுமைப் படுத்திக் கல்யாணம் ஆனதுமே வீட்டை விட்டு விரட்டியதாகச் சொல்லுகிறார்கள். அந்த ராசிக்கல் அம்மாவோ காவல்துறையிடம் இந்தப் புகாரை வாங்கக் கூடாது என்று வேறே சொன்னாங்களாம். ஆனால் இப்போ எப்படியோ விஷயம் வெளியே வந்துவிட்டது. இவங்கல்லாம் ஏன் இப்படி நடந்துக்கறாங்க? எங்கே கோளாறு? பிறந்த விதமா? வளர்ந்த விதமா? சந்தர்ப்பங்களா? சுற்றி இருக்கும் மனிதர்களா? எதுவும் புரியலை! 

***********************************************************************************

நீட் தேர்வு எழுதப் பயந்து தற்கொலை செய்து கொண்ட மாணவர்களைப் பற்றிச் செய்திகள் நிறைய வருகின்றன. அதில் ஒரு மாணவன் +2 தேர்வில் 50 சதவீதம் மதிப்பெண்களே பெற்றிருப்பதாக அவனுடைய மதிப்பெண் சான்றிதழ் சொல்கிறது. அந்தப் பையனைப் போய் மருத்துவம் படிக்கச் சொல்லி நிர்ப்பந்தித்தால்! இது முழுக்க முழுக்கப் பெற்றோரின் தவறே! அதே போல் முதல் முதலில் கடிதம் எழுதி வைத்துவிட்டு இறந்த பெண்ணும் பெற்றோருக்குத் தான் கடிதம் எழுதி இருக்கிறாள். அவளும் பெற்றோரின் நிர்ப்பந்தத்தால் பயந்திருக்கிறாள். ஆக இது முழுக்க முழுக்கப் பெற்றோரின் அதீத எதிர்பார்ப்பே என்பது தெரிகிறது. 

ஆனாலும் மற்ற மாநிலங்களில் எல்லாம் இந்தத் தேர்வை சர்வ சகஜமாக எழுதித் தள்ளும்போது நம் மாநிலத்து மாணவர்கள் பயப்படக் காரணம் அவர்கள் மனதில் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெறலாம் என்ற எண்ணம் ஊட்டப்பட்டது தான். எந்தப் பொதுத்தேர்வையும் எதிர்கொள்ளும் மனோபலத்துடன் மாணவர்களைப் படிக்க வைப்பதில்லை. இப்போதைய அதிமேதாவி அறிவாளிகளும் அறிவு ஜீவிகளும், குழந்தை எழுத்தாளர்களும் இது அநியாயம், அக்கிரமம், தேர்வெல்லாம் வைக்கக் கூடாது என்றே சொல்கின்றனர்.பொதுத் தேர்வு மாணவர்களுக்கு அழுத்தத்தைக் கொடுக்குமாம். ஆரம்ப கட்டத்தில் உள்ள சின்னச் சின்னத் தேர்வுகளே அழுத்தம் கொடுக்கும் என்கிறார்கள், அதனால் மாணவர்களின் உளநிலை பாதிக்கும் என்கின்றனர்.  எனில் பின்னர் அவர்களால் எப்படிப் பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு, பனிரண்டாம் வகுப்புப் பொதுத்தேர்வெல்லாம் எதிர்கொள்ள முடியும்? தமிழ்நாட்டைத் தவிர்த்த வேறே எந்த மாநிலங்களிலேயும் இப்படிப் படிக்காமல் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றதாக அறிவிப்பதில்லை. மாணவர்களின் தகுதி என்னவென்று தெரிய வேண்டாமா? முன்னெல்லாம் நான் சொல்வது நூறாண்டுகள் முன்னர் எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு ஈஎஸ் எல் சி என்னும் பெயரில் இருந்தது. என் அம்மா அந்தத் தேர்வு எழுதிவிட்டுப் பின்னர் ஆசிரியப் பயிற்சியில் சேர இருந்தார். திருமணம் ஆனதால் போகமுடியவில்லை. ஆனால் எட்டாம் வகுப்புப் பொதுத்தேர்வு ஒன்றும் புதியது அல்ல. அதே போல் பள்ளி இறுதியிலும் பொதுத் தேர்வு எழுதுவதற்குத் தகுதியான மாணவர்களைத் தேர்வு செய்யும் பொதுத் தேர்வு ஒன்று அந்த அந்தப் பள்ளி அளவில் நடைபெறும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களே பள்ளி இறுதிப் பொதுத் தேர்வு எழுத முடியும். தேர்ச்சி பெறாதவர்கள் அடுத்த வருஷம் மீண்டும் இந்தத் தகுதித் தேர்வு எழுதித் தான் பொதுத் தேர்வுக்குப் போக முடியும். அப்படியெல்லாம் இப்போது இல்லை. எட்டாம் வகுப்பு வரை தேர்வே இல்லை. எல்லோரும் பாஸ். ஒன்பது, பத்தாம் வகுப்பில் பாடங்களை எப்படிப் படிப்பார்கள்? பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எனில் மதிப்பெண்களை அள்ளிப் போட்டுவிட்டு மாணவர்கள் தேர்ச்சி விகிதம் என்றால்? தேர்வு என்றாலே மாணவர்கள் பயந்து ஒதுங்கும்படி செய்துவிட்டார்கள். 

இப்படிக் கோழையான மாணவர்களால் மருத்துவப் படிப்பை மட்டும் எப்படி எதிர்கொள்ள முடியும்? முதல் வருஷம் அனாடமி வகுப்பிலேயே மயக்கம் போட்டு விழுந்து வீட்டுக்கு வந்து விடுவார்கள். முதல் வருஷம் தேர்ச்சி பெறவில்லை எனில் அடுத்த வருஷம் படித்துக் கொண்டே முதல் வருஷம் தேர்வுகளிலும் தேர்ச்சி பெறலாம் என்பது மருத்துவக் கல்வியில் இல்லை. மீண்டும் முதல் வருஷப் பாடங்களைத் தான் படிக்க வேண்டும்.இதுவே அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் போன்ற நாடுகள் எனில், நம் நடிகர்கள் இந்த நாடுகளைத் தானே சுட்டிக் காட்டுவார்கள். அங்கெல்லாம் இப்படி ஒரு தேர்வு இல்லை என்பார்கள். ஆனால் அதற்கு முன்னர் அவங்க ஒன்றாம் வகுப்பில் இருந்தே மருத்துவப் படிப்புக்கான தேர்ச்சி பெறும் வகையில் படிக்க வேண்டும் என்பது இங்குள்ளவர்கள் யாருக்கும் தெரியாது. நம்ம அதிரடி அதிரா அவர் மகன் மருத்துவத்தில் சேர எத்தனைத் தகுதித் தேர்வுகள், நேர் காணல்கள் என எதிர்கொள்ள வேண்டி இருந்தது என்பதோடு அவர் தன்னார்வலராக ஏதேனும் மருத்துவமனைகளில் தொண்டு செய்திருக்க வேண்டிய அவசியத்தையும் சுட்டிக் காட்டி இருந்தார். இங்கெல்லாம் அப்படிச் சொல்லிட்டு எங்கே போவது?  மாணவர்களைக் கொடுமைப் படுத்துவதாகச் சொல்லி விடுவார்கள்.

ஒரு நல்ல மருத்துவராக முக்கியமான தகுதியே மனோ தைரியம், எந்த நிலையிலும் துவளாத மனம் இவை தான். ஆனால் இங்கேயோ நுழைவுத் தேர்வுக்கே, அதிலும் படித்த பாடங்களில் இருந்து கேட்கப்படும் கேள்விகள், உங்கள் தாய்மொழியில் பதிலளிக்கலாம், என இவ்வளவு சலுகைகள் இருந்தும் தேர்வை எதிர்கொள்ளத் தேவையான மனோபலம் இல்லை எனில் இவங்கல்லாம் படிச்சு மருத்துவராகப் பத்தாண்டுகளுக்கு மேல் ஆனாலும் கஷ்டம் தான். எதற்கெடுத்தாலும் சிங்கப்பூரை உதாரணம் காட்டுபவர்கள் அங்கெல்லாம் 3 ஆம் வகுப்பு, ஆறாம் வகுப்பு ஆகியவற்றில் பொதுத்தேர்வுகளைக் கடந்தால் தான் நல்ல பள்ளியில் அனுமதி கிட்டும் என அங்கே இருப்பவர் ஒருத்தர் சொல்கிறார். அதோடு மருத்துவம் படிக்க நுழைவுத் தேர்வுகள் அங்கேயும் இருப்பதாகவும் சொல்கிறார். இதே அம்பேரிக்கா என்றால் எடுத்த எடுப்பில் நம்ம நாடு மாதிரி மருத்துவக் கல்லூரியில் சேரமுடியாது. நான்காண்டுகள் பட்டப்படிப்பு மருத்துவத்துக்குத் தேவை. எங்க பெரிய பேத்தி சட்டம் படிக்கப் போகிறாள். அதற்கு அடிப்படையாக அவள் மூன்றாண்டுகள் அடிப்படைப் படிப்பு முடித்துப் பட்டம் வாங்கி இருக்கிறாள். இப்போது சென்ற வாரம் சட்டப்படிப்புக்குச் சேரப் பொதுத்தேர்வு எழுதி இருக்கிறாள். அதில் அவள் வாங்கும் மதிப்பெண்கள்/கிரேட் ஆகியவற்றைப் பொறுத்தே அவளுக்குக் கல்லூரி கிடைக்கும்.அவள் விரும்பும் கல்லூரி வேண்டுமெனில் அதற்கேற்ற மதிப்பெண்கள் இருக்க வேண்டும்.சட்டப்படிப்புக்கே இவ்வளவெனில் மருத்துவத்துக்கு? 

நான்காண்டுகள் அடிப்படைப் படிப்பு முடித்த பின்னரே மருத்துவத்துக்கு விண்ணப்பிக்கலாம். அதற்கும் எம்சிஏடி என்னும் (Medical College Admission Test) தகுதித் தேர்வு உண்டு. அதில் தேர்ச்சி பெற்றால் தான் மருத்துவப் படிப்பில் சேரலாம். அதிலும் நான்கு முதல் ஐந்தாண்டுகள் கட்டாயம் படித்தாக வேண்டும். அதன் பின்னர் அவரவர் தகுதி அடிப்படையில் 3 ஆண்டுகள் முதல் 7 ஆண்டுகள் வரையிலும் பயிற்சி மருத்துவர். அதன் பின்னரே சிறப்பு மருத்துவத் துறைப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம்.  பள்ளிப்படிப்பு முடிந்ததும் இங்கெல்லாம் மருத்துவப் படிப்புக்குச் சேர்ந்து படிப்பது போல் அங்கெல்லாம் படிக்க முடியாது. அதோடு இல்லாமல் பள்ளிப் படிப்பு மட்டுமில்லாமல் அவங்க பொது இடங்களில் நடந்து கொள்ளும் முறை, தன்னார்வத் தொண்டு, விளையாட்டு, கலை,  எனப் பல்வேறு விஷயங்களில் அவர்கள் எப்படி நேரத்தைச் செலவு செய்திருக்கிறார்கள் என்பதும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தப்புறம் படிக்க வேண்டிய படிப்பு அது தனி! இன்னொரு பதிவாக எழுத வேண்டிய அளவுக்கு இருக்கும். இந்த அழகில் பனிரண்டாம் வகுப்புத் தேர்வில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவத்தில் சேர்ந்தால்! அவங்கல்லாம் மருத்துவராக வந்துவிட்டால் அவங்களிடம் மருத்துவம் செய்து கொள்ள நம்ம ஊர் அரசியல்வாதிகளையும்,திரைப்பட நடிகர்களையும் அனுப்பணும். ஆனால் அவங்க என்னடான்னா வெளிநாடுகளுக்குப் போய் வைத்தியம் செய்துக்கறாங்க! இந்தக் கொடுமையை எங்கே போய்ச் சொல்லுவது? :)))))))

இந்த அழகிலே இவங்க மத்திய அரசுப்பணியில் தமிழர்கள் இல்லைனு வேறே சொல்றாங்க! அதற்கான தேர்வுகளில் தேர்ச்சி பெறும் அளவுக்குப் படிப்புத்தகுதி இருக்கா? அதை விடுங்க! போக மாட்டாங்க. அதில் நிரந்தரப்பணியோடு, ஓய்வூதியத்தோடு கூடிய வேலை, மருத்துவச் சலுகை, குழந்தைகள் படிக்கச் சலுகை, இரண்டாண்டுகளுக்கு ஒரு முறை ஊர் சுற்றிப் பார்க்க இந்தியா முழுவதும் போகச் செலவுத் தொகைனு எத்தனையோ உண்டு. ஆனால் நம் மக்கள் இதை எல்லாம் புரிந்து கொள்ளுவதே இல்லை. இப்போதெல்லாம் மத்திய அரசு அலுவலகங்களில் வெளி மாநிலத்தவரே அதிகம் இருக்கிறார்கள் எனில் அது ஏன்? யோசிக்க வேண்டாமா? அதோடு இல்லாமல்  ஐஏ எஸ், ஐபிஎஸ், சி.ஏ., போன்ற படிப்புகளிலும் தமிழர்கள் குறைவே! ஏனெனில் அதிலும் பொதுத் தேர்வுகள், தகுதித் தேர்வுகள் உண்டு. அவ்வளவு ஏன்? வெளிநாடுகளில் படிக்கச் செல்லுபவர்களுக்கு எனத் தேர்வுகள் தனியாக உண்டு. இப்படி எங்கே போனாலும் தேர்வுகள் வைத்தே தகுதியை நிர்ணயம் செய்யும்போது மருத்துவப் படிப்பில் நுழையத் தகுதித் தேர்வே வேண்டாம் என்றால் எப்படி?  

28 comments:

  1. //தொலைக்காட்சிகளில் நெஞ்சைப் பதற வைத்த// - இந்த மாதிரி நிகழ்ச்சிகள் என் கண்ணில் அகப்படுவதில்லை. நான் பெரும்பாலும் செய்தி சேனல்களைப் பார்ப்பதில்லை. ஆணுக்கு, பெண்ணின் முக்கியத்துவம் தெரியவில்லை. தெரிந்திருந்தால் இந்த மாதிரி கனவிலும் நிகழாது.

    ReplyDelete
    Replies
    1. நம்ம வீட்டில் நியூஸ் சானல்கள் தான் அதிகம் போடுவார். தமிழில், ஆங்கிலத்தில்! முன்னாடி ஹிந்தியில் கூடக் கேட்டுக் கொண்டிருந்தார். ஆஜ் தக்! இப்போ அது வருவது இல்லை.

      Delete
  2. பரவாயில்லை, இரண்டு கொடுமைக்காரப் பெண்களுக்கு ஒரு கொடுமைக்கார ஆண் என்ற விகிதத்தில்தான் நாட்டில் குற்றங்கள் நடக்கிறது போலிருக்கு. அந்த விதத்தில் ஆண்கள் பரவாயில்லையோ?

    ReplyDelete
    Replies
    1. நெல்லையாரே, ஆண்களின் கொடுமையைக்குறைச்சுக் காட்டி இருக்கேன். இன்னிக்கே ஒரு ஆண் பெண்ணின் கழுத்துச் சங்கிலியை அறுத்துப் போனதைக் காட்டினாங்க. அதே போல் சீர்காழியில் காலை வாசல் தெளித்துக் கோலம் போட்ட பெண்ணை ஒரு ஆண் தான்! வெட்டி விட்டுப் போய்விட்டார்கள்.

      Delete
  3. மத்திய அரசுப் பணி - மேடம்... அதை தமிழில் எழுத முடியுமா? ஆங்கிலம் அல்லது ஹிந்தியில்தானே எழுத முடியும். அதனாலேயே தேர்ச்சி விகிதம் குறைவாக இருக்கிறதா இல்லை இதில் ஏதேனும் சதி இருக்கிறதா?

    ReplyDelete
    Replies
    1. நெல்லை, அந்த அளவுக்குக் கூட ஆங்கில அறிவு இல்லைனா என்ன பண்ண முடியும்? ஆனால் கேள்வித் தாள்கள் தமிழில் கிடைப்பதாகக் கேள்விப் பட்டேன். சில குறிப்பிட்ட வேலைகளுக்கு மாநில மொழி கட்டாயமாய்த் தெரியணும். சென்ட்ரல் எக்சைசில் எங்க பெண் குஜராத்தில் தேர்வு எழுதினப்போ குஜராத்தி தெரியாது என்பதால் தேர்வில் தேர்ச்சி பெற்றும் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கவில்லை. அதே போல் எல் ஐசி வேலைக்கும்.

      Delete
  4. நீட் தேர்வு தற்கொலை - இவங்களைப் பற்றி நாம் கவலைப்படக் கூடாது. இவங்க மருத்துவர் ஆகிட்டாங்கன்னா, வர்ற நோயாளிகளை பயமுறுத்தி தற்கொலை செய்துகொள்ளச் செய்வார்கள் என்று நாம் நம்புகிறேன்.

    அரசும் எதிர்கட்சிகளின் அழுத்தத்துக்குப் பயந்து காசு கொடுப்பதால், அரச்ரும் எதிர்கட்சிகளும் மாணவர்களைத் தற்கொலைக்குத் தூண்டுகின்றன என்றே நான் நினைக்கிறேன், அதிலும் எதிர்கட்சியான திமுகவின் பங்கு இதில் அதிகம்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம், எல்லோரும் வரிஞ்சு கட்டிக்கொண்டு இந்தக் குழந்தைகளுக்கு ஆதரவு தெரிவிச்சிருக்காங்க. ஆதரவு தெரிவிச்சவங்க அனைவருமே தங்கள் குழந்தைகளை மும்மொழித்திட்டப் பாடங்கள் நடத்தும் பள்ளியில் படிக்க வைக்கிறாங்க! இவங்க தான் ஹிந்தி திணிப்பு, எதிர்ப்பு என்பதும். பாக்யராஜின் மகன் ஷாந்தனு (பெயர் சம்ஸ்கிருதம்) படிச்சது ரஜினியின் மனைவி நடத்தும்/நடத்திய சிஷ்யா பள்ளியில். அங்கே ஹிந்தி, தமிழ், சம்ஸ்கிருதம் இல்லைனா வேறே ஏதேனும் அந்நிய நாட்டுமொழி மாணவரின் விருப்பத்திற்கேற்பக் கற்பிக்கப்படும். ஆனால் அவங்க ஹிந்தியை எதிர்க்கிறாங்களாம்.

      Delete
    2. திரைப்படத்துறையில் பலரின் குழந்தைகளும் சிஷ்யா பள்ளியிலோ பத்மா சேஷாத்ரி பள்ளியிலோ தான் படிக்கிறார்கள்/படிப்பார்கள். கனிமொழியின் ஒரே மகன் அடையாறு கேந்திரிய வித்யாலயாவில் ஹிந்தி, சம்ஸ்கிருதம் படிக்கிறார். தயாநிதி/கலாநிதி மாறன் சகோதரர்கள் ஹிந்தி அறிந்தவர்கள் என்பதை அவங்க தாத்தாவே ஒத்துக் கொண்டிருந்தார். மாறனின் மகள் அன்புக்கரசி அவர்கள் பத்மா சுப்பிரமணியத்திடம் பரத நாட்டியம் கற்பதற்காக சம்ஸ்கிருதம் படித்தார். அன்புமணி ராமதாஸின் இருமகள்களும் தில்லியில் பிரபலமான சிபிஎஸ்சி பாடத்திட்டப் பள்ளியில் படித்தவர்கள் தான். அவங்களும் ஹிந்தி, ஆங்கிலம், சம்ஸ்கிருதம் தான் படிச்சாங்க. வீட்டில் தமிழ் கற்றுக் கொடுத்ததாக அன்புமணியின் மனைவி சொல்லுவார். இவங்கல்லாம் தேவைக்காக ஹிந்தி படிக்கையில் சாமானிய மக்கள் படிக்கக் கூடாது எனத் தடுப்பது பாரபட்சமாக எனக்குத் தோன்றும்! ஆனால் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது! :(

      Delete
  5. மக்களின் அறிவும் சிந்தனையும் மழுங்கடிக்கப்பட்டு பல காலம் ஆகி விட்டது...

    ReplyDelete
    Replies
    1. உண்மை! இந்த சமச்சீர் பாடத்திட்டமே வீண்! கொஞ்சமானும் +1 , +2 வகுப்பில் அதை மாற்றியதால் இந்த வருஷம் நீட் தேர்வை அரசுப் பள்ளி மாணவர்களும் எளிதாக எழுத முடிந்தது.

      Delete
  6. நல்ல சிந்தனைகள் நமது மக்கள் மனதில் தோன்றுவதில்லை.

    ஆகவேதான் 99% மக்கள் துன்பத்தை அனுபவிக்கிறார்கள். பிஞ்சுக் குழந்தையை எரிக்க எப்படி மனம் வருகிறது ?

    மதுக்கடைகளை திறந்து விட்ட பிறகுதான் இவ்வளவு கொடூரங்களும் பெறுகி விட்டது.

    நல்லவனை தேர்வு செய்ய அறிவு இல்லாத நமக்கு தேர்தல் முறைகளே தேவையில்லை.

    பயந்து தற்கொலை செய்பவன் நாளை மருத்துவராகி எப்படி கத்தி எடுத்து நோயாளியை அறுவை சிகிச்சை செய்வான் ?

    ReplyDelete
    Replies
    1. வாங்க கில்லர்ஜி, நல்லவர்கள் எல்லோரும் தேர்தலில் நிற்பதில்லை! நாம் நிற்கும் தொகுதியில் யார் பரவாயில்லை என்று தான் ஓட்டுப் போட வேண்டி இருக்கு! இப்படிப் போடுவதில் நாங்க அம்பத்தூரில் இருந்தப்போ வில்லிவாக்கம் தொகுதியில் நின்ற கம்யூனிஸ்ட் வேட்பாளருக்குக் கூட ஓட்டுப் போட்டிருக்கோம். எம்.எல்.ஏ தேர்தலில் அதிமுக சார்பாக நின்ற ஜேசிடி பிரபாகரனுக்கு ஓட்டுப் போட்டிருக்கோம். இப்படித் தான் பார்க்க வேண்டி இருக்கு.

      Delete
  7. வணக்கம் சகோதரி

    முதல் செய்தி கொடுமை என்றால், அடுத்தது அதை விட கொடுமை. ஆண்கள், பெண்கள் என்றில்லை.. மனதின் ஈரம் வற்றிப் போனால், இதயம் கல்லாக மாறி விடும் போலிருக்கிறது. அடித்து உதைத்து இப்படியெல்லாம் கொலை செய்யும் அளவுக்கு போகிறவர்களை காட்டில் மிருகங்களுக்கிடையே கொண்டு போய் விட்டு விட்டு திரும்பிப் பாராமல் வந்து விட வேண்டும். ஆனால் அந்த மிருகங்களும் இவர்கள் இப்படிப்பட்டவர்கள் என அறிந்து கொண்டால், இவர்களை சுற்றி வந்து முகர்ந்து கூட பாராமல், சே..! இவர்களெல்லாம் மனிதர்களா? என்றபடி அவர்களை விட்டு ஓடி விடும்.

    தற்கொலை செய்து கொள்பவர்களை என்னவென்று சொல்வது? வாழ்வெனும் சாலையில் இயல்பாக வரும் மேடு பள்ளங்களை உணராமல், நடக்க கற்று கொண்டவர்கள். தன் தற்கொலையினால், தன்னை சுற்றியுள்ள எல்லா பிரச்சனைகளும் முடிந்து விடுமென முட்டாள்தனத்துடன் முடிவெடுப்பவர்கள்.

    தேர்வை பற்றிய அலசல் நன்றாக இருக்கிறது. மிகவும் நன்றாக விரிவுடன் தெளிவாக எழுதி உள்ளீர்கள். படித்து ரசித்தேன்.

    யார் யார் என்னவாக வேண்டுமென்று மக்கள் நினைக்கலாம். நினைப்பதை ஆண்டவன்தான் முடித்து வைக்க வேண்டும். நம் கையில் எதுவுமில்லை.அத்தனை பகிர்வுக்கும், அருமையான உங்களது எழுத்துக்கும் மிக்க நன்றிகள்.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    ReplyDelete
    Replies
    1. வாங்க கமலா, இன்னமும் கொடுமைகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன. நேற்றுத் தான் ஒரு செய்தி கேள்விப் பட்டேன். கொரோனா சோதனை செய்யப் போவதாக வந்துவிட்டு அந்த வீட்டுப் பெண்ணைக் கடத்திவிட்டார்கள் என்று கேள்வி! என்னமோ போங்க! ஒண்ணும் சரியில்லை. தற்கொலை செய்து கொள்பவர்களுக்குப் பணத்தை லக்ஷங்களில் அள்ளித் தராங்களே! :( தற்கொலையை ஊக்குவிப்பது போல் இருக்கிறது.

      Delete
  8. அன்பு கீதாமா,

    மிகத் தெளிவான சிந்தனையுடன் நீட் தேர்வு பற்றி எழுதி இருக்கிறீர்கள்.

    இங்கே சின்னவன் படிப்புக்கே எத்தனை
    சிரமப் படவேண்டி இருக்கு!!!
    அதுகளுக்கு இருக்கும் படிப்பு நம்ப முடியவில்லை.

    நல்ல பரீட்சை எழுதி முன்னுக்கு வருவதைச் சொல்லாமல்,
    கல்வியில் குறுக்கிட்டுக் கொண்டே இருந்தால் மன தைரியம் எங்கிருந்து வரும்?

    இவ்வளவு கொடுமைகள் தமிழ் நாட்டில் நடக்கிறது என்று அறியவே
    அதிர்ச்சியாக இருக்கிறது.

    அதுவும் கோலம் போட வந்த பெண்ணைக் கொன்று விட்டார்களா.
    எங்கே போகிறது உலகம்.:(

    ReplyDelete
    Replies
    1. வாங்க வல்லி, ஆமாம், சென்ற வருடம் எங்க அப்புவும் பொதுத் தேர்வு எழுதினாள். பொதுத்தேர்வு என்பது இங்கெல்லாம் போல் அங்கே மாநிலங்கள் அளவில் எல்லாம் இல்லை. மொத்த யு.எஸ்ஸுக்கும் சேர்த்து நடந்தது. அதில் தான் எழுதித் தேர்ச்சி பெற்றாள். தமிழ்நாட்டில் கொடுமைகள் தான் நடக்கின்றன. :( வேறே என்ன சொல்லுவது?

      Delete
  9. மருத்துவம் + கல்வி :

    சேவை என்பது எப்போதோ தொழிலாக மாறி விட்டாலும்...

    நாட்டில் மருத்துவர்களும் மருத்துவமனைகளும் பெருக வேண்டும் என்றால்...

    நாட்டில் மேலும் தீநுண்மிகள் உட்பட பல நோயாளிகளை உருவாக்க, அரசும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்... அதற்கு முதலில், விவசாயி மற்றும் விவசாயத்தை மேம்படுத்தாத நாடு உருப்படாது என்பதை ஒழிப்போம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு தனபாலன். உங்கள் கருத்துக்கு நன்றி.

      Delete
  10. மத்திய அரசு வேலைக்கான முயற்சிகள் நம் ஊரில் பலர் செய்வதில்லை. குண்டுச் சட்டியில் குதிரை ஓட்ட நினைக்கிறார்கள். தமிழகத்திற்குள்ளேயே வேலை செய்ய வேண்டும். இல்லை என்றால் வெளிநாடு தான் இலக்கு! அதிலும் குறிப்பாக யு.எஸ்.ஏ! அரசு வேலை என்றால் மட்டம் என நினைக்கும் பல பெற்றோர்கள் மற்றும் இளைஞர்களைப் பார்க்கிறேன்.

    தற்போது அரசு வேலையில் சேர்ந்தால் நேரடியாக ஓய்வூதியம் கிடையாது (2004-க்குப் பிறகு!)! ஆனால் மற்ற வசதிகள் நிறையவே உண்டு. இன்றைய தேதியில், இந்த மத்திய அரசு வேலைக்கான தேர்வுகள் சுலபமாக தேர்ச்சி பெற்றுவிட முடியாது. தயாரிப்பு நிச்சயம் தேவை. முயற்சி செய்தால் நம் ஊரிலிருந்தும் பலர் தேர்ச்சி பெற்று வேலையில் சேரலாம். ஆனால் வருபவர்களை விரல் விட்டு எண்ணி விடலாம்!

    ReplyDelete
    Replies
    1. வாங்க வெங்கட், இன்னிக்கு தினசரியிலே கூட மத்திய அரசு வேலைகளில் தமிழ்நாட்டில் குறைந்த அளவுத் தேர்ச்சியே இருப்பதாக எதிர்க்கட்சிக்காரர் ஒருத்தர் சொல்லி இருக்கார். அவர் சொல்லி இருப்பது தமிழக இளைஞர்கள் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதாய்ச் சொல்கிறார். அவங்க வேலைக்கு விண்ணப்பம் செய்து தேர்வுகளிலும் பங்கேற்றுத் தேர்ச்சி அடைந்த பின்னர் நிராகரித்தால் அவர் சொல்வதில் ஓர் நியாயம் இருக்கலாம். ஆனால் தேர்வு என்னும் ஆரம்பக்கட்டத்திலேயே தமிழ் இளைஞர்கள் மிகக் குறைவாகவே பங்கெடுக்கின்றனர். ஆர்வம் உள்ள பலருக்கும் இது தெரிவதும் இல்லை. இதற்கான விளம்பரங்கள் முன்னெல்லாம் காம்பெடிஷன் சக்ஸசில் வரும். இப்போதும் பொதிகை தொலைக்காட்சியைத் தொடர்ந்து பார்த்து வந்தால் வாரா வாரம் வேலை வாய்ப்பு விளம்பரங்களைப் பார்க்கலாம். ஆனால் நமக்கெல்லாம் பொதிகை ஒரு தொலைக்காட்சியே அல்ல! சன் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கரிலும், விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸிலும் இல்லாத சுவை பொதிகையில்கிடைக்காதே! அதோட நம் இளைஞர்கள் தான் திரைப்படக் கதாநாயகர்களை வழிகாட்டிகளாகக் கொண்டிருப்பவர்கள். அவங்க வழிகாட்டினால் தான் அவங்களால் இதெல்லாம் இருக்குனே தெரிஞ்சுப்பாங்க. அதோடு இவங்களுக்கெல்லாம் தேர்வு என்றாலே பயம். தயாரிப்புக்கெல்லாம் எங்கே போவார்கள்?

      Delete
    2. ஜோதிஜி திருப்பூர் அவர்கள் ஒருமுறை எழுதி இருந்தார். தொழில்கல்வி/தையல்/ பின்னலாடை தயாரிப்பு போன்றவற்றில் சேர இளைஞர்கள்/இளம்பெண்களை ஊக்குவிக்க மத்திய அரசே பயிற்சிக்கூடங்கள் அமைத்திருப்பதாகவும், உணவு, உறைவிடம் இலவசம் என்பதோடு ஊக்கத் தொகையும் கொடுக்கிறார்கள் ஆனால் நம் இளைஞர்களுக்கு இதைப் பயன்படுத்திக் கொள்ளத் தெரியவில்லை என வருந்தி இருந்தார். இம்மாதிரி ஒரு பயிற்சிக் கூடத்திலே தையல் வேலை கற்றுக்கொள்ளும் ஓர் காஷ்மீரப் பெண்ணிடம் தான் மோதி பேசி நலன் விசாரித்து எப்படி இருக்கிறது என்றும் கேட்டுத் தெரிந்து கொண்டார். இம்மாதிரி மத்திய அரசு செய்திருக்கும்/செய்து வரும் பல பயிற்சிகளிலும் தமிழக மக்கள் பங்கேற்காமல் வெளிமாநில மக்கள் வந்து பங்கேற்கும் அவலம் தொடருகிறது.

      Delete
  11. தொலைகாட்சியில் இப்படிப்பட்ட க்ரைம் செய்திகளை பார்ப்பதில்லை.நீட் பற்றி தவறான புரிதல்கள், அதை அரசியலாக்குகின்றன. 

    ReplyDelete
    Replies
    1. வாங்க பானுமதி, இங்கே அதிகம் செய்தி சானல்கள் தான் போடுவதால் நாம் விரும்பாவிட்டாலும் காதில் விழும்.

      Delete
  12. சென்ற வாரம் மத்தியமரிலும், சமஸ்க்ருத வகுப்பிலும் பிசியாக இருந்ததால் சென்ற வார பதிவுகள் பலவற்றை படிக்க முடியவில்லை. இப்போதுதான் எல்லா பதிவுகளையும் சேர்த்து வைத்து படித்தேன். 

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகள், மத்யமருக்கும் சம்ஸ்கிருதப் படிப்புக்கும். மெதுவா வந்து படிங்க, பரவாயில்லை. ஆனாலும் நீங்க அதிகம் என்னோட பதிவுகளுக்கு வருவதில்லை. எழுதும் விஷயம் சுவாரசியமா இல்லையோ?

      Delete
  13. இல்லையே உங்களின் எல்லா பதிவுகளையும் படிப்பேன். வேண்டுமானால் செக் பண்ணுங்கள் நான்தான் கடைசியில் பின்னூட்டம் போட்டிருப்பேன். 

    ReplyDelete
  14. நடந்த சம்பவங்கள் அனைத்துமே வருத்தம் தருகிறது.

    ReplyDelete