எதுவும் மனதுக்கு உற்சாகம் அளிக்கிறாப்போல் இல்லை. இரண்டே நாட்கள் ஆன ஆண் குழந்தையை எரித்துக் கொன்ற செய்தி சில நாட்களுக்கு முன்னர் படித்த நினைவு மாறும் முன்னர் இங்கே காவிரிக்கரையில் ஒரு பொட்டலத்தில் பிறந்த பெண் குழந்தை! நல்லவேளையாக ஆட்டோ ஓட்டுநர் ஒருத்தர் தற்செயலாகப் பார்த்தப்போப் பொட்டலம் அசையவே பிரித்துப் பார்த்துப் பின்னர் அரசு விடுதியில் ஒப்படைச்சிருக்கார். இப்போ நேற்று ஓர் குழந்தையை அதுவும் இரண்டே நாட்கள் ஆன குழந்தை! ஸ்க்ரூ டிரைவரை வைத்து வயிற்றில், நெஞ்சில் துளைபோட்டுக் கொன்று விட்டு வீசி எறிந்திருக்கிறார்கள். பதினெட்டே வயதான இளம்பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து எலும்புகளை நொறுக்கிக் கொன்று பொட்டிருக்கிறார்கள்.
முதல் இரண்டும் தமிழ்நாட்டில். கடைசி இரண்டும் வட மாநிலத்தில்! ஆனால் எங்கே செய்தாலும் இவை எல்லாம் செய்யும் அளவுக்கு மனித மனம் குரூரம் அடைந்திருப்பது ஏன்? அதிலும் இரண்டு நாள் குழந்தையை உயிருடன் எரிக்க அந்தத் தாய்க்கு எப்படி மனசு வந்தது ? அப்புறம் ஏன் குழந்தையைப் பெற்றுக்கொண்டாள்? முறை தவறிப் பிறந்த குழந்தை எனில் அது பிறக்கும் வரை ஏன் காத்திருக்கணும்! ஆரம்பத்திலேயே அழித்திருக்கலாமே! இன்னொரு தாய் குழந்தையின் உடலில் ஸ்க்ரூ டிரைவரால் ஓட்டை போட்டிருக்கிறாள். குழந்தை எப்படிக் கதறித்துடித்திருக்கும்! அப்போக் கூடவா மனசு கல்லாக இருந்திருக்கிறது! இந்த அழகிலே பெண்ணை தெய்வமாகக் கொண்டாடும் நாடு என்கிறோம். பெண்ணிற்குத் தாய் என்னும் புனிதமான அந்தஸ்தைக் கொடுத்துக் கொண்டாடுகிறோம். தாயை தெய்வமாய்க் கொண்டாடும் நாடு! அதிலும் எப்படிப் பட்ட தாய்மார்கள்? பிறந்த குழந்தையைக் கொல்லும் அளவுக்கு மனம் கல்லாகிப் போன பெண்கள்!
வரவர நானும் ஒரு பெண் என்று சொல்லிக் கொள்ளவே எனக்கு மனம் கூசுகிறது. அந்த அளவுக்குப் பெண்கள் தரம் தாழ்ந்து விட்டார்கள். இதற்கெல்ல்லாம் காரணம் பிறப்பு வளர்ப்பா? சந்தர்ப்ப சூழ்நிலையா? அந்த நேரத்து மனோநிலையா? எதுவாக இருந்தாலும் செய்துவிட்டு மனம் துன்புறாமல் நிம்மதியாக அவர்களால் இருக்க முடியுமா?
கேள்விகள் கேள்விகள்----- எனக்கு எழும் இம்மாதிரி கேள்விகள்பதில்காண விழையும்போதுப்திவுகளில் வரும் எண்ணங்கள் கன்செர்வேடிவாக இருப்பதில்லை
ReplyDeleteகருத்து மாறுபாடுகள் ஆளுக்கு ஆள் மாறுபடும். ஒத்த கருத்து வெகு அபூர்வம்.
Deleteபடிக்கும் பொழுதே மனம் பதறுகிறது. இப்படிப்பட்ட செய்திகள் ஆங்காங்கே கேள்விப்படுவோம், ஆனால் ஒரே சமயத்தில் இப்படி எல்லாம் கேள்விப்படுகிற பொழுது அதிர்ச்சி.
ReplyDeleteவாங்க பானுமதி, அந்தக் குழந்தைகளைத் தொலைக்காட்சியில் காட்டும்போதே மனம் பதறியது. அதிலும் பொட்டலமாய்க் கட்டப்பட்ட பெண் குழந்தை அழகோ அழகு!
Deleteபதிவை படிக்காமல் இருந்திருக்கலாமோ... என்ற வேதனை.
ReplyDeleteமன்னியுங்கள் கில்லர்ஜி. என் ஆதங்கம் பகிர்ந்தேன்.
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபடிக்கவே உடல் பதறுகிறது. இப்படிபட்ட செய்திகளை கேள்விபடவே மனம் சஞ்சலமுறுகிறது.புராணங்களில் நாம் படித்த கொடுமையான அசுரர்கள்தான் இப்படி பிறவி எடுத்து வந்திருப்பார்கள் என நினைக்கிறேன். மொத்தத்தில் மனித குலம் அழிந்து வருகிறது போலும்...! கலி முற்றி விட்டது. வேறு என்ன சொல்ல..?
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா, அவங்கல்லாம் பெண்கள் தானா? சந்தேகமா இருக்கு!
Deleteபடிக்கவே பதறுகிறது கீதாமா.
ReplyDeleteஎன்ன கொடுமையான மனம்.
கூசுகிறதே. இறைவன் தான் உலகைக் காக்க வேண்டும்.
இறைவன் இவற்றை எல்லாம் கண்டும் காணாமலும் இருக்கானேனு இருக்கு ரேவதி! :(
Delete// இத்தகைய கொடுமையைச் செய்து விட்டு மனம் துன்புறாமல் நிம்மதியாக அவர்களால் இருக்க முடியுமா?..//
ReplyDeleteஒருக்காலும் இருக்க முடியாது..
அவர்களது மனசாட்சியே அவர்களை அணு அணுவாக அழித்து விடும்...
என்னவோ போங்க துரை! மனம் பாதிப்படைவதால் இரண்டு நாட்களாகச் செய்திகளே பார்க்கலை.
Deleteவேதனை தரும் நிகழ்வுகள். என்னவென்று சொல்ல! படிக்கும்போதே பதறுகிறது மனம்.
ReplyDeleteஆமாம் வெங்கட், அதிலும் பெற்ற தாய்!
Deleteகொடூரம்... சே... இவர்கள் எல்லாம் மனிதர்களே இல்லை...
ReplyDeleteமனிதர்களாக இருந்தால் என்ன செய்வார்களோ! இவர்கள் மிருகங்களை விடக் கேவலமானவர்கள்.
Deleteபடிக்கும்போதே மனம் பதறுகிறது. என்ன மனிதர்களோ...
ReplyDeleteவாங்க ஶ்ரீராம், பிரச்னைகள் எல்லாம் தீர்ந்தனவா? மனம் நமக்குப் பதறிய மாதிரி அவங்களுக்கும் பதறவே இல்லையே! :(
Deleteஎப்படித்தான் இந்த மாதிரி மோசமான செய்திகள் உங்கள் கண்ணில் படுதோ...
ReplyDeleteசென்ற வருடத்தில், பிரியாணியின் மீது ஆசை வைத்து, பிறகு பிரியாணி கடைக்காரனிடம் ஆசை வைத்து தன் அழகிய இரண்டு குழந்தைகளைக் கொன்ற தாய், காதல் கணவனைக் கொல்ல முயன்று அவன் தப்பிவிட, கடைசியில் போலீஸில் மாட்டிக்கொண்ட கதையைப் படித்ததிலிருந்து தமிழ்நாடு எந்தத் திசையை நோக்கிப் போகுது என்பது புரிந்துவிட்டது.
வாங்க நெல்லையாரே, வேலைகள் முடிந்தனவா? நீங்க செய்திச் சானல்களே அதிலும் தமிழில் உள்ளவற்றைப் பார்க்க மாட்டீர்கள் போலும். நம்ம வீட்டில் தினம் மத்தியானம் எல்லா செய்திச் சானல்களிலும் சுற்றுவார். மாலையும் அதே போல். ஆகவே நான் அதுக்குனு உட்காராவிட்டாலும் செய்திகள் காதில் விழத்தான் செய்யும். நானாக இதுக்குனு மெனக்கெட்டு உட்காருவதில்லை. இதுவே போதும், போதும்னு ஆகி விடுகிறதே! :(
Deleteகேட்கும், பார்க்கும் செய்திகள் கவலை பட வைக்கிறது.
ReplyDeleteகடவுளிடம் ஏன் இப்படி இதற்கு ஏதாவது நல்ல வழி காட்ட கூடாதா? என்று கேட்டுக் கொண்டு இருக்கிறேன்.