சஹானா இணைய இதழ் பற்றி அனைவரும் அறிவீர்கள் அல்லவா? நம்ம ஏடிஎம்மோட (புவனா கோவிந்த்) சொந்தப் பத்திரிகை இது. இணைய இதழாக வந்து கொண்டிருக்கிறது கடந்த ஒரு வருடமாக. ஏடி எம் பத்து வருடங்கள் முன்னர் இணையத்தின் வலைப்பக்கங்களில் வெளுத்துக்கட்டியதும், இட்லிக்கு ஒரே உரிமையாளராக இருந்து வந்ததும்,அனைவருக்கும் தெரியும். அதிலிருந்தே நான் இட்லி என்றால் ஓடியே போயிடுவேன். அவங்க வேறே அப்போ கனடாவிலே இருந்தாங்களா! அவங்க அன்பான மறுபாதி அவங்க கொடுப்பது இட்லியா? இல்லைனா கனடாவின் அதீதமான பனிப்பொழிவின் பனிக்கட்டிகளானு குழம்புவாராம். அதைத் தட்டில் போட்டதும் உருகினால் சரி, இதான் பனிப்பொழிவுனு முடிவுக்கு வருவாராம். உருகலைனால் அது நம்ம ஏடிஎம்மோட இட்லி தான்! அவங்க கைவண்ணம் அப்படி. ஒண்ணு பனிக்கட்டி மாதிரி அவங்க இட்லியும் சில/பல சமயங்களில் உருகும். சில/பல சமயங்களில் இப்படியும் கல்லாக இருக்கும். இட்லியைக் குடிக்கவும் செய்யலாம், சாப்பிடவும் செய்யலாம், உடைக்கவும் செய்யலாம் என்பதை விஞ்ஞானரீதியாக நிரூபித்தவர் நம்ம ஏடிஎம். உலகளவில் இட்லி பிரசித்தமானது இப்படியே! :) இப்படியாக இட்லியினால் சிறந்த எழுத்தாளராக மாறிய நம்ம ஏடிஎம் சில/பல ஆண்டுகள் அக்ஞாத வாசம் புரிந்தார்.
அவருக்குக் குழந்தை பிறந்ததும் ஓர் முக்கியக் காரணம். குழந்தை பிறக்கும் முன்னர் ஓர் முறை எங்க வீட்டிற்கு விஜயம் செய்த ஏடிஎம்மிற்குத் தாயுமானவரிடம் பிரார்த்தனை செய்து கொள்வதைப் பற்றிச் சொல்லிப் பிரார்த்திக்கச் சொன்னேன். அதே போல் குழந்தை பிறந்ததும் பிரார்த்தனை நிறைவேற்ற ஏடிஎம் வருவதாய் இருந்தார். குடும்பத்துடன் வருவதற்காகத் தங்குமிடம் தேடிக் கொண்டிருந்தார். எங்க அபார்ட்மென்ட் வளாகத்திலேயே ஓர் செர்வீஸ் அபார்ட்மென்ட் இருப்பதை அவருக்குச் சொல்லி வரும் தேதி எல்லாம் நிச்சயமாய்த் தெரிந்தால் ஏற்பாடு செய்வதாய்ச் சொன்னோம். ஆனால் அவரால் அப்போது வர முடியலை. குடும்பச் சூழ்நிலைனு நினைக்கிறேன். பின்னர் எப்போ வந்தார்னு தெரியலை. சஹானாவிற்கு 3,4 வயது இருக்கும்போது திடீர்னு உங்க வீட்டிற்கு வரப்போறேன்னு அறிவிப்பு விடுத்தார். அது பற்றிப் பதிவும் போட்டிருந்தேன். கிடைக்கலை. போனால் போகுது. அன்னிக்கு நம்ம வீட்டுக்கு வந்துட்டுப் போனவங்களுக்குத் திடீர்னு கொஞ்ச நாட்களில் ஏதோ தோன்றி இருக்கு. என்னோடு வாட்சப்பில் தொடர்பிலும் இருந்து வந்தார். அதிலே இந்த மாதிரிப் பத்திரிகை ஒண்ணு ஆரம்பிக்கப் போறேன். அதுக்கு நீங்க பக்தி/ஆன்மிகக் கட்டுரை எழுதித் தரணும்னு சொல்லி இருந்தார். கடைசியில் அவரே ஆடிப்பெருக்கன்று பத்திரிகை தொடங்கப் போவதைச் சொல்லி ஆடி மாதத்தின் சிறப்புக்கள் பற்றி எழுதித் தரச் சொன்னார். நானும் எழுதிக் கொடுத்தேன்.
சென்ற வருடம் ஆடிப்பெருக்கன்று தொடங்கியது சஹானா இணைய இதழ். ஆடிப்பெருக்கன்று பெருகி வரும் காவிரியைப் போல சஹானாவின் வளர்ச்சியும் பெருகியது. நானும் தொடர்ந்து சில மாதங்கள் பங்கு பெற்றேன். அவர் வைத்த தீபாவளி ரெசிபி பதிவில் முதல் பரிசு/அதிகமான பதிவுகள் எழுதியதில் பரிசு எனப் பல்வேறு விதமான பரிசுகளால் முழுக அடித்தார். அதோடு இல்லாமல் புதுப் புது எழுத்தாளர்களைத் தேடித்தேடி அறிமுகம் செய்தார். குறைந்த மாதங்களிலேயே சஹானாவுக்கென ஓர் உன்னதமான பெயரைத் தேடித் தந்தார்! அதோடு இல்லாமல் சஹானாவில் எழுதுபவர்களின் எழுத்துக்களைத் தொகுத்து அமேசானில் வெளியிட்டு அவர்களுக்கும் பெருமையும் தேடித்தந்திருக்கிறார். ஒவ்வொரு மாதமும் பல்வேறு போட்டிகளை நடத்தி எழுத்தாளர்களுக்கும் ஓவியங்களை வரையும் சிறு குழந்தைகளுக்கும் ஊக்கம் கொடுத்து வந்திருக்கிறார். இத்தோடு நிற்காமல் யூ ட்யூப் சானல் தொடங்கி அதன் மூலம் யூ ட்யூபில் எழுத்தாளர்களையும் வாசகர்களையும் பங்கேற்க வைத்து அதிலும் சிறந்த பதிவுகளுக்குப் பரிசுகள் கொடுத்து வருகிறார். சஹானாவில் குழந்தைகளின் எழுத்துக்களுக்குச் சிறப்புக் கவனம் கொடுத்துக் குழந்தைகளின் பல்வேறு திறமைகளை வெளிக் கொண்டு வருகிறார்.
எல்லாவற்றையும் கவனித்து வந்தாலும் என்னால் சில மாதங்களாக சஹானாவில் எதுவும் எழுதவோ/பங்கேற்கவோ முடியாமல் போய் விட்டது. ஆகவே தன் பல்வேறு வேலைகளுக்கு நடுவில் என்னைத் தொடர்பு கொண்டு ஏடிஎம் என் நலனை விசாரிப்பார். போன மாதமோ என்னமோ அப்படி விசாரிக்கையில் அவரிடம் சஹானாவின் முதல் பிறந்த நாள் வருவதைக் குறிப்பிட்டேன். அவர் தன் பதிப்பகத் துவக்க விழாவில் வேலை மும்முரங்களிடையே இருந்தாலும் நான் சொன்னதை நினைவு வைத்துக் கொண்டு சஹானாவின் ஆண்டுவிழாவையும் பதிப்பக விழாவோடு கொண்டாடிவிட முடிவு செய்து அறிவிப்புச் செய்திருக்கார். இன்று/இப்போது விழா இணைய வழியாகச் சிறப்பு விருந்தினர்களோடு நடந்து கொண்டிருக்கிறது. என்னையும் பங்கேற்க இரண்டு/மூன்று முறை அழைப்பு விடுத்தார் ஏடிஎம். என்னால் தான் உடல் இன்னும் பூரண குணம் இல்லை என்பதால் முடியவில்லை. ஏற்கெனவே அவரிடம் சொன்னபடி சஹானாவைப் பற்றி இங்கே எழுதி இதன் மூலம் ஏடிஎம்முக்கு எங்கள் வாழ்த்துக்களையும் ஆசிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். பின்னர் யூ ட்யூபில் விழா நிகழ்ச்சிகளைக் கண்டு களிப்பதாகவும் ஏடிஎம்மிடம் சொல்லி இருக்கேன். இன்று கூடக் காலை கூப்பிட்டுப் பேசினார். இன்னிக்குக் காலம்பர இருந்து கொஞ்சம் உடல் நிலை சரியில்லாததால் நான் பங்கேற்க முடியாததைத் தெரிவித்து விட்டேன். சஹானா என்னும் குழந்தை ஏடிஎம் பெற்ற குழந்தை எனில் இந்த சஹானா இணைய இதழ் அவர் பெறாத குழந்தை. ஆனாலும் சஹானாவைப் பெற்றெடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டாரோ அத்தனையையும் இதை வெளியிடுவதிலும் முன்னுக்குக் கொண்டு வருவதிலும் அவர் காட்டிய முயற்சிகள் வெளிப்படுத்தும். கடினமான உழைப்பு. வீடு, குழந்தை, கணவன் எல்லோரையும் கவனித்துக் கொண்டு ஏடிஎம் இந்தப் புத்தக வெளியீட்டிலும் அவர் உழைப்பைச் சிறப்புக் கவனத்தோடு காட்டி வருகிறார். பிரமிக்கத் தக்க உழைப்பு.
சஹானாவுக்கும், கோவிந்துக்கும், ஏடிஎம் என்னும் புவனாவுக்கும் எங்கள் மனமார்ந்த ஆசிகள்/வாழ்த்துகள்/மேன்மேலும் சிறப்பாக வளரப் பிரார்த்தனைகள். அவர் தொடங்கும் பதிப்பகமும் சிறப்பாகச் செயல்பட வாழ்த்துகள்.
வணக்கம் சகோதரி
ReplyDeleteநலமா? கால்கள் வலி எப்படி உள்ளது. இன்னமும் பூரணமாக குணமாகவில்லை என்பது தங்கள் பதிவிலும் கருத்துகளிலும் தெரிந்து கொண்டேன். விரைவில் தங்கள் கால்வலி முழுவதும் நீங்கி,பரிபூரணமாக குணமடைய இறைவனை மனமாற பிரார்த்தித்துக் கொள்கிறேன்.
சஹானா இணைய இதழ் வளர்ந்த விவரங்களை அழகாக சொல்லியிருக்கிறீர்கள். இன்றைய ஒரு வருட பிறந்த நாளுக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்களும்.
இணைய இதழில் தாங்கள் சென்ற வருடம் பணியாற்றி,பல பரிசுகளை வென்று வந்ததற்கு உங்களுக்கும் என் மனம் நிறைந்த வாழ்த்துகள்.
சஹானா அவர்களின் அன்பான குடும்பத்திற்கும் என் அன்பான வாழ்த்துகள். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா. தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். கால் வலி பூரணமாகக் குறையவில்லை. விரைவில் குணமாக வேண்டும் என்று தான் நானும் பிரார்த்தித்துக் கொண்டிருக்கேன்.
Deleteசஹானாவின் உரிமையாளர் புவனா கோவிந்த்/அப்பாவி தங்கமணி/ஏடிஎம் எனப் பெயர்களைக் கொண்டவர் என்னை விட வயதில் மிக மிக இளையவரானாலும் நெருங்கிய சிநேகிதிகளில் முக்கியமானவர். நடுவில் அவர் அக்ஞாத வாசம் புரிந்தபோது மனசுக்குக் கஷ்டமாக இருந்தது. இப்போது மறுபடி முழு வேகத்தில் செயல்பட ஆரம்பித்து விட்டார்.
புவனா கோவிந்த் அவர்களுக்கு வாழ்த்துக்கள். சஹானா இதழுக்கு வாழ்த்துக்கள். பதிப்பகம் சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள்.சஹானா ஆண்டு விழாவிற்கு வாழ்த்துக்கள்.
ReplyDeleteவாங்க கோமதி. வாழ்த்துகளுக்கு நன்றி
Deleteமிகச் சிறப்பான பதிவு.
ReplyDeleteசஹானாவுக்கும், அப்பாவி தங்கமணிக்கும் அன்பு வாழ்த்துகள்.
மிகப் பெரிய சாதனை.
அந்தத் தவத்தின் பரிசு மகள் சஹானாவும்,
மாக்சீன் சஹானாவும்.
பிரமிக்க வைக்கும் மேம்பாடுகள் கொண்ட
சிறப்புகள்.
மனம் நிறைந்த வாழ்த்துகள் புவனாவுக்கும் குடும்பத்துக்கும். அன்பினால் அவரைக்
குளிர்வித்த உங்களும் நன்றி கீதாமா.
வாங்க வல்லி. உண்மையிலேயே இது ஏடிஎம்மின் மிகப் பெரிய சாதனை தான். மேலாண்மைப் படிப்புப் படித்ததால் நேர மேலாண்மையை நன்கு புரிந்து வைத்துக் கொண்டு செயல்படுகிறார். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.
Deleteசஹானாவுக்கு வாழ்த்துகள். ஏ டி எம் மிகச்சிறப்பான எழுத்தாளர். அவர் எழுதிய மனதை வருடும் கதைகளை படித்திருக்கிறேன். இப்போது அவர் செய்து வரும் சாதனை மிகப் பெரியது. வாழ்த்துகள்.
ReplyDeleteஆமாம். அவரின் நாவல்கள்/சிறுகதைகள் அவர் வலைப்பக்கங்களில் எழுதும்போதே பரிசுகள் பெற்றிருக்கின்றன. நல்ல கற்பனை வளம் கொண்டவர். பல நாவல்கள் அமேசானில் வெளிவந்தும் இருக்கின்றன.
Deleteமறுபடி உடம்பு சரியில்லையா? என்ன ஆச்சு கீதா அக்கா?
ReplyDeleteஒண்ணும் கேட்காதீங்க! 3 நாட்களாக ஒரே அமர்க்களம் தான்! இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லை. நேற்று இரவு ஆங்கில மருத்துவரையும் வர வைச்சுப் பார்த்தாச்சு. அவரும் சித்தா/ஆயுர்வேத மருத்துவர் சொன்னதையே தான் சொன்னார். வெரிகோஸ் வெயின்ஸ் எல்லாம் இஷ்டத்துக்கு முறுக்கிக் கொண்டிருக்கு. மெல்ல மெல்ல விடுபடும் என்றார். மருந்துகள் கொடுத்திருக்கார்.
Deleteவீட்டு வேலைகளை கவனித்துக் கொண்டு, குழந்தையையும் கவனித்துக் கொண்டு இணைய இதழ், யு டியூப் சேனல் என்று நடத்த தேனியைப் போல சுறுசுறுப்பு வேண்டும். உண்மையிலேயே பெரிய சாதனை. சபாஷ். வாழ்த்துகள்.
ReplyDeleteஆமாம். உண்மையிலேயே இது பெரிய சாதனை தான். இப்போது பதிப்பகமும் துவங்கி இருக்கார்.
Deleteமிக்க நன்றிங்க மாமி. தனிப் பதிவே போட்டு ஆசி வழங்கிட்டீங்க. Feeling blessed. உங்களை போன்றோரின் பங்களிப்பும், ஆசியும், நல்ல வார்த்தைகளும் தான் இந்த வெற்றிக்கு காரணம். தொடர்ந்து உங்கள் ஆசி வேண்டும்
ReplyDeleteநீங்கள் சொன்னது போல், என் மகள் சஹானாவுக்கு இணையானது தான் சஹானா இணைய இதழும். அழகா சொன்னீங்க. மனமார்ந்த நன்றி மீண்டும் 🙏🙏🙏❤️💐
சஹானாவைப் பெற்றெடுக்க நீங்கள் கஷ்டப்பட்டது போலவே இந்த இணைய இதழுக்கும் ஒவ்வொன்றையும் வெளிக்கொண்டு வர அதற்கு நிகரான கஷ்டங்களைப் பட்டு வருகிறீர்கள். ஒவ்வொரு இதழைக் கொண்டு வருவதும் ஒரு பிரசவத்துக்கு ஈடானதே! அந்த வகையில் உங்கள் முயற்சிகள் பாராட்டத்தக்கது. போற்றத் தக்கது.
Deleteமிக்க நன்றிங்க மாமி. தனிப் பதிவே போட்டு ஆசி வழங்கிட்டீங்க. Feeling blessed. உங்களை போன்றோரின் பங்களிப்பும், ஆசியும், நல்ல வார்த்தைகளும் தான் இந்த வெற்றிக்கு காரணம். தொடர்ந்து உங்கள் ஆசி வேண்டும்
ReplyDeleteநீங்கள் சொன்னது போல், என் மகள் சஹானாவுக்கு இணையானது தான் சஹானா இணைய இதழும். அழகா சொன்னீங்க. மனமார்ந்த நன்றி மீண்டும் 🙏🙏🙏❤️💐
தொடர்ந்து ஆசிகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Deleteசஹானா இதழுக்கு எமது வாழ்த்துகளும்கூடி...
ReplyDeleteநன்றி கில்லர்ஜி!
Deleteஇன்னும் உங்கள் கால் வலி சரியாகவில்லையா? ஓரளவாவது நடக்க முடிகிறதா? உடல் நிலை சரியில்லை என்று படித்த போது வருத்தமாக இருக்கிறது.
ReplyDeleteஉங்கள் மூலம் தான் ' சஹானா' பற்றி விரிவாக தெரிந்து கொண்டேன். சஹானாவுக்கும் அதன் உரிமையாளர் திருமதி.புவனாவிற்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்!
வாங்க மனோ.கொஞ்சம் கஷ்டப்பட்டுத் தான் பாதங்களை ஊன்றி நடக்க முடிகிறது. பாதங்களை ஊன்றும்போது கணுக்களில் வலி அதிகம் வருகிறது. என்றாலும் சமாளித்து வருகிறேன். உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி.
Deleteசஹானா இதழுக்கும், அதனை ஆர்வமாக நடத்துபவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்
ReplyDeleteநன்றி நெல்லைத் தமிழரே!
Deleteசஹானா இணைய இதழுக்கு வாழ்த்துகள். மேலும் சிறப்புறட்டும்.
ReplyDeleteஒன்றிரண்டு முறை சஹானா தளம் சென்றிருக்கிறேன்.
ReplyDelete(இட்லி மறக்க முடியுமா?)
உடம்பை கவனித்துக்கொள்ளுங்கள் கீதா.சா. யாரையும் என்ன ஏது என்று கேட்கமுடியாத நான் ஒருத்தி. சீக்கிரம் குணமாக வேண்டிக் கொள்கிறேன். ஸஹானா பற்றி விவரங்கள் அறிய மிக்க உதவி உங்கள் பதிவு. ஸந்தோஷம்.வாழ்த்துகள் ஸஹானாவிற்கு. எனக்கும் பின்னூட்டம் கொடுப்பதற்கு மிகவும் நன்றி. கவனித்துக் கொள்ளவும் உடம்பை. அன்புடன்
ReplyDeleteநல்லதொரு பதிவு. ஏடிஎம் புகழ் இணைய உலகத்தில் பலரும் அறிந்ததாயிற்றே! அவருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteசஹானா இணைய இதழின் விழா நிகழ்ச்சிகளை இப்போதுதான் பார்த்துக் கொண்டிருக்கிறேன். உங்கள் கால் வலி இன்னும் சரியாகவில்லையா?
ReplyDelete