வாசலில் நான் போட்டிருந்த சின்னஞ்சிறிய கோலம். இதுக்கே முடியலை. கால் போட ஆரம்பிச்சேன். நான் குட்டிக் குட்டியாத்தான் பாதம் வரைவேன். கொஞ்சம் சிரமப்பட்டு வாசல் வராந்தாவில் போடும்போது பார்த்த எதிர்வீட்டு மாமி அவங்க வீட்டு வேலையை விட்டு விட்டு வந்து எனக்குக் கிருஷ்ணர் பாதம் போட்டுக் கொடுத்துவிட்டுப் போனாங்க. சின்னக் குழந்தையாக என்னோட பாதத்தில் வந்த கிருஷ்ணன் அவங்க பாதம் போடுகையில் வளர்ந்து சிறு பையனாகி விட்டான். முறுக்கு, சீடை எல்லாம் சாப்பிடணுமே!
இங்கே குட்டிக்குட்டிக் கால்கள் தெரியும். கூர்ந்து பார்க்கணும். கீழே பார்த்தீங்க கால் பெரிதாக இருக்கும். கிச்சாப்பயல் வளர்ந்துட்டான்.
கூடத்துக்கு வந்து திரும்பி உம்மாச்சி அலமாரிப் பக்கம் போறான் கிச்சாப்பயல்.
உம்மாச்சி அலமாரிப் பக்கம் வந்துட்டான். கீழே நிவேதனங்கள் எல்லாம் வைச்சிருக்கேன். தீபாராதனை காட்டியது தெரிகிறது. நிவேதனங்களும் தெரிகின்றன. எல்லாத்தையும் கிட்டே இருந்து எடுத்த படங்கள் எல்லாம் அப்லோட் ஆகவே இல்லை. ஶ்ரீராமர் படம், உம்மாச்சி அலமாரியில் கீழே உள்ள ஶ்ரீதேவி, பூதேவி சஹிதப் பெருமாள் எல்லோரையும் எடுத்தேன். நிவேதனத்தையும் எடுத்திருக்கேன். ஆனால் அதெல்லாம் எப்படி எப்படியோ முயன்றும் நான்கைந்து படங்கள் அப்லோட் ஆகலை. மறுபடி நாளைக்கு முயற்சி பண்ணணும். பார்ப்போம்.
இந்த வருஷம் பக்ஷணம் எதுவுமே பண்ணலை. சமையல் மாமியும் ஊருக்குப் போய்விட்டதால் ஊருக்குப் போகும் அவசரத்தில் உப்பு/வெல்லச்சீடைகளும் மனோகரமும் பண்ணிக் கொடுத்துவிட்டுப் போனார். பின்னர் பழைய காடரரிடம் கெஞ்சிக் கூத்தாடி கால் கிலோ கை முறுக்கு வாங்கினேன். மற்றபடி தேங்காய் உடைத்துப் பழங்களோடு வைச்சாச்சு. வீட்டில் அவல் பாயசமும்/வடையும் பண்ணினேன். பழங்களும் நாங்க சாப்பிடும் பழமாகவே வாங்கினோம். சாத்துக்குடி, மாதுளை, கொய்யா போன்றவையே! இந்த வருஷம் கிச்சாப்பயல் "இது போதும். பரவாயில்லை!" என்று சொல்லிவிட்டான். வழக்கம்போல் அவனுக்குப் பசும்பால், பசுந்தயிர்,பசு வெண்ணெய், அவல்/வெல்லம் எல்லாமும் வைத்தேன். இப்படியாகத் தானே ஜன்மாஷ்டமியைச் சீரும் சிறப்புமாகக் கொண்டாடியாச்சு.
அருமையாகக் கொண்டாடி உள்ளீர்கள். கிச்சாப்பயல் மேலும் சாப்பிட வேண்டி ஆரோக்கியத்தை உங்களுக்குக் கொடுப்பான். அதற்காக வேண்டுகிறேன். ஆசிகள் அன்புடன்
ReplyDeleteவாங்க அம்மா. நன்றி. எப்போவுமே பால், வெண்ணெய் தயிர், மோர் இவற்றிற்கும் பூக்கள், பழங்களுக்கும் குறைவு இல்லை. ஆகவே கிச்சாப் பயல் இதுவே அதிகம்னு சொல்லிட்டான். :)))) ஆசிகளுக்கு நன்றி. நமஸ்காரங்கள். _/\_
Deleteநல்ல ரசனைடன் எழுதியிருக்கின்றீர்கள் அக்கா..
ReplyDeleteஸ்ரீ கிருஷ்ணனின் திருவருளால் தங்களது உடல் உபாதைகள் எல்லாம் நீங்கி அடுத்த வருஷம் இன்னும் அதிகமாக பக்ஷணங்கள் தளிகை செய்திட வேணுமாய் பிரார்த்தித்துக் கொள்கிறேன்...
நன்றி துரை. உடல் உபாதைகள் நீங்கணும்னு தான் பிரார்த்தனையே! உங்கள் பிரார்த்தனைக்கும் மிக்க நன்றி.
Deleteஅன்பு கீதாமா,
ReplyDeleteகண்ணன் பிறந்துட்டான்
கவலைகள் தீரட்டும்.
கோலம் அத்தனை அழகாக இருக்கிறது. இத்தனை வலியிலும் கண்ணனைக் கொண்டாடியதுதான் அருமை.
கண்ணன் பாதங்கள் மிக அழகு. குஞ்சுப் பாதங்கள்
பையனுடைய பாதங்களாக அலமாரி வரை
வந்துவிட்டன.
வடை எல்லாம் கொடுத்து வரவேற்றால்
சும்மா இருப்பானா.!!
வலி எல்லாம் போகட்டும்னு வாழ்த்தி உட்கார்ந்திருப்பான்
கண்ணன்.
வாங்க வல்லி. கோலம் சின்னதுனா சின்னது! எப்போவும் போல் பெரிய மணைக்கோலம் போட முடியலை. குஞ்சுப் பாதங்கள் தான் வைப்பேன். மாமியோடது பெரிய பாதங்கள். அவன் அருளால் வலி இல்லாமல் இருக்கப் பிரார்த்திக்கிறேன்.
Deleteநல்லபடியாக ஜன்மாஷ்டமியை கொண்டாடியது மகிழ்ச்சி.
ReplyDeleteகண்ணன் மனபலத்தை தந்தால் உடல் பலம் தன்னால் வந்து விடும்.
மனபலத்தை தந்து வடையும் அவல் பாயசமும் வாங்கி கொண்டான் .
வாழ்த்துக்கள், வாழ்க வளமுடன். "சின்ன சின்ன பதம் வைத்து கண்ணா நீ வா வா!"'
பேரன் பாட்டு வகுப்பில் கற்றுக் கொண்டு பாடுவான். சின்ன பாதங்களை கண்டவுடன் பாட்டு நினைவுக்கு வந்தது. மல்லிகை முல்லை மலராலே அர்ச்சனை செய்வேன் வா வா என்பது மல்லிகை கிடைத்து இருக்கிரது சின்ன கண்ணனுக்கு. தாமரை மலரை சூடியதும் அழகுதான்.
மனோபலம் தான் எப்போவுமே என் வேண்டுதல். எதுவானாலும் தாங்கணும்னு தான் வேண்டிக்கிறேன். மல்லிகை இந்த வருடம் தொடுத்துப் போட முடியலை. தாமரை மலரின் பாரம் அவனுக்குத் தாங்கலை. உங்கள் கருத்துக்கு நன்றி.
Deleteஸ்ரீஜெயந்தி கொண்டாட்டங்கள் அருமையாக இருக்கிறது. பட்டாபிஷேக ராமர் படம் மட்டும்தான் மிஸ்ஸிங்.
ReplyDeleteகிருஷ்ணர் பாதம் நன்றாகவே வந்துள்ளது.
அந்தப் படங்களை வலையேற்றப் பார்த்தால் போகவே இல்லை நெல்லை. எதிர்வீட்டுப் பெண்ணைக் கூப்பிட்டுக் கேட்கணும். என்னவோ தொ.நு.பிரச்னை போல. கிருஷ்ணர் பாதம் எப்போவுமே நன்றாக வரும். இந்த வருஷம் எல்லாம் சொதப்பல் தான்.
Deleteகிருஷ்ண ஜென்ம பூமியான மதுராவில் சென்ற வருடம் சேவித்ததையும், பின்பு ஒரு டாகுமெண்டில், இப்போது இருக்கும் கோவிலிலிருந்து 200 மீட்டர் தொலைவில் (அல்லது அடி என்று நினைவு) உள்ள இடத்தில்தான் கிருஷ்ணன் பிறந்த இடம் என்றும், அது இப்போது ஆக்கிரமிப்பில் இருக்கிறது என்றும் படித்தேன். நாங்கள் சென்றிருந்தபோது, எங்களுக்கு (எனக்கும் மனைவிக்கும்) அந்த இடத்தில் 15 நிமிடங்கள் இருக்கும் அனுமதி கிடைத்தது. (ஆரத்தி ஆகும்வரை). பெரும்பாலும் யாரையுமே நிற்க விடுவதில்லை.
ReplyDeleteஆமாம், அங்கே போனால் சொல்லுவாங்க.ஆக்கிரமிப்பில் இருக்கு அந்த இடம். என்ன செய்வது? நாங்கள் போய்ப் பல வருடங்கள் ஆகிவிட்டன. பையரும், மாட்டுப் பெண்ணும் 2014 ஆம் ஆண்டில் போனாங்க.அவங்களுக்கு ஊர் அவ்வளவாப் பிடிக்கலை. அவங்க போனப்போ நல்ல குளிர் வேறே!
Deleteஇந்த சிரமத்திலும் விடாது பண்டிகையைக் கொண்டாடிய உங்கள் விடாமுயற்சி போற்றத்தக்கது. முன்னர் மாதிரி முடியவில்லையே என்கிற வருத்தமும், பரவாயில்லையே, வாசலில் கோலம் போட்டிருக்கிறார்கள் அக்கா என்கிற சிறு சந்தோஷமும் ஒரே நேரத்தில்...
ReplyDeleteவாங்க ஶ்ரீராம். நீங்க சொன்னது போன்ற உணர்வு தான் எனக்கும். முன்னாடி மாதிரி செய்ய முடியலையேனு ஏக்கம்/வருத்தம். என்ன செய்ய முடியும்? வாசலில் இந்த அளவுக்காவது கோலம் போட்டேனே! அதுவே கண்ணன் அருள் தான்!
Deleteசீடைகள், முறுக்கு வெளியில் வாங்கி கொண்டோம். வீட்டில் மாளாது, ரவா லாடு, அப்பம் செய்தார் பாஸ். அவள் பாயசம், சுக்கு சர்க்கரை, வெண்ணெய் கல்கண்டு...
ReplyDeleteஎல்லோரையும் சொல்வேன். கடையில் வாங்கி மணையில் வைக்கிறாங்கனு. இப்போ நானும் இந்த வருஷம் ஆரம்பிச்சாச்சு! :(
Deleteஉடல் உபாதைகளுக்கு மத்தியிலும் கொண்ட்டாட்டம். நன்று.
ReplyDeleteநன்றி வெங்கட்!
Deleteஅன்புள்ள கீதாம்மா, தன் சின்னஞ்சிறு பாதங்கள் வைத்து தங்கள் வீட்டிற்கு வருகை புரிந்து, நிவேதனங்கள் பெற்றுக்கொண்டது, கண் கொள்ளா காட்சி. எங்கள் வீட்டில் அப்பா ஒவ்வொரு ஜென்மாஷ்டமிக்கும் நீர் அருந்தாமல் விரதம் இருப்பார். நேற்று சிறப்பாக மாலை வேலையில், அவனுக்கு பிடித்த வெண்ணை, அவல் , முறுக்கு, சீடை, அதிரசம் வைத்து பூஜை செய்தோம் . கிருஷ்ணா விஜயம் நமக்கு அனைத்து நலன்களையும் பெற்றுத்தரும்.
ReplyDeleteவாங்க வானம்பாடி. ஜென்மாஷ்டமி விரதம் அம்மா இருப்பார். நாங்கல்லாம் விரதம் இருந்ததில்லை. கிருஷ்ணன் அருளால் அனைவரின் துன்பங்களும் பொடிப் பொடியாகட்டும்.
Deleteஉடல்நலமில்லாத போதும் பிரசாதங்கள் வைத்து கிச்சாவை அலங்கரித்து வணங்கியுள்ளீர்கள் .
ReplyDeleteஅவனருளால் சீக்கிரம் நலம் கிடைக்கட்டும்.
வாங்க மாதேவி. அவல் பாயசமும், வடையும் தவிர்த்து மற்றவை வாங்கியவையே! பழங்கள், பால், தயிர், வெண்ணெய், அவல், வெல்லம், சீடைகள், முறுக்கு எல்லாமும் வாங்கினவை. இந்த மட்டாவது கொண்டாடும்படி கண்ணன் அருள் பாலித்தான்.
Delete🙏
Deleteநன்றி.
Deleteஅழகான பதிவு. இந்த அளவிற்காவது எழுத முடிந்ததும் கொஞ்சம் கொஞ்சமாய் கோலம் போட முடிந்ததும் சாதனை என்று நீங்கள் எழுதியதிலிருந்து புரிகிறது. கோலம் அழகாய் இருக்கிறது. உடல் நலத்தை கவனித்துக்கொள்ளுங்கள்!
ReplyDeleteஉண்மைதான் மனோ. இப்போதைய உடல்நிலையில் அன்றாடம் சில வேலைகளைச் செய்தாலே சாதனை எனத் தோன்றுகிறது. உடல்நலம் விரைவில் சீராகும் என்னும் நம்பிக்கையுடன் காத்திருக்கேன்.
Deleteஉடல் நலம் தேறியது சந்தோஷம், ஆனால் அவசரப்பட்டு ஸ்ட்ரெய்ன் செய்து கொண்டு விடாதீர்கள். டேக் கேர்.
ReplyDeleteநன்றி பானுமதி. அதிகம் செய்ய முடியறதில்லை என்பதே உண்மை.
Deleteநானும் தரிசித்துக் கொண்டேன் நன்றி வாழ்க நலம்.
ReplyDeleteபுதிய பதிவுக்கு மட்டும் கருத்துரை போக மறுக்கிறதே....
ReplyDeleteஅக்கா உங்கள் உடல் பிரச்சனைக்கு நடுவிலும் கிச்சப்பயலை வரவழைத்து எல்லாம் கொடுத்துவிட்டீங்கள்! எல்லாம் நல்லபடியாக நடக்கும் கீதாக்கா எல்லாம் சரியாகிவிடும் விரைவில். கிச்சப்பயல் ஆசிர்வதிப்பார்!
ReplyDeleteபாதம் போட்டதை வர்ணித்த விதம் ரசித்தேன்.
கீதா
நான் போட்ட கருத்துகள் வருதான்னு தெரியலை
ReplyDeleteகீதா