எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, August 20, 2021

(நான்) நிற்பதும்/நடப்பதும் நின் செயலாலே!

 இரண்டு மாதங்களாக நரக வாழ்க்கை.. காலைக் கீழே ஊன்ற முடியவில்லை. ஏற்கெனவே சாப்பிட்டுக்கொண்டிருந்த ஆயுர்வேத மருந்துகள் கொரோனா லாக்டவுனினால் வெளியூரில் இருந்து வரமுடியாமல் போக அவசரத்துக்கு வாங்கிய அலோபதி மாத்திரையும் பயனின்றிப் போக மருத்துவரை வீட்டுக்கு வரச் சொல்லி ஆயுர்வேத/சித்தா மருந்துகள் எடுத்துக்கொண்டும் பலனில்லாமல் போகவே ஆடிப்பெருக்கன்று இந்த ஊரிலேயே பல வருடங்களாகத் தொழில் செய்யும் ஆங்கில மருத்துவரை வரவழைத்தோம். மற்ற மருத்துவர்கள் யாரும் வீட்டுக்கு வர மறுத்துவிட்டார்கள். ஆகவே இவர் வந்து பார்த்துவிட்டு வீக்கம் வடியவும், மற்றவற்றிற்கும் மருந்துகள் கொடுத்துச் சென்றார். ஆனாலும் முதல் இரண்டு நாட்கள் காலை ஊன்றி நடக்க முடியா நிலைமை. பிடித்துக் கொண்டு தான் கழிவறைக்குக் கூடப் போக வேண்டி இருந்தது. வலி பொறுக்க முடியவில்லை. பின்னர் மெல்ல மெல்ல வீக்கம் குறைய ஆரம்பித்தாலும் அதற்காகக் கொடுத்த மாத்திரையினால் சிறுநீர் அதிகமாகப் போக ஆரம்பிக்கவே அதற்காக அடிக்கடி எழுந்து கொள்ள வேண்டி வருகிறது.  என்றாலும் வேறு வயிற்றுத் தொந்திரவுகள் முதல் வாரத்தில் இல்லை. ஆனால் பின் வரும் நாட்களில் நேர்மாறாக இருக்கின்றன. 

கொடுத்திருக்கும் மாத்திரைகளில் சில ஒத்துக்கொள்ளாமல் வயிற்றில் தொந்திரவு ஏற்பட அவற்றை நிறுத்தலாமா என மருத்துவரிடம் கேட்கப் போனால் அவர் இதற்கென வேறொரு சிரப்பை எழுதிக் கொடுத்துச் சாப்பிடச் சொல்ல அதைச் சாப்பிட்டால் இரண்டு நாட்கள் விடாமல் வயிற்றுப்போக்கு/வயிற்று வலி! தூக்கம் இல்லை. வயிற்றில் எப்போதும் நமநமவென்று வேதனை! மருத்துவரிடம் சொல்லாமலேயே அவரைக் கேட்காமலேயே அந்த சிரப்பை நிறுத்திவிட்டேன். இருந்தாலும்  அதைத் தவிர்த்து உள்ளுக்குச் சாப்பிடும் மாத்திரைகள் எதிலோ இந்த வயிற்றைக் கிளறிவிடும் தன்மை இருக்குப் போல. இரவு/பகல் என்றில்லாமல் வயிற்றில் வேதனை/வலி/தொந்திரவு.  இதை எல்லாம் எழுதிக் கொண்டும்/புலம்பிக் கொண்டும் இருக்க வேண்டாம்னு தான் இருந்தேன். ஆனால் தொடர்ந்து நான் இணையத்துக்கு வரலையேனு நண்பர்கள் கவலைப்பட்டுக்கொண்டு கேட்பதால் எப்படியும் இன்னும் சில நாட்கள் ஆகும் முழுவதும் சரியாக என்று நினைக்கிறேன். கால் வீக்கம் குறைந்தாலும் தொடர்ந்து உட்கார முடியவில்லை காலைத் தொங்கப் போட முடியவில்லை. ஆகவே நடு நடுவில் போய்ப் படுப்பேன். படுத்தால் பின்னர் எழுந்திருப்பதிலும் தொடர்ந்து நடப்பதிலும் உடனடியாக முடியவில்லை. நேரம் எடுக்கிறது.

இரண்டு நாட்களாகக் கொஞ்சம் நடக்கிறேன். மருத்துவரும் நடக்கச் சொல்லி இருக்கார். ஆனாலும் வேகமெல்லாம் இல்லை. ஓர் அடி எடுத்து வைக்கவே பத்து நிமிஷங்கள் ஆகிவிடுகின்றன.  ஏதோ நான் பாட்டுக்குச் சமைத்தேன்/சாப்பிடுகிறேன் என்றெல்லாம் இருந்த வாழ்க்கை இப்போது தடம் புரண்டு விட்டது. மறுபடி எப்போது சகஜமான சூழ்நிலைக்குத் திரும்புவோம் என ஏக்கம் பிடித்து ஆட்டுகிறது! எந்த ஒரு வேலையைச் செய்யவும் தனியாகச் செய்ய முடியாத சூழ்நிலை.  எல்லாவற்றுக்கும் நேரம் எடுக்கிறது. இதில் கணினியில் உட்கார மனமும் இல்லை/நேரமும் சரியாக ஒத்து வருவதில்லை. இன்னிக்கு எப்படியும் வரணும்னு வந்திருக்கேன். சும்மாவானும் வந்துட்டு உடம்பு இன்னும் சரியாகலைனு சொல்லுவதற்கு ஏன் வரணும்னு இருந்தேன். என்றாலும் இப்போ இரண்டு நாட்களாக ஓரளவுக்கு நடை பழகத் தொடங்கி இருப்பதால் கொஞ்சம் மனம் சமாதானம் ஆகி உள்ளது. ஆனாலும் படுக்கை அறையிலிருந்து சமையலறைக்கு/கூடத்திற்கு வரப் பத்து நிமிஷங்கள் ஆகி விடுகின்றன. எப்படியானும் இந்த அளவுக்கு நடக்க முடிந்ததே இறைவன் செயல் தான்.  இனி நான் சமைக்க ஆரம்பித்தாலோ காஃபி/டிஃபன் செய்தாலோ தினசரித் தலைப்புச் செய்தியாக ஆகிவிடும் போல! :(

இப்போதைக்கு எல்லாவற்றையும் மீறிப் படுத்துவது வயிறுதான். அதுவும் சரியாகணும். ஆகாரத்தையே வயிற்றில் போட முடியவில்லை. அதிலும் இரவுகள் கழிவது ஓர் யுகமாக ஆகிவிடுகிறது. எல்லாம் சரியாக அந்த ஆண்டவன் தான் கருணை புரியணும்.  மொத்தத்தில் நல்ல நேரத்துக்குக் காத்திருக்கேன். இறை அருளால்  பின்னர் முடிஞ்சால் வரேன். 


39 comments:

 1. தாங்கள் பரிபூரண குணமடைய இறையருள் கிடைக்கட்டும் எமது பிரார்த்தனைகளும் கூடி...

  ReplyDelete
  Replies
  1. நன்றி கில்லர்ஜி!

   Delete
 2. தங்களது வேதனையை அறிந்து மிகவும் வருந்துகின்றேன்.. விரைவில் நலம் எய்துவதற்கு வேண்டிக் கொள்கின்றேன்..

  ReplyDelete
 3. படிக்கவே ரொம்பக் கஷ்டமா இருக்கிறது.  இன்னமும் தொந்ததரவுகள் தொடர்வது வேதனையைத் தருகிறது.  முழுவதும் சீக்கிரமே சரியாக இறைவனை பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஶ்ரீராம்.

   Delete
 4. பொதுவாக இது மாதிரி கஷ்டங்களுக்குத் தரப்படும் அலோபதி மாத்திரைகள் வயிற்றை சங்கடப்படுத்தும்.  எனவே அதனுடன் ரேனிடிடின் போன்ற மாத்திரைகளை எடுக்கச் சொல்வார்கள்.  

  ReplyDelete
  Replies
  1. ரேனிடிடின் கொடுத்திருக்காரே! அப்படியும் தான்! :( அதுவே ஒத்துக்கலையோனு நினைக்கிறேன். :(

   Delete
 5. ரொம்பவே வருத்தமாகவும், கவலையாகவும் இருந்தது, இருக்கிறது கீதா சாம்பசிவம் மேடம்.

  எனக்கு 2018ல் வாழ்க்கையைப் பிரட்டிப் போட்டதும் அல்லாமல், உடல் நிலை ரொம்பவே படுத்தி, பஹ்ரைனை விட்டு சென்னைக்கு வந்தால் போதும் என்று ஆகிவிட்டது. எதைப்பற்றியும் (பணம் போன்ற) கவலைப்படவில்லை, கிளம்பினால் போதும் என்று ஆகிவிட்டது. இங்கு வந்த பிறகு கால் வலி, பாதம் எடுத்து வைக்கவே முடியாமல்... என்னவோ ரொம்பவே கஷ்டப்பட்டேன்.

  பிரச்சனையின் காரணம் வேறாக இருந்தாலும், பிரச்சனை ஒன்றுதான். உங்கள் கஷ்டம் என் மனதை மிகவும் பாதிக்கிறது. மாமாவுக்கு உள்ள ப்ரெஷரும் (இதனால்) என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

  விரைவில் நலம் பெறவேண்டும் என்று ப்ரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி நெல்லை. பயப்படும் அளவுக்கெல்லாம் ஒண்ணும் இல்லை. விரைவில் சரியாகிடும். நம்பிக்கை தானே வாழ்க்கை. எனக்கும் இப்போத்தான் ஏழரைச் சனி முடிஞ்சிருக்கு! :) எல்லோரையும் கலவரப்படுத்த வேண்டாம்னு தான் இணையத்துக்கே வராமல் இருக்கேன்.

   Delete
 6. நீங்கள் எழுதி இருப்பதை படிக்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது.
  இருந்தாலும் மனதிடமாக இருங்கள் அவன் அருளால் நலமாகும்.
  ஆண்டவன் கருணை புரிவான்.
  பிரார்த்தனை செய்து கொள்கிறேன். நட்புகள் எல்லோரும் உங்களுக்கு பிரார்த்தனை செய்து கொள்வார்கள். விரைவில் நலம் பெறுவீர்கள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி கோமதி. பிரார்த்தனைகள் தான் உடல்/மனம் ஆகியவற்றிற்கு பலம் தருகிறது.

   Delete
 7. சிரமப்படுவது கவலை தருகிறது. உடல் நலம் குணமாக வேண்டுகிறேன்.

  ReplyDelete
 8. அன்பின் கீதாமா,

  வயிற்று உபாதை மிக மிகச் சங்கடம்.
  வலியையாவது உட்கார்ந்து ஆயிண்ட்மெண்ட்
  தடவி ஒத்தடம் கொடுத்து
  சரி செய்ய முயற்சிக்கலாம்.
  அதற்கும் யாருடைய உதவியாவது வேண்டும்.
  தினப்படி உங்களை விசாரிக்கவும் சங்கடமாக இருந்தது.

  எல்லாத் தொந்தரவுகளையும் தாண்டி வரும் நேரம்
  வரட்டும். எல்லோருக்கும் சேர்த்துதான் பிரார்த்தனைகள்
  செய்து கொண்டிருக்கிறோம்.
  உங்கள் எழுத்துக்களைப் பார்க்காமல் மிக
  வருத்தமாக இருந்தது.
  முடிந்த போது படியுங்கள்.சரியாகிவிடும். தன்வந்திரி
  கப்பாற்றட்டட்டும்.
  அவ்வப்போது நன்றாக இருக்கிறேன் சொன்னால்
  கூட போதும்.

  ReplyDelete
  Replies
  1. பரவாயில்லை ரேவதி. நீங்களும்/நெல்லையும் மாறி மாறி வாட்சப்பில் விசாரிப்பது எனக்கு மனதுக்கும் ஆறுதலாக இருந்து வருகிறது. எல்லாம் விரைவில் சரியாகப் பிரார்த்திப்போம்.

   Delete
 9. இணையம் வரும் பொழுது தங்களைக் காணவில்லையே, முன்பே நீங்கள் கூறியது போல உடம்பிற்கு முடியவில்லை என நினைத்துக் கொண்டேன். தங்கள் கால் வலியும், வீக்கமும் , வயிற்று கோளாறும் குணமாகிட இறைவனை பிரார்த்திக்கிறேன். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் அம்மா.

  ReplyDelete
  Replies
  1. வாங்க வானம்பாடி. பிரார்த்தனைகளுக்கு நன்றி.

   Delete
 10. சீக்கிரமே எல்லா தொந்திரவுகளும் நிவர்த்தியாகி பரிபூரண குணமடையப் பிரார்த்திக்கிறேன் கடவுளை. கவனமாக இருங்கள். அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. நமஸ்காரங்கள் அம்மா. மிக்க நன்றி.

   Delete
 11. Thinking of you maami. Its really hard to go thru this. Get well soon. Take care

  ReplyDelete
  Replies
  1. நினைங்க, நினைங்க, நினைச்சுட்டே இருங்க. நன்றி ஏடிஎம்.

   Delete
 12. பதிவை, உங்கள் மனதின் வலியைப்பற்றி படித்ததும் மிகவும் கஷ்டமாக இருந்தது. உங்கள் கால் வலி பற்றி எப்போதும் நினைத்துக்கொண்டு தான் இருந்தேன். உங்களால் ஒரு நல்ல ஐப்போய் பார்க்க முடியவில்லையா? சில முக்கியமான ஸ்கான்கள் செய்தால் பிரச்சினை என்னவென்று தெரியுமே? தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. ஆர்த்தோவெல்லாம் தேவை இல்லைனு இப்போ வந்து கொண்டிருக்கும் மருத்துவர் சொல்லுகிறார். வலி குறைந்துள்ளது. இப்போதைய பிரச்னைகள் வயிற்றுத் தொந்திரவு தான். மருந்துகளால் ஏற்படும் பக்கவிளைவுகள். மற்றபடி நடக்க ஆரம்பிச்சிருக்கேன்.

   Delete
 13. உங்களுக்கு பின்னூட்டம் அனுப்பும்போது ARTHO SPECILAISTஐ பார்த்தீர்களா என்ற கேள்வியில் ARTHO SPECIALIST என்பதை எழுதி நிரப்பாமல் அனுப்பி விட்டேன். மன்னிக்கவும்.

  ReplyDelete
  Replies
  1. புரிந்து கொண்டேன் மனோ சாமிநாதன்.

   Delete
  2. மத்யமர் குழுமத்திலும் ஓர் பெண்மணி இந்தச் சர்க்கரைக்குக் கொடுக்கும் மாத்திரைகளினால் ஏற்பட்ட வாயுத் தொந்திரவைப் பற்றியும் கால் பாதங்கள் வீங்கியதையும் விவரித்திருந்தார். பின்னர் அந்த மாத்திரையை நிறுத்திவிட்டதாகவும் தற்சமயம் பரவாயில்லை என்றும் சொல்லி இருந்தார். சித்தா/ஆயுர்வேத மருந்து எடுத்துக்கறார் போல!

   Delete
 14. வேதனை. உங்கள் உடல் உபாதைகள் தீர எனது பிரார்த்தனைகள்.

  ReplyDelete
 15. உடம்பில் இத்தனை உபாதைகளை வைத்துக் கொண்டு எப்போதும் போல உற்சாகமாக பின்னூட்டங்களை அளித்து வரும் உங்கள் வில் பவர் வியப்பூட்டுகிறது. நீங்கள் விரைவில் முழுமையாக குணமடைய பிரார்த்திக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வாங்க பானுமதி, சொந்தத்திலேயே பலர் எனக்கு மூட்டை கட்டி விட்டார்கள். நான் தான் இப்போப் போகத் தயாரில்லை! :)))) மனதில் தைரியம் எப்போவுமே உண்டு என்றாலும் இம்முறை அதையும் கொஞ்சம் ஆட்டிப் பார்த்துவிட்டது நோயின் கடுமை!

   Delete
  2. உங்களைப் போன்றவர்கள் நீண்ட நாட்கள் வாழ்ந்து பாசிட்டிவ் வைப்ரேஷனை பரப்ப வேண்டும். 

   Delete
 16. You are a very strong lady mami. You are an inspiration to me. Get well soon and write more.

  ReplyDelete
 17. You are a strong lady mami. You are an inspiration to me. Get well soon and write more. My sincere prayers mami.

  ReplyDelete
 18. வணக்கம் சகோதரி

  பதிவை படித்தேன். அதிலுள்ள விபரங்களின் வேதனைகள் மனதை சங்கடபடுத்துகிறது. என்னாலும் இந்த பதிவுக்கு உடனடியாக வந்து ஆறுதல் கூறமுடியாத ஒரு சூழ்நிலை அமைந்து விட்டது. பதினைந்து நாட்களாக எனக்கும் உடல்நிலை சற்று நிறையவே சரியில்லாமல் இருந்து வருகிறது. நானும் எப்போதும் உங்களைத்தான் நினைத்தபடி உள்ளேன். தங்கள் உடல்நிலை பரிபூரண குணமடைய எப்போதும் பிரார்த்தனைகள் செய்கிறேன்.

  கடவுள் சில சமயம் மனிதர்களுக்கு ஏதோ ஒரு கெட்ட நேரத்தை கொடுத்து விடுகிறான். பின் அவனின் இரக்க சுபாவத்தினால் அதை மாற்றியமைக்க அவனும் பல நாட்கள் கஸ்டபடுவான் போலிருக்கிறது. அதுவரை அத்தனையையும் தாங்கும் திறமையையும் அவன்தான் தர வேண்டும். உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள். பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் குணமடையும் என்ற நம்பிக்கையும் ஒரு மருந்தாக இருந்து செயல்படவேண்டும். தாமதமாக வந்து என் எண்ணங்களை சொல்வதற்கு மன்னிக்கவும்.

  அன்புடன்
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
 19. மிகவும் அருமை நல்ல பதிவு வாழ்த்துக்கள் .நண்பர்களே இந்த பதிவை படித்து மகிழும் நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க, தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க Tech Helper Tamil ஐ பாருங்கள் Tech Helper Tamil https://www.techhelpertamil.xyz/

  ReplyDelete
 20. உங்களுக்கு உடல் நலம் எப்படியிருக்கிறது கீதா? பரவாயில்லையா? வழக்கம்போல உங்களை அடிக்கடி வலைப்பதிவுகளில் பார்க்காதது மனதிற்கு வருத்தமாக உள்ளது!

  ReplyDelete