அஞ்சணை கணையி னானை யழலுற வன்று நோக்கி
அஞ்சணை குழலி னாளை யமுதமா வணைந்து நக்கு
அஞ்சணை யஞ்சு மாடி யாடர வாட்டுவார் தாம்
அஞ்சணை வேலி யாரூ ராதரித் திடங்கொண் டாரே.
"தேரூரார் மாவூரார் திங்களூரார் திகழ்புன் சடைமுடிமேல் திங்கள் சூடிக் கார் ஊரா நின்ற கழனிச்சாயல் கண்ணார்ந்த நெடுமாடம் கலந்து தோன்றும் ஓரூரா உலகெலாம் ஒப்பக் கூடி உமையாள் மணவாளா என்று வாழ்த்தி ஆரூரா ஆரூரா என்கின்றார்கள் அமரர் தம் பெருமானே எங்குற்றாயே!" திரு ஆரூர். இதன் பெருமையைச் சொல்லித் தெரியவேண்டுவதில்லை. பன்னிரு திருமுறைகளிலே அநேகமாய் எல்லாத் திருமுறைகளிலும் குறிப்பிடப் பட்டிருக்கும் ஒரே தலம் திருஆரூர். எப்போது எனத் தெரியாத காலத்தில் இருந்தே, நம் சிற்றறிவால் யோசித்துப் பார்க்கமுடியாத காலந்தொட்டே இங்கே ஈசனும், அம்பிகையும் குடி கொண்டிருக்கின்றனர். எப்போது எனத் தெரியாத காலத்தே முன்னைப் பழம்பொருளுக்கும், முன்னைப் பழம்பொருளாய் ஐயனும், அம்மையும் வீற்றிருப்பதால் அந்தரகேசபுரம் எனவும், இந்தத் தலத்து ஈசன்,அம்மையோடு மட்டுமில்லாமல், தன் அருமை மகனான ஸ்கந்தனோடு காட்சி அளிப்பதால் ஸோமாஸ்கந்தர் என்னும் பெயர் பெற்று அந்தத் தத்துவத்தை விளக்குவதால் இவ்வூருக்கு ஸ்கந்தபுரம் என்னும் பெயரும் உண்டு.
அம்பிகை இங்கே யோக மாதாவாக யோக சாத்திரத்தின் தத்துவங்களையும், அர்த்தங்களையும் விளக்கும் வண்ணம் யோகசக்தியாக வீற்றிருக்கிறாள். மூன்று தேவியரும் ஒன்றாகக் குடி இருக்கும் அந்தக் கமலாம்பிகையே இங்கே யோகசக்தியாக இருப்பதால் கமலாயபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. க என்னும் எழுத்து கலைமகளையும், ம என்னும் எழுத்து மலைமகளையும், ல என்னும் எழுத்து மகாலக்ஷ்மியையும் குறிக்கும். இம்முன்று தேவியரும் ஒருங்கே இந்தக் கோயிலில் வடமேற்குத் திசையில் ஈசான்யதிசையை நோக்கியவண்ணம், தலையில் பிறை சூடி, கங்கையும் கொண்டு யோகசக்தியாக விளங்குகிறாள் அன்னை. அம்பிகையின் அனைத்து சக்திகளும் ஒருங்கே இங்கே குடி கொண்டிருப்பதால் ஸ்ரீபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. ஆயிற்று, இவ்வளவு பெருமையுடனே அன்னையும், ஈசனும் குடி வந்தாயிற்று. குடிமக்கள் வரவேண்டாமா??
ஆடல்வல்லானின் சிவகணங்களே இங்கே குடி வந்தனராம். சிவகணங்களாக இவ்வூர்மக்களே விளங்குகின்றனராம். அதனால் இவ்வூரைக் கலிசெலா நகரம் எனவும் அழைக்கின்றனர். இந்த ஊரை ஒரு தட்டிலும், மற்ற தலங்களை இன்னொரு தட்டிலும் வைத்துத் தராசில் நிறுத்துப் பார்த்தபோது இவ்வூரின் பக்கமே தட்டு நிறை மிகுந்து காணப்பட்டதாக ஐதீகம். இதனால் இந்த க்ஷேத்திரத்திற்கு க்ஷேத்திரவரபுரம் எனவும் பெயர் உண்டு. திரு வாகிய திருமகளே இந்தத் தலத்தில் வழிபட்டு வரம் பெற்றதாலும் திருஆரூர் எனப் பெயர் வந்ததாகவும் சொல்கின்றனர். தேவாதிதேவர்கள் எந்நேரமும் கூடி வழிபட்டுக்கொண்டே இருப்பதாலும், தேவாதி தேவர்களுக்கெல்லாம் உயர்ந்த சிவனடியார்கள் குழுமி ஈசனைத் தொழுவதாலும் தேவாசிரியபுரம் எனவும் பெயர் பெற்றது. பஞ்ச பூதத் தலங்களில் இது நிலம் என்னும் தத்துவத்தை உணர்த்துகிறது. ப்ருத்வித் தலம் எனப் படுகிறது.
உடலின் ஆறு ஆதாரங்களில் மூலாதாரத் தத்துவத்தை இது உணர்த்துகிறது. மூலட்டானமாக விளங்குவதால் மூலாதாரபுரம் எனவும், தேவேந்திரன் புற்று அமைத்து ஈசனை வழிபட்டதால் வன்மீகநாதபுரம் எனவும், முசுகுந்தச் சக்கரவர்த்தி இந்திரனுக்கு உதவி செய்து கிடைத்த ஈசனின் திருவடிவைப் பிரதிஷ்டை செய்திருப்பதால் முசுகுந்தபுரம் எனவும் அழைக்கப் படுகிறது. இந்நகரம் சப்தவிடங்கத் தலங்களில் முதன்மையானது. சப்தவிடங்கம் என்றால் என்ன என்பவர்களுக்கு. ஒவ்வொன்றாய்ப் பார்க்கப் போகிறோம். கோயில் ஐந்துவேலியாம், தீர்த்தக்குளம் ஐந்துவேலியாம், செங்கழுநீர் ஓடை நந்தவனம் ஐந்துவேலியாம், என்று சொல்லுவதுண்டு. திருவாரூர் கோயில் இந்த நிலப்பரப்பைப் பற்றி அப்பர் பெருமான் ஆயிரத்து முந்நூறு ஆண்டுகளுக்கு முன்னரே குறிப்பிட்டுள்ளார். இன்னும் சொல்லப்போனால் கோயில் என அழைக்கப் படும் தில்லைச் சிற்றம்பலத்தை விட அதிகமான பாடல்கள் பெற்றதி திருஆரூரே ஆகும்.
மூவர் பாடிய பாடல்களில் கிட்டத் தட்ட இருநூறு பாடல்களுக்கு மேல் திருவாரூர் பற்றிய பாடல்கள் உள்ளன. திருஞாநசம்பந்தர் தனது திருவாரூர்ப் பதிகத்தில், “ சித்தந் தெளிவீர்காள் , அத்த னாரூரைப் பத்தி மலர்தூவ , முத்தி யாகுமே. பிறவி யறுப்பீர்காள் , அறவ னாரூரை மறவா தேத்துமின் , துறவி யாகுமே. துன்பந் துடைப்பீர்காள் , அன்ப னணியாரூர் நன்பொன் மலர்தூவ , இன்ப மாகுமே. “ என்றும், திருநாவுக்கரசர், “ பாடிளம் பூதத்தி னானும் பவளச்செவ் வாய்வண்ணத் தானும் கூடிள மென்முலை யாளைக் கூடிய கோலத்தி னானும் ஓடிள வெண்பிறை யானும் ஒளிதிகழ் சூலத்தி னானும் ஆடிளம் பாம்பசைத் தானு மாரூ ரமர்ந்தவம் மானே. எனவும் பாடியுள்ளார். இதைத் தவிரவும் திருவாரூர் அறநெறி என்னும் பாடல்களையும் நாவுக்கரசர் பாடி இருக்கிறார். திருவாரூர்க் கோயிலின் நில அளவைக் குறிக்கும் பாடலும் ஒன்று உள்ளது. பாடல் தேடினேன். தட்டச்சுத் தேடலில் கிடைக்கவில்லை. “அஞ்சணைவேலி” என ஆரம்பிக்கும் பாடல். மாணிக்க வாசகர் பாடிய திருவாசகத்தில் “ பூங்கமலத்து அயனொடுமால் அறியாத நெறியானே கோங்கலர்சேர்குவிமுலையாள் கூறாவெண் நீறாடீ ஓங்கெயில்சூழ் திருவாரூர் உடையானே அடியேன் நின் பூங்கழல்கள் அவை அல்லாது எவையாதும் பகழேனே!” என்கின்றார். இது தவிர திருமூலர் தம் திருமந்திரத்திலும் திருவாரூர் பற்றி அஜபா மந்திரம் என்னும் பகுதியில் சொல்கிறார்என்று தெரியவருகிறது.
*********************************************************************************
இந்தப் பதிவு 2010 ஆம் வருஷம் ஃபெப்ரவரி மாதம் பதினைந்து தேதிக்கு எழுதப்பட்டது. அதற்கு ஒரு மாதம் முன்னே தான் திருவாரூரெல்லாம் போயிட்டு வந்தோம்னு நினைக்கிறேன். அப்போது எந்தமாதிரியான அவல நிலையில் திருவாரூர்க் கோயில் இருந்ததோ அதே அவல நிலையில் சொல்லப் போனால் இன்னமும் மோசமான நிலையில் இப்போதும் உள்ளது. ஆயிரம் வேலி நிலத்துக்குச் சொந்தக்காரர் ஆன தியாகராஜர் ஏழ்மை நிலைமையில் இருக்கார் எனில் அங்கே திருப்பணி செய்யும் குருக்கள் அனைவருமே ஏழ்மையில் காணப்படுகிறார்கள் சிலர் வயது மூத்தவர்களும் கூட. உடனே நம்ம அரசு இவங்க கோயிலில் திருப்பணிக்கு லாயக்கில்லை என மூட்டை கட்டிவிடும். மாதவப் பெருமாள் கோயில் பட்டர் அழுதாப்போல் இவங்களும் அழுவாங்க பிழைக்க வழி இல்லாமல்/தெரியாமல்.
ஒரு பிரார்த்தனையை நிறைவேற்ற வேண்டி புதன்கிழமை அன்று திருவாரூர்க் கோயிலில் அர்ச்சனை.அபிஷேஹங்களுக்கு ஏற்பாடு செய்திருந்தோம். அதற்காகச் செவ்வாயன்றே கிளம்பித் திருவாரூர் போயிட்டோம். குருக்களே லாட்ஜில் அறை ஏற்பாடு செய்திருந்தார். அறை எல்லாம் சுத்தம் தான். உயர்தரத் தொலைக்காட்சிப் பெட்டி, தற்போது அறிமுகம் ஆகி இருக்கும் இன்வெர்டர் ஏசி என எல்லாம் தரமாகவே இருந்தது. முக்கிய்மாய்க் கழிவறையும் வாஷ் பேசினும் வெண்மை கண்ணைப் பறித்தது. குளிக்க வைத்திருந்த வாளி எப்போ வாங்கினதுனு தான் தெரியலை. படுக்கை எல்லாம் சுத்தம் தான். ஆனால் பத்துக்குப் பத்துப் படுக்கை அறையில் ஒரு பக்கம் தொலைக்காட்சிப் பெட்டி மற்ற் மின்சார உபகரணங்கள் சுவரில் இடம் பிடிக்க எதிரே கட்டிலில் நாங்கள் உட்கார்ந்தால் எழுந்திருக்கும்போது தொலைக்காட்சிப் பெட்டியில் தான் இடிச்சுக்கணும். பின்னால் கட்டிலைத் தள்ள இடமில்லாமல் சுவரோடு ஒட்டிப் போட்டிருந்தது. டபுள் காட் கட்டில் வேறே. அதில் உட்கார்ந்து கொண்டு பின்னால் போய்த் தான் சுவர்ப் பக்கம் போய்ப் படுத்துக்கணும். அதிலிருந்து இறங்குவது எனில் கால்மாட்டில் ஜன்னலுக்கும் கட்டிலுக்கும் நடுவே அரை அடி இடம் விட்டிருந்தார்கள். அதில் இறங்கி ஒருக்களித்துக் கொண்டே நகர்ந்து நகர்ந்து வந்து வெளியே வரணும். முன் பக்கம் படுப்பவர்கள் கூட எழுந்திருப்பது ரொம்பக் கஷ்டம். ஒரு ராத்திரி தானேனு எப்படியோ அனுசரித்துக் கொண்டு விட்டோம்.
ஆனால் போய்ச் சேர்ந்த அன்றிரவு சாப்பாட்டுக்கு நாங்க பட்ட கஷ்டம்! அந்தத் தியாகேசனுக்குத் தான் தெரியும். நான் என்னமோ உள்ளுணர்ச்சியில் இம்முறை வீட்டிலேயே பண்ணி எடுத்துக்கலாம்னு சொன்னதுக்கு நம்ம ரங்க்ஸ் திருவாரூரில் இல்லாத ஓட்டலா என்று சொல்லிவிட்டார். குருக்களிடம் விசாரித்த போது அவ்வளவு நல்ல பதில் கிடைக்கலை. சந்தேகமாகவே இருந்தது. அதே போல் அன்று ரம்ஜான் என்பதால் முக்கியமான பல ஓட்டல்கள் மூடி இருக்க அங்கே/இங்கே எனக் காரில் அலைந்து கடைசியில் கீழ வீதியில் வாசன் என்னும் ஓட்டலுக்குப் போகச் சொன்னார்கள். அங்கே அன்று திறந்திருந்தது அந்த ஒரு ஓட்டல் தான் என்பதால் தெருவெல்லாம் கூட்டம் காத்திருந்தது. இவரைப் பார்த்ததும் அந்தக் கூட்டத்தில் மேலே ஏற முடியாமல் தடுமாறுவதைப் பார்த்தக் காஃபி, தேநீர் போடுபவர் பார்த்துக் கையைப் பிடித்து உள்ளே அழைத்துச் சென்று டோக்கன் வாங்கிக் கொடுத்துவிட்டார். உள்ளே உட்கார்ந்து சாப்பிடும்படி இருந்தாலும் கூட்ட நெரிசலில் போகவில்லை. அது மூப்பனார் குடும்பத்தினர் நடத்தும் ஓட்டல் என்பது அங்கிருந்த சில அறிவிப்புப் பலகைகளில் இருந்து தெரிந்தது. சரினு இட்லி, சட்னி, சாம்பார் வாங்கி வந்தார். ஐந்து இட்லிகளுக்கு ஒரே பாக்கெட்டில் சட்னி, சாம்பார் கொடுக்கப் போதாதுனு சொல்லி இன்னொன்று வாங்கினால் அதில் ஒரு ஸ்பூன், சாம்பாரும் அரை ஸ்பூன் சட்னியும் இருந்தது. அதுவும் பூண்டு போட்டது. நான் எப்படியோ வெறும் இட்லியை விழுங்க அவர் தொட்டுக்க இல்லாமல் சாப்பிட முடியலைனு சொல்லி அந்தச் சட்னி சாம்பாரையே தொட்டுக் கொண்டு சாப்பிட்டார்.
மிச்சக்கதை/சொச்சக்கதை தொடரும்!
அட... திருவாரூர் சென்று வந்தீர்களா? ஒரு போட்டோ கூடவா எடுக்கவில்லை? நான் அவசரத்தில் ஒருமுறை பார்த்திருக்கிறேன். ஆற அமர ஒருமுறை சுற்றி வரவேண்டும்.
ReplyDeleteவாங்க ஶ்ரீராம். ஆமாம். ஒரு விதத்தில் அவசரப் பயணமும் கூட. ஏனெனில் வீட்டில் வேலை நடந்து கொண்டிருக்கிறது. அதைப் பாதியில் நிறுத்திட்டுப் போனோம். :(
Deleteதயவு செய்து அரசிடம் சொல்லாதீர்கள். உள்ளே புகுந்து என்னென்ன செய்யுமோ...
ReplyDeleteக்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஆமாம், நான் தான் முதல்லே போய்ச் சொல்லப் போறேன், பாருங்க! என்னவோ ஒண்ணும் சரியில்லை.
Deleteஎனக்கு திருவாரூர் கோவிலும், உங்கள் ஊர் திருவானைக்கா கோவிலும் பார்க்க ஆவல். பார்த்து நாளாச்சு. எங்கே வரமுடிகிறது...
ReplyDeleteஎப்படியாவது நேரம் எடுத்துக் கொண்டு வாங்க ஶ்ரீராம். எங்க வீட்டிலேயே தங்கிக்கலாம். வசதியாப் போய்ப் பார்க்கலாம்.
Deleteதங்கும் அறை பற்றி நீங்கள் சொல்லி இருப்பது முற்றிலும் சரி. சட்டெனப் பார்த்தால் வசதியான, நவீனமான அறை போல தோன்றும். ஒருவர் மட்டும் இருந்தால் அடஜஸ்ட் செய்யலாம். ஆனால் நீங்கள் சொல்லும் இடைஞ்சல்கள் கஷ்டம்தான்.
ReplyDeleteநீங்க சொல்வது உண்மை தான் ஶ்ரீராம். மதுரையிலும் தானப்ப முதலி அக்ரஹாரத்தில் சேதுராம் பஜனை மண்டலிக்கு அருகே இருந்த/இருக்கும் "கதிர்" என்னும் ஓட்டல் நக்ஷத்திர அந்தஸ்து என முன் பதிவு செய்து போய்த் தங்கினோம். சாப்பாடும் அங்கேயே கொடுப்பதாகச் சொல்லிட்டுக் கடைசியில் ஆறு இட்லி கொடுக்கச் சாயங்காலம் ஐந்து மணியிலிருந்து தயார் செய்து பின்னர் ஒரு வழியாப் பல நினைவூட்டல்களுக்குப் பின்னர் எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தது. :( கோபு ஐயங்காருக்கு நடந்தே போய்ச் சாப்பிட்டு வந்திருந்தால் கூட ஒரு மணி நேரம் கூட ஆகி இருக்காது. அங்கேயும் அறை இதே மாதிரித் தான். நக்ஷத்திர ஓட்டலின் ஒரு அடையாளம் கூட இல்லை.
Deleteஅந்த ஊரில் எல்லாம் ஹோட்டல் திறக்ர்க்ரர்விற்ற்ல்ர்ல்ரிர் ரெண்ற்ற்றால் கஷ்டம்தான். மாமாவை ஹோட்டல்காரர் முன்னரே அறிவாரா? எப்படி?
ReplyDelete* திறக்கவில்லை என்றால்
Deleteஹாஹாஹா, ஶ்ரீராம், பதிவை முதல் பாகம், பழைய பதிவிலிருந்து காப்பி/பேஸ்ட் பண்ணிட்டுக் கீழே நடந்தவற்றை எழுதும்போது சில வார்த்தைகள் விடுபட்டிருப்பதைக் கவனிக்கலை. நான் திருத்துவதற்குள்ளாகப் பப்ளிஷைத் தப்பா அழுத்தி இருக்கேன். அது தான் காரணம். இப்போத் திருத்தி விட்டேன். :(
Deleteதங்களது எண்ணங்களை சொன்னது சிறப்பு. நிறைய பிரச்சனைகள். ஒன்றும் சொல்வதற்கில்லை.
ReplyDeleteஆமாம், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் இத்தகைய சிறப்புக்கள் எல்லாம். :(
Deleteதிருவாரூர் சென்றதில்லை. அங்குள்ள நிலை படிக்கவே கஷ்டமாக இருக்கிறது.
ReplyDeleteபோனால் இன்னமும் வேதனையாக இருக்கும் மாதேவி.
Deleteதிருவாரூர் தலவரலாறு சிறப்பு.
ReplyDeleteமாயவரத்தில் இருக்கும் போது அடிக்கடி போவோம். கையில் உணவு எடுத்து போய் விடுவோம். அதனால் அந்த ஊர் ஓட்டல் பற்றி தெரியாது. கல்யாணம் செய்த புதிதில் திருவாரூர் தேர் பார்க்க அழைத்து சென்றார்கள். அப்போது திருவெண்காட்டில் இருந்தோம். தேர் சமயம் எல்லோர் வீட்டிலும் சாப்பாடு போடுவார்கள். எங்களுக்கு தெரிந்தவர்கள் வீடு ரதவீதியில் இருந்தது அவர்கள் வீட்டில் சாப்பாடு.
வாங்க கோமதி. மதுரையிலே மீனாக்ஷி கோயில் கும்பாபிஷேஹம், மீனாக்ஷி கல்யாணம் போன்றவற்றின்போது நாங்களும் இப்படிப் பலருக்குச் சாப்பாடு போட்டிருக்கோம். நான்கு குடித்தனங்கள் நாங்க இருந்த வீட்டில் வீட்டுக்காரங்களையும் சேர்த்து. எல்லோருமாக ஒன்றாய்ச் சேர்ந்து கொல்லையில் வெந்நீர் அடுப்புக் கிட்டே இருந்த கோட்டை அடுப்பில் சமைத்துப் போடுவாங்க. அருமையான சுவையான சாப்பாடாக இருக்கும். அந்த நாட்களை எல்லாம் எண்ணி எண்ணி மகிழ வேண்டியது தான். திரும்ப வராது.
Delete1999-ல் ஒரு துபாய் நண்பரது திருமணத்திற்காக சென்று வந்தேன், பக்கத்தில் ஐநூற்றுப்பிள்ளையார் கோயில் இருந்தது.
ReplyDeleteபெண்ணின் பெயர் பாண்டியம்மாள், மாமியார் பெயர் ரேவதி.
வாங்க கில்லர்ஜி! சமயங்களில் இப்படித் தான் பெயர்கள் அமையும். :)
Deleteஎனது கருத்துரை என்னாச்சு ?
ReplyDeleteஒண்ணே ஒண்ணு வந்திருக்கு. அதைப் போட்டுப் பதிலும் இப்போத் தான் கொடுத்தேன்.
Deleteதிருவாரூரின் தலவரலாறு கொஞ்சம் தெரியும் என்றாலும் உங்கள் பதிவின் மூலமும் அறிந்து கொண்டேன். ஆரூராருக்கு என்னாயிற்று? நன்றாகத்தானே இருந்தார் இல்லையா? பிரச்சனைகளா இப்போது? தமிழ்நாட்டுச் செய்திகள் இப்போது அதிகம் தெரிவதில்லை வலைத்தளங்களில் இப்படி வந்தால் மட்டுமே அறிகிறேன்
ReplyDeleteதுளசிதரன்
வாங்க துளசிதரன், இன்னமும் முடியலை. ஒரு வாரமாக வீட்டில் ஒரே நெருக்கடி. வேலைகள் அதிகம். திருவாரூர்ப் புராணம் மிகப் பழமையானது.
Deleteபழைய பதிவு விஷயங்களையும் தெரிந்து கொண்டேன் கீதாக்கா.
ReplyDeleteஇப்போதைய நிகழ்வு சரியாகப் புரியவில்லை அதாவது கோயில் நிலை பற்றி. நாங்கள் சென்றிருந்த போது கோயில் பராமரிப்பு வேலைகள் நடந்துகொண்டிருந்தது. கும்பாபிஷேகம் முன்? அல்லது தேருக்கு முன்? நினைவில்லை. பெரிய கோயில். பழம்பெருமை வாய்ந்த கோயில் என்றும் தெரிந்தது. அப்போது பரமாரிப்பு வேலைகள் நடந்ததாலோ என்னவோ நிறைய தூசு துணி கட்டி மறைத்தல் கட்டுமானப் பந்தல் என்று இருந்தது. நாங்கள் சென்றது 2015 என்று நினைக்கிறேன்.
என்றாலும் பூஜைகள் நடந்ததுதான். இப்போது இப்படியா என்பது ஆச்சரியமாக இருக்கிறது.
கீதா
வாங்க தி/கீதா! கோயில் நிலைமை மிகவும் மோசம். பராமரிப்பே இல்லை. குருக்கள் எல்லோருடைய நிலைமையும் மிகவும் மோசம். :(
Deleteபூஜைகள் அந்தந்த காலத்துக்கு எப்போவும் போல் நடக்கின்றன.
Deleteஎப்படியோ கடைசியில் ஒரு உணவகத்தில் சாப்பாடு கிடைத்ததே. அதுவும் மாமாவுக்குத் தெரிந்தவராக இருந்ததால் இல்லையா? இல்லை என்றால் சிரமமாகத்தான் இருந்திருக்கும். நீங்கள் வழக்கமாக எடுத்துக் கொண்டு சென்று விடுவீர்களே. என்னவோ இம்முறை இப்படி ஆகியது போல.
ReplyDeleteகீதா
மாமாவுக்குத் தெரிந்தவர் என்னும் பொருள்படும்படி எழுதிட்டேன் போல. அவர் மாமா மேலே
Deleteஏறத் தடுமாறுவதைப் பார்த்துவிட்டுத் தானாக வலிய வந்து உதவினார். இல்லைனால் அந்த இட்லிகளை வாங்கவே ஒரு மணி நேரம் ஆகி இருக்கும்.
திரு ஆரூர் புராணம் எழுதியிருந்தது கண்டு மிக்க மகிழ்ச்சி.. தேவார மேற்கோள்களுடன் அருமை.. அருமை..
ReplyDeleteஅப்பெருங்கோயிலின் இன்றைய நிலையை அறிந்து வருத்தமாக இருக்கின்றது..
போதாத காலம் யாருக்கு என்று தெரிய வில்லை..
எல்லோருக்குமே போதாத காலம் போலத் தோன்றுகிறது. ஆங்காங்கே கேள்விப்படுவதெல்லாம் மனதுக்கு நிறைவாக இல்லை. ஈசன் தான் காப்பாற்ற வேண்டும்.
Deleteதிரு ஆரூரில் சாப்பாட்டுக்குக் கஷ்டப்பட்டோம் - என்று சொல்லியிருக்கின்றீர்கள்.. எனக்குக் கொஞ்சம் புரிய வில்லை..
ReplyDeleteஅரபு நாடுகளின் நோன்பு சூழ் நிலையை நோக்கி இங்கும் நகர்த்துகின்றார்களோ..
திருவாரூரில் வடக்கு/தெற்கு வீதிகளில் உள்ள ஓட்டல்கள் எல்லாமே அன்றைய ரம்ஜான் பண்டிகைக்காக விடுமுறை அளித்திருக்கின்றனர். ஆகவே திறந்திருந்த ஒரே ஓட்டல் வாசன் ஓட்டல் தான். திருவாரூர்க் கூட்டமெல்லாம் அங்கே வந்து விட்டதால் பிரச்னை. :(
Deleteவணக்கம் சகோதரி
ReplyDeleteபதிவு அருமை. திருவாரூர் கோவில் பற்றி அருமையான விளக்கம் தந்துள்ளீர்கள். நானும் இந்தக் கோவிலை இதுவரை பார்த்ததில்லை. அதன் பராமரிப்பு குறித்து கூறியது வேமனை தரும் விஷயம். அந்த ஊரில் தங்கியிருந்த இடம், மற்றும் ஹோட்டல் உணவுகள் பற்றி சொல்லியிருப்பதும் வருத்தமே...ஒரு வேளை பார்சல் என்பதினால் இந்த கவனக் குறைவோ? சில இடங்கள் இப்படித்தான் நினைத்ததற்கு மாறாக அமைந்து விடுகின்றன. இனி கோவிலுக்குச் போகும் பக்தர்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக இருக்கும். பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரி
இன்று எ. பியில் தாங்கள் நெல்லை பயணம் என சகோதரி கீதா ரெங்கன் கூறியிருந்தார். பயணம் சௌகரியமாக அமைந்திருக்கும் நினைக்கிறேன். வந்ததும் அதுகுறித்த பதிவுகள் போடுவீர்கள் எனவும் நினைக்கிறேன். நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நான் 2,3 தரத்துக்கும் மேலே போயிருக்கேன் கமலா. கல்யாணம் ஆன புதுசிலே முதல் முதலாகப் போனப்போ கோயில் நன்றாக இருந்தது. செழிப்புக் கண்களில் தெரிந்தது. அதன் பின்னர் 2 முறை போனப்போவும் கோயில் பராமரிப்பே இல்லாமல் இருந்தது. இப்போவும் அப்படித் தான். அந்தக் கோயிலை முழுதும் பார்க்கணும்னால் மூன்று நாட்கள் ஆகும்.
Deleteபொதுவாகவே பிரிக்கப்படாத தஞ்சை மாவட்டத்தில் எந்த ஊருக்குப் போனாலும் நல்ல ஓட்டல்கள் இருந்ததில்லை. இப்போதும் கும்பகோணத்திலேயே ஒரு சில ஓட்டல்களில் தான் நம்பிச் சாப்பிடலாம். இல்லையேல் காரில் வரும்போதே வயிறு கடமுடா செய்யும். நாங்களும் ஒருமுறை திருவாரூரில் சாப்பாடு கிடைக்காமல் தவித்திருக்கிறோம். சமீபத்தில் சிதம்பரத்திலும் இதே நிலைதான். சுத்தம், சுகாதாரம், சுவையான உணவு இந்த மூன்றும் சேர்ந்து கிடைப்பது அபூர்வமே.
ReplyDeleteவாங்க செல்லப்பா சார். சிதம்பரத்தில் கீழ வீதியில் ராமலிங்க தீக்ஷிதர் வீட்டுக்கு எதிரே கிருஷ்ண விலாஸ் முன்னால் எல்லாம் நன்றாக இருந்தது. இப்போ அவங்களும் புதுமை என்னும் பெயரில் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஆகவே நல்ல ஓட்டல் என்பது தேடித் தான் பிடிக்கணும். அநேகமாக தீக்ஷிதர் வீட்டில் சாப்பிடச் சொல்வாங்க தான். ஆனால் எங்களுக்குக் கீழே உட்கார்ந்து சாப்பிட முடியாது. அவங்களைத் தொந்திரவு செய்யணும் என்பதால் ஒத்துக்க மாட்டோம். கிருஷ்ண விலாஸில் பிசைந்த சாதங்கள் கிடைக்கும் என்பதால் ரசம் சாதம்/தயிர் சாதம் வாங்கலாம்னு வாங்கினால் ரசத்தில் ஒரே பூண்டு மயம். அப்படியே தூக்கி எறிந்தேன். :(
Deleteகடந்த வாரம்கூட கோயில் உலாவின்போது திருவாரூர் கோயிலுக்குச் சென்றுவந்தேன். நாள் முழுதும் பார்த்துக்கொண்டேயிருக்கலாம். பெரிய கோயில். அதே அளவு பரப்பளவில் குளம் என்ற பெருமையுடையதாகக் கூறுவர்.
ReplyDeleteஆமாம் முனைவர் ஐயா! குளத்தை இந்த முறை சரியாகப் பார்க்கவில்லை. ஒரே அசதி! உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டது.
Delete