இன்னமும் கொஞ்சமானும் உயிர்ப்புடன் வைத்திருப்பது இம்மாதிரியான மஹான்கள் பிறந்த மண்ணில் பிறந்திருக்கோம் என்னும் ஆறுதலே. மற்றபடி நடப்பது யாவும் நல்லதாய் இல்லை. ஆனால் பெரும்பான்மை தூங்கிக் கொண்டிருக்கிறது. தட்டி எழுப்ப யார் வரணுமே தெரியலை, புரியலை. வருங்காலத் தலைமுறையின் எதிர்காலம் நினைக்கவே கவலை தருவதாகவும் அச்சமூட்டுவதாகவும் உள்ளது. இறை நம்பிக்கை ஒன்றே இப்போது காப்பாற்றி வருகிறது. என்னுடைய இந்தக் காலத் தலைமுறை மக்கள் இன்னும் ஓரிரு ஆண்டுகளிலோ அல்லது குறைந்த பக்ஷமாக ஐந்தாறு ஆண்டுகளிலேயோ முற்றிலும் அழிந்து விடும். அத்தோடு வருங்கால இளம் சமுதாயத்திற்கு உண்மையை எடுத்துச் சொல்லவோ நல்லனவற்றையும் நீதி, நேர்மை பற்றியும் கூறவோ, பெரியோர்கள் இருப்பது அரிது. அப்படி இருக்கையில் நம் பாரம்பரியமும், கலாசாரமும் மெல்ல மெல்ல அழிந்தே போய் விடுமே என்னும் அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இனி மக்களைக் காப்பது ஆண்டவன் பொறுப்பு என மனதைத் தேற்றிக் கொள்ளப் பார்த்தாலும் முடியவில்லை. இன்னொரு பாரதி வருவானா அல்லது வந்தாலும் மக்கள் அவனையும் அவன் எண்ணங்களையும் மதிப்பார்களா?
இன்னொரு பாரதி வந்திருந்தால் இந்நேரம் வந்திருக்க வேண்டுமே.... அவரை மஹாகவி என்று சொல்வதற்கே சிலருக்கு தயக்கம்.
ReplyDeleteதினமலரில் கூட அவரை இந்தியக் கவிஞர் சுப்ரமணிய பாரதியார் என்றுதான் போட்டிருக்கிறார்கள்.
ReplyDeleteபாரதி நினைவைக் கொண்டாடுவோம். அவர் பிறந்தது பதினொன்றா, பனிரெண்டா என்றும் ஒரு குழப்பம் உண்டு இல்லை? 11 ஆம் தேதி இரவு ஒரு மணிக்குமேல்.
ReplyDeleteபாரதியின் கவிதை பகிர்வு அருமை. உங்கள் ஆதங்கம் புரிகிறது.
ReplyDeleteமகாகவியை போற்றுவோம்.
நம்மால் பிரார்த்தனை செய்ய மட்டுமே முடியும், இளைய சமுதாயம், நாடு நலம் பெற வேண்டும் என்று.
நான் பிறந்தநாள், நினைவு நாளில் போட்ட பதிவுகளை படித்தேன். பாரதி பாடல்களை, கவிதைகளை படித்தேன். ஹலோ எஃப் எம்மில் பாரதியை பற்றி பேசி பேசி பாடல்களை பகிர்ந்தார்கள் அதை கேட்டு மகிழ்ந்தேன்.
தாங்களாவது பாரதியை நினைவு கூர்ந்து பிறந்தநாள் பதிவு போட்டீர்கள்.
ReplyDelete(தங்களது பதிவை எதிர் பார்த்தேன்)
இன்றைய தலைமுறைக்கு யாரும் இவரை நினைவு இல்லை.
நாளை ஓர் திரைப்பட கூத்தாடனுக்கு பிறந்தநாள் தமிழகமே கொண்டாடும் .
பாரதி பற்றிய பதிவு, உங்கள் எண்ணங்கள் நன்று.
ReplyDeleteவெற்றிடம் இருக்காது, நல்லவர்கள் அதனை நிரப்புவர். ஆனால் அப்படி நல்லவர்கள் பிறக்க, மக்களுக்கு, குறிப்பா தமிழக மக்களுக்கு யோக்யதை இருக்கா என்றுதான் ஆராயணும்.