Checking my post.
அனைவருக்கும் கோகுலாஷ்டமி வாழ்த்துகள். என்னால் இன்னிக்கு மத்தவங்க யாரோட பதிவிலும் கருத்துச் சொல்ல முடியலை. அதான் இங்கே என்னோட வலைப்பக்கம் வந்து பழைய பதிவுகளிலும் இன்னிக்கு இந்தப் பதிவைப் போட்டுட்டு இதிலேயும் எல்லாம் சரியா இருக்கானு பார்த்துக் கொண்டேன். இது 2024 ஆம் வருடம் நம்ம ரங்க்ஸ் இருக்கையில் கொண்டாடியது. இதுக்கப்புறமாக் கொண்டாடலை. இந்த வருஷம் தான் இங்கே முதல் முதலாகக் கிருஷ்ண ஜயந்தியுடன் ஆரம்பிக்கும் பண்டிகைக் காலம். இங்கே இன்னிக்கு கோகுலாஷ்டமி கொண்டாடினாலும் இந்தியாவில் பண்ணுவது போலெல்லாம் பண்ண முடியாது. சும்மாக் கொஞ்சம் போல் ஏதானும் இனிப்புச் செய்துட்டுப்ப் பால், பழம், தயிர், மோர், அவல் வைத்து நிவேதனம் பண்ணணும். அவ்வளவு தான் முடியும். முன்னர் போலெல்லாம் பக்ஷணங்கள் பண்ணவோ, அல்லது தின்னவோ உடல்நிலையோ மனநிலையோ இடம் கொடுக்காது. எனினும் குழந்தைகளின் க்ஷேமத்துக்காகப் பண்டிகையைக் கொண்டாடணும். இது என் அப்பா முன்னெல்லாம் அடிக்கடி சொல்லுவார். அப்பாவிடம், "நீ பண்டிகை கொண்டாடிட்டா நாங்க க்ஷேமமா இருந்துடுவோமா?" எனக் கிண்டல் செய்திருக்கேன். ஆனால் இப்போ அதன் உள் அர்த்தம் புரிகிறது. எல்லோரும் நல்லா இருக்கணும். உலக க்ஷேமத்தை வேண்டியும் இன்னிக்குக் கிருஷ்ண ஜயந்தியை அனைவரும் நல்லபடியாக் கொண்டாடணும். ஒண்ணும் முடியாட்டியும், பால், சர்க்கரையாவது வைச்சுக் கிருஷ்ணனை வணங்குவோம்.
அனைவருக்கும் இனிய ஜென்மாஷ்டமி வாழ்த்துகள்.