எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, September 11, 2026

தமிழா! தமிழா! தமிழில் பேசு தமிழா

 






பாரதியார் எழுதிய இந்தக் கவிதை தமிழகத்தின் இப்போதைய நிலைமைக்குப் பொருந்தி இருக்கா? கேள்விக்குறியே? அநேகமாக இன்றைய ஜென் ஜி எனப்படும் இளைய சமுதாயம் பாரதியைப் பற்றி அறிந்திருக்கவே நியாயம் இல்லை. பாரதியா அது யாருனு கேட்பாங்க. பாரதி தன் கவிதையில் தமிழ்நாடு கல்வியில் சிறந்தது எனக் கம்பரையும் இளங்கோவையும் மேற்கோள் காட்டுகிறார். ஆனால் அவர்களை இந்த இளைஞர்கள், இளம்பெண்கள் படித்திருப்பார்களா என்பதே சந்தேகம். இன்றைய இளம் தலைமுறைக்குக் கம்பனோ, இளங்கோவோ,, தமிழ் வளர்த்த புலவர்கள் பற்றியோ எதுவும் தெரியாது. திருநாவுக்கரசர், திருஞான சம்பந்தர் பற்றியோ சுந்தரர் பற்றியோ அறிய மாட்டார்கள். ஆழ்வார்கள் குறித்தோ ரங்கனுக்காக உருகிய கோதை  நாச்சியார் பற்றியோ இறைவனுக்கே பல்லாண்டு பாடிய பெரியாழ்வார் பற்றியோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இப்போதைய இளைஞர்கள் தமிழ் பேசவும் எழுதியதைப் படிக்கவும் திக்கித் திண்டாடித் தடுமாற்றத்துடன் படிக்கிறார்கள். இத்தனைக்கும் தமிழ் தான் தமிழக் மாணவர்கள் கற்க வேண்டும் என முனைப்புடன் இருந்தஇருக்கும்/  ஆட்சியாளர்கள் காலத்தில் வளர்ந்தவர்கள். வளர்பவர்கள். ஆனாலும் தமிழ் தடங்கல் தான்.வேற்று மொழி நுழைந்தால் தமிழ் அழிந்துவிடும் எனச் சொல்பவர்கள்  இருக்கையிலேயே  தமிழுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

இனி ஒரு பாரதி வந்து தமிழை வளர்த்தால் தான் உண்டு. அதுக்காகவாவது மீண்டு வா பாரதி!

No comments:

Post a Comment