"பொன்னியின் செல்வன்" கதையை நான் எத்தனை முறை படிச்சிருப்பேன்னு எனக்கே தெரியாது. ரொம்பச் சீக்கிரமாகவே புத்தகங்கள் படிக்க ஆரம்பித்த நான் முதன் முதல் "பொன்னியின் செல்வன்" படிக்கிறப்போ 7 வயசு இருக்கும். அப்போ 3-ம் வகுப்பில் இருந்த நான் புத்தகங்கள் படிக்க ஆரம்பித்துவிட்டதால் அந்த வருஷம் லீவில் அப்பா பள்ளி நூலகத்தில் இருந்து எடுத்து வந்த பொன்னியின் செல்வனைப் படிக்க நேர்ந்தது. படிக்கும்போது அந்தக் கதையின் ஓட்டமும், ஆழ்வார்க்கடியான், வந்தியத் தேவனின் சாகசங்களும் மனதைக் கவர்ந்தது. இன்னும் சொல்லப் போனால் வந்தியத் தேவனின் குணமும் என்னோட குணங்களும் கிட்டத் தட்ட ஒத்துப் போனதாக எனக்குத் தோன்றியதாலும் வந்தியத் தேவன் பாத்திரத்தின் மேல் அதிகமான ஈர்ப்பு ஏற்பட்டது. எனெனில் எனக்கும் கொஞ்சம் கிறுக்குப் புத்தி உண்டு. அதனால் மாட்டிக் கொண்டு முழிக்கறது உண்டு. பலமுறை பலிஆடு ஆக்கப் பட்டிருக்கிறேன். நெருங்கியவர்கள் என நினைத்தவர்கள் என்னை ஒரு பொருட்டாகக் கருதியதில்லை. இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவே மாட்டேன். மேலும், வந்தியத் தேவன் போலவே உதவின்னு செய்யப் போய் இக்கட்டில் மாட்டிக் கொண்டு முழிக்கறது உண்டு. என்றாலும் அவனைப் போலவே அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சமாளித்து வெளியே வர நேர்ந்ததும் உண்டு. (ஹிஹி, மறுபாதியோட கமென்ட், இப்போவும் அப்படித்தான்). அதற்குப் பின்னர் பலமுறை படித்தேன்.
2-ம் முறையாகக் "கல்கி" பத்திரிகையில் தொடர் வந்துகொண்டிருந்தபோது என்னுடைய அம்மாவின் சிநேகிதியின் பெண்களுக்குப் "பொன்னியின் செல்வன்" கதையை நான் எடுத்துச் சொல்ல நேர்ந்தது. வந்தியத் தேவன் மேல் ஈர்ப்பு வரும்படி நான் சொன்னதாலோ என்னவோ, கடைசி பாகத்தில் அவன் சிறையில் அடைக்கப் பட்டதும், அந்தப் பெண்கள் வந்தியத்தேவன் விடுதலைக்காக மதுரை "நேரு விநாயகர்" கோவிலில் தேங்காய் உடைக்கிறேன் என வேண்டிக் கொண்டதும் நினைவில் இருக்கிறது. இப்போவும் இந்தியாவில் என்னிடம் புத்தகம் ஊள்ளது, சற்றே கிழிந்த நிலைமையில். பல ஊர்கள் பார்த்துவிட்டதே அந்தப் புத்தகம். போனமுறை யு.எஸ்ஸுக்குக் கூட வந்தது. இப்போ அதன் உடல்நிலை கருதி எடுத்துவரவில்லை. என்றாலும் கதை என்ன நமக்குத் தெரியாததா என அலட்சியமாக நினைத்துக் கொண்டுதான் "கண்ணபிரான், ரவிசங்கர்" வைத்த "புதிரா, புனிதமா?" போட்டிக்குப் போனேன். முதல் கேள்விக்கே விடை தவறு. இந்த ராமன், கிருஷ்ணன், கிருஷ்ணன்ராமன் என்று மாற்றிவிட்டதில் சற்றே குழம்பிப் போய் முற்றிலும் தவறான விடை கொடுத்துவிட்டேன். அடுத்து வந்தியத் தேவன் முதலில் போவது மாதோட்டம்தான், அங்கே தான் கொடும்பாளூர் வேளிரால் சிறையில் வைக்கப் படுவான், என்று நன்கு தெரிந்திருந்தும் அனுராதபுரம் என்று பின்னர் அவன் ஆழ்வார்க்கடியானுடன் போகும் ஊரை நினைத்துக் கொண்டும், அங்கே தம்பள்ளைக்கு அருண்மொழித்தேவர் போய்விட்டுத் திரும்புவதையும் நினைத்துக் கொண்டுவிட்டேன். அதுவும் தப்பு. கடைசிக் கேள்விக்குப் பெரிய பழுவேட்டரையர்தான் சரியான விடை என்று கண்ணன் சொல்கிறார். ஆனால் நந்தினி அவரிடம் இருந்து பயந்து கொண்டு வெளியே வந்து அழுது முடித்துவிட்டுச் சின்னப் பழுவேட்டரையரின் பரிவாரங்களுடன் வந்த குதிரைகளில் ஒன்றில்தானே போவாள்? அப்போது சின்னப் பழுவேட்டரையரைப் பார்த்துத் தானே அவள் மனம் மாறி ஓடுவாள்? இதுதான் நான் நினைத்தது. நந்தினி ஓடிப் போகும் சமயம் பெரிய பழுவேட்டரையர் குகையை விட்டு வெளியே அப்போதுதான் வந்து கொண்டிருப்பார். ஏனெனில் ரவிதாசன் குழுவினர் குகையை மேலே பாறையைப் போட்டு மூடிவிட்டுத் தப்பி இருப்பார்கள். இதுதான் சரியான பதிலோ என்று நான் நினைத்தது. ஆக மொத்தம் நான் மூவரில் ஒருத்தியாகக் கூட வரவில்லை. உண்மையிலேயே கொஞ்சம் வெட்கமாய்த் தான் இருக்கிறது. "கற்றது கைம்மண் அளவு" கூட இல்லை! நான் படிச்சதும் ஒண்ணுமே இல்லை! பலர் ரொம்பவே சுலபமான கேள்விகள் எனச் சொல்லி இருக்கிறார்கள். எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால் கர்வம் பங்கம் ஆனது!
:((((((((((
எச்சரிக்கை
இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.
Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.
Have a great day.
Have a great day.
பரமாசாரியாரின் அருள் வாக்கு
Showing posts with label கர்வ பங்கம். Show all posts
Showing posts with label கர்வ பங்கம். Show all posts
Sunday, July 08, 2007
Subscribe to:
Posts (Atom)