எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, May 13, 2006

சாம்பாரில் உப்புப் போடவில்லை.

இதைப் படித்து விட்டு என் வலைப்பூவிற்கு தவறாமல் வருகை தரும் அம்பி, மற்றும் மனுவிற்கும், போனால் போகிறது என்று எப்போவாவது தலை காட்டும் பின்னூட்ட நாயகி,எங்கள் தானைத் தலைவி திருமதி துளசி மற்றும் ஓடி வந்து ஆறுதல் சொல்லி சமாதானம் செய்யும் எங்கள் நல்லிணக்கத் தலைவி, திருமதி உஷா அவர்களுக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால், இந்தத் தலைப்புக்கும் நான் எழுதும் விஷயத்திற்கும் ஒரு சம்மந்தமும் இல்லை என்பதே.

எங்கள் பின்னூட்ட இளவரசி தன் வேலைகளில் மும்முரமாக இருப்பதால் (வேறு என்ன பின்னூட்டம் வளர்ப்புக்கலை கற்றுத் தேர்ந்து வருவதால்) அவர் பின்னூட்டத்திற்கு நாம் பதில் சொன்னால் வருவதற்கு அன்பு கூர்ந்து இசைந்திருக்கிறபடியால் (எல்லாம் நேரம் பாருங்க, பின்னூட்டம் வாங்க எப்படியெல்லாம் எழுத வேண்டி இருக்கு, இதெல்லாம் ஒரு எழுத்தா என்று தமிழ் மணம் நிர்வாகிகள் தலையில் அடித்துக் கொள்வதும் தெரிகிறது.) என்ன சொன்னேன், ம், பின்னூட்ட இளவரசி (அம்மா, பொன்ஸ், திருப்பிதிருப்பிப் போட்டு உன் பட்டத்திற்கு அங்கீகாரம் வாங்க முயற்சி செய்கிறேன் பார், நிரந்தரத் தலைவியான எனக்கே இந்தக் கதி) இசைந்திருக்கிறபடியால், நாம் எழுதப் போகும் அதிர்ச்சியான தகவல் இது தான்.

நேற்று மதியம் (இந்திய நேரம்) 3 மணியில் இருந்து என்னுடைய கணினியில் updaate failure ஆனதைத் தொடர்ந்து என்னுடைய வலைப்பூவில் புதிய பதிவு பதிக்கவோ அல்லது என்னுடைய பின்னூட்டங்களைப் பார்க்கவோ என்னால் முடிய வில்லை. இது இம்முறை தேர்தலில் நாங்கள் பெற்ற ஆதரவைப் (வ.வா.ச) பார்த்த எதிர் அணியின் சதியோ என்று தோன்றுகிறது. எதிர் அணியில் இருப்பது பமக வும் அ.உ.கு.மு.கவும் (இப்படி ஒரு கட்சி இருப்பதே நேற்றுப் பகலில் தான் தெரியும்) இதில் அ.உ.கு.மு.க நம் உற்ற நண்பர்கள். தலைவர் குமரன் நம்ம ஊருங்க. ஆகவே சதிவேலை பமகவினுடையது தான் என்பதில் சிறிதும் சந்தேகத்திற்கு இடமின்றித் திரிகிறது. இது தேர்தலுக்கு முன்னால் பெனாத்தலார் பெனாத்தி வந்த முறையிலேயே கண்கூடாக அறிய முடிகிறது.

வாழ்க எங்கள் தலைமை மற்றும் கட்சி.
தலைவர் இல்லாத இந்த நேரத்தில், நம் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு நம் கட்சியைப் பாதுகாப்பதில் இருக்க வேண்டும் என்று கூறிக் கொள்கிறேன்.
இப்படிக்கு நிரந்தரத் தலைவலி
கீதா(கானா). விவசாயி அவர்களே, தாங்கள் ரொம்ப கஷ்டப்பட்டுத் தேடித் தந்த இந்தப் பட்டத்தை அங்கீகரிப்பதன்மூலம் உங்களை மறக்காமல் பெருமைப் படுத்தி உள்ளேன். (மத்தவங்க நீங்க சங்கத்துக்கு ஆற்றிய அரும்பணிகளை மறந்துட்டாங்க) இப்படியெல்லாம் எழுதினால் தான் தமிழ் மணத்திலும் வரும் பின்னூட்டமும் வரும். எல்லாம் நேரம்.

உஷா, உங்களுக்கும் துளசிக்கும் கூடத் தலைவிப் பட்டம்தான் தந்திருக்கிறேன், பார்த்துக்கங்க. நம்ம காங்கிரஸ் மாதிரி எல்லாருமே தலைமைப் பதவியில இருப்போம்.

6 comments:

 1. நான் எங்கே இருக்கேன்!!!?????? நீங்க எல்லாம் யாரு???

  ReplyDelete
 2. பல பேருக்கு பல பட்டங்கள் கொடுத்தும் யாரும் இந்த பதிவுக்கு இதுவரை பின்னூட்டங்கள் இடவில்லையே. அதற்காக களங்க வேண்டாம் தன்மானத் தலைவியே. தொடர்ந்து முயர்ச்சிக்கவும்
  அன்புடன்
  நாகை சிவா

  ReplyDelete
 3. கீதா. நான் போட்ட மைல் வந்ததா?எல்லொருக்கும் பதவியா.
  உங்களுக்கும் டீம் இருக்கா?
  உப்பு போடாத சாம்பார் எனக்கு ஒத்துக்கும்.
  ஹெல்த்துக்கும் நல்லது.

  ReplyDelete
 4. வந்தியத் தேவரே, இன்னும் தஞ்சாவூர்ச் சிறையில் இருப்பதாக நினைக்கிறீர்கள். உங்களைத் தான் இளைய பிராட்டியும், பொன்னியின் செல்வனும் வெளியில் கொண்டு வந்து விட்டார்களே. தற்சமயம் வலை உலகில் இருக்கிறீர்கள்.

  ReplyDelete
 5. சிவா, (நாகை), இந்த மாதிரிப் பட்டம் எல்லாம் கொடுப்பதுவே இதற்குத் தான். இதை எல்லாம் வெளியிலே சொல்லுவாங்களா? (தன்மானத் தலைவி பட்டம் நல்லா இருக்கு. கட்டாயம் உங்க பதிவிலே என் பின்னூட்டம் உண்டு. ஹி,ஹி,ஹி,)

  ReplyDelete
 6. மனு, சந்தடி சாக்கிலே உங்களை மறந்துட்டேன் பாருங்க. கட்டாயம் உங்களுக்கும் பட்டம், பதவி எல்லாம் உண்டு.(இன்னும் மெயில் செக் பண்ணவில்லை. இப்போதான் உட்கார்ந்திருக்கேன். அதற்குள் பின்னூட்டம் வந்திருக்குதானு அல்ப ஆசை)

  ReplyDelete