My thoughtsகணினி மறுபடியும் தகராறு 
செய்கிறது. எதுவுமே சரியாக 
வரவில்லை. Tata Indicaom 
Broadband Account Check செய்யப் 
போனால் அதுவும் தகராறு. முகப்புப் 
பக்கமே திறக்க வில்லை. கூகிள் 
ஆண்டவரிடம் போய் முட்டிக் 
கொண்டதில் முகப்பு வந்தது. ஆனால் 
My Account திறக்க முடியவில்லை. 
என்ன செய்வது புரியவில்லை. 
இணைய இணைப்பும் தொடர்ந்து 
வருவதில்லை. நேற்று ஒரு பதிவு 
போட்டு விட்டுப் பார்த்தால் கணினி 
"என்னுடைய database சேமிக்காது. 
நீ என்ன வேண்டுமோ செய்து கொள்" 
என்று நிர்தாட்சண்யமாகச் சொல்லி 
விட்டது. அதனுடன் சண்டை 
போட்டால் வேலைக்கு ஆகாது என்று 
அதைச் சேமிப்பில் போட்டு விட்டுப் 
பின் மறுபடி முயற்சி செய்தால் அது 
சரியாக வந்தது. சோதனையும் 
பண்ணிப் பார்த்தேன். பதிவு வந்து 
விட்டது இதே தலைப்பில். ஆனால் 
மாலை நடைப் பயிற்சி முடிந்து வந்து 
மீண்டும் பார்த்தால் பதிவைக் 
காணவில்லை. "தேடு" பகுதிக்குள் 
போய்ப் பார்த்தால் அங்கே இருந்தது. 
சரி, என்று அதைக் கெஞ்சிக் 
கொஞ்சி மெதுவாக வெளியே 
கொண்டு வரலாம் என்றால் 
பிடிவாதமாக அது "இங்கே இல்லை, 
நான் வர மாட்டேன்" என்கிறது. 
என்னத்தைச் சொல்ல? ஒரே 
வயித்தெரிச்சலாக இருந்தது. மறு 
வெளியீடு செய்ய நேற்று முதல் எல்லா 
முயற்சியும் செய்ததில் பலன் இல்லை. 
பிடிவாதமாக சொன்னதையே 
திருப்பித் திருப்பிச் 
சொல்லிக்கொண்டிருக்கிறது. 
என்னுடைய நினவில் இருந்து 
முடிந்ததை மறுபடி தர முயற்சி 
செய்கிறேன்.
யாராவது என்னைத் தப்பாகப் புரிந்து 
கொண்டால் எனக்கு ரொம்ப 
வருத்தமாக இருக்கும். ஆனால் 
சந்தர்ப்பமும் சூழ்நிலையும் அது 
மாதிரி சில சமயம் அமைந்து 
விடுகிறது. நம்மேல் தப்பு இல்லை 
என்று நிரூபிக்கத் தோன்றும். அது 
வேண்டாம் என்று என் கணவர் 
சொன்னாலும் என்னால் நிம்மதியாக 
இருக்க முடிவதில்லை. தப்போ 
சரியோ என் சூழ்நிலையை விளக்கிப் 
பார்ப்பேன். புரிந்து கொள்பவர்கள் 
புரிந்து கொள்ளட்டும் என்று. புரிந்து 
கொள்ளவில்லை என்றால் வருத்தம் 
தான் மிஞ்சும். கூட்டுக் குடும்பச் 
சூழ்நிலையில் அம்மாதிரிச் 
சந்தர்ப்பங்கள் நிறைய 
ஏற்பட்டதுண்டு. செய்யாத ஒன்றுக்குப் 
பொறுப்பு ஏற்றதும் உண்டு. 
வேலையை விட்டுவிட்டு 10 வருடங்கள் 
ராஜஸ்தான், ஹைதராபாத் என்று 
இருந்து விட்டு மறுபடியும் 
கூட்டுக்குடும்பச் சூழ்நிலையில் 
புகுந்த போது திணறித்தான் 
போனேன். எல்லாவற்றுக்கும் மேலே 
பணப்பிரச்னை. அதைச் சமாளிக்க 
நான் எத்தனையோ அவதாரங்கள் 
எடுக்க நேர்ந்தது. ஒரு Insurance 
Agent ஆக, Postal Deposits 
Agent,புடவை வியாபாரம், அதைத் 
தவிரக் குழந்தைகளுக்கு ஹிந்தி, 
மற்றும் பள்ளிப் பாடங்கள் ட்யூஷன் 
எடுப்பது என்று ஒரே நேரத்தில் பல 
அவதாரங்கள் எடுத்து இருக்கிறேன். 
இதற்கு நடுவில் தான் என் 
குழந்தைகள் படிப்பு. நல்ல 
வேளையாக அவர்கள் எங்கள் ஊர் 
ஊராக மாற்றல் ஆகும் 
உத்தியோகத்தால் கேந்திரிய 
வித்யாலயாவில் படித்தார்கள். பாடம் 
எதுவும் நாம் சொல்லிக் கொடுக்க 
வேண்டாம் என்றாலும் எப்படிப் 
படிக்கிறார்கள் என்று கண்காணிக்க 
வேண்டும். மற்றும் அவர்கள் 
சின்னச்சின்ன ஆசைகளை 
நிறைவேற்ற வேண்டும். இது தான் 
கொஞ்சம் கஷ்டமான ஒன்று. 
சமீபத்தில் ஒரு பின்னூட்டத்தில் 
படித்தேன். "கூட்டுக் குடும்ப 
வாழ்க்கையால் அம்மாவிற்கு வேலை 
அதிகம். அது அப்போது 
புரியவில்லை. யு.எஸ். வந்ததும் தான் 
புரிகிறது." என்று. அது போல ஒரு 
தாயாக அவர்களுக்குச் செய்ய 
வேண்டியது விட்டும் போயிருக்கலாம். 
முடிந்ததைச் செய்தும் இருக்கலாம். 
ஆனால் அவ்வளவு கஷ்டமான 
நேரத்திலும் நான் அவர்களுக்குக் 
கதை சொல்லி அவர்கள் மனதை 
மாற்றி விடுவேன். அதுவும் எழுத்தாளர் 
தேவனின் கதைகள் என்றால் போதும். 
ஒரே சிரிப்பும், கும்மாளமும்தான். 
இத்தனைக்கும் நடுவில் நான் ஹிந்தி 
பி.ஜி.டிப்ளொமோ கோர்ஸ் படித்தேன். 
டீச்சர் ட்ரைனிங் போக ஆசை. 
ஆனால் அண்ணாமலைப் பல்கலைக் 
கழகத்திலும் சரி, மைசூர்ப் 
பல்கலைக் கழகத்திலும் சரி 
குறைந்தது ஒரு 6 மாதங்களாவது 
தங்க வேண்டும். அது முடியாத 
காரணத்தால் அந்த ஆசையை 
விட்டுவிட்டேன். ஒரு கட்டத்திற்குப் 
பின் பறவைகள் சிறகு முளைத்துப் 
பறந்து விட எங்கள் தேவையும் 
எங்கள் குடும்பத்திற்கு மட்டும் என்று 
ஆகவே மறுபடியும் வேலைக்குப் 
போகும் எண்ணமும் கைவிடப்பட்டது. 
பல திருப்பங்கள், பலவிதமான 
ஊர்கள், பலவிதமான மனிதர்கள் 
எல்லாவற்றையும் பார்த்தும் கூட 
எனக்கு என் அடிப்படைக் குணம் 
சற்றும் மாறாமல் அப்படியே 
இருக்கிறது. நம்மை விடக் 
கஷ்டத்தில் எத்தனையோ பேர் 
இருக்கிறார்கள். என்றாலும் மனமும் 
உடலும் சோர்ந்து போய்த் தனிமை 
வாட்டி எடுத்துக் கொண்டிருந்த 
போதுதான் துளசியின் வலைப்பூவைப் 
பற்றிய குறிப்பு "தினமலர்" 
பத்திரிகையில் பார்த்தேன். அந்தப் 
பேரால் கவரப்பட்டு கணினியில் 
தேடினேன். கிடைத்தது ஒரு 
அற்புதமான உலகம்.இங்கே தான் 
எத்தனை மனிதர்கள், எத்தனை 
எண்ணங்கள்? வேடந்தாங்கலில் 
கூடும் பறவைகளைப் போல 
ஒவ்வொருத்தரும் 
தனித்தன்மையானவர்கள். அன்புடன் 
ஓடி வரும் துளசி, நட்புக்கரம் நீட்டி 
ஆறுதல் சொல்லும் உஷா, என்னை 
உடன்பிறந்த சகோதரியாகவே 
அங்கீகரித்த மனு, நான் 
எட்டமுடியாத உயரத்தில் இருக்கும் 
ஜெயஸ்ரீ, நிலாராஜ், அக்கா என்று 
அன்புடன் அழைத்தாலும் என்னை 
அடிக்கடி மறந்து விடும் பொன்ஸ், 
நான் அழையாமலே வரும் லதா, 
வேதா, அம்பி, கைப்புள்ள, 
எப்போதாவது எட்டிப்பார்க்கும் சிபி, 
தேவ், என் பதிவில் முதலில் 
பின்னூட்டம் இட்ட டோண்டு சார், 
என்னுடைய முதல் பதிவில் 
(ஆங்கிலத்தில் எழுதப்பட்டது) வந்து 
பின்னூட்டம் போட்டு என் பதிவின் 
போக்கையே மாற்றிய சூப்பர் சுப்ரா.
(இபோது அந்தப் பதிவையே எடுத்து 
விட்டேன்.) அவர் எழுதியது 
இதுதான்."View it this way. 
Sometime we shoulder the baggage 
of our child or spouse to give ease 
to them. Like that you are 
shouldering the abuses on others 
which if directed towards them 
they can't handle it and so by 
absorbing them you are giving relief 
to them." இதைப் படித்த பின்தான் 
என் பதிவின் போக்கு சற்று மாறியது. 
முதலில் டோண்டு சாரின் பதிவில் 
என் கருத்தை எழுதிய நான் அதற்குப் 
பிறகு சற்று தைரியம் வந்து 
எல்லாருடைய பதிவிலும் முடிந்தவரை 
என்னுடைய கருத்துக்களை நான் 
போட்டேன். இதற்கு நடுவில் 
எனக்குத் தமிழ் எழுதச் சொல்லிக் 
கொடுக்கத் தானாகவே முன்வந்த 
வெ.வ.வா. ஜீவ்ஸ் (தற்சமயம் ஆளையே 
காணோம்),தமிழ் font கொடுத்து 
உதவிய சூப்பர் சுப்ரா, வின் ஜிப் 
இல்லாமல் திறக்கத் தவித்துக் 
கொண்டிருந்தபோது உதவிய மஞ்சூர் 
ராஜா(இவர் உதவியால் தான் 
முத்தமிழ்க் குழுமத்திலும் சேர 
முடிந்தது), இவர்களை என்னால் 
மறக்கமுடியாது. திரு குமரன், திரு 
ராகவன், திரு சிவமுருகன், 
பரஞ்சோதி, திரு ஞானவெட்டியான் 
அவர்கள் இவர்கள் பதிவைப் 
பார்த்தாலே பின்னூட்டம் இடப் 
பயமாக இருக்கும். படித்து விட்டுச் 
சத்தம் போடாமல் வந்து விடுவேன். 
நான் தைரியமாகப் பின்னூட்டம் 
இட்ட பதிவுகள் என்றால் திரு தருமி 
அவர்களின் பதிவுகள், 
பெனாத்தலாரின் பதிவுகள், 
பிதற்றல்கள் சிபியின் பதிவு, 
கைபுள்ளயின் பதிவு. அதிலும் 
கைபுள்ள வந்ததும், தேவ், சிபி, 
பொன்ஸ், பார்த்திபன், சரளாக்கா 
என்று அவர்கள் அடித்த 
கொட்டத்தில் என்னை அறியாமல் 
சேர்ந்து கொள்ள அவர்களும் என் 
மனம் நோகாமல் இருக்க என்னைச் 
சேர்த்துக் கொண்டார்கள். யார் என்ன 
நினைப்பார்களோ என்ற எண்ணம் 
இல்லாமல் என் வயதை மற்றும் 
என்னை மறந்து சிரித்து அவர்களைப் 
போல வம்புக்கு இழுத்து என்று என் 
போக்கே மாறி இருக்கிறது. மழலை 
பேசும் குழந்தைகளிடம் நாம் 
செந்தமிழிலா பேசுகிறோம்? அதே 
மழலையில் தானே? அது போலத் 
தான். ஆகக்கூடிக் கடைசியில் 
பார்த்தால் எல்லாரும் நலம் வாழ நான் 
பாடினால் எனக்கு, நான் நலம் வாழ 
இன்று இத்தனை பேர் பாடுகிறார்கள். 
இது நான் "நன்றி" என்று ஒற்றை 
வார்த்தையில் சொன்னால் மறந்து 
போய் விடும். ஆகவே சொல்ல 
மாட்டேன். அபோது தான் நினைவு 
இருக்கும்.
 
 
கீதா,
ReplyDeleteபதிவின் தலைப்பு மிகப்பெரியது, அதனால் வரவில்லை. இதுதான் காரணம் என்று நினைக்கிறேன். தேதி/ ஏதாவது ஒரு எண்ணை தலைப்பில் சேர்த்துக் கொண்டால், இன்னும் நல்லது. மிச்ச கதை பிறகு, அவசரமாய் அடிக்கிறேன் :-)
என்னக்க... நன்றி அது இதுன்னு... ஏதோ வெற்றி அடைந்த மெகா சீரியல் முடிந்த பிறகு புது டைரக்டர் உணர்ச்சி வசபட்டு பேசுறது போல (மெட்டி ஒலி???)
ReplyDeleteஇன்னும் நிறைய எபிசோட் வரட்டும்.
//"என்னுடைய database சேமிக்காது.
நீ என்ன வேண்டுமோ செய்து கொள்"
என்று நிர்தாட்சண்யமாகச் சொல்லி
விட்டது.//
இது கண்ணியில் சகஜம்.
//கூட்டுக் குடும்பச்
சூழ்நிலையில் அம்மாதிரிச்
சந்தர்ப்பங்கள் நிறைய
ஏற்பட்டதுண்டு.//
இது கூட்டுக் குடும்பச்
சூழ்நிலையில் சகஜம்.
ரொம்ப நன்றி உஷா, என் தப்பைப் புரிந்து கொள்ள வைத்ததுக்கு. இனிமேல் சிறிய தலைப்புக் கொடுக்கிறேன். அது சரி, எப்போ வந்தாலும் அவசரமா வந்துட்டுப் போறீங்க. எங்க வீட்டிலயும் கொஞ்சம் தங்குங்க.
ReplyDeleteமனசு,
ReplyDeleteஇது நன்றி அறிவிப்பு இல்லை. ஒரு சுய விமரிசனம். ஆனால் எங்கோ போய் விட்டது. நிறைய எபிசோட் வரும். கவலையே படாதீங்க. மெட்டி ஒலி பரவாயில்லைனு நீங்களே அலறுவீங்க.
என்னோட கணினி நான் எப்போ உட்கார்ந்தாலும் இப்படி சொல்லுதே. அதான் எழுதினேன். ஒருவேளை திக்கெட்டும் பரவின என் புகழில் பொறாமை கொண்ட பமக+வ.வா.ச துரோகிகளின் சதியோ என்றும் எண்ணுகிறேன்.
அட! துளசி தளத்தாலெ இப்படி ஒரு பயனா?
ReplyDeleteபேஷ் பேஷ்.
கீதா,
இனிய பிறந்தநாள் வாழ்த்து(க்)கள்.
என் இந்த திடீர் நன்றி அறிவிப்பு படலம்.
ReplyDeleteதுளசியக்கா மாதிரி நீங்களும் ஏதும் கனா கண்டிங்களா
கீதாக்கா,
ReplyDeleteநானும் தமிழ்மணத்துல சேந்தப்ப இப்படித்தான் பலர் உதவினாங்க.அவங்களுக்கு நன்றி சொல்ல சிறந்த வழி நாமும் பலருக்கு உதவுவதுதான்
//ஆகக்கூடிக் கடைசியில்
ReplyDeleteபார்த்தால் எல்லாரும் நலம் வாழ நான் பாடினால் எனக்கு, நான் நலம் வாழ இன்று இத்தனை பேர் பாடுகிறார்கள். இது நான் "நன்றி" என்று ஒற்றை வார்த்தையில் சொன்னால் மறந்து போய் விடும். ஆகவே சொல்ல மாட்டேன். அபோது தான் நினைவு இருக்கும்.//
என்னை போன்ற லூசுப் பையனோட மழலை மொழியில் நீங்கள் பேசி சந்தோஷப் படுத்தினாலும், உங்களுக்குள் இருக்கும் ஒரு எமோஷனல் பர்சனாலிடியை, உங்கள் எழுத்தின் மூலமாக அறிந்து கொண்டேன்(தமிழில் உணர்ச்சிக் குவியலுன்னு சொல்லலாமா? :)-). தொடர்ந்து எழுதுங்கள். என்னுடைய உளங்கனிந்த பிறந்த நாள் வாழ்த்துகள்.
நாகை சிவா, கனவெல்லாம் இல்லை. நிஜமான உணர்வோடு தான் எழுதி உள்ளேன்.
ReplyDeleteதுளசி, ரொம்ப நன்றி, தவறாமல் வந்து வாழ்த்துச் சொல்வதற்கு.
கைப்புள்ள, உங்களை லூசுப் பயல் என்று நீங்களே சொல்லிக் கொள்ளலாமா?
ReplyDeleteஎங்க வ.வா.சங்கத் தலைமையே உங்களிடம் தானே, பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கு நன்றி.
செல்வன், ரொம்ப நன்றி முதல் முறை வந்து பின்னூட்டம் இட்டதற்கும், யோசனை சொன்னதற்கும். நீங்கள் எழுதுவதில் பாதியாவது நான் எழுத முடியுமா தெரியவில்லை.
ReplyDelete//அன்புடன் அழைத்தாலும் என்னை அடிக்கடி மறந்து விடும் பொன்ஸ், //
ReplyDeleteஎன்னக்கா இப்படிச் சொல்றீங்க?!! உடன் பிறவா சகோதரின்னா அப்பப்போ மறந்தாத் தானே திரும்பி வந்து ரெண்டு டயலாக் அடிக்க முடியும்?!!! :)))
எப்படியோ.. பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. நீங்க இதைப் பார்க்கும் போது என்ன தேதி இருந்தாலும், நான் வாழ்த்து சொல்லும்போது 21தான் தேதி.. அதுனால லேட்னு சொல்லப் போவது இல்லை:)
உங்க நன்றியுரை படிக்கும்போது நானும் வலைப்பதிவுக்கு வந்த புதிதில் உதவியவர்களின் நினைவு வருகிறது.. என்னவோ இந்த வாரம், ரமணி, நீங்க, எல்லார் புண்ணியத்திலும் ஒரு மலரும் நினைவுகள் வாரமாகிவிட்டது.
கீதாக்கா,
ReplyDeleteநீங்கள் அருமையாக எழுதி பெயர் வாங்கி நம் சங்கத்துக்கும் முத்தமிழுக்கும் பெருமை சேர்க்கப்போவது உறுதி
இன்று பிறந்தநாளா உங்களுக்கு?மனம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
ReplyDelete"புத்தர்" பார்க்கப் போயிருக்கும் பொன்ஸே, பிறந்த நாள்வாழ்த்துக்களுக்கு நன்றி.
ReplyDeleteஅது சரி, என்ன திடீர்னு சங்கப் பொறுப்புல இருந்து ஜகா வாங்கியிருக்கீங்க. நிஜமான ஆஃபீஸ் வேலை வந்துடுச்சா?
ரொம்ப நன்றி செல்வன், ஊக்கத்துக்கும், பிறந்த நாள் வாழ்த்துக்களுக்கும்.
ReplyDelete//நான் அழையாமலே வரும் லதா,//
ReplyDeleteநன்றிகள் அக்கா.
:-)))
நன்றி, சொல்லி விட்டு ஸ்மைலி எதுக்கு, புரியலியே!!!!!!!!!!!!!!!!!!
ReplyDelete//திரு குமரன், திரு
ReplyDeleteராகவன், திரு சிவமுருகன்,
பரஞ்சோதி, திரு ஞானவெட்டியான்
அவர்கள் இவர்கள் பதிவைப்
பார்த்தாலே பின்னூட்டம் இடப்
பயமாக இருக்கும். படித்து விட்டுச்
சத்தம் போடாமல் வந்து விடுவேன்.
//
ஏன் சார்? ஏன் சார்? ஏன் சார்?
எங்க பதிவுகளை பார்த்து அப்படி என்ன பயம்?
என்ன பன்றது என்னுடைய பதிவையும் சேர்த்துவிட்டீர்களே.
சிவ முருகன்,
ReplyDeleteமுதலில் ஏன் அம்மா, ஏன் அம்மா, ஏன் அம்மா என்று இருக்க வேண்டும். சார் இல்லை. எழுதுவது அம்மாதான்.
இப்போது உங்கள் கேள்விக்கு விடை. நீங்கள் எல்லாம் எழுதுவத்ற்குப் பின்னூட்டம் இடும் அளவு எனக்குத் தகுதி இல்லை. படித்துத் தெரியாத விஷயங்களைத் தெரிந்து கொள்வேன். முதல் முதல் என் வீட்டிற்கு வந்து பின்னுட்டம் இட்டதற்கு நன்றி.
எனில் இந்த சுட்டிக்கு போய் திருத்தி விடவும்.
ReplyDeletehttp://www.blogger.com/post-edit.g?blogID=18675072&postID=114863958617131016
சில நாட்களாகவே பல பதிவுகளை பார்த்து வந்தாலும் பின்னூட்டம் இடுவதை குறைத்து வந்தேன். தற்போது நிலைமை தலைகீழ், மௌன சாமியாராக இருப்பதை விட கருத்துக்களை பகிர்ந்து கொள்ள ஒரு வாய்ப்பாக இதை கருதுகிறேன்.
சிவமுருகன்.
சிவமுருகன்,
ReplyDeleteதிருத்தும்படியான தவறு ஒன்றும் நேரவில்லை. உங்கள் வரவையும் பின்னூட்டங்களையும் வரவேற்கிறேன்.
//திருத்தும்படியான தவறு ஒன்றும் நேரவில்லை. உங்கள் வரவையும் பின்னூட்டங்களையும் வரவேற்கிறேன். //
ReplyDeleteதங்களின் பெருந்தன்மை.