எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Sunday, September 24, 2006

125. தலைவி பெருமிதம். பயணம் வெற்றி

வ.வா.சங்கத்தின் நிரந்தரத் தலைவலி(வி)யும், அம்பியின் நிரந்தர ஆப்பு வைப்பவருமான திருமதி கீதா சாம்பசிவம் அவர்கள் தன்னுடைய வடமாநிலச் சுற்றுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு, அத்துடன் நேபாள், சைனா போன்ற வெளி நாடுகளுக்கும் தூது சென்று வெற்றிக் கொடி நாட்டி விட்டுத் திரும்பினார்.
தலைவி கீதா அவர்கள் வடமாநிலச் சுற்றுப் பயணம் சென்றது அனைவரும் அறிந்ததே. முன்னதாக ஆப்பு அம்பி, தலை கைப்புள்ள(வாழ்த்துக் கவிதை), வேதா(ள்) வேதா, பாசமலர் ச்யாம், புதுவரவு பொற்கொடி, புளியோதரை புகழ் நாகை சிவா, விவசாயி இளா, திடீரென்று வந்து குதித்த மனசு ஆகியோர் தலைவியின் பிரிவுபசார விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்ததும் அனைவரும் அறிந்ததே! (தி.ரா.ச. வந்தாரோ, தெரியலை, போய்ப் பார்க்கணும்) வந்திருப்பார், இதிலே நாகை சிவா தலைவியை அழைத்த தலைவர்கள் வயதைப் பற்றி வேண்டாத குறிப்புக் கொடுத்துத் தலைவியைப் புண்படுத்த நினைத்ததும், தலைவியின் பெருந்தன்மையால் அதை யாரும் கண்டு கொள்ளவில்லை என்பதும் அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் வடமாநிலம் சென்ற தலைவி அங்கே முக்கியத் தலைவர்களுடன் பேச்சு வார்த்தை (!!!!!!!) முடிந்ததும், நேபாளத்தின் புதிய பிரதமரின் அழைப்பின் பேரில் அங்கே சென்றார். அங்கிருந்து அவர் சீனத்தின் திபெத் பகுதியில் சுற்றுப் பயணம் செய்து அதன் நிறை, குறைகளைக் கண்டறிந்தார். தலைவியின் கொடி அங்கே வானளாவப் பறக்கிறது. பின் டெல்லி திரும்பிய தலைவி அங்கிருந்து ரெயில் மூலம் சென்னை வந்தடைந்தார். தலைவிக்கு வெற்றி விழா மற்றும் பாராட்டு விழா கூடிய சீக்கிரம் நடைபெறுகிறது. அதிலே தலைவிக்கு, "இமயம் கண்டாள்", என்ற பட்டப் பெயரும் சூட்டுவதாக முடிவு செய்து மற்றுமொரு பெயர் சூட்டுவதற்கும் ஆலோசனை நடந்து வருவதாகவும் தெரிகிறது.
சங்கத்துச் சிங்கங்களே, வீறு கொண்டு எழுந்து வாருங்கள், வெற்றி விழாவைச் சிறப்பிக்க, யார் எத்தனை வண்டி கொண்டு வரவேண்டும், ஆட்கள் எத்தனை பேர் சேர்க்க வேண்டும் என்ற தகவல் அவரவர் குழுத்தலைவருக்கு ரகசியமாக(!!!!) அனுப்பப் படும். மின்சாரம் எங்கே திருடினால் வசதியோ அங்கே விழா மேடை போடப்படும். அனைவரும் வருக. அனுமதி இலவசம்.

21 comments:

 1. கீதா,

  அறிக்கை எழுதித்தந்தது யார்? பயணம் "மாபெரும் வெற்றி" ன்னு இல்ல இருக்கணும்.

  வடமாநிலம், நேபாளம், திபெத்ன்னு மூணு முக்கிய இடம் போய் வந்திருக்கீங்க! சங்கத்து சிங்கங்களுக்கு "முப்பெரும்"விழா எடுக்கும்படி அல்லவா ரகசிய சுற்றறிக்கை விடணும்!

  தமிழ்நாட்டுல இருந்துட்டு இம்புட்டாவது அரசியல் தெரியவேணாமா? என்ன போங்க!

  அடுத்த சில பல பதிப்புல நீங்க போனது வந்தது பேச்சுவார்த்தை விபரம் போடுங்க!

  அன்புடன்,

  ஹரிஹரன்

  ReplyDelete
 2. வாவ் கீதா! பத்திரமாய் வந்து சேர்ந்துவிட்டீர்களா? என்னுட்டைய நெடு நாள் கனவு, மானசரோவரும், கைலாச யாத்திரையும். விவரமாய் எழுதுங்கள்.

  ReplyDelete
 3. கீதா மேடம்.. இன்னும் அமெரிக்காவுல தான் இருக்கேன்.. என்ன இப்படி கேட்டுபுட்டீக.. தலைவியை எல்லாம் மறக்க முடியுமா. ரெண்டு நாள் முன்னாடி கூட உங்க பிளாகுக்கு வந்து எட்டி பாத்துட்டுத்தான் போனேன்..

  ReplyDelete
 4. இமயம் கண்டாள்..சூப்பர் பட்டம்.. கலக்குங்க தலைவியே..

  ReplyDelete
 5. ரெண்டு பதிவு போடற அளவு எனர்ஜி வந்தாச்சு :) விழால எங்களுக்கு எல்லாம் ஒரு வடை கூட குடுக்கலியே :(

  ReplyDelete
 6. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 7. தலைவி அவர்கள் தொடர்வண்டியில் சென்றபோது அவர்களுக்கு பயணச்சீட்டின் விலையில் 30 % டிஸ்கவுண்ட் கிடைத்ததாமே ? :-)))

  ReplyDelete
 8. எப்படி வந்தீங்க வெயிட்டிங் லிஸ்ட்ன்னாலும் பரவாயில்லை போய் தொலைங்கன்னு தலைநகரத்திலிருந்து துரத்தி விட்டுட்டாங்களா?(உங்க ரயில் கிளம்பினப்புறம் அங்கே எல்லாரும் 1000வாலா வெடிச்சு கொண்டாடினதா இன்னிக்கு தலைப்பு செய்தில போட்டுருக்காங்க) இல்லை வித் அவுட்ல்ல ரயில்ல தொங்கிண்டே வந்துட்டீங்களா?:)

  ReplyDelete
 9. ஏற்கெனவே ஒரு முப்பெரும் விழா எடுத்தாச்சு. அது உங்களுக்குத் தெரியலை. திரும்பவும் முப்பெரும் விழா எப்படி எடுக்கிறது? அதான் வெற்றி விழா எடுத்துப் பட்டப்பெயரும் சூட்ட முடிவு பண்ணி இருக்கேன். கட்டாயம் வாங்க! :D

  ReplyDelete
 10. ரொம்ப நன்றி உஷா, கட்டாயமாய் எழுதுவேன். வாருங்கள், வந்து உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்க!

  ReplyDelete
 11. கார்த்திக், ஏதோ அப்போ அப்போ என் நினைவு வருவதற்கு ரொம்ப சந்தோஷம். இந்த அசின் விஷயத்தில் அம்பிக்கு எதிரா உங்களுக்கு சப்போர்ட் பண்ணி இருக்கேன், நினைவு இருக்கட்டும்.

  ReplyDelete
 12. என்னது? விழாவிலே வடையா? பொற்கொடி, புதுசா இருக்கிறதாலே உங்களுக்கு ஒண்ணுமே தெரியலியே? வடை எல்லாம் நீங்க தான் கொண்டு வரணும். அதுவும் எனக்கு மட்டும்.

  ReplyDelete
 13. grrrrrrrrrrrrrrrrrrrrr லதா, பயணச்சீட்டுத் தள்ளுபடிக்கு எல்லாம் எனக்கு இன்னும் வயசு ஆகலை! grrrrrrrrrrrrrrrr

  ReplyDelete
 14. வெயிட்டிங் லிஸ்ட் எல்லாம் ஒண்ணும் இல்லை. RAC தான். பட்டாசு இங்கே தான் வெடிச்சாங்க, நான் வெற்றிகரமாய்த் திரும்பியதற்கு. வித்தவுட்லே நீங்க வந்தால் நானும் வரணுமா என்ன? :D

  ReplyDelete
 15. nangallam nethu bonda saptome.. vazhila ungala kuda oru scooterla pathom, pillionla kudu kudu nu nadungindu ukandu irundinga.. :)

  ReplyDelete
 16. பொற்கொடி, அது நீங்கன்னு எனக்கு படத்தோட செய்தி வந்திருக்கே? :D

  ReplyDelete
 17. Welcome Grand naani maaji!
  thudichuttu irunthoom, eppdada varuvenga, ungala varaalam!nu naanum porkodiyum! :)

  //அவர்கள் தொடர்வண்டியில் சென்றபோது அவர்களுக்கு பயணச்சீட்டின் விலையில் 30 % டிஸ்கவுண்ட் கிடைத்ததாமே //
  he hee :D athuvum Goods vandi!nu kelvi patten. :)))))

  ReplyDelete
 18. ஆப்பு அம்பி,
  அவங்க அவங்க அனுபவத்தை அவங்க அவங்க எழுதறாங்க! எனக்கு என்ன வந்தது? நான் ஜாம் ஜாம்னு தமிழ்நாடு விரைவு வண்டியிலே வந்தேனாக்கும். உங்களை மாதிரி குட்ஸ் வண்டிலே இல்லை. தமிழே எழுத வரலை, தங்கிலீஷ் எழுதிட்டு, இது வேறேயா? யார் Grand Naani Maa? நான் இல்லை நிச்சயமா! பொற்கொடி கூட புதுசா கூட்டு வந்ததாலே நிலை தடுமாறிப் போகாதீங்க! அவங்க என் பக்கம் வரதுக்கு நாள் ஆகாது.

  ReplyDelete
 19. நேரம் கெட்டு கிடந்தா அது சீனாகாரனா இருந்தாலும் சும்மா விடாது போல இருக்கு....இத எதுக்கு இப்போ சொல்றேனு பார்கறீங்களா...சும்மா தான்.. அதுக்கு விளக்கம் குடுத்து பொற்கொடிய லிஸ்ட்ல முந்த விரும்புல :-)

  ReplyDelete
 20. buryuani - orru quater - kaisellvukku 100 rubai vunda.. sollungooo..

  nallaveeey khosham poduven. advance ellam advancea venum. No LC , payment after invoice, delivery not accepted. 100% advance along with purchase order.

  vasathikkuu yerppaa kodungoo - vandilla varren.

  ReplyDelete
 21. buryuani - orru quater - kaisellvukku 100 rubai vunda.. sollungooo..

  nallaveeey khosham poduven. advance ellam advancea venum. No LC , payment after invoice, delivery not accepted. 100% advance along with purchase order.

  vasathikkuu yerppaa kodungoo - vandilla varren.

  ReplyDelete