வேதா(ள்) இழுத்து விட்டாலும் தப்பிக்கலாம்னுதான் இருந்தேன். இருந்தாலும் இது ஒரு சுய அலசல் என்பதால் பார்க்கலாம்னு எழுதறேன்.
1.வெளிப்படையாகப் பேசுதல்:
இது நல்ல குணமா? கெட்ட குணமா தெரியவில்லை. ஆனால் சின்ன வயசில் இருந்தே இருக்கிறது. இதனால் பல சமயம் கெட்ட பேர் கிடைத்திருக்கிறது, நல்ல பேர் நிறையவே கிடைத்திருக்கிறது. முக்கியமாகப் பின்னால் பேசமாட்டாள் என்று என் எதிரிகள் கூடச் சொல்லுவார்கள். "உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு" நிறைய இருக்கிறது என்றாலும் நான் இன்னும் திருந்தவில்லை. என் கணவர் சொல்வது, "நீ இன்னும் குழந்தையாவே இருக்கிறாய். வயசுக்குத் தகுந்த மனமுதிர்ச்சி இல்லை." என்பதுதான். (அம்பி, வேதா(ள்), பொற்கொடி, இப்போ புரியுதா? நான் இன்னும் சின்னப் பொண்ணுதான்னு. நற நற நற இனிமேல் என்னைப் பாட்டின்னு சொன்னா தெரியும், ஆப்பு இருக்கு.)
2.ஞாபக சக்தி:
உண்மையிலே பார்த்தால் நான் ஒரு "ஏக சந்தாக்ரஹி"னு சொல்லணும். பள்ளி நாட்களிலே கூட வீட்டில் வந்து படிப்பது குமுதம், கல்கி, ஆனந்த விகடன், கல்கண்டு, கலைமகள், மஞ்சரி போன்ற புத்தகங்கள் தான். என்னோட அப்பாவோட பயங்கர கட்டுப்பாட்டில் நான் இப்படி வளர்ந்து வருவது பொறுக்காமல் அவர் பள்ளி ஆசிரியர்களிடம் கூடச் சொல்லிப் பார்த்தார். ஆனால் என்ன செய்வது? முதல் ரேங்க் வாங்காவிட்டாலும் 2,3-க்குக் கீழே இறங்கியது இல்லை. அதனால் அவரால் எதுவும் செய்ய முடியாது போய் விட்டது. இப்போ கூட பழைய நினைவுகள் வருவதுண்டு. சிலசமயம் பூர்வ ஜென்ம நினைவுகள் கூட. (ஹி,ஹி,ஹி,). எந்த ஒரு நம்பரோ, அட்ரஸோ அல்லது வேறு ஏதாவது பேப்பரில் படித்த விஷயமோ டக்கென நினைவு சரியான சமயத்துக்கு வரும். அதே என் கணவருக்கு என் பேர் இத்தனை வருஷமா நினைவில் இருப்பதே பெரிய விஷயம். எல்லாப் பேரையும் மாத்துவார் அவர் இஷ்டத்துக்கு. இது வரை என்னோட பேரை நினைவு வச்சிருக்கார். அதே மாதிரி காலை இத்தனை மணிக்கு எழுந்துக்க வேண்டும்னு சொல்லிட்டாப் போதும். அலாரம் எல்லாம் வேண்டாம். எங்க வீட்டிலே நாந்தான் அலாரம். அதுவும் ராத்திரி எப்போப் படுத்தாலும் சாதாரணமாகவே காலை 4-30-க்கு முழிப்பு வந்துடும். முக்கியமான தினம்னால் கேட்கவே வேண்டாம். எங்க வீட்டில் காவலே வேண்டாம்னு என் கணவரோட நினைப்பு. நான் தான் இருக்கேனே! (அம்பி, ச்யாம் எரியுமே). இரண்டு பேருக்கும் வயசு ஆயிடுச்சு இல்ல.
3.கணக்கு:
எனக்குப் பிடிக்காத விஷயம். நான் ஒண்ணும் MGR மாதிரிக் கணக்கெல்லாம் கேட்கலை. சாதாரணக் கணக்குப் பாடம்தான் சொல்றேன். அதுவும் ஹைஸ்கூல் வந்ததும் அந்தக் கணக்கு டீச்சருக்கு என்னோட என் முன் ஜென்மத்துப் பகைனு தெரியலை. நான் மத்தப் பாடங்களில் புலி என்றால் நம்பவே மாட்டாங்க. தோழிகள் சத்தியம் பண்ணிச் சொல்வாங்க. அதுவரை ஏதோ 60 லிருந்து 70 வரை வாங்கிய கணக்கு மதிப்பெண்கள் 40, 50-க்குப் போனது. இதுக்காகவே நான் சிறப்புக் கணக்குப் பாடம் எடுத்தால் இந்த அல்ஜீப்ரா, (ஏதோ ஸ்வீட்டுனு நினைப்பேன்), ஜியோமெட்ரி எல்லாம் வரும்னு அக்கவுண்ட்ஸ் எடுத்துப் படிச்சேன். ஒரு சி.ஏ. ஆகி நம்ம தி.ரா.ச.வுக்குப் போட்டியா வந்திருக்கணும். இந்தக் கம்பெனி அக்கவுண்ட்ஸ் இரண்டு தரம் காலை வாரிவிட்டது. பாதியிலே கல்யாணமும் ஆகவே தி.ரா.ச. பிழைத்தார். நானும் நம்ம தான் பாரதி வம்சமாச்சேனு மொழிப்பாடம்(கல்யாணத்துக்கு அப்புறம்) படிச்சேன்.
4.புத்தகம் படித்தல்:
யார் யாரோ என்ன என்னமோ செய்து பார்த்துட்டாங்க. என்னால் இன்னும் இதில் இருந்து விடுபட முடியலை. முதலில் ராஜஸ்தான் மாத்திப் போனபோது அங்கே தமிழ் புத்தகம் கிடைக்காது என்று தான் கவலைப்பட்டேனே தவிர, ஊர் விட்டுப் போகிறோமேனு இல்லை. அப்புறம் என் கணவர் என்னோட ஆர்வத்தைத் தணிக்காமல் சில புத்தகங்களுக்கு வருஷச் சந்தாவும், சிவற்றுக்கு 6 மாதச் சந்தாவும் கட்டி வரவழைத்துக் கொடுத்தார். இன்னும் சிலபேருடன் புத்தக மாற்றும் செய்து கொண்டேன். அப்போது இருந்த நிலையில் முன்பணம் போட்டுச் சந்தாக் கட்டுவதே பெரிய விஷயம். இப்போவும் அநேகமாக முக்கியமான புத்தகங்கள் படிக்கிறேன். சில சமயம் குறிப்பு எடுக்கிறதுக்காகத் தேடிப் பிடிச்சு கூகிளில் பார்க்கிறேன். புத்தகம் படிக்கலைன்னா உலகமே அஸ்தமிச்சுப் போயிட்ட மாதிரி இருக்கு.
5. போராட்ட குணம்:
நிறையவே இருக்கு. யாராவது உன்னால் முடியாது என்று சொல்லிட்டால் அதை அவமானமாக உணர்வேன். உடனே அதை முடிச்சுக் காட்டுவேன். எடுத்துக்காட்டா எவ்வளவோ இருக்கு. கொஞ்சம் பெருமையாத் தோணிச்சுன்னா என்ன செய்யறது? இது குறைகளை மட்டும் பட்டியல் இடும் பதிவு. இதுவும் தப்பா அல்லது சரியா தெரியலை. தவிர, "ரெள்த்ரம் பழகு"னு பாரதி சொன்னது எனக்காவேங்கிற மாதிரி ஏதாவது தப்பா நடந்தாலோ, யாராவது தப்பு செய்தாலோ கோபம் வரும். அதுவும் எங்கள் தெருவில் சில பையன்கள் வீட்டு வாசலில் இருக்கும் தென்னை மரங்களில் தேங்காய், மாமரங்களில் மாங்காய், பூச்செடிகளில் இருந்து பூக்கள் பறிக்கிறதுனு வீட்டுக்காரர்களைக் கேட்காமல் அவங்க சொந்த மரம் போல் எடுப்பாங்க. அப்போ தெருவிலேயே நான் ஒருத்தி தான் கத்திச் சண்டை போடுவேன். இப்போ இப்போ எங்க வீட்டு புத்தரும் (என் கணவர்) கொஞ்சம் சொல்ல ஆரம்பிச்சிருக்கார். எங்க வீட்டு வாசலில் ஊரில் இருக்கும் வண்டி எல்லாம் கொண்டு வந்து நிறுத்துவாங்க. வேப்ப மரம் வச்சிருக்கோம். அதன் நிழலுக்காக. நாங்க வெளியிலேயும் வர முடியாது. வெளியே இருந்தா உள்ளே போக முடியாது. அதுக்கும் எங்க புத்தர் பேசாமல் தான் இருப்பார். நான் தான் வரிந்து கட்டிக் கொண்டு போவேன். அவங்க அங்கே இருந்து போகும் வரை விடமாட்டேன். இப்போ எல்லாம் புத்தரே சொல்ல ஆரம்பிச்சுட்டார். கொஞ்சம் பரவாயில்லை.
அப்புறம் பிடிச்சது, பிடிக்காததுனு இப்போவெல்லாம் வச்சுக்கலை. ஒருத்தர் கிட்டே அவ்வளவு சுலபமாப் பழக ஆரம்பிக்க மாட்டேன். பள்ளியிலே கூட எல்லாரும் ரொம்ப ரிசர்வ்னு முதலில் நினைப்பாங்க. பேச ஆரம்பிச்சா நான் வாங்கற வாங்கலில் ஒரே அமர்க்களமாப் போயிடும். பழக ஆரம்பிச்சுட்டா விடவே மாட்டேன். ஒரு முடிவு எடுக்கிற வரை யோசிப்பேன்.முடிவு எடுத்துட்டா என்ன ஆனாலும் பின் வாங்க மாட்டேன். (ஊசி தான் வாங்குவேன்.) இப்போதைக்கு இது போதும்னு நினைக்கிறேன். குறைகள் நிறைந்தவள்தான் நான். ஆகவே குறைகளையே நிறைகளாக ஏற்றுக் கொள்ளுங்கள்.
இன்னிக்கு என்னமோ ப்ளாக்கர் பப்ளிஷ் ஸ்டேடஸ் சரியாவே வேலை செய்யலை. ஏதாவது தப்பு இருந்தால் நாளை சரி செய்யறேன். இப்போ அவசரமாப் போகணும்.
ReplyDelete/நான் ஒருத்தி தான் கத்திச் சண்டை போடுவேன்//
ReplyDeleteஅட! இதுவும் தெரியுமா? அப்ப குதிரை ஏற்றம், ஈட்டி எறிதல் எல்லாம்?
நல்ல அலசல்தான். உண்மை என்று நம்புவோமாக:-)
தங்கள் கட்டுரை சிறப்பாக இருக்கக் கண்டேன். எண்ணங்களின் ஊர்வலம் எல்லா நலமும் பெற்றதாக இருக்கக்கண்டேன்.
ReplyDeleteவாழ்த்துகள்
இரவா
தங்கள் கட்டுரை சிறப்பாக இருக்கக் கண்டேன். எண்ணங்களின் ஊர்வலம் எல்லா நலமும் பெற்றதாக இருக்கக்கண்டேன்.
ReplyDeleteவாழ்த்துகள்
இரவா
துளசி, இது உண்மையான சுய அலசல் தான். தாராளமாக நம்பலாம். சந்தேகமே வேண்டாம். அப்புறம் குதிரை ஏற்றம் பற்றியும் எழுதுவேன் பாருங்க. உண்மையான குதிரை ஏற்றம் தான். (கத்திச் சண்டை என்று நான் எழுதியதை நான் புரிந்து கொள்வார்களா என நினைத்தேன். சரியாகப் புரிதலுக்கு நன்றி.)
ReplyDeleteஇரவா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. தங்கள் வரவும், விமரிசனமும் , வாழ்த்துக்களும் எனக்கு ஊக்கம் அளிக்கிறது.
ReplyDelete///நான் ஒருத்தி தான் கத்திச் சண்டை போடுவேன்//
ReplyDeleteenna thalaiviye.. MGR kaalaththu heroine maathiriyaa :-))
நல்லா இருக்கு பதிவு! நானும் அப்படிதான்னு நீங்க சொன்ன கருத்துக்களோட உச்சுக் கொட்ட மனசு வரலை! அதனால உத்தரவு வாங்கிக்கறேனுன்கோ!
ReplyDelete@ வேதா:
//உங்களை விட வயசுல சின்னவளை மதிச்சு இந்த சங்கிலி பதிவை போட்டதுக்கு நன்றி:)
நெஞ்சை தொட்டுட்டீங்க போங்க, எனக்கு ஒரே அழுகாச்சியா வருது! :)
//மனமுதிர்ச்சி இல்லை//
ReplyDeleteஇது தான் எல்லோருக்கும் தெரியுமே...
//காலை 4-30-க்கு முழிப்பு வந்துடும்//
நான் ஏற்கனவே உங்க பதிவுல சொன்ன மாதிரி வயசானா காலைல ரொம்ப நேரம் தூங்க முடியாது..
//போராட்ட குணம்:
நிறையவே இருக்கு//
இதுவும் தெரியும்...பாவம் உங்க ஆத்துக்காரர்..ஒரு டிவி நிம்மதியா பார்க்க விடுறீங்களா அவரை...
//அதே மாதிரி காலை இத்தனை மணிக்கு எழுந்துக்க வேண்டும்னு சொல்லிட்டாப் போதும். அலாரம் எல்லாம் வேண்டாம். எங்க வீட்டிலே நாந்தான் அலாரம். அதுவும் ராத்திரி எப்போப் படுத்தாலும் சாதாரணமாகவே காலை 4-30-க்கு முழிப்பு வந்துடும்.//
ReplyDeletemoththathil neenga oru Raakkozhinnu sollunga..
hahaha.. "vayasuku tagunda mana mudirchi illai"- makkale ellarum ida koorndu gavaninga :D enna puriyudu ungaluku?
ReplyDeleteகார்த்திக்,புதரகத்திலே இருக்கோம்னு தைரியமா? இந்தியா வாங்க, ஒரு கை இல்லை இரண்டு கையாலேயும் ஆப்பு வச்சி எழுதறேன். நற நற நற நற
ReplyDeleteஹி,ஹி,ஹி,ஹி, தலைவினு அங்கீகரிச்சதுக்கு டாங்ஸு
நற நற நற நற வேதா(ள்), திரும்பத் திரும்ப தலைவியின் மனசைப் புரிஞ்சுக்காம நடந்துக்கறவங்க கட்சியில் இருந்தும், சங்க நடவடிக்கைகளில் இருந்தும் நீக்கப் படுவார்கள். ஏற்கெனவே தலைவி இல்லாத சமயம் வலைப் பதிவாளர் கூட்டம் ஏற்பாடு செய்ததில் தலைவிக்குக் கோபம் இன்னும் தீரவில்லை.
ReplyDeleteஇந்தியத் தேவதையே,
ReplyDeleteபோகிற போக்கில் வேதா(ள்)வுக்கு ஜால்ரா அடிக்கிறீங்களா? இருக்கட்டும், யானைக்கு ஒரு காலம்னா பூனைக்கும் ஒரு காலம் வரும்.
grrrrrrrrrrrrrrrr,ச்யாம், நீங்க உங்க மனைவி கிட்டே வாங்கற உதைஎல்லாம் வெளியே சொல்லக் கூடாது. சரியா? முகில் பார்த்துட்டே இருக்கான். அப்புறம் அவனும் உங்களை மாதிரி ஆயிடப் போறான். :D
ReplyDeleteகார்த்திக்,
ReplyDeleteநிஜமாவே எப்பவுமே எனக்குத் தூக்கம் கம்மி தான். அதுக்காக ராத்திரி ரொம்ப நேரம் முழிச்சுப் படிக்கிறது, டி.வி. பார்க்கிறதுனு கிடையாது. 9-00 அல்லது 9-30-க்குப் படுத்துடுவேன். 2 மணி வரை தூங்கினால் போதும். அப்புறம் தூக்கம் வராது.முழிச்சுட்டே படுத்திருப்பேன். அப்போதான் உங்க எல்லாருக்கும் ஆப்பு வைக்கிறது பத்தி யோசிச்சி வச்சுப்பேன்.ஹி, ஹி,ஹி,ஹி,ஹி,.
பொற்கொடி , இன்னும் சின்னப் பொண்ணா இருக்கேனுதான் சொல்றார். அதிலே கூர்ந்து கவனிக்க என்ன இருக்கு. புகையாதீங்க. உங்களுக்கு 60 வயசுன்னு அம்பி நேத்திக்கு மெயில் அனுப்பிச்சுட்டார். :D நீங்க என்னை விடப் பெரியவங்க
ReplyDeleteபொற்கொடி, ரொம்பச் சின்னப் பொண்ணுனு தானே சொல்றார். இதிலே கூர்ந்து கவனிக்க என்ன இருக்கு? உங்களுக்கு 60 வயசுக்கு மேலேனு அம்பி நேத்திக்கு மெயில் அனுப்பிச்சார். அதனாலே ரொம்பப் புகையாதீங்க. :D
Geetha madam, Rojavukku mullum, manushanukku kobamum thaan alagai adhigapaduthum.. Endha uvamaanam uvameyamellaam edhukkunna enakkum semiya kovam varum. But naan Kathi sandai ellaam poda maaten. Kekuravan sethu pora maadhiri oru vaarthai ketu vittuduven..
ReplyDeleteBook padikkiradhula once naan thalaivi maadhiri. oru kaalathula public exam, pulla padikkumnu 4 manikku eluppi vittaa elundhu ukkaandhu juniour vigadan, Nakkeeran, Kungumam ellaam padippen. Nalla Novel edhaavadhu kedaicha annikku thookathukku off..
But thoongura vishayathula en pakkathula kooda neenga vara mudiyaadhu.. Naan Nithra deviyin praana snegithi theriumo.. Avvalavu seekiram thoonga maaten, thoongitta... appuram avvalavudhaan.. Elundha appo paathukka vendiyadhudhaan.
solla vendame nu patha, ellai meeri pochu! paaattiiiiiiiiiiiiii! yen paati sondaye marandu poi 2 dadava solringa?
ReplyDeleteada unga avaruku oru 80 na ninga 70 chinnadu thane ada solliruppar. ida poi seriousa edthundu.. freeya vidungo!
ReplyDelete//எங்க வீட்டில் காவலே வேண்டாம்னு என் கணவரோட நினைப்பு. நான் தான் இருக்கேனே!//
ReplyDeleteveetuku kaaval ethu?nu TRC sir sollvaar. oru thani postee potrukkaar. narayana! narayana! :D
@porkodi, geetha paati narayana velai paakaranga. nambatha.
btw, post as usual superrrrrrrr.
//அப்போதான் உங்க எல்லாருக்கும் ஆப்பு வைக்கிறது பத்தி யோசிச்சி வச்சுப்பேன்//
ReplyDeleteMadam, Naan enna panninen.. eppadi ellam pesalaama.. en pathivukku kooda neenga varrathe illai.. avvalavu kobama..:-))
//@porkodi, geetha paati narayana velai paakaranga. nambatha. //
ReplyDeletemadam, intha ambiyai summa vidakkoodaathu
//ஆனா இந்த சின்ன பொண்ணு சொல்றதை எங்க காதுல வாங்கினாங்க//
ReplyDeletemadam, ithukkaaka ambikku neenga double aapu vaikkanum..
இப்போ எல்லாம் புத்தரே சொல்ல ஆரம்பிச்சுட்டார். கொஞ்சம் பரவாயில்லை.
ReplyDeleteகொட்டி கொட்டி பிள்ளை பூச்சியை தேளாக்கியாச்சி.பாவம் அவருக்கு சென்னை ஏர்போர்ட்டிலிருந்து வீடுவந்து சேர்ரவரைக்கும் லக்ஷார்ச்சனைதான்.
@ வேதா இந்த மீட்டிங்குக்கு நாங்க அரை டிக்கெட்டெயெல்லாம் சேர்கிறது கிடையாது அது அங்கே வந்து ரிப்பன்,லாலி பாப்,5 ஸ்டார் வாங்கி கொடுன்னு அடம் பிடிக்கும்.
இப்போ எல்லாம் புத்தரே சொல்ல ஆரம்பிச்சுட்டார். கொஞ்சம் பரவாயில்லை.
ReplyDeleteகொட்டி கொட்டி பிள்ளை பூச்சியை தேளாக்கியாச்சி.பாவம் அவருக்கு சென்னை ஏர்போர்ட்டிலிருந்து வீடுவந்து சேர்ரவரைக்கும் லக்ஷார்ச்சனைதான்.
@ வேதா இந்த மீட்டிங்குக்கு நாங்க அரை டிக்கெட்டெயெல்லாம் சேர்கிறது கிடையாது அது அங்கே வந்து ரிப்பன்,லாலி பாப்,5 ஸ்டார் வாங்கி கொடுன்னு அடம் பிடிக்கும்.
அம்மணி, உங்க பதிவுல பிண்ணூட்டம் போட நான் வலைப்பதிவு போட வேண்டியதா இருக்கே. :-( என்ன கொடுமை இது சரவணா?
ReplyDeleteபொற்கொடீஈஈஈஈஈஈஈஈஈஇ, நான் நெருப்பு நரியிலே இருந்து அடிச்சால் அப்படித்தான் 10 முறை கூட வரும். இப்போ என்னங்கறீங்க? 2 முறை படிக்க முடியாத கிழமெல்லாம் ப்ளாக் எழுத வருதே? கடவுளே, கடவுளே! என்னத்தைச் சொல்ல! :D
ReplyDeleteவேதா(ள்), இந்த அம்பி வேலை எனக்குத் தெரியும். நீங்க 2 பேரும் சேர்ந்தது ஏன்? உடனடி விளக்கம் இந்த மெமோவுக்குத் தேவை! ஆமாம் சொல்லிட்டேன். நற நற நற நற.
ReplyDeleteகாஆஆஆர்த்த்திக்க்க்க்க, இது கொஞ்சம் கூட நல்லாவே இல்லை. அம்பியைப் பார்த்துக் கெட்டுப் போகாதீங்க. அசின் விஷயத்தில் உங்களுக்கு முழு ஆதரவு தந்து அம்பியை அசின் தம்பினு சொல்ல வைத்தது யார்? நன்றியுடன் நினைவு கூறடா நண்பனே, நண்பனே, நண்பனே!
ReplyDeleteஉங்க ப்ளாக்குக்கு வந்தேன். பின்னூட்டம் கொடுக்கறதுக்குள் நவராத்திரிச் சுண்டல் வசூலுக்கு யாரோ கூப்பிடவே போயிட்டேன். வாங்கிட்டு வந்ததும். சுண்டல் சாப்பிடற மும்முரத்தில் மறந்துட்டேன்.
அம்பி, ஆப்பு அம்பி, குண்டர் படைத் தலைவரை மறைத்து வைத்தது ஏன்? ஒரு பதிவு போடப் போறேன். அவர் பின்னணியில் குரல் கொடுப்பதின் மர்மம் என்ன?
ReplyDeleteதி.ரா.ச. சார், இப்போவெல்லாம் எந்தக் கோயிலிலும் லட்சார்ச்சனை எல்லாம் இல்லை, கோடி அர்ச்சனை தான். நீங்க லட்சார்ச்சனை வாங்கற ஞாபகத்திலேயே இருந்தா எப்படி? :D
ReplyDelete@தி.ரா..ச. சார்,
ReplyDeleteஎனக்கு வேண்டிய சாக்லேட், லாலிபாப் எல்லாம் நானே கொண்டு வருவேன். ஹி ஹி ஹி.
G3 வாங்க, வாங்க, நல்வரவு. வலை உலகுக்கு நல்வரவு. இதைத் தான் சொந்த செலவிலே சூன்யம் வச்சுக்கிறதுனு வலை உலகிலே சொல்வாங்க. பாவம் நீங்க,புதுசா மாட்டினதிலே இந்தக் கடல் கணேசன். ஆளே அப்புறம் வரதில்லை. இப்போ நீங்க மாட்டினீங்க. அப்பாவி சார்/மேடம், நீங்க.
ReplyDeleteவேதா(ள்), அப்படியெல்லாம் பின்னூட்டம் வாங்க நான் என்ன அம்பியா? ம்ஹும், தலைவியாக்கும்.
ReplyDeleteதலைவிக்கு ஏன் அடிக்கடி வாய் எல்லாம் நடுங்குது?? பொற்கொடி னு முடிக்காம ஈஈஈஈ னு ஈ எல்லாம் ஓட்டறாங்க :))
ReplyDeleteஒரு ஃபோன் கூட எடுத்துப் பேச முடியாதவங்க பேசற பேச்சா இது? grrrrrrrrrrrrrrrrrrrr எத்தனை தரம் கூப்பிடறது? கிழமெல்லாம் ப்ளாக் எழுத வந்தா இப்படித்தான்.
ReplyDelete@வேதா,பொற்கொடி இது ஞாயமா? ரெண்டு பேரும் அன்னிக்கி சேர்ந்துண்டு மேடத்தை பாட்டி பாட்டி எத்தனை முறை கிண்டல் பன்னிங்க.நான்கூடச் சொன்னேன் பெரியவாளை பழிக்கக்கூடதுன்னு.எங்கே கேட்டீங்க.சமோசாவச்சு வாயை அடைச்சாலும் அப்படியும் கிண்டல் பன்னீங்க.பாருங்க எப்படி உங்களை பந்தாடராங்க.எங்க பாங்கு காலனியிலெ இருக்கறவரங்களை விட்டுக்கொடுக்க முடியுமா.பொறுத்துதது போறும் பொங்கி எழுங்கள்மேடம்.
ReplyDelete@ Geetha madam! enakku ore oru kelvidhaan, eppadi eppavume grrrrrr grrrrrunu urumareenga! vaay valikkalaya ungalukku :) ungala nenacha enakku romba paavama irukku! aiyoooo paaavam!
ReplyDelete(yaarange idhu kushi - mumtaz dialogue illa pa, naan unmaiyile feel pannadhala vandhadhu!)
@ Karthik: thala! unga blogla comment podanumna adhukaaga ippadiya koppidardhu, idhellam rembaaaaa tooooooooo much! aaamaaaaa solllitttteen!
அப்பாவி சார் இல்லை. மேடம் தான். :)
ReplyDeleteமேடம், நான் உங்களை சப்போர்ட் தான் பண்ரேன்..
ReplyDeleteஉங்களை எதுத்தவங்களை என்ன பண்ணனும்னு சொல்லுங்க.. ஒரு கை பாத்துடுறேன்.
அம்பியை விட்டுடுங்க..என் மச்சான்..
பொற்கொடி பாவம், அசின் தங்கச்சினால, எனக்கு மச்சினிச்சி..
பாவம் இந்த வேதா.. என் தோழி..
இப்பா சொல்லுங்க மேடம்.. யார் உங்களை ஏதுத்த ஆளுன்னு..
ஏ..யாரப்பா.. என் தலைவியை எதிர்த்து கோஷம் போடுறது..
பொற்கொடி பாட்டி, உங்களை எத்தனை முறை தொல்லைபேசியில் கூப்பிட்டேன். தி.ரா.ச. அவரைச் சொன்னதாத் தப்பா நினைச்சுட்டிருக்கார் போல் இருக்கு. நீங்கதான் கிழம்னு சொன்னேன். நிச்சயமா நீங்க கிழம்தான். அதான் ஃபோன் கூட எடுக்க முடியாமல் கை நடுங்குது. இதை வந்து பார்க்கப் போறீங்களா இல்லையா தெரியாது.
ReplyDeleteசார், அது பொற்கொடி பாட்டிக்கும், வேதா(ள்)க்கும் எழுதினது. அப்புறம் அன்னிக்கு சமோசாவா? நல்லவேளை, நான் வரலை, வர வர இந்த சமோசான்னாலே அலர்ஜியா இருக்கு. நல்ல டிபன்னா சொல்லுங்க வரேன்.
ReplyDeleteG-3 மேடம், தகவலுக்கு நன்றி.
ReplyDeleteஹி ஹி ஹி ஹி @கார்த்திக் அண்ட்@ வேதா(ள்), இரண்டு பேருக்கும் இந்த பயம் இருக்கணும்.
ReplyDeleteநற நற நற கார்த்திக்,
எல்லாரையும் தோழி, மச்சான், மச்சினின்னுட்டு எனக்குத் துரோகமா பண்ணறீங்க? அது சரி, இந்த இந்தியத் தேவதை என்ன உங்களைத் "தல"ன்னு கூப்பிடுது? தலை இருக்க வால் ஆடுதா?
இந்தியத் தேவதைக்கு,
ReplyDeleteவலுவில் வந்து ஆப்பு லிஸ்ட்டில் பேர் பதிந்தமைக்கு நன்றி. உங்கள் பெயர் சீனியாரிட்டிபடி தலைவிக்குப் பரிந்துரைக்கப் படுகிறது.
// வெளிப்படையாகப் பேசுதல்: //
ReplyDeleteவயது விஷயத்தைத் தவிர மற்றவை எல்லாவற்றிலும்தானே ? :-)))
போட்டுக் கொடுத்த புண்ணியவதி வேதா(ள்), நன்றி. தங்கள் பெயர் ஆப்பு லிஸ்ட்டில் இருந்து தற்காலிகமாய் நீக்கப்படுகிறது. தொடர்ந்து தலைவிக்குத் தாங்கள் அளிக்கும் ஆதரவைப் பார்த்து மேற்கொண்டு முடிவு செய்யப்படும்.
ReplyDeleteலதா,
ReplyDeleteஇந்த வேதா(ள்) அப்படியே மாறிட்டதைக் கவனிச்சீங்களா? உங்களுக்கும் இதே நினைவிருக்கட்டும், நங்கையே! ஹா, ஹா, ஹா, ஹா (வெற்றிச் சிரிப்பு)
நல்லா எழுதிருக்கீங்க மேடம். வேப்பமரம் எல்லாம் இருக்கா உங்க வீட்டு வாசல்ல? அதுவும் சென்னையில? சூப்பர் தான் போங்க.
ReplyDeleteவாங்க கைப்புள்ள, லேட்டா வந்திருக்கீங்க, தலைவராப் போயிட்டீங்களேனு பார்க்கறேன். இல்லாட்டி ஆப்பு லிஸ்ட்லே உங்க பேரும் வந்து சேர்ந்துக்கும். ரொம்ப பிசி போல் இருக்கு.
ReplyDelete//தலைவராப் போயிட்டீங்களேனு பார்க்கறேன். இல்லாட்டி ஆப்பு லிஸ்ட்லே உங்க பேரும் வந்து சேர்ந்துக்கும். ரொம்ப பிசி போல் இருக்கு//
ReplyDeleteஎன்ன பண்றது...வயசாயிட்டே போவுதில்லையா? அதான் ஞாபக மறதி ஜாஸ்தி ஆயிடுச்சு. உங்களை மாதிரி சின்ன வயசா எனக்கு?
:)
ஹி,ஹி,ஹி, டாங்ஸு, கைப்புள்ள, தலைவர், தலைவர்தான்னு நிரூபிக்கிறீங்க, இந்த அம்பி பாருங்க, சும்மா பாட்டி, பேத்திங்கறார். கொஞ்சம் அடக்கக்கூடாது.?
ReplyDeletesuyaa allasalaa - ella suya peetralla enga madras passayil yenna mattera ella petera ?
ReplyDelete