எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Saturday, September 30, 2006

129. குதிரையை அடக்கிய தலைவி.

ஹி,ஹி,ஹி,ஹி,ஹி,. இது இம்முறை என்னோட சிரிப்பு இல்லை. நான் ஏறிச் சவாரி செய்த குதிரையின் சிரிப்பு.
ம.சா. இவங்க இந்த மாதிரிச் சிரித்துச் சிரித்து இப்போ இவங்க வாய் திறந்தது மூட முடியவில்லை.
ஆரம்பத்திலேயே வந்துட்டியா? வாயை மூடு. இது நான்.
ம.சா. "எங்கே மூட முடியுது? அதான் திறந்தது திறந்த படியே இருக்கே! இப்படி எல்லாரையும் பார்த்துப் பல் இளிச்சா இந்த மாதிரித் தான்.
நான்:நறநற நறநற. உன்னைத் துரத்த முடியாமல் நான் படற கஷ்டம் இருக்கு பாரு, அதைச் சொல்லணும். கொஞ்ச நேரம் வாயை மூடு.
ம.சா: நான் வாயை மூடினா அப்புறம் உண்மை தெரிஞ்சிடும்னு பயமா?
நான்: இப்போ நீஈஈஈஈஈஈ போக மாட்டேஏஏஏஏஏஏஏஏஎ? மனசாட்சி ஓரமாகப் பதுங்கிக் கொள்கிறது. "இருக்கட்டும், சரியான சமயத்தில் வைக்கிறேன் உனக்கு ஆப்பு," என்று முனக என் காதிலே அது விழவே இல்லை.

இப்போ கைலை யாத்திரை போனேனா? அங்கே அப்போ கைலை மலையைச் சுற்றி வரப் "பரிக்ரமா" என்று ஒரு ஏற்பாடு உண்டு. அதுக்கு 3 நாள் ஆகும். சில இடங்களில் நடந்தும், சில இடங்களில் குதிரை மேலும் போகணும். அதுக்காகக் குதிரை ஏற்பாடு செய்தார்கள்.அப்போ நடந்ததைத் தான் இப்போ எழுதறேன்.

குதிரைன்னா குதிரை. நம்ம தேசிங்கு ராஜன் குதிரை மாதிரி இருந்தது. ஒரே ஜ்ம்ப். தலைவி அதில் தாவி ஏறி விட்டார். வெகு நாட்கள் குதிரைப் பயணம் செய்து பழக்கப்பட்ட மாதிரித் தலைவி ஏறியதைப் பார்த்த அந்தக் குழுவே அதிர்ந்தது. உடனேயே ஜெய கோஷம் எழும்பியது தலைவிக்கு ஆதரவாக. "வெற்றி வேல், வீர வேல்" என்று கோஷம் எழுப்பி விட்டுத் தலைவி வீர நடையுடன் (குதிரை போட்ட நடைதான்) குதிரைப் பயணத்தைத் தொடர்ந்தார். செல்லும் வழியெங்கும் தோரணங்கள், கொடிகள், மாலைகள், மரியாதைகள், வணக்கங்கள், பதில் வணக்கங்கள். கூட்டத்தைப் பார்த்து மகிழ்வுற்ற தலைவி பின் கூட்டம் பெருகவே அதில் இருந்து ரகசியமாகத் தப்பிக்க எண்ணினார். என்ன செய்வது என்று யோசித்த போது "பொன்னியின் செல்வனில்" அருள்மொழிவர்மர் 5-ம்பாகத்தில் யானை மேல் இருந்து கூட்டத்தில் தப்பியது நினைவு வரவே குதிரையின் முகக் கயிற்றைத் தலைவி தன்னை அறியாமல் அழுத்திப் பிடிக்கக் குதிரை 4,5,6,7,8 கால் பாய்ச்சலில் கிளம்பியது. குதிரையை மிகச் சிரமப்பட்டு அடக்கிய தலைவி, "குதிரையை வென்ற நல்லாள்" என்ற சிறப்புப் பெயரால் கெளரவிக்கப் பட்டார். இதைப் பார்த்த மஹாஜனங்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். இவ்விதம் தலைவியின் புகழ் சீன தேசத்திலும் பரவியது. தலைவியால் நம் கொடியும், சங்கக் கொடியும் வானளாவப் பறக்கிறது. தற்சமயம் அது பறக்கிறபடியே இருக்கட்டும் என்று விட்டு விட்டுத் தலைவி வந்திருக்கிறார். ஓங்குக அவர் தம் புகழ்!

36 comments:

  1. enna nadanthathu?nu konjam manasaatchi pesinaa nalla irukkum.

    mookula kattu potrukaame? :D

    ReplyDelete
  2. அந்தக் குதிரையின் வயது 16 தானே ?
    :-)))

    ReplyDelete
  3. ஹிஹிஹி

    இது குதிரை சிரிப்பு அல்ல

    ReplyDelete
  4. ஆப்பு அம்பி, உங்க மூக்குலே கட்டுப் போட்டுக்கிட்டா நானா பொறுப்பு! ரொம்பப் புகையாதீங்க!

    ReplyDelete
  5. ஹி,ஹி,ஹி, லதா என்னோட வயசு 16-ல் இருந்து 15 ஆகிட்டது. நீங்க ரொம்ப நாள் கழிச்சு வந்ததாலே தெரியலை. அப்புறம் குதிரை வயசு 16-னு சொன்னா அது கிழட்டுக் குதிரையாச்சே? அதனாலே அது வயசும் கொஞ்சம்தான்.

    ReplyDelete
  6. மின்னல்,
    வாங்க, வாங்க, மின்னல் மாதிரிதான் வரீங்க போறீங்க, என்னத்தைச் சொல்றது? இது உங்க சிரிப்புனு புரியுது.

    இப்போ கொஞ்சம் சீரியஸ் மாட்டர், சூடான் புலி எங்கே? பதுங்கி இருக்கா? அல்லது உடல் நலம் சரியில்லையா? ஏதாவது தெரியுமா?

    ReplyDelete
  7. கடைசி வரைக்கும் அந்த குதிரைக்கு என்ன ஆச்சுனு சொல்லவே இல்லையே... :-)

    ReplyDelete
  8. //குதிரைன்னா குதிரை. நம்ம தேசிங்கு ராஜன் குதிரை மாதிரி இருந்தது//

    நீங்க எப்போ தேகிங்கு ராஜா குதிரையை பாத்தீங்க, கீதா

    //தலைவி அதில் தாவி ஏறி விட்டார்.//

    itha naan nambanumaa, madam

    ReplyDelete
  9. //குதிரையை வென்ற நல்லாள்//

    யார் உங்களுக்கு இப்படி எல்லாம் பேர் வைக்கிறா, கீதா.. இதுக்கே தனி பதிவு போடணும் போல

    ReplyDelete
  10. உங்கள சுமந்த அந்த குதிரைய எங்க அடக்கம் பண்ணீங்கணு சொன்னா போய் ஒரு மலர் வளையம் வச்சிட்டு வர வசதியா இருக்கும் :-)

    ReplyDelete
  11. //கை தட்டி ஆர்ப்பரித்தனர்//

    அதாவது கை கொட்டி சிரிச்சாங்க அதான?

    ReplyDelete
  12. இவ்விதம் தலைவியின் புகழ் சீன தேசத்திலும் பரவியது. தலைவியால் நம் கொடியும், சங்கக் கொடியும் வானளாவப் பறக்கிறது.

    இதுக்கு நம்ப பொற்கொடியும் ஒத்துக்கணமே.

    ReplyDelete
  13. //அதாவது கை கொட்டி சிரிச்சாங்க அதான//

    prokodi..ithellaam vendaam.. enga thalaiviye kindal panna vendaam.. appuram neenga oruththarai mattum vijayakaanth padaththai paakka vachchu thandanai koduppom..

    sariya thalaiviye..

    ReplyDelete
  14. // குதிரையை மிகச் சிரமப்பட்டு அடக்கிய தலைவி, "குதிரையை வென்ற நல்லாள்" என்ற சிறப்புப் பெயரால் கெளரவிக்கப் பட்டார். இதைப் பார்த்த மஹாஜனங்கள் கைதட்டி ஆர்ப்பரித்தனர். இவ்விதம் தலைவியின் புகழ் சீன தேசத்திலும் பரவியது//

    அடடா! தலைவி பல தேசம் ரவுண்டு அடிச்சிட்டு வந்திருக்கீங்க போல. எங்கெங்கே போனீங்க? மானசரோவர் ஏரி, அமர்நாத் பனிக்குகை...அப்புறம்? குதிரையை வேற அடக்குனீங்களா? யப்பா...என்ன வீரம்? என்ன வீரம்? இப்படி தான் பாருங்க நான் கூட கொஞ்ச நாளைக்கு முன்னாடி முரண்டு பண்ணிட்டு இருந்த ஒட்டகத்தை அடக்கிட்டேன்...ஒங்களை மாதிரியே!
    :)

    ReplyDelete
  15. //உங்கள சுமந்த அந்த குதிரைய எங்க அடக்கம் பண்ணீங்கணு சொன்னா போய் ஒரு மலர் வளையம் வச்சிட்டு வர வசதியா இருக்கும் :-) //

    //அதாவது கை கொட்டி சிரிச்சாங்க அதான? //

    தலைவி உங்கள் அருமை பெருமை எல்லாம் தெரியாம சின்னப்பசங்க எதோ கிண்டல் பண்ணிட்டாங்க. கோபப்பட்டு சாபம் கீபம் குடுத்துராதீங்க. பாவம் மன்னிச்சு விட்டுருங்க.
    :)

    ReplyDelete
  16. ச்யாம், அந்தக் குதிரையிலே தான் வேதா(ள்) ,பாச மிகு அண்ணனின் பாசமிகு தங்கச்சி போனாங்க. அவங்களைக் கேளுங்க, இன்னும் குதிரையில் இருந்து இறங்கவே இல்லை.

    ReplyDelete
  17. கார்த்திக்,
    உங்களுக்கு காந்தியைத் தெரியும்னால் பார்த்திருக்கீங்கனு அர்த்தமா?
    நான் தேசிங்கு ராஜா குதிரையைப் பத்திப் படிச்சேன். உடனே அவர் வீரம் எனக்கும் வந்து தாவி ஏறி விட்டேன். (ஹி ஹி ஹி ஹி), சிரிக்கிறது என்னோட மனசாட்சி.

    ReplyDelete
  18. @கார்த்திக், என்னத்தைப் பதிவு போடறீங்க? தலைவி பத்தி ஒரு, அட வேண்டாம் ஒரு 4 வார்த்தை, ம்ஹூம், நீங்க எல்லாம் என்ன தொண்டர்? எல்லாம் குண்டர்தான். :D

    ReplyDelete
  19. அவங்க அவங்க வேலை வெட்டி இல்லாமல் ப்ளாக் திறந்து ஆப்பு வாங்கன்னே வராங்களே, ம் தலை எழுத்து, ஜி-3, காத்துட்டிருங்க, உங்க பேர் முன்னேற்றதில் இருக்கு.

    ReplyDelete
  20. அதெல்லாம் யாரும் சிரிக்கலை. பொற்கொடி, என் கேள்விக்கு என்ன பதில்?

    ReplyDelete
  21. தி.ரா.ச. சார்,
    பொற்கொடி என்ன நேத்து வந்தாங்க, அவங்க ஒத்துக்கணுமேன்னு சொல்லறீங்க? என் புகழ்க்கொடி வானளாவப் பறக்கிறதை அவங்களாலே மறுக்கவே முடியாதே! அங்கே பாருங்க, ஜி-3யை ஆப்பு வாங்கவே ப்ளாக் திறந்து வச்சிட்டு வந்திருக்காங்க. :D

    ReplyDelete
  22. கைப்புள்ள,
    எவ்வளவு கஷ்டப்பட்டு நான் களப்பணி ஆற்றி சங்கத்தின் புகழைக் கெடுக்கிறேன்னு, சீச்சீ, புகழ் கொடுக்கிறேன்னு நீங்க புரிஞ்சுக்கிட்டா போதும். என்ன இருந்தாலும் எனக்காக ஒரு (நெல்லிக்கனி கூட கொடுக்க மறுத்த)கொடுத்த அதியமான் அல்லவோ தாங்கள்? :D

    ReplyDelete
  23. கைப்புள்ள, கைப்புள்ள்ள்ள்ள்ள, என்ன இது, என்ன இது? எப்போது அவங்க பக்கம் சேர்ந்தீங்க? நற நற நற, நான் எவ்வளவு கஷ்டப்பட்டுக் குதிரை ஏஏறிறிச் சங்கக் கொடியை நிறுவினேன் தெரியுமா? இது தெரியாத சில மொக்கைப் பதிவாளர்கள் ஏதோ எழுதறாங்க.

    ReplyDelete
  24. கார்த்திகேயன்.. என்ன அசின் வேண்டாம் போலிருக்கே..? கைப்புள்ள நீங்க தான் கை கொடுக்கும் புள்ள :))

    ReplyDelete
  25. //தலைவி உங்கள் அருமை பெருமை எல்லாம் தெரியாம சின்னப்பசங்க எதோ கிண்டல் பண்ணிட்டாங்க. கோபப்பட்டு சாபம் கீபம் குடுத்துராதீங்க. பாவம் மன்னிச்சு விட்டுருங்க.
    //
    வஞ்ச புகழ்ச்சி அணி!னு சொல்வாங்களே கைப்பு, அது இது தானா? :)

    ReplyDelete
  26. எங்கேயோ போயிட்டிங்க போங்க!!அடுத்தது புலியைதானே அடக்க்ப் போறீங்க!!(புளி அல்ல)

    ReplyDelete
  27. eppo antha dongaallam ellaya ? dongallam fulla changed to horse ??

    ReplyDelete
  28. ஒழுங்கு மரியாதையா யாத்ரா அனுபவம் பற்றி எழுதிகிறீர்களா இல்லையா? இல்லாவிட்டால் வீட்டுக்கு ஆட்டோ அனுப்பட்டா?
    நற நற நற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்ற்....

    ReplyDelete
  29. பொற்கொடி, அதெல்லாம் கார்த்திக்கின் மனசை மாத்த முடியாது. தவிரக் கைப்புள்ள எனக்கு நெல்லிக்கனி கொடுக்க மறுத்த அதியமான், அவர் கோப்பெருஞ்சோழன் என்றால் நான் பிசிராந்தையார். இந்த அம்பி நடுவில், "மாத்தையார்" மாதிரி உள்ளே நுழையப் பார்க்கிறார். "மாத்தையார்" யாருனு முழிக்கிறதைப் பாருங்க.

    ReplyDelete
  30. ஆப்பு,
    கைப்பு, புளிப்பு, இனிப்புனு செல்லமாக் கூப்பிட்ட உடனே எங்கள் தலைவர் மாறி வேறு அணியில் சேருவார் என எதிர்பார்க்க வேண்டாம். (அவர் எப்போ நீங்க பஞ்சாப் குதிரையைக் காட்டினீங்களோ அப்போவே கட்சி மாறிட்டார்னு தெரியுமே! நற நறநறநற) :D

    ReplyDelete
  31. வேதா(ள்), குதிரையில் இருந்து இறங்கத் தெரியலைனு சொல்லுங்க. சமாளிக்காதீங்க. குதிரை உங்களோடு அப்படியே ஒரு சுற்றுச் சுற்றி வந்ததா? ஹிஹிஹி, பாவம் நீங்க நடுங்கி இருப்பீங்க இல்லையா?

    ReplyDelete
  32. நடேசன் சார்,
    எங்கேயும் போகலை. இதோ உங்களுக்குப் பதில் எழுதிட்டு இருக்கேன். இந்தக் கடி போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?

    ReplyDelete
  33. தெரிஞ்ச அந்நியரே?
    எப்போ தமிழிலே எழுதப் போறீங்க? அது என்ன எப்போ வந்தாலும் மொத்தமாப் பின்னூட்டம் கொடுக்கிறதே வழக்கம்? ஏதாவது கமிஷன் அடிப்படையிலா? அப்புறம் டோங்காவில் எல்லாம் கைலை யாத்திரை போக முடியாது. வண்டியிலே போறதைப் பத்தி எழுதப் போறேன், கட்டாயம் வந்து படிச்சுட்டு ஒரு 10,20 பின்னூட்டம் கொடுத்துட்டுப் போங்க.

    ReplyDelete
  34. ஹி,ஹி,ஹி, உஷா, ரொம்ப போர் அடிக்குதுனு யாரும் சொல்லிடக் கூடாது பாருங்க, அதான் நடு நடுவிலே இந்த மாதிரியும் எழுதினால் 4 பேர் பார்த்துப் பாராட்டுவங்களேன்னு எழுதறேன். பாராட்டு மழை எக்கச்சக்கமா வருது, இல்லை? :D

    ReplyDelete
  35. hm... tamilallam no way of writing. athukku porumai vennum. i dont have love for any language. - language is just for communication and coveying our ideasungra kuutatha serthavan nan. if i find you cant understand english or my tamilinglish - then will try of writting tamil scripts. other wise no chance. of writting in tamil scripts - it needs lot of patience - if i computer software i can load which can write by itself while i speak in tamil then it is possible. Not comfortable with jaffna keyboard and other translation key board software. Simple language - englipish irrukku to type. Why to complecate with tamil scripts when you understand what i write.

    ( the fact is - ennakku tamil spelling mistake nerya varum - In school days - i never wrote tamil - i draw tamil letters - still i cant use the right na, la, ra ) - english enna vazhutham athuvum appadithan.

    didnt i say - i dont have any love for language

    ReplyDelete
  36. o.k. your answers are like a pathivu. it is ok for me. but I have my personal opinion, tamilians will speak in tamil and write in tamil between them. i think it is convenient for all tamilians to communicate in our mother tongue. but i won't force you.

    ReplyDelete