எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, February 01, 2007

197. ஆதார சுருதியும் அவளே-லலிதே!

உண்மையில் பார்க்கப் போனால் நான் இப்போ சிதம்பரத்தையும், கடலூரில் உள்ள

திருவஹிந்திபுரம் கோயில் மற்றும் அங்கே உள்ள திருமாணிக்குழி சிவன் கோயில்

பத்தி எழுதணும். அங்கே தான் 2 நாள் முன்னால் போயிட்டு வந்தேன். ஆனால்

என்னுடைய சிநேகிதர்கள் சிலரின் கஷ்டங்களைக் கேட்டதும் இந்த லலிதாம்பாள் சோபனம் நினைவுக்கு வந்தது. இது சீக்கிரம் முடிச்சுட்டு அதையும் எழுதணும்னு நினைக்கிறேன். எல்லாம் அந்த லலிதாம்பாளின் விருப்பம் போல் நடக்கும். இது லலிதா சஹஸ்ரநாமத்தின்

வடிவம்னு சொன்னேனே தவிர, கிட்டத்தட்ட "ஸ்ரீதேவி மஹாத்மியம்" தான் இதில் அம்பிகையின் 5 அவதாரங்ளைப் பற்றிக் கீழ்க்கண்ட முறையில் சொல்லப் பட்டிருக்கிறது.


இந்த உலகிற்கு ஆதாரமானவள் அம்பிகையே என்பது சாக்தர்களின் அபிப்பிராயம். அவள் மூலமாகவே மும்மூர்த்திகளும் ஏற்பட்டனர் என்றும், மஹாவிஷ்ணு எடுத்த பத்து அவதாரங்களும், அம்பிகையின் பத்து விரல்களில் இருந்து ஏற்பட்டன என்றும் சொல்லப்படுகிறது. ஏற்கெனவே மஹாவிஷ்ணு எடுத்திருந்த மோஹினி அவதாரத்தைப் பற்றிப் பார்த்தோம். ஈசனை ஒரு பழைய கவிஞர் ஒருத்தர்

"ஒரு பாதி மால் கொள் மற்றொரு பாதி உமையாள்
கொண்டு இரு பாதியாலும் இருந்தான் பராரி" என்று பாடினாராம். அது படி ஒரு பாதியை உமைக்குக் கொடுத்து "அர்த்த நாரீஸ்வரர்" ஆனால், சிவனும், விஷ்ணுவும்

சேர்ந்த தோற்றம், "சங்கர நாராயணர்" என்று சொல்லப் படுகிறது. விஷ்ணு புராணத்தில் விஷ்ணு எடுத்ததாய்ச் சொல்லப் படும் அவதாரங்கள் தேவி புராணத்தில் தேவி எடுத்ததாயும் சொல்லப் படுகிறது. இது தேவியின் முதல் அவதாரம்.

தனது 2வது அவதாரத்தில் தேவியானவள் விஷ்ணுவிற்குத் தன் சக்தியைக் கொடுக்கிறாள். எப்படி என்றால் திருப்பாற்கடலில் ஆலிலை மேல் பள்ளி கொண்டிருக்கும் மஹாவிஷ்ணுவின்

நாபியில் இருந்து தோன்றும் தாமரையில் பிரம்மா அவதரிக்கிறார். அவர் உடனே

என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கவே சுற்றும் முற்றும் பார்க்கிறார். 4 திக்குகள் உண்டாகின்றன. அப்போது தேவி பிரசன்னமாகி பிரம்மாவின் மயக்கத்தைப் போக்கித் தெளிவை உண்டாக்கி, சிருஷ்டிக்கும் வல்லமையும் அளிக்கிறாள். பின் விஷ்ணுவிற்குத் தன் சக்தியை அளித்து, அவரின் யோக நித்திரையைக் கலைத்து மது, கைடபர் என்ற இரு

அசுரர்களைக் கொல்லும் உபாயத்தைக் காட்டி மறைகிறாள். இது தேவியின் 2 வது
அவதாரம்.

இந்த இடத்தில் அசுரர் என்பது எல்லாராலும் தவறாய்ப் புரிந்து கொள்ளப் படுகிறது. அசுரர்களை வாழவிடாமல் தேவர்களை மட்டும் வாழவைக்கிறார் கடவுள் என நினைத்துக் கொள்கிறார்கள். எல்லாப் பிறவியும் ஈசன் படைப்பே. தன்னால் பிறப்பிக்கப் பட்டவர்

எல்லாரையும் ஈசன் வாழத்தான் வைப்பார். அழிக்க மாட்டார். நம்மைத் தான் நாமே

அழித்துக் கொள்கிறோம். எப்படியெனில் உண்மையில் மனிதருக்குள் தேவ குணமும்

உண்டு. அசுர குணமும் உண்டு. சிலரிடம் அசுர குணம் மிகுந்து காணப்படும்.

சிலரிடம் தேவ குணம் மிகுந்து காணப்படும். உண்மையில் முதலில் அசுர குணம் மிகுந்தவர்கள் ஜெயித்தது போல் காட்டி வந்தாலும், நம் தமிழ் சினிமாவில் படம் முடியும் சமயம் போலீஸ் வருவது போல் கடைசியிலாவது அவர்களுக்கு எப்படியாவது

அவர்களின் தவறைப் புரிய வைப்பார் கடவுள். நம்முடைய தேவ குணமும், அசுர

குணமும் நடத்தும் போராட்டம்தான் உண்மையில் தேவாசுரப் போராட்டம்.

நம்முடைய மனமானது ஒரு நிலையில் எப்போதும் இருப்பது இல்லை. ஒரு மனது

நல்லது செய்யலாம் என்று சொன்னால், இன்னோர் மனசு," ஆமாம், கிழித்தாய்,

எல்லாருக்கும் நல்லது தான் செஞ்சிட்டிருந்தியே? என்ன வாழ்ந்தே? எல்லாம் இது போதும்." என்று சொல்லி விடும். நம்முடைய மனப் பலவீனங்களுக்கு ஏற்றாற்போல் சில சமயம் நல்ல மனசும்,சில சமயம் கெட்ட மனசும் வெற்றி பெறுகிறது. இந்தப் போராட்டம் நம்

வாழ்நாள் பூரா நடந்து கடைசியில் நாம் இறைவனைச் சரண் அடைந்து," இனி

ஒன்றும் இல்லை, நீயே கதி!" என்று சொல்கிறோமே, அப்போது தான் நமக்குள்

உறைந்திருக்கும் இறை சக்தி வெற்றி பெறுகிறது. இதைத் தான் நாம் நமக்குப் புரிவதற்குச் செளகரியமாகக் கடவுள் வந்து அசுரர்களை அழித்தார் என்று சொல்லிக் கொண்டு நம்மை நாமே தேற்றிக் கொள்கிறோம். இந்த உண்மையைப் புரிந்து கொண்டால் இறைவன் எங்கேயும் இல்லை, நமக்குள் தான் இருக்கிறார். நாம் தான் உதாசீனம் செய்கிறோம் என்று தெரியும்.

தேவியின் மற்ற மூன்று அவதாரங்களும் தொடரும்.

14 comments:

 1. Attendence pottachu! :)

  //நம்முடைய மனப் பலவீனங்களுக்கு ஏற்றாற்போல் சில சமயம் நல்ல மனசும்,சில சமயம் கெட்ட மனசும் வெற்றி பெறுகிறது.//
  well said.

  *ahem, athaan kailasa yaathrai pona kooda kaapi nalla illai!nu post poda vaikuthu!nu TRC sir enkitta phonela sonnar. :) just kidding.

  udane vanathukum boomikum kuthikka vendaam. :)

  ReplyDelete
 2. நல்லா போகிறது மாமி....என்ன, இன்னும் கொஞ்சம் டீடெய்லா சொல்லலாமோ ?

  ReplyDelete
 3. வர வர பக்தி ரசம் ரொம்ப வழிந்தோடுகிறது. தக்காளி ரசம், மிளகு ரசம் எல்லாம் வைக்கிறது இல்லையா, இப்ப????

  ReplyDelete
 4. அருமையான பதிவு.தேவி மஹாத்மியத்தையே சுருக்கமாகவும் தெளிவாகவும் அளித்துள்ளீர்கள்.தேவகுணம் அசுரகுணம் விளக்கமும் சபாஷ்.இப்பொதெல்லாம் நம்ப பதில்தான் முதல் கவனிச்சங்களா?

  ReplyDelete
 5. ஹிஹிஹி, சார், வழக்கம்போல் சிஷ்யன் குருவை மிஞ்சியாச்சு,
  @அம்பி, இன்னுமா காப்பி பத்தியே நினைக்கிறீங்க? சரியாப்போச்சு, லலிதா சஹஸ்ரநாமத்தில் காப்பி ராகம் வேணுமானால் வந்தாலும் வரலாம், காஃபி வராதே? பொண்ணு பார்க்கப் போன இடத்தில் நல்ல காஃபியாக் கிடைக்கலியோ,

  தி.ரா.ச. சார், நீங்க கேட்கச் சொன்னதைக் கேட்டுட்டேன். இனிமேல் உங்க பாடு, சிஷ்யன் பாடு, எனக்கென்ன? :-)

  ReplyDelete
 6. மதுரையம்பதி, ஏற்கெனவே நாம் பக்கமாய் எழுதறதாய்ப் பேரு, சின்னதாய்ப் பின்னூட்டம் கூடக் கொடுக்க முடியலை வர,வர, இதிலே இன்னும் விளக்கமா? உங்க சந்தேகம் என்ன? அப்புறம் நான் சொன்ன பதிவு படிச்சீங்களா இல்லையா? ரொம்பக் கேட்டீங்கன்னா பரிட்சையே வைப்பேன். கவனமாப் படிங்க! :D

  ReplyDelete
 7. மனசு,
  நீங்க எந்த மனசு, முன்னாலே இருந்த மனசா? அப்புறமா பின்னூட்டம் மட்டும் கொடுத்திட்டு இருந்த மனசா? தெரியலை! போகட்டும், தக்காளி ரசமும், மிளகு ரசமும் பக்தி ரசம் அலுக்கிறதோன்னு தோணும்போது கட்டாயமாய் வரும். இப்போ இது நேரம், மற்றபடி பக்தி இங்கே பக்கத்தில் நல்லாவே போயிட்டிருக்கு. போய்ப் பாருங்க அங்கேயும்.
  @தி.ரா.ச. பையன் வந்தாச்சோ? அதான் கொஞ்சம் அம்பிக்குப் பயப்படாமல் முதலில் வந்துடறீங்கன்னு நினைக்கிறேன். ஆனாலும் இந்த அம்பி இப்படிக் குருவுக்கு மிஞ்சிய சிஷ்யனா இருக்க வேண்டாம். :D :D :D

  ReplyDelete
 8. @மனசு,
  உங்க வீட்டிலே போய்ப் பார்த்துட்டு வந்தேன். பழைய மனசுதான் நீங்க. வாங்க, வாங்க ரொம்ப நாள் கழிச்சு வரீங்க? அதான் மிளகு ரசமும், தக்காளி ரசமும் எதிர்பார்த்து வந்திருக்கீங்களா?

  ReplyDelete
 9. ஆகா!, ஆகா! எக்ஸாமா, ரொம்ப வருஷமாச்சே அந்த வார்த்தையெல்லாம் கேட்டு....

  உங்க பழைய பதிவினையும் படித்தேன் மாமி....மிக்க நன்றி....

  ReplyDelete
 10. வழக்கம் போல இது வருகை பதிவுங்க மேடம்.. புதுகதைகள்னால ஆற அமர படிச்சாத் தான் மனசுல இருக்கும் இல்லையா.. வார இறுதிகள்ல படிக்கிறேன் மேடம்

  ReplyDelete
 11. //இறைவன் எங்கேயும் இல்லை, நமக்குள் தான் இருக்கிறார். நாம் தான் உதாசீனம் செய்கிறோம் என்று தெரியும். //
  very true maami.very well written.
  Thanks a lot--SKM

  ReplyDelete
 12. paatiyin anubavangal nalla illama poguma??? joraa irukku.

  mu.kaa kitta enna solli bayamuruthi irukinga, ipdi bayapdraru paavam! avar engal mudhal amaichar, adhai ninaivil vechukonga :)

  ReplyDelete
 13. மதுரையம்பதி, பரிட்சைக் கொஞ்சம் கஷ்டமா இருக்கும், பரவாயில்லையா?

  @கார்த்திக், இது கொஞ்சம் கூட நல்லாவே இல்லை. படிக்கிறதும், பின்னூட்டம் கொடுக்கிறதும் "மொக்கை"னு சொல்ற பதிவுக்குத் தானா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்........

  @எஸ்.கே.எம். ரொம்பவே நன்றி, விடாமல் நீங்களும், மதுரையம்பதியும் தான் வரீங்க.

  @போர்க்கொடி, என்ன இன்னிக்குச் சமையல் இல்லையா? இல்லாட்டி ரங்கமணியை வேலை வாங்கறீங்களா? எனக்குப் பின்னூட்டம் கொடுக்கக் கூட வந்திருக்கீங்களே?

  ReplyDelete
 14. Unga aanmeega katturaigal padichchen..Niraya therinjukitten..
  200 Padhivugaluuku ennudaya vaazhththukkal!

  ReplyDelete