எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 05, 2007

202. நான் யார், நான் யார்,நான் யார்?

நான் யார்,நான் யார்,நான் யார்? நான் யாரு, எப்படி இருப்பேன்னு
எல்லாருக்கும் மண்டையைக் குடையுது. பார்த்தவங்க ரொம்பக் கம்மி. இந்த வலை உலகிலே முதன் முதல் என்னைப் பார்த்த பெருமை இருக்கிறதாலே அம்பி ரொம்பவேத் தம்பட்டம் அடிச்சுக்கிறார். ஆனாலும் ரொம்பக் குதிக்கிறார் இல்லை? அதுக்கு அப்புறம் வேதா வந்துட்டுப் போயாச்சு. அப்புறம் முத்தமிழிலே இருந்து காழியூராரும், பாசிட்டிவ் ராமாவும் வந்தாங்க. இப்போ புலி வந்து உறுமிட்டுப் போயிடுச்சு. புலி வருது, வருதுன்னு சொல்லிட்டே இருந்தது, நிஜமாவே வந்துட்டுப் போயிடுச்சு. போன வாரம் நாங்கள் கடலூர் போனப்போ நடேசனைப்பார்த்தோம். இன்னும் சில பேர் வரேன்னும் சொல்லிட்டிருக்காங்க.

நீங்க பார்க்கிறப்போ கொஞ்சம் ஏமாற்றம் ஏற்படலாம். ஏனெனில் நீங்கள் தினம் தினம் பார்க்கும் ஒரு சாதாரணப் பெண்மணி போல் தான் நான் இருப்பேன். இன்னும் சொல்லப் போனால் கைப்புள்ள சொல்வார், "எங்க பக்கத்து வீட்டு ஆண்டி போல் எனக்குத் தோணும்"னு அப்படித்தான் நான் இருப்பேன். அதனால் ரொம்பவே எதிர்பார்த்துட்டு வந்து ஏமாறாதீங்க அம்பி, ரொம்பவே ஏமாந்துட்டார் என்னைப் பத்திக் கற்பனை பண்ணி. நானும்தான் ஒரு மதுரை வீரன் ஸ்டைலில் எதிர்பார்த்துப் போனால் பார்க்க ரொம்பவே அப்பாவியா,( பார்க்கத் தான், )ஒரு பையர் வந்திருக்கார். என்னத்தைச்
சொல்ல? ஹிஹிஹி, பையன்னு சொன்னா மரியாதை இல்லைங்கிறதாலே விகுதியை மாத்தி இருக்கேன்.

அப்புறம் எழுதற அளவு பேசறது கொஞ்சம் கம்மி தான். பேச ஆரம்பித்தால்
நல்லாப் பேசுவேன். ஆனால் பேசக் கொஞ்சம் நேரம் பிடிக்கும். அப்புறம்
வந்தவங்களோட நானே பேசிட்டு இருந்தால் என் கணவர் முழிச்சுட்டு
உட்கார்ந்திருக்கணுமே,அதனாலும் கொஞ்சம் கம்மியாத் தான் பேசுவேன்.
வர்ரவங்க வந்து ஏமாந்துட்டுப் போங்கப்பா! இதைத் தவிர, இந்த வலைப்பதிவர் மீட்டிங் எல்லாம் நான் போகிறதில்லை. போனால்
போக ஒரு 2 மணி நேரம் ஆகும். அப்புறம் திரும்பி வர 2 மணி நேரம்
ஆகும். இது சாதாரணமாக ஆகும் நேரம். போக்குவரத்து அதிகம் இருந்து ட்ராஃபிக் ஜாம்னால் கேட்கவே வேணாம். அதனால்தான் நான் இதெல்லாம்
போகிறதே இல்லை. நான் போய் உட்கார்ந்து பேச ஆரம்பிக்கிறதுக்குள்ளே
(அதுக்குள்ளே அவங்க வடையோ, போண்டாவோ, சமோசாவோ ஆர்டர்
கொடுத்திருப்பாங்க) டிஃபன் வரும். அதைச் சாப்பிடக்கூட முடியாது. திரும்பிப்
போக நேரம் ஆயிடும். நான் போய்ட்டு உட்கார்ந்து சாப்பிடாமல் வர முடியுமா? போண்டாவும், வடையும், சமோசாவும் அழாதா? அதற்காக வீட்டுக்கும் எடுத்து வர முடியுமா? அப்படி இருந்தால் போய் எடுத்துட்டு வந்துடுவேன். கல்யாணத்துக்குப் போனால் அப்படித்தான். அங்கே ஒண்ணுமே சாப்பிடாமல் வீட்டுக்கு எடுத்துட்டு வந்துடலாம் போல் இருக்கும். போகாமல் இருக்கவும் முடியாது. ஆனால் வலைப்பதிவர் மீட்டிங்கிலே என்னைப் பெரிய தலைவின்னு நினைச்சுட்டு இருப்பாங்க. அங்கே போய் அல்பம் மாதிரி (உள்ளூர ஆசையாத் தான் இருக்கும்) அந்த டிபனை வீட்டுக்கு எடுத்துப் போறேன்னு எப்படிச் சொல்றது? :D அதனாலேயே வலைப்பதிவர் மீட்டிங் எல்லாம் போறதில்லை.

இப்போக்கூடப்பாருங்க நேத்து முத் தமிழ்க்குழுமத்திலே ஒரு மீட்டிங்
வச்சிருந்தாங்க மெரினாவிலே காந்தி சிலை பக்கத்திலே. போகலை, என்ன போனால் மிளகாய் பஜ்ஜி மட்டும் சாப்பிட்டு விட்டுத் திரும்பறாப்பலே இருந்தாப் பரவாயில்லை. பேச வேறே பேசணுமாம். தலைப்பு எல்லாம் கொடுத்திருக்காங்க, நம்மாலே ஆகிற வேலையா அது?. அதான் போகலை. என்ன தான் வீட்டிலே மிளகாய் பஜ்ஜி செஞ்சு சாப்பிட்டாலும் இந்த மாதிரிக் குரூப்பாப் போய் பஜ்ஜியை அவங்க செலவிலே வாங்கிச் சாப்பிடற டேஸ்டே தனி இல்லையா?

அப்புறம் இது 4 நாள் முன்னாலே எழுதி வச்சுக் காணோம்னு சொன்ன பதிவு.
இப்போத் திரும்பக் கிடைச்சது. அதைக் கொஞ்சம் மாத்தி நேத்திக்குப் பப்ளிஷ் பண்ணி இருந்தேன், 100 சதவீதம் பப்ளிஷ் ஆச்சுன்னு மெசேஜ் மட்டும் வந்தது. ஆனால் பதிவு வரவே இல்லை. இந்த ராம் என்னமோ ஒரே க்ளிக் போதும் மேடம்னு சொன்னாரே? ஒரே க்ளிக் தான் கொடுத்தேன். ஆனால் பதிவைக் காணவே காணோம். இதுதான் ஒரே க்ளிக்கில் பப்ளிஷ் ஆகிற லட்சணமா? ஒண்ணும் புரியலை போங்க! தலையைச் சுத்துது! என்ன அதிசயமோ, எல்லாம் எனக்கு மட்டும் நடக்குது! எழுதிச் சேர்த்த அருமையான விஷயங்கள் எல்லாம் மறுபடி வரவே மாட்டேங்குது.

அப்புறம் profile போய் நம்மளைப் பத்தின விவரம் எல்லாம் கொடுத்துட்டு வருவோம்னு போனேன். அங்கே போய் என்னோட பிறந்த தேதியைக் கொடுத்தேனா? வாங்கவே மாட்டேங்குது? எனக்கு ஒரே ஆச்சரியம்? invalid date அப்படின்னு மெசேஜ் வருது? என்னடா இது? மே மாதம் 22-ம் தேதி யாருமே பிறக்கக்கூடாதா? பிறந்திருக்க மாட்டாங்களா? இல்லை நம்மளைப் பிறக்கவே இல்லைனு சொல்லுதானு ஆச்சரியப் பட்டுப் போனேன். அப்புறமா உட்கார்ந்து யோசிச்சதும் தான் புரிஞ்சது, அது சர்டிஃபிகேட்டில் உள்ள தேதியைத் தான் ஒத்துக்கும்னு. அது உண்மையான தேதி இல்லையே, சரினு விட்டுட்டேன்.
இப்போ சில ஜோக்ஸ் போடறேன். நேத்துக் கார்த்திக்குக்காக சில ஜோக்ஸ்
போட்டிருந்தேன். இன்னிக்கு அதைப் போடலை. எனக்காக மட்டும் ஒரே ஒரு
ஜோக் போட்டுட்டு முடிச்சுக்கறேன்.

டாக்டர்: காதுக்குள்ளே ஓணான் புகுந்திடுச்சா? எப்படிம்மா?

பெண்:தோட்டத்தில் என் கணவரும், மாமியாரும் பேசுவதை ஒரு மரத்தின்
மறைவில் இருந்து ஒட்டுக் கேட்டேன் டாக்டர்!

இதைத் தான் சொந்தச் செலவில் சூன்யம் வச்சுக்கிறதும்பாங்களோ?!!!!!!!!!!

18 comments:

 1. என்னங்க இது? பின்னாலேயே போகுது? நம்பர் எல்லாம் ஒண்ணுக்குப் பின்னாலே இன்னொண்ணுனு வராமல் 201க்கு அப்புறமாத் தானே வரணும்? இது 201-க்குக் கீழே பின்னாலே போயிட்டதே? இது என்ன எங்கேயாவது என்னடி முனியம்மா? நீ முன்னாலே போனா நான் பின்னாலே வரேன், பாட்டுக் கேட்டுட்டு இப்படிப் பண்ணுதோ?

  ReplyDelete
 2. தேதியும் நேத்துத் தேதி வருது? நான் இன்னிக்குப் புதுசா எழுதி இருக்கேன். நேத்துத் தேதி காட்டுதே? கடவுளே? வேதாளம் ஏதும் புகுந்துடுச்சா? விக்ரமா, காப்பாத்து, மன்னா?!!!!!!!!!!!

  ReplyDelete
 3. ஆகா!, ஆகா!...பதிவெண்கள்ல மட்டும் தான் குழப்பம்ன்னு நெனச்சா, எப்படி மேடம் இப்படியெல்லாம்?...

  ReplyDelete
 4. தலைவியே, இப்படி எல்லாம் நான் யார் நான் யார்னு கேள்வி எல்லாம் கேட்டு ஏன் எப்படி பயமுறுத்துறீங்க?

  எனக்கு தங்களை நேரில் பார்க்கும் அதிர்ஷ்டம் இல்லைனாலும் புகைப்படங்களில் பார்க்கும் பேரதிர்ஷ்டம் கிடைத்தது. இந்தியா வந்தவுடன் பார்க்க வேண்டியவர்களில் நமது பிளாக் நண்பர்களும் அடங்குவர்... அந்த பட்டியலில் தலைவி நீங்கள் இல்லாமலா என்ன?

  ReplyDelete
 5. தலைவியே, இப்படி எல்லாம் நான் யார் நான் யார்னு கேள்வி எல்லாம் கேட்டு ஏன் எப்படி பயமுறுத்துறீங்க?

  எனக்கு தங்களை நேரில் பார்க்கும் அதிர்ஷ்டம் இல்லைனாலும் புகைப்படங்களில் பார்க்கும் பேரதிர்ஷ்டம் கிடைத்தது. இந்தியா வந்தவுடன் பார்க்க வேண்டியவர்களில் நமது பிளாக் நண்பர்களும் அடங்குவர்... அந்த பட்டியலில் தலைவி நீங்கள் இல்லாமலா என்ன?

  ReplyDelete
 6. அது சரி,ட் 2 தொழில் நுட்ப நிபுணர்களும் இது ஏன் இப்படி வருதுன்னு சொல்லாம ஏதோ சமாளிக்கிறீங்க? ஒருவேளை உங்களுக்கே புரியலியோ? இருக்கட்டும் நானே பார்த்துக்கிறேன். நறநறநறநற :D

  ReplyDelete
 7. ஆஆஆஆஆஆஆ மே22ஆ? நான் 23! உடனே அப்போ நான் எவ்ளோ சின்னவனு புரிஞ்சுதானு கேக்க கூடாது, நீங்க 70 வருஷம் முன்னாடி மே 22, நான் ஒரு 2-3 வருஷம் முன்னாடி 23. அவ்ளோ தான் :)

  ReplyDelete
 8. //@hot cat grrrrrrrrrrr.......என்னைப் பார்த்துப் பல் மேலே நாக்கு இருக்கான்னு கேட்கிறீங்க? சீச்சீ, நாக்கு மேலே பல் போட்டு, சீச்சீ அதுவும் தப்ப பல் இருக்கான்னு கேட்கிறீங்க? அப்படியே கொஞ்சம் முன்னாலே பாருங்க//
  Oh......munadi partha set pallu nalla theriyum thaan unga style eppavum grrrrrrrrrrr palla kadikeerenga....edhu theriyama...

  ReplyDelete
 9. எப்போ வரீங்க கார்த்திக் இந்தியாவுக்கு? ஏன்னா நமக்கு George Bush, Pan-ki-Mun, Vijay Nambiyar and UNO இங்கே இருந்தெல்லாம் அழைப்பு வந்திருக்கு. ஐ.நா. அழைப்பை இப்போப் புலி வந்திருந்தப்போ கொடுத்துட்டுப் போச்சு.
  @புலி, சூடான் திரும்பியாச்சா?

  @hotcat, grrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr" மளுக்", ஒண்ணுமில்லை, ஒரு பல் உடைஞ்சிடுச்சுன்னு நினைக்கிறேன். :D

  ReplyDelete
 10. போர்க்கொடி, பார்த்தீங்களா உங்களை அறியாமலேயே ஒத்துக்கிட்டீங்க நான் ஒரு நாள்தான் பெரியவங்கிறதை. ஆனால் எனக்குப் பதினாலு வயசு தானே, லதா வந்து 2 வயசு குறைச்சுட்டுப் போயிட்டாங்க தெரியும் இல்லையா? :D

  ReplyDelete
 11. தலைவி எவ்வழி பிளக்கும் அவ்வழி.ஒரே குழப்பம்.
  வேதாளம் புகுந்துடுச்சாவா? அதுதான் உங்களளோடு உ பி சா வாக இருந்து கொண்டு இருக்கிறதே

  ReplyDelete
 12. ராமசாமி, (சோ?),
  ஹிஹிஹி, நீங்க தானா அந்த வேதா(ளம்)? புதுசா இருக்கீங்களே? எங்கே இருந்து பிடிச்சுட்டு வந்தாங்க உங்களை? :D

  ReplyDelete
 13. மதுரையம்பதி,
  எண்களில் மட்டுமா? புதுப் பதிவுப் போடப் போடப்பின்னாலேயே போகுது. இந்த 201-ம் நம்பர் பதிவுக்கு என்ன எண்ணம்னே தெரியலை. நான் தான் முன்னாலென்னு சொல்லிட்டு வந்து உட்கார்ந்துட்டு அடம் பிடிக்குது. என்ன செய்யலாம்?

  ReplyDelete
 14. ராமசாமி,
  வீட்டுக் கதவை இறுக்கி மூடி வச்சிருக்கீங்க போல் இருக்கு? எல்லாருமே அப்படித்தான் இருக்காங்க இப்போ. அதுவும் புது ப்ளாக் வந்ததிலே இருந்து போறவங்க வீட்டுக்குக் கூடப் போக முடியலை.

  ReplyDelete
 15. மே 22 சரிதான்... ஆனா 1900 க்கு முன்னால பிறந்தவங்கள எல்லாம் அக்செப்ட் பண்ணாது போல!!!!!!

  ReplyDelete
 16. கீதா மேடம்,

  ஒரு வேளை போட்டா ஏதாவது போட்டுடீங்களோன்னு நெனச்சி வந்தேன்.

  முதல் வரி அவ்வளவு அழுத்தம், இப்படி தான் எண்ணவைக்கிறீர்களோ? :)

  நம்பர் போட்டாவெல்லாம் பதிவு வரிசையாகது, பப்ளிஷ்டு டைம் பதிவிட்ட நேரபடி தான் வரிசை படுத்தும், இல்லாட்டி பதிவரை பாடாய் படுத்தும்.

  உங்களோட டைம்ஸெட்டிங், இந்திய நேரபடி இல்லையோன்னும் தோணுது. கொஞ்சம் பாருங்களேன்.

  ReplyDelete
 17. ஹிஹிஹி, மனசு, வாங்க, அடிக்கடி வர ஆரம்பிச்சிருக்கீங்க? ஏன்? நயன் தாராவை விட்டுட்டீங்களா? அப்புறம் உங்க பிறந்த வருஷம் நான் கேட்கவே இல்லை, சொல்லி இருக்கீங்க, பரவாயில்லை, 2 நூற்றாண்டு கண்ட மனிதர்னு ஒரு விழா எடுக்கச் சொல்லலாம் தொண்டர் படையை, வெளுத்துக் கட்டிடுவாங்க, உங்களை இல்லை, விழாவை!!!! :D

  @சிவ முருகன்,வாங்க, ரொம்ப மாசம் கழிச்சு இந்தப் பக்கம்? எங்கேயும் பார்க்க முடியறதில்லை? ராமாயணத்தில் கதா பாத்திரங்கள் பற்றிச் சந்தேகம் கேட்டிருந்தீங்க இல்லையா? படிக்கவே முடியலை. மனசிலே போட்டு வச்சிருக்கேன், உங்க சந்தேகத்தை, முடிஞ்சப்போ திடீர்னு வரும், அப்புறம் வேலை கிடைச்சுடுச்சா? எங்கே இருக்கீங்க இப்போ, பதிவுகளாவது எழுதறீங்க இல்லை? உங்க பதிவு தென்படறதே இல்லையே?
  அப்புறம் இந்த மாதிரி எல்லாம் தலைப்புக் கொடுத்தால் தான் உங்களை மாதிரி ஆன்மீகம் எழுதறவங்க கூட வரீங்க! இல்லாட்டி எங்கே வரீங்க? :D

  ReplyDelete
 18. ha haaa :) TRC veetula mattum thaan naan veda, kodi ellam bonda saapduvoom. :p

  enna numbering problem polirukku! very good! :p

  //நீங்க 70 வருஷம் முன்னாடி மே 22, நான் ஒரு 2-3 வருஷம் முன்னாடி 23. அவ்ளோ தான் //
  kalakitta kodi! :)

  ReplyDelete