எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Monday, February 19, 2007

213. நினைத்தது நடந்தது.

2 பதிவு சேர்ந்தாப்போல ஆன்மீகம் எழுதினாலோ சீரியஸான விஷயம் எழுதினாலோ யாருமே வரதில்லை. நந்தனார் பதிவுக்கும் யாரும் வரலை. மற்ற எல்லாப் பதிவுகளையும் "மொக்கை" என்று வர்ணித்து விட்டுப் பின் விமரிசனம் தரும் அம்பி உட்பட யாருமே வரலை. அப்புறம் ஏன் மொக்கைனு எழுதணும்? சும்மாத் தானே? உண்மையில் இதற்கு ஆதரவு நிறைய வரும்னு எதிர்பார்த்தேன். தமிழுக்காகவாவது வருவாங்கன்னு நினைத்தேன். பக்கத்திலேயே ஆன்மீகப் பயணத்தில் கைலை யாத்திரை பத்தியும் எழுதறேன், அதுக்கும் யாரும் வரதில்லை. முன்னாலே வேதா வந்தாங்க. அவங்க ரொம்ப வருஷம் கழிச்சு இன்னிக்குத் தலை காட்டி இருக்காங்க. அப்புறம் எஸ்.கே.எம்., மலை நாடான் வந்தாங்க. எஸ்.கே.எம்.முக்கு உடம்பு சரியில்லை. மலைநாடான் படிச்சுட்டுப் போயிருப்பார். இப்போதைக்கு ஆறுதல் கொடுப்பது மதுரையம்பதி மட்டும் தான். அவரும் திடீர்னு காணாமப் போயிட்டு இன்னிக்கு வந்திருக்கார். எல்லாருக்கும் அலுவல வேலையும் பார்த்துக் கொண்டு ப்ளாகையும் பார்ப்பது சிரமம்தான். புரியுது. ஆனால் சனி, ஞாயிறில் எழுதினாலும் எல்லாருமேவா வீட்டில் கணினி வைத்திருக்கிறார்கள். அதுவும் கஷ்டமாத் தான் இருக்கு. இந்த லட்சணத்தில் இந்த ப்ளாக்கர் தொந்திரவு வேறே. ஒரு பின்னூட்டம் மாசக் கணக்கா ஒட்டிக்கிட்டு வரவே இல்லை. இன்னும் 4 பின்னூட்டம் பெட்டியிலேயே உட்கார்ந்து கொண்டு போவேனான்னு சொல்றதுங்க. என்னவோ போங்க, இன்னிக்குப் புலம்பல் நேரம். உ.வே.சாமிநாத ஐயரைப் பத்தி எழுத நினைச்சேன். போணி ஆகுமா தெரியலை. இன்னிக்கு அவரோட பிறந்த நாள்னு தெரிஞ்சது. தமிழுக்காக அவர் எவ்வளவு உழைத்தார்னு இன்றைய தலைமுறை அறியாது. அவர் வாழ்வின் ஒரு துளி நாளை!

22 comments:

  1. எனக்கு ஆன்மிகப் பதிவுன்னா கொஞ்சம் அலர்ஜி.... அதான்...

    நீங்க ஆன்மீகமல்லாத ஒரு பதிவு போடுங்க.. வந்து எப்படி கும்மி அடிக்கிறேன்னு பாருங்க.. ;))))

    ReplyDelete
  2. என்னை விட்டுட்டீங்களே!

    :)
    :(
    தமிழ்த்தாத்தாவின் 150வது பிறந்தநாளுக்கு என் வாழ்த்துகள்!

    ReplyDelete
  3. என்னை விட்டுட்டீங்களே!

    :)

    தமிழ்த்தாத்தாவின் 153வது பிறந்தநாளுக்கு என் வாழ்த்துகள்!

    ReplyDelete
  4. //உ.வே.சாமிநாத ஐயரைப் பத்தி எழுத நினைச்சேன். போணி ஆகுமா தெரியலை//

    சின்ன வயது பாடப்புத்தகங்களில் இவர் தமிழுக்கு ஆற்றிய பணியைப் பார்த்து மெய் சிலிர்த்தது.. ம்ம்.. அப்படியெல்லாம் நாமும் ஏதாவது செய்யனும்னு என்னை யோசிக்க வைத்தவர். அவருக்கு பிறந்த நாளா.. நல்லவேளை சொன்னீர்கள் மேடம். வருடத்தில் ஒரு நாளாவது அவரை எண்ணி, அவரது மகத்தான பணியை நினைக்க ஒரு வாய்ப்பு கிடைத்ததே..

    நன்றி மேடம்!

    ReplyDelete
  5. மேடம்! உங்களுக்கும் ஒரு பின்னூட்டம் ஓட்டிகிட்டு இருக்கா! எனக்கும் தான்! இது ஏதாவது பிளாக்கர் பிரச்சனையா இருக்கும்னு நினைக்கிறேன்! சரியாகி விடும்! வெயிட் பண்ணுவோம்!

    ReplyDelete
  6. மேடம்! என்ன இது இப்படி ஒரு புலம்பல்! மக்கள் எல்லோருக்கும் ஒரு சேர ஏதாவது வேலை இருக்கும். மறுபடியும் வருவாங்க. கவலைப்படாதீங்க மேடம்!

    ReplyDelete
  7. அரசியல் வாழ்க்கைல இது எல்லாம் சாதாரணம் :-)

    ReplyDelete
  8. நம்ம நாட்டாமை சொல்றதையே நானும் சொல்றேன்:)
    உவே சாமிநாத ஐயரை பற்றி எழுதுங்கள் நாங்க இருக்கோம் படிக்கறதுக்கு:) சில பதிவுகளை படிக்க மட்டும் தான் முடியும், பின்னூட்டம் போடவில்லையென்றால் படிக்கவில்லை என்று அர்த்தமில்லை,அதனால் தொடர்ந்து எழுதுங்க:)

    ReplyDelete
  9. //நந்தனார் பதிவுக்கும் யாரும் வரலை. மற்ற எல்லாப் பதிவுகளையும் "மொக்கை" என்று வர்ணித்து விட்டுப் பின் விமரிசனம் தரும் அம்பி உட்பட யாருமே வரலை.//

    எல்லாம் வந்தோம். இப்ப நந்தனாரை தடுத்தது யாரு?னு தெரிஞ்சுகிட்டா காவிரில தண்ணி வந்துட போகுதா? இல்ல பட்ஜட்ல வரி எல்லாம் குறஞ்சுட போகுதா?
    சங்கு சுட்டாலும் வெண்மை தரும். சூரியனுக்கு எதுக்கு டார்ச்சு லைட்? நந்தானார் சிறந்த சிவ பக்தர். இதை யாரும், யாருக்கும் நீருபிக்க வேண்டும்! என்ற அவசியம் இருப்பதாக எனக்கு தோண வில்லை.

    தமிழ் தாத்தா பத்தி எழுதுங்க. அப்ப வரலைனா என்ன?னு கேளுங்க.

    *ahem, அவரு உங்க சம காலத்தவரா? :)

    ReplyDelete
  10. //அப்புறம் ஏன் மொக்கைனு எழுதணும்? சும்மாத் தானே? //

    சும்மா எல்லாம் ஒன்னும் இல்லை. நிஜமா தான்! :)

    ReplyDelete
  11. மேடம், நா இருக்கேன். கவலப்படாதீங்க. இந்த project முடிஞ்சு demoblization நடக்குது. அடுத்தது 1 மாசம் ஐயா ப்ரீதான். எல்லாத்தயும் மேஞ்சுகிட்டுதான் இருக்கேன். முடிஞ்சா நம்ப பதிவுங்க பக்கம் எட்டிப்பாத்து ஏதாவது குறை சொன்னா திருத்திக்க வசதியா இருக்கும்.

    ReplyDelete
  12. தலைவி வாழ்க...


    என்ன எல்லாரும்(இந்த டேமேஜர்தான் முக்கியமா) தடுக்கிறாங்க... ஆனாலும் வந்துட்டேன்...

    தலைவி வாழ்க...

    ReplyDelete
  13. ஜி-Z, இது என்ன பேருன்னு வச்சிட்டு இருக்கீங்க? இங்கே எல்லாமே கலந்து வரும். நடுவே ஆன்மீகமும் வரும். பக்கத்திலேயே ஒரு பக்கம் இருக்கு பாருங்க, அது சுத்த சைவப் பக்கம்,ஆன்மீகம் தவிர வேறே ஏத்துக்காது. (எல்லாம் ஒரு விளம்பரத்துக்குத் தான்.:-) )

    ReplyDelete
  14. எஸ்.கே.சார். நீங்களும் இப்போத் தானே வர ஆரம்பிச்சிருக்கீங்க, அதான் நினைவு வரலை. ஆனால் நான் உங்க பதிவுகளுக்கு வந்து எல்லாம் மேய்ந்துட்டுப் போயிருக்கேன். ஒருமுறை பின்னூட்டம் கூடக் கொடுத்திருக்கேன். நீங்க கையிலே டாலர் இல்லாமக் கஷ்டப் பட்டதையும் திடீரெனப் பணம் வந்ததையும் எழுதி இருந்தீங்க. உங்களுக்கும், பொன்ஸுக்கும் ஐயப்பனைப் பத்தி நடந்த விவாதம் எல்லாம் மனப்பாடம் செஞ்சு வச்சிருந்தேன். :D, இப்போத் தான் இந்த ப்ளாக்கர் சில பதிவுகளுக்கு உள்ளேயே விடறதில்லை.

    ReplyDelete
  15. கார்த்திக், இன்னிக்கு முதலில் தமிழ்த்தாத்தா தான்.
    அப்புறம் ஒட்டிக்கிட்ட பின்னூட்டத்தை எப்படி எடுத்தீங்கன்னு விவரமாச் சொல்லுங்க, நேரம் கிடைக்கிறப்போ, ரொம்பத் தொந்தரவு செய்யுது எல்லாம்.

    ReplyDelete
  16. கார்த்திக், புலம்பல் இல்லை, வருத்தம், தெரியுது எல்லாரும் ஆபீச்?வேலை செய்யறவங்கன்னு. :-) இருந்தாலும் மனசுன்னு ஒண்ணு இருக்கு இல்லை? அது வருத்தப் படுது. ம்ம்ம்ம், கொஞ்சம் கொஞ்சமாக் குறைச்சுக்கப் பார்க்கிறேன்.

    ReplyDelete
  17. வாங்க ச்யாம், உங்களுக்கு என்ன? சும்மா ஒரு சங்கிலிப்பதிவு, புலம்பல்ஸ், தங்கமணியோட TBIனு போட்டுட்டு நூத்துக் கணக்கிலே பின்னூட்டம் வாங்கறீங்க. நான் வந்தா உங்க பதிவு பின்னூட்டத்தை ஏத்துக்கறதே இல்லை. அதான் படிச்சுட்டு வந்துடறேன். :D
    உங்க நண்பர் எப்படி இருக்கார்? ஏதாவது கொஞ்சமாவது முன்னேற்றம் இருக்கா?

    ReplyDelete
  18. வேதா(ள்), கொ.ப.செ. சொல்லியாச்சு, இனி என்ன தடை?

    @ஆப்பு, உங்க கூட வேலை பார்க்கிறதாத் தான் தமிழ்த்தாத்தா என்கிட்டே சொல்லி இருக்கார். வேணும்னா அனுப்பி வைக்கறேன் கேட்டுக்குங்க, இப்போ இங்கே வந்திருக்கார். நற நற நற நற, தங்கமணி கிட்டே வத்தி வைக்கணுமா? பார்த்து! :P

    ReplyDelete
  19. அபி அப்பா, உங்க பதிவுக்கு வராமலா? எல்லாம் வந்தேன். அது என்ன you are not authorised to see this page அப்படின்னே வருது. நான் வழக்கமாப் போகிற சில பதிவுகள் கூட இப்படித்தான் வருது. பார்க்கிறேன், வர முடியுதான்னு,கொஞ்சம் இந்த ப்ளாக்கரைத் தட்டிக் கொட்டி சமாதானம் செய்யணும். இல்லாட்டி வேதாளம் முருங்கை மரம் ஏறும். என்னோட பழைய பதிவுகளைப் பாருங்க நேரம் இருந்தா, இது கொடுக்கிற தொந்திரவை எல்லாம் விவரமா எழுதி இருக்கேன்.

    ReplyDelete
  20. மணி ப்ரகாஷ், என்ன? என்ன? உண்மைத் தொண்டரான உங்களுக்கு டேமேஜர் தொந்திரவா? ம்ஹும், நல்லாவே இல்லையே? இந்தப்பரந்து விரிந்த வலை உலகில் உங்களை வலைப்பக்கம் வரக்கூடாதுன்னு சொல்ற ஒருத்தரா? ஆஹா, புறப்படுங்கள் தொண்டர் படையே, போர் முழக்கம் முழங்கட்டும். வீரவேல்! வெற்றி வேல்!

    ReplyDelete
  21. அப்பாடி என்னை தாக்காம ஒரு பதிவு, அதற்காகவே உங்களுக்கு ஒரு 'ஓ'.

    ReplyDelete
  22. \\எல்லாருக்கும் அலுவல வேலையும் பார்த்துக் கொண்டு ப்ளாகையும் பார்ப்பது சிரமம்தான். புரியுது. ஆனால் சனி, ஞாயிறில் எழுதினாலும் எல்லாருமேவா வீட்டில் கணினி வைத்திருக்கிறார்கள். அதுவும் கஷ்டமாத் தான் இருக்கு. \\

    எங்களுக்காக நீங்க வருத்தப்படுவதற்கு ரொம்ப நன்றி தலைவி.

    இந்த காலத்துல இப்படி ஒரு தலைவி எங்களுக்கு கிடைத்தற்காக நாங்க எல்லாம் மகிழ்ச்சியாக இருக்கிறோம். நீங்க இதற்காக கவலை படுவதா?????

    கவலை வேண்டாம் இனி
    பல பின்னூட்டங்கள்
    வந்து குவியும்...குவியும்..

    ReplyDelete