எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Wednesday, May 02, 2007

உலக நாடுகள் சொல்வது என்ன?

போஸ் தாய்பேய் விமான விபத்தில் இறந்து விட்டதாய்ச் சொல்லப் பட்டதை இங்கிலாந்தில் உள்ள ஆங்கில அரசும் சரி, இந்தியாவை ஆண்ட ஆங்கில அரசும் துளிக்கூட நம்பவில்லை. 1945-ல் இருந்து பலமுறைகள் கிட்டத் தட்ட ஒரு வருடம் போல் பல விசாரணைகள் செய்தது. ஆங்கிலேய உளவுத்துறையைச் சேர்ந்தவர்கள் கொடுத்த தகவலோ பலவிதமாய் இருந்தது. விமான விபத்து நடந்தது, இறந்து விட்டார் எனச் சிலர். விபத்தே நடக்கவில்லை, மறைந்து விட்டார் எனச் சிலர், ரஷ்யாவில் இருக்கிறார் எனச் சிலர், சைபீரியாவில் மறைந்துள்ளார் எனச் சிலர். கண்ணால் பார்த்தோம் விபத்தை என்றும் சிலர். என்னதான் போஸின் நடவடிக்கைகள் ஆங்கில அரசுக்கும் சரி, இந்திய ஆங்கில அரசுக்கும் சரி பிடிக்கவில்லை என்றாலும் அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பவும் இல்லை, உறுதியும் செய்யவில்லை.

அமெரிக்காவும் இந்த விஷயத்தை மிக நன்காவே அறிந்திருந்தது. அந்தச் சமயம் மிக மிக நட்புடன் இருந்து வந்த மவுன்ட்பேட்டன் பிரபு அவர்களும், அமெரிக்காவின் மாக் ஆர்தரும் சரி ஒரு உடன்பாட்டுக்கு வந்திருந்தது போல் வேலைகள் நடந்தது. போஸ் விமான விபத்தில் இறந்ததாய்ச் சொல்லப் பட்ட ஆகஸ்ட் 18-ம் தேதிக்கு அப்புறம் செப்டெம்பரில் அமெரிக்க ராணுவம் தாய்பேய்க்குச் சென்றது. இது பிரிட்டனும், அமெரிக்காவும் சேர்ந்து செய்த ஒரு ஏற்பாடு எனத் தெள்ளத் தெளிவாய் விளங்கியது. அமெரிக்க ராணுவத்தைச் சேர்ந்த மிகத் திறமையான உளவுப்படை அதிகாரிகளால் லெப்டினன்ட் கர்னல் ஹபிபுர் ரஹ்மான் குறுக்கு விசாரணை செய்யப் பட்டார். கிட்டத் தட்ட ஒரு வரு்ஷத்துக்கு மேல் முயன்றும் எந்த முடிவுக்கும் எட்ட முடியவில்லை. விமானம் விபத்துக்குள்ளானதும் நிரூபிக்கப் பட முடியவில்லை. போஸ் இறந்ததற்கான உறுதியான சான்றுகளும் கிடைக்கவில்லை. இது இவ்வாறிருக்க அமெரிக்க ராணுவத்திற்கான செய்தியாளர் ஒருவர் போஸ் இறந்ததாய்ச் சொல்லப் பட்ட சில மாதங்களுக்குப் பின் அவரைப் பார்த்ததாய்ச் சத்தியமே செய்தார் என்பது தான். இதற்குப் பல வருடங்களுக்குப் பின் இந்திய அரசால் நியமிக்கப்பட்ட ஷா நவாஸ் கமிட்டி அறிக்கைக்குப் பின்னர் அமெரிக்காவின் "நியூயார்க் டைம்ஸ்" பத்திரிகை தன்னுடைய காலமானார் என்று இரங்கல் செய்தி குறிக்கும் பக்கத்தில் போஸ் இறந்து விட்டதாய்க் குறிப்பிட்டிருந்தது.

சுதந்திரம் பெறும் வரை இந்த வி்ஷயத்தில் அவ்வளவாய் ஈடுப்பாடு நேரடியாகக் காட்டாத காங்கிரஸ் தலைவர்கள், சுதந்திரத்துக்குப் பின் பல கட்சிகளின் தலைவர்களுக்குப் பதில் சொல்ல நேர்ந்தது. போஸ் விஷயத்தில் ஒரு முடிவுக்கு எட்ட முடியாத நிலையில் தவித்த நேரு அவர்கள் 'ஷா நவாஸ் கமிட்டி" அமைத்தது. 1956-ல் அந்தக் கமிட்டிப் பல விசாரணைகளுக்குப் பின் விமான விபத்தில் போஸ் இறந்துவிட்டார் என அறிக்கை சமர்ப்பித்தது. இருந்தாலும் எதிர்க்கட்சிகளின் சந்தேகம் தீரவில்லை. திரும்பத் திரும்ப அது கொடுத்த வற்புறுத்தல் தாங்காமல் 1974-ல் "ஜி.டி.கோஸ்லா" தலைமையில் திரும்பவும் ஒரு கமி்ஷன் ஏற்படுத்தி அதே முடிவைத் திரும்ப வாங்கியது அரசு. ஆனால் அரசுக்கு நன்கு தெரியும் போஸ் இறந்ததாய்ச் சொல்லப்படுவது உண்மை இல்லை என. அதனிடம் விமான விபத்து நடந்ததை உறுதி செய்யும் அதிகாரபூர்வச் சான்றுகள் ஏதும் இல்லை. விபத்து நடக்கவில்லை என அரசாங்கக் குறிப்புக்கள் தெரிவித்தன. நேரில் பார்த்ததாய்ச் சொல்லப் படுவதும் உண்மை இல்லை எனவும் அரசு அறிந்திருந்தது. ஆகவே மீண்டும் எதிர்க்கட்சிகளின் வற்புறுத்தல் பேரில் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கக் கல்கத்தா உயர் நீதி மன்றம் முன்னர் வந்த விசாரணக் கமிஷன் அறிக்கைகளைத் தள்ளுபடி செய்து விட்டு முற்றிலும் புதிய விசாரணைக் கமி்ஷன் அமைக்க மத்திய அரசுக்கு உத்திரவிட்டது. அது தான் முகர்ஜி கமிஷன். இந்தக் கமி்ஷனால் விசாரிக்கப் பட்ட காங்கிரஸ் தலைவர்களான பிரனாப் முகர்ஜியும், நட்வர்சிங்கும் கமி்ஷனின் கேள்விக்கணைகளால் துளைக்கப் பட்டு, முந்தைய இரண்டு கமி்ஷன்களின் அறிக்கையின் பேரில் தான் போஸ் இறந்ததாய் அறிவிக்கப் பட்டார் என ஒத்துக் கொள்ளும்படி நேர்ந்தது.

தாய்வான்: சைனக் குடியரசு மட்டும் ஆரம்பத்தில் இருந்தே இவ்வி்ஷயத்தில் மிகத் தெளிவாய் இருந்து வந்தது. இந்திய அரசு ஒரு பெரிய தேசத் தலைவரின் மறைவை மிகச் சாதாரணமாயும் துச்சமாயும் கருதியது. அதிக அக்கறை காட்டவில்லை. அது போல் இல்லாமல் சைனா சொன்னது இது தான்: ஆகஸ்ட் 18, 1945-ம் ஆண்டில் தாய்பேயில் எந்த விமான விபத்தும் நடக்கவே இல்லை. உறுதியான சான்றுகள் இருக்கின்றன.

இனி இதில் ரஷ்யாவின் பங்கு? ஆணிகள் இல்லையெனில் நாளை!

8 comments:

 1. அப்படியானால்...மறைந்து வாழ வேண்டியதற்கான காரணம் என்ன? மறைவாக இருந்து எதுவும் போராட்டம் நடத்தியிருக்கலாமே! ஒருவேளை உடல்நலக் குறைவாக இருந்திருக்குமோ!

  ReplyDelete
 2. Many useful and new info. Thank you.

  ReplyDelete
 3. வாருங்கள் ராகவன், உங்க கேள்விக்கு மட்டும் பதில் சொல்றேன். தட்டச்சிலே தப்பு வரதாலேயும் பின்னூட்டம் சரியாய்ப் புரியாம எழுத்துக்கள் உடைந்து வரதாலேயும் யு.எஸ். வந்ததுக்கு அப்புறம் யாருக்கும் பதிலே கொடுக்கலை.
  இந்திய தேசீயப் படையின் பொறுப்பாளர்களின் எண்ணம் போஸ் போன்ற மிகச் சிறந்த ஒரு தலைவர் தந்திரமாய்ச் சிறைப் பிடிக்கப் பட்டு வாழ்நாள் முழுதும் நாடு கடத்தப் பட்டார் என உறுதியான சந்தேகம். போஸின் அரசியல் வாழ்வை எந்த விதத்திலாவது முடிக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார்கள் என்பதும் அவர்கள் கருத்து.

  ReplyDelete
 4. appa ennahtan annar? en ottu motha ulagame avarku ethirai ?

  ReplyDelete
 5. சில ஆணிகள் பிடுங்கப்பட்டு, புது ஆணிகள் அடிக்கப்படுகின்றன..

  சில முறை ஆணிகள் எண்ணப்படிகின்றன.. நன்றாய் எழுதப்பட்டிருக்கிறதா என்று சரி பார்க்கப்படுகின்றன..

  சும்மா நாலு வரியை மேற்கோள் காட்டி பின்னூட்டம் இட மனசில்லை மேடம்.. முழுதாய் படித்துவிட்டு எழுதுகிறேன்..

  இப்போதைக்கு இது அட்டென்டன்ஸ்

  ReplyDelete
 6. orutharin arasiyal vaazhvai mudikka indha alavu menakettu irupargala nu therialai :-( apdiye kadathi irundhalum edhavadhu oru vagaiyil thaan uyirudan iruppadhai theriya paduthi iruppar, though we could say he couldn't have done so...

  avar mel arasiyal seiyaradhu therinja, konjam aavadhu avarum arasiyal panni irukkalame thannudaiya uyirai kaapathika avadhu? adhai epdi pannama irundhu iruppar?!

  ReplyDelete
 7. \இனி இதில் ரஷ்யாவின் பங்கு? ஆணிகள் இல்லையெனில் நாளை!\\

  அருமையாக எழுதி அனைவருக்கும் எளிமையாக புரிய வைக்கிறீர்கள் தலைவி ;)

  ReplyDelete
 8. யார் அவரை சிறைபிடிக்க முடியும்.ஆங்கிலேயருக்கே கடுக்காய் கொடுத்தவர் அவர்.சிலர் அவரை இமயமலியில் துறவியாகப் பார்த்தார்கள் என்பார்கள்.

  ReplyDelete