எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Thursday, May 03, 2007

ரஷியாவின் பங்கு என்ன?

இந்திய அரசியலில் ரஷியாவின் பங்கு மகத்தானது. மறைந்திருந்து இயக்கும் நாடு என்றும் சொல்லலாம். சோவியத் யூனியனாய்ப் பிரியாமல் இருந்த நாட்டில் தான் உதவி கேட்க போஸ் போக நினைத்தார். ஆனால் அவரால் செல்ல முடிந்ததா? நேசப் படைகளிடம் ஜப்பான் கொஞ்சம் கொஞ்சமாய்ச் சரண் அடைந்து வந்த நேரம் அது. போஸுக்குப் பிரிட்டிஷாரிடம் மாட்டிக் கொள்ள இஷ்டம் இல்லை. ஜப்பானிய ராணுவம் அவர் எதிரே இரண்டே இரண்டு கருத்துக்களை முன் வைக்கிறது. ஒன்று பிரிட்டிஷாரிடம் சரண், மற்றது வேறு யாரு உதவியுடனாவது இந்திய விடுதலைக்கு முயற்சி. போஸ் இரண்டாவதைத் தேர்ந்தெடுக்கிறார். பணமோ, ராணுவ உதவியோ தர முடியவில்லையென்றாலும் ஜப்பானிய ராணுவ அதிகாரிகள் போஸுக்கு உதவி செய்யத் தான் நினைத்தனர். ஜப்பானிய ராணுவத்தில் லெஃப்டினன்ட் ஜெனரலாக இருந்த சுப்ரோ இசுடோ ஒரு ரகசியத் திட்டம் தீட்டுகிறார். அதில் ஐ.என்.ஏ. தலைவர்களும், போஸின் அந்தரங்கக் காரியதரிசி ஈ. பாஸ்கரனும், டாக்டர் ஹபிபுர் ரஹ்மானும் பங்கெடுத்துக் கொள்கின்றனர்.

அதன்படி போஸும் அவருக்கு நெருக்கமான ஐ.என்.ஏ. தலைவர்களும், டாக்டர் ஹபிபுர் ரஹ்மானும், ஜப்பானிய ராணுவத்தின் மற்றொரு படைப்பிரிவான க்வான்டாங்க் பிரிவின் தலைவரான லெஃப்டினன்ட் ஜெனரல் ்ஷிதேய் அவர்களும் சைகோனில் இருந்து செல்லும் ஒரு விமானத்தில் செல்ல ஏற்பாடு செய்யப் படுகிறது. விமானத்தில் செல்லுவதாய்ப் போக்குக் காட்டிப் பின் நேசப் படை வீரர்களிடம் இருந்து தப்பித்து மஞ்சூரியா அடைவதே போஸின் நோக்கமாய் இருந்தது. ஆனால் நடுவானில் விமானம் விபத்துக்கு தாய்பேய் விமான நிலையத்துக்கு அருகில் உள்ளானதாய்த் தெரிவிக்கப் பட்டது. விமானத்தில் போஸுடன் சென்ற ஹபிபுர் ரஹ்மான் அடுத்ததாய்த் தாயபேயில் காணப்படுகிறார், போஸ் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது என்றும் விமான ஓட்டிகளுடன் சேர்ந்து போஸும், அவரின் ஐ.என்.ஏ. தலைவர்களும், ஜெனரல் ஷிதேயும் மரணமடைந்ததாயும், எல்லார் உடலும் ஜப்பானிய ராணுவத்தால் எரியூட்டப் பட்டதாயும் சொல்கிறார்.

இது பற்றி பொலிட் பீரோ உறுப்பினர்களில் ஒருவரான ராஜ் சிங் சொல்வது: விமான விபத்து என்பதே ஒரு பொய் என்றும் அது நடக்கவில்லை என்றும் தாயபேய் அரசு உறுதி செய்து விட்டது. விமானத்தில் பயணம் செய்த நேதாஜி சோவியத் யூனியனின் எல்லையில் சோவியத்-மஞ்சூரியன் எல்லைக்கு அருகில் சோவியத் எல்லையைக் கடக்கும்போது சோவியத் எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களால் சிறை பிடிக்கப் பட்டார். இந்தத் தகவலை உறுதி செய்ததாய் திரு ராஜ் சிங் கூறுவது யார் என்றால் சோவியத் நாட்டின் பொலிட் பீரோவால் அங்கீகரிக்கப்பட்ட மிக உயர்ந்த பதவி வகிக்கும் மற்றும் வெளிநாட்டு அரசியல் விவகாரங்களில் மிக முக்கியமான முடிவுகளை எடுக்கும் அதிகாரமும் பெற்ற, "பாபாஜன் கஃப்ரவ்" என்பவரால் சொல்லப் பட்டு உறுதியும் செய்யப் பட்டது. இவர் உஸ்பெகிஸ்தானின் அரசியல் தலைவர்களில் மிக முக்கியமானவரும் ஆவார். இந்தியாவிற்குப் பலமுறை விஜயம் செய்தவரும் இந்திய அரசியல் நன்கு அறிந்தவரும் ஆவார். இவரின் நெருங்கிய நண்பர் ஆன புது தில்லி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆன ராம் ராகுலிடம் இந்தத் தகவலை அவர் தெரிவித்திருக்கிறார்.

இந்தியாவின் அப்போதைய சோவியத் தூதுவர் ஆன சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கு போஸைப் பார்க்க அனுமதி அளிக்கப் பட்டது. ஆனால் அவருடன் பேச முடியவில்லை. போஸ் இருந்த நிலையைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் எப்படியாவது அவரைத் தொடர்பு கொள்ள நினைத்தும் முடியவில்லை. இதை அவர் அப்போதைய பிரதமர் ஆன திரு நேருவிடம் தெரிவித்து எப்படியாவது போஸை உயிருடன் சிறையில் இருந்து மீட்க வேண்டும் என வேண்டுகோள் விடுக்கிறார். எதிர்க்கட்சியினர் சிலரும் செய்தி அறிந்து வற்புறுத்தியும் கூட இந்திய அரசு எந்த வித முயற்சியும் சோவியத் யூனியனுக்கு எதிராய் எடுக்கவில்லை. மாறாக மெள்னம் சாதித்தது.

இதில் கவனிக்கப் பட வேண்டிய விஷயம் என்னவென்றால், ஆகஸ்ட் 18, 1945-ல் போஸ் விமான விபத்தில் இறந்ததாய்ச் சொல்லப் பட்டாலும் அதிகாரபூர்வமாய் ஜப்பானியர் வெளியிட்டது 24 ஆகஸ்ட் 1945-ல் தான். கிட்டத் தட்ட ஒரு வாரம் மெளனமாய் இருந்த ஜப்பான் அரசு பின் திடீரென இந்த முடிவுக்கு வரக் காரணம்? இந்த 24-ம் தேதிக்கு முதல் நாள் தான் ஜப்பானிய ராணுவத்தின் க்வான்டாங் படை செம்படையிடம் மஞ்சூரியாவில் சரண் அடைந்தது. நேதாஜியுடன் இறந்த லெஃபிடினன்ட் ஜெனரல் ்ஷிதேய் கவான்டாங்க் படைக்குத் தலைமை வகித்து வந்தார்.

இனி, ஸ்டாலின் சொன்னது என்ன? நேருவை மதித்தாரா? இந்தியத் தலைவர்களை மதித்தாரா? 1946-ல் பம்பாயில் நடந்த ராயல் நேவியின் புரட்சிக்கும் நேதாஜிக்கும் சம்மந்தம் இருந்ததால் தான் காங்கிரஸ் அந்தப் புரட்சியை 1857-ம் ஆண்டி சிப்பாய்க் கலகத்துக்கு ஈடாகப் பேசப் பட்ட புரட்சியை இன்று வரை அரசியல் வரலாற்றில் மறைக்கிறதா? மெதுவாயத் தான் வரும். ஆணிகள் ரொம்பவே அதிகமாய் இருக்கிறது. கையில், காலில் குத்தாமல் பிடுங்கணுமே அதான். :D

9 comments:

 1. //இனி, ஸ்டாலின் சொன்னது என்ன? நேருவை மதித்தாரா? இந்தியத் தலைவர்களை மதித்தாரா? 1946-ல் பம்பாயில் நடந்த ராயல் நேவியின் புரட்சிக்கும் நேதாஜிக்கும் சம்மந்தம் இருந்ததால் தான் காங்கிரஸ் அந்தப் புரட்சியை 1857-ம் ஆண்டி சிப்பாய்க் கலகத்துக்கு ஈடாகப் பேசப் பட்ட புரட்சியை இன்று வரை அரசியல் வரலாற்றில் மறைக்கிறதா? மெதுவாயத் தான் வரும். ஆணிகள் ரொம்பவே அதிகமாய் இருக்கிறது. கையில், காலில் குத்தாமல் பிடுங்கணுமே அதான். :D
  //
  இவ்வளவு நடந்தி இருக்கிறதா? எங்களுக்கு (இந்த தலைமுறையினருக்கு) ஒன்றுமே சொல்லாமல் மறைத்து விட்டார்களே மேடம். பல புதிய தகவல்கள். நன்றி.

  ReplyDelete
 2. பத்து நாள் ஊர்ல இல்ல நான். வந்து பாத்தா.... கலக்கு கலக்குன்னு கலக்கிறுக்கிறீங்களே கீதாம்மா. அறியாத, அறியப்படாத விஷயங்கள் இருக்குது உங்கள்ளோட போஸ் பதிவில். எல்லாம் பொறுமையா எடுத்து உரைத்ததுக்கு நன்றிங்க.

  ReplyDelete
 3. நல்லா எழுதி இருக்கீங்க. இதேல்லாம் குகிள் கிட்ட கேட்டு எழுதினீங்களா இல்லாட்டி உங்க காலத்துல நடந்தத அப்படியே நினைவில் வெச்சு எழுதினீங்களா? :)


  //ஆணிகள் ரொம்பவே அதிகமாய் இருக்கிறது.//

  ஆமா! இருக்காதா பின்ன? புதிய பொறுப்பு, புதிய பதவி. என்ன கீதா பாட்டி, சொல்றது சரி தானே? :p

  ReplyDelete
 4. ரொம்பவே இண்ட்ரஸ்டிங்கா போகிறது இந்த பதிவுத்தொடர்...நிறைய விஷயங்கள் புதிதாய் தெரிந்துகொள்ள முடிகிறது.....கலக்குகிறீர்கள் மேடம்.

  ReplyDelete
 5. பொறுமையா ஒவ்வொரு ஆணியா பிடுங்கிட்டு வாங்க நாங்க காத்துக்கிட்டு இருக்கோம் :)

  ReplyDelete
 6. ஆமா எது தேவையுள்ள ஆணி எது தேவையில்லாத ஆணினு எப்படி தெரிஞ்சுப்பீங்க ;-) பிடுங்கறது பூராவுமே தேவையில்லாத ஆணினு எல்லாத்தையும் பிடுங்கிடாதீங்க! :-)

  @சத்தியப்பிரியன்:
  //இந்த தலைமுறையினருக்கு// ஹிஹிஹி... பாட்டி நோட் திஸ் பாயிண்ட்!

  ReplyDelete
 7. //
  பொற்கொடி said...
  /இந்த தலைமுறையினருக்கு/ ஹிஹிஹி... பாட்டி நோட் திஸ் பாயிண்ட்!
  //
  வெகுளித்தனமாக நான் சொன்னதை உள்நோக்குடன் திரித்த பொற்கொடியின் செயலை கண்டிக்கும் விதமாக இன்று ஒரு நாள் முழுதும் நான் ஒன்றும் செய்யப் போவதில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.

  ReplyDelete
 8. //வெகுளித்தனமாக நான் சொன்னதை உள்நோக்குடன் திரித்த பொற்கொடியின் செயலை கண்டிக்கும் விதமாக இன்று ஒரு நாள் முழுதும் நான் ஒன்றும் செய்யப் போவதில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.
  //

  @sathya, உண்மையை சொன்ன சத்யப்ரியனை தனது அடக்கு முறைகளால் பயமுறுத்திய கீதா பாட்டியின் வில்லதனத்தை எதிர்த்து இன்று முழுதும் ஆபிஸில் பிளாக் மட்டுமே படிக்க போகிறேன். :)

  @kodi, கொடி, எப்பிடிமா கரெக்ட்டா பாயிண்ட புடிச்ச? :p

  ReplyDelete