எச்சரிக்கை

இந்த வலைப்பக்கங்களில் வரும் என்னுடைய பதிவுகளை என் அனுமதி இல்லாமல் யாரும் பயன்படுத்தக் கூடாது. மேற்கோள் காட்டத் தேவை எனில் என் பதிவின் சுட்டியைக் கொடுக்கவேண்டும்.


Not a penny is he going to take with him finally after his lifelong pursuit of money. The Lord's name, Bhagawan nama, is the only currency valid in the other world.

Have a great day.

பரமாசாரியாரின் அருள் வாக்கு

Friday, May 11, 2007

மீண்டும் போஸ் வந்து விட்டார்!

மறுபடியும் போஸைப் பத்தி எழுதி முடிச்சுடறேன். அப்புறம் ஒரு இரண்டு நாளைக்காவது முக்கியமான சில ஆணிகளை எல்லாம் எடுக்க வேண்டி இருக்கும். அதுக்கும் அப்புறம் தான் மே மாதம் என்ன முக்கியம்னு சொல்லுவேன். அதுவரை மணிப்ரகாஷ் கொஞ்சம் பொறுத்துக்குங்க. சிரிக்க முடியலை. எப்படிச் சிரிக்கிறதுன்னு புரியலை அதான்.
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
முதன் முதலில் 1972-ல் ரஷ்யா இதைப் பற்றி வெளிப்படையாகப் பேசி இருக்கிறது. நமக்கு மேற்கூறிய ஆதாரபூர்வமான விஷயங்களில் இருந்து உறுதியாகத் தெரியும் போஸ் விமான விபத்தில் இறக்கவில்லை என்றும், அப்படி ஒரு விபத்தே நடக்கவில்லை எனவும்.கிடைத்திருக்கும் அனைத்துச் செய்திகளுமே இந்தச் செய்தியின் பின்னணியில் ரஷ்ய அரசின் வேலைத்தனம் இருப்பதை உறுதி செய்கிறது. நம் நாடு சுதந்திரம் அடைந்து 50 வருஷங்களுக்கு மேல் ஆகியும் சோவியத் யூனியனும் உடைந்து கம்யூனிஸ்ட் ரஷ்யா உதயம் ஆகியும் இந்த ரகசியம் உடையவில்லை.

இப்போது மறுபடி 40களுக்குச் செல்வோம். ஆரம்பத்தில் இருந்தே ஜோசஃப் ஸ்டாலினுக்கு நேருவைக் கண்டால் பிடிக்காது. அது ஏன்? யோசிக்க வேண்டிய விஷயம் இல்லையா? சுதந்திர இந்தியாவின் சார்பில் முதன் முதல் சோவியத் ரஷ்யாவுக்கு தூதராகச் சென்றது நேருவின் சகோதரியான திருமதி விஜயலட்சுமி பண்டிட் ஆவார். அவர் ஸ்டாலினைச் சந்தித்து அரசு முறையில் வணக்கம் தெரிவிக்க விருப்பம் தெரிவித்தும் ஸ்டாலின் அவரைச் சந்திக்க மறுத்து விட்டார். ஏன்? கடைசி வரை அவருக்கு ஸ்டாலின் அனுமதி கொடுக்கவே இல்லை! பல உலக நாடுகள் நேரடியாகவும், மறைமுகமாயும் நேருவை சோவியத் யூனியனுக்கு அழைக்க வற்புறுத்தியும் ஸ்டாலின் நேருவை அழைக்க இணங்கவே இல்லை.

1951-ல் சோவியத் யூனியனுக்கு இந்திய அரசின் சார்பாகச் சென்ற ஒரு குழுவில் திருமதி அருணா அசஃப் அலியும் ஒருவர். இவர் பம்பாயில் நடந்த "வெள்ளையனே வெளியேறு" போராட்டத்தை வெற்றிகரமாய் நடத்திக் காட்டியவர்.இவரிடமும் மற்ற அரசியல் தலைவர்களிடமும், முக்கியமாய் கம்யூனிஸ்ட் தலைவர்களிடமும் நேருவிடம் இருந்து விலகி இருக்கும்படி அறிவுறுத்துகிறார் ஸ்டாலின். என்றாலும் உண்மை வெளி வரவே இல்லை. க்ளாஸ்னாஸ்ட் காலத்தில் தான் இந்த விஷயத்தில் கொஞ்சமாவது வெளிச்சம் தெரிந்தது. க்ளாஸ்னாஸ்ட் உலக நாடுகள் மத்தியில் சோவியத் ரஷ்யாவிற்கு இருந்து வந்த அவப் பெயரைத் துடைக்க முயற்சி செய்தார். சுபாஷ் போஸின் விஷயத்தைப் பற்றி மறு பரிசீலனை செய்யவும் முயற்சிகள் எடுக்கப் பட்டது. 1989-ல் வெளிவந்த ஒரு புத்தகத்தில் ஈ.தேவ்யத்கினா என்பவர் எழுதுகிறார். போஸ் இறந்ததாய்ச் சொல்லப் படுவது சந்தேகத்துக்கு உரியது என்று. அவர் பல மேற்கோள்களைக் காட்டுகிறார்.

ஒரு வருடத்திற்குப் பின் ஏவி.ராய்கோவ் என்பவர் எழுதிய ஒரு புத்தகத்தில் க்ளாஸ்னாஸ்டிற்கு மிகவும் நெருங்கிய லியோனிட் மிட்ரோவின் என்பவர் கூறியதாய் அவரும் மேற்குறிப்பிட்ட விஷயத்தை உறுதி செய்கிறார். ஆனால் இதே மிட்ரோகினை சந்தித்த இந்திய சோவியத் நல்லுறவு பற்றிய பேராசிரியர் புரபிராயிடம் மிட்ரொகின் இந்த விஷயத்தைக் கிளறவேண்டாம் எனச் சொல்கிறார். இதனால் இந்தியஸோவியத் நல்லுறவு பாதிக்கப் படும் என்றும் சொல்லுகிறார். தன்னுடைய ரகசியத்தை வெளியிடாமலேயே 2002-ல் அவர் இறந்து போகிறார்.

உடைந்த ரஷ்யாவின் நிலை என்ன? நாளை பார்ப்போம்!

22 comments:

 1. இந்தப் பதிவுக்குப் பின்னூட்டங்களுக்குப் பதில் வரும்.

  ReplyDelete
 2. இந்தப் பதிவுக்கு முதல் நீங்க தான். அதனால் பொங்கல், புளியோதரை எல்லாம் உங்களுக்கே. கேசரி மட்டும் கிடையாது. :)

  ReplyDelete
 3. எனக்கும் இனிப்பு கிடையதா?????

  ReplyDelete
 4. //அதுக்கும் அப்புறம் தான் மே மாதம் என்ன முக்கியம்னு சொல்லுவேன். அதுவரை மணிப்ரகாஷ் கொஞ்சம் பொறுத்துக்குங்க.//

  மே மாதம் முடிவதற்குள் வந்துடுமா?

  மதர்ஸ் டே????


  //சிரிக்க முடியலை. எப்படிச் சிரிக்கிறதுன்னு புரியலை அதான்.
  &&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&//


  தலைவியால் மட்டுமே இப்படி சிந்தித்து வித்தியாசமாய் பதில் அளிக்க முடியும் என்பதை நான் ""ஆணி""த்தரமாக சொல்லுகிறேன்ன்ன்ன்ன்ன்

  $$$$$$$$$$$$

  ReplyDelete
 5. போஸின் மரணத்திற்கும் இரஷ்யாவிற்கும் சம்பந்தமா??

  ஆகா ..இரஷ்யாவின் மேல் நான் மதிப்பு வைத்து இருந்தேனே.. :(((

  ReplyDelete
 6. ச்யாம், இந்தக் கண்டுபிடிப்புக்குத் தான் உங்களை நாட்டாமைன்னு சொல்லுறாங்களோ! :P

  @மணிப்ரகாஷ், ஸ்வீட்டை யாருமே வரலைன்னு நானே சாப்பிட்டுட்டேனே, அதான் இல்லைன்னு சொன்னேன். :)

  ReplyDelete
 7. முயற்சி செய்துட்டு இருக்கேன். சிரிக்கிறதுக்கு, சிரிக்க வந்ததும் சேர்த்து வச்சுச் சிரிக்கிறேன் மணிப்ரகாஷ், எங்கேயோ இடிக்குது, சிரிக்கும்போது, அப்புறம் மே மாதம் முடியறதுக்குள்ளே சொல்லிடுவேன். ரஷ்யா பத்தி இன்னும் நல்லாப் படிக்கலைன்னு நினைக்கிறேன். சரித்திரத்தில் ரொம்பவே வீக்கோ?

  ReplyDelete
 8. அப்புறம் ரகசியம் காக்க வேண்டும்னு டாக்டர் சொல்லி இருக்கார். :D அதனாலே சொல்ல மாட்டேன். அப்புறம் அம்பி கல்யாண வேலையைக் கூட விட்டுட்டு கமென்ட் போட வந்துடுவார். அதான் சொல்லலை. தனியா மெயிலறேன். :)

  ReplyDelete
 9. அன்னையர் தினமெல்லாம் இல்லை. வேறே ஒரு முக்கியமான தினம், :D

  ReplyDelete
 10. happy birthday to you vaa ?

  ReplyDelete
 11. \\மணி ப்ரகாஷ் said...
  //அதுக்கும் அப்புறம் தான் மே மாதம் என்ன முக்கியம்னு சொல்லுவேன். அதுவரை மணிப்ரகாஷ் கொஞ்சம் பொறுத்துக்குங்க.//

  மே மாதம் முடிவதற்குள் வந்துடுமா?

  மதர்ஸ் டே????\\

  மணி உங்களுக்கும் தெரியதா?....ஒரு வேலை ப்ளாக் ஆரம்பித்த மாதம்?

  சீக்கிரம் சொல்லுங்கள் தலைவி ;-)

  ReplyDelete
 12. //அப்புறம் அம்பி கல்யாண வேலையைக் கூட விட்டுட்டு கமென்ட் போட வந்துடுவார். அதான் சொல்லலை.//

  இதோ வந்தேன்! வந்தேன்! :)


  //கேசரி மட்டும் கிடையாது//

  @mani, ஆமா மணி, கேசரி என்னிக்குமே எப்பவுமே அம்பிக்கு தான் ரிஸர்வ்ட். கீதா மேடத்துக்கு ஷுகர். அதனால எனக்கு எடுத்து வெச்ருகாங்க. :p

  ReplyDelete
 13. \\மணி ப்ரகாஷ் said...
  போஸின் மரணத்திற்கும் இரஷ்யாவிற்கும் சம்பந்தமா??

  ஆகா ..இரஷ்யாவின் மேல் நான் மதிப்பு வைத்து இருந்தேனே.. :(((\\

  நானும் தான் மணி ;-(

  ஆச்சர்யமாக இருக்கு....

  ReplyDelete
 14. ரஷ்யா உடஞ்சது இருக்கட்டும், இனிமேலாவது இதை போல நல்ல பதிவா போடனும்!னு தான் இத்தனை நாளா உங்களை உம்மாச்சி சோதனை பண்ணி இருக்கார். :p

  இன்று புதிதாய் பிறந்தேன்!னு சொல்லிட்டு மறுபடி மொக்கை போட கூடாது. சரியா? :)

  ReplyDelete
 15. வராத ஷ்யாமுக்கு பதிலா? எப்படிங்க இதெல்லாம்? :p

  ReplyDelete
 16. will go and check if there are any comments first!

  ReplyDelete
 17. ஜீவ்ஸ், :D அதுவும் தான், வேறே ஒரு விஷயமும் இருக்கு!

  அம்பி, எனக்குத் தெரியுமே, நீங்க கல்யாண வேலையைக் கூட விட்டுட்டு வந்துடுவீங்கன்னு, என்னை ஏதாவது சொல்லல்லைன்னா உங்களுக்குச் சாப்பாடு எப்படி ஜீரணம் ஆகும்? மொக்கை போடறது நீங்க தான். நான் இல்லை!

  @கோபிநாத், கொஞ்சம் பொறுங்க, நீங்க எந்த அழகிலே என்னோட ப்ளாகைப் படிக்கிறீங்கன்னு தெரியும், ஒரு வருஷம் ஆனது எல்லாம் கொண்டாடி முடிச்சாச்சு!

  ReplyDelete
 18. ஹிஹிஹிஹிஹி, சிரிக்க வந்துடுச்சு! டாக்டருக்கு மறுபடி நன்றி!

  ReplyDelete
 19. வரேன் வந்து மறுபடி யாரானும் வந்துட்டுப் போயிருக்காங்களான்னு பார்த்துட்டு எழுதறேன்.
  @மின்னல், எனக்கு ப்ளாக் திறக்கிற டெக்னிக் புரிஞ்சு போச்சு! ஆனால் உங்க கிட்டே சொல்ல மாட்டேன்.

  ReplyDelete
 20. இன்னிக்கும் இதே முறையில் தான் ப்ளாகைத் திறக்கணுமா? :P இது ப்ளாக்கருக்கு!

  ReplyDelete
 21. //ரஷ்யா பத்தி இன்னும் நல்லாப் படிக்கலைன்னு நினைக்கிறேன். சரித்திரத்தில் ரொம்பவே வீக்கோ?
  //

  ம்ம்ம்.வீக்கா அப்படினு தெரியாது..

  சின்ன வயசில நான் பார்த்தது,படித்தது,கேட்டது னு வைச்சதுல எனக்கு மதிப்பினை கொடுத்தது ரஷ்யா.

  தொழிலாளித்துவம்,மார்க்சீயம்,இந்தியாவிற்கு செய்த இராணுவ உதவி,அப்புறம் ஒன்னும் தெரியாத வயசில நான் படிச்ச லெனின் புத்தகம் னு மரியாதை வந்துச்சு....

  ReplyDelete